search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 235118"

    • இரு நாடுகள் இடையேயான மோதலுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
    • கதிரியக்க ஆயுதங்களை பயன்படுத்துவது மனிதகுலத்திற்கு எதிரானது.

    ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்ஜி ஷோய்க்-குடன், மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, உக்ரைனில் தற்போதைய நிலைமை குறித்து இரு மந்திரிகளும் விவாதித்தனர்.

    அழிவை ஏற்படுத்தும் குண்டுகள் மூலம் ஆத்திரமூட்டும் செயல்களில் உக்ரைன் ஈடுபட்டு வருவதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி செர்ஜி ஷோய்க் அப்போது மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தார். இரு நாடுகள் இடையேயான மோதலுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

    மேலும் போரில் கதிரியக்க ஆயுதங்களை பயன்படுத்துவது மனிதகுலத்திற்கு எதிரானது என்பதால், இரு நாடுகளும் அணு ஆயுதங்கள் உள்பட பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்த கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு மந்திரிகளும் தொடர்ந்து ஒத்துழைப்பில் இருக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியில் மருத்துவ படிப்பை தொடங்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது.
    • கிராமப் புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் இருக்காது

    போபால்:

    நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.  தலைநகர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி மொழியில் இடம் பெற்ற மருத்துவ உயிர் வேதியியல், மருத்துவ உடற் கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் ஆகிய பாடங்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டார். 

    அப்போது பேசிய அவர், இந்தியில் மருத்துவ படிப்பை தொடங்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது என்றார். இந்த நாள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இனி, கிராமப் புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற எந்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் இருக்காது, அவர்கள் தங்கள் சொந்த மொழியில் பெருமையுடன் படிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

    தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பு தொடங்கப்பட்டது, விரைவில் பிற மொழிகளிலும் அது தொடங்கப்படும் என்றார். மேலும் எட்டு மொழிகளில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்.
    • தரமற்ற அரிசியை தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்குகிறது.

    மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளதாவது:

    பாஜக குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல, தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். மத்திய அரசு தரமான அரிசியை அளித்தாலும், தரமற்ற அரிசியை தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்குகிறது.

    திமுகவினர் பிரதமர் மோடி குறித்து தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர். மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

    • நான்கு அல்லது ஆறு வழிச்சாலைகளாக மாற்றம் செய்யப்படும்.
    • சுங்க வரி வசூல் மூலம் முதலீடுகளை திரும்பப் பெற முடிவு.

     மும்பை:

    மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய தேசிய பரிவர்த்தனை உறுப்பினர்கள் சங்கத்தின் 12 வது சர்வதேச மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி, காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை 25 ஆண்டு காலத்திற்கு கையகப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் இந்த நெடுஞ் சாலைகள் 4 அல்லது 6 வழி நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும். பின்னர் இந்த நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு சுங்கக் கட்டணம் வசூலிக்கும். 13 ஆண்டுகளுக்குப் பின் செலவுகள் உட்பட முழு முதலிடும் முழுமையாக திரும்பக் கிடைத்துவிடும். 


    இதே போல் நாட்டில் 27 பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையிலிருந்து பெங்களூருக்கு இரண்டு மணி நேரத்தில் பயணம் செய்யும் சாலைப் பணிகள் முடிவடைந்து விடும். டெல்லியில் இருந்து ஜெய்பூர் இடையே 2 மணி நேரத்திலும், டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் இடையே 4 மணி நேரத்திலும், செல்லும் வகையில் பசுமை விரைவு நெடுஞ்சாலை பணிள் நடைபெறுகின்றன. டெல்லி-ஸ்ரீநகர் இடையே 8 மணி நேரத்திலும், டெல்லி -மும்பை இடையே 10 மணி நேரத்திலும் செல்கின்ற பசுமை விரைவு நெடுஞ்சாலைகளும் இந்த ஆண்டு இறுக்கும் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பாதுகாப்பான எல்லைகள் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றும்.
    • 76 சதவீத உள்நாட்டு சாதனங்களைக் கொண்டு ஐ.என்.எஸ். விக்ராந்த் தயாரிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளதாவது: நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. தற்சார்பு மற்றும் பாதுகாப்பான எல்லைகள் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றுவதற்கு முக்கியமாக உள்ளன.

    தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அதிநவீன ஆயுதங்கள், தளவாடங்களுடன் ஆயுதப் படைகளைத் தயார் படுத்துவதில் பாதுகாப்புத் துறை கவனம் செலுத்தி வருகிறது. 76 சதவீத உள்நாட்டு சாதனங்களைக் கொண்டு ஐ.என்.எஸ்.விக்ராந்த் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த பத்து ஆண்டுகளில், விண்வெளி பாதுகாப்பு தளங்களை உற்பத்தி செய்யத் தொடங்கும்.அரசின் பார்வையில் மற்றொரு முக்கிய அம்சமாக இருப்பது எல்லைப் பகுதி மேம்பாடு. சவாலான சூழ்நிலையிலும் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள சிறப்பான ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது.

    பெரும்பாலான நாடுகள் இன்று பொருளாதார மந்த நிலையின் சிக்கலை எதிர் கொள்கின்றன. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைத்து மதிப்பிடப்பட்டாலும், அது இன்னும் 6.1 சதவீதமாகவே உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பெட்ரோலில் எத்தனால் கலப்பு 2022 மே மாதத்தில் 10 சதவீதமாக அதிகரித்துள்ளது.
    • இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் நன்மை அளிக்கும்.

    சிதாபுரா:

    ராஜஸ்தான் மாநிலம் சிதாபுராவில் உள்ள ஜெய்ப்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 3 நாள் தெற்காசிய புவி அறிவியல் மாநாட்டில் உரையாற்றிய மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, கூறியுள்ளதாவது: 


    பெட்ரோலில் எத்தனால் கலப்பு 2022 மே மாதத்தில் 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2.7 மில்லியன் டன் கார்பன்டை ஆக்சைடு உமிழ்வைக் குறைத்திருக்கிறது, இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் நன்மை அளிக்கும். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் எரிசக்தி தேவை இரட்டிப்பாகும் என்றும், 2050ம் ஆண்டுக்குள் இயற்கை வாயுவின் தேவை ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்று சர்வ தேச எரிசக்தி முகமை கணித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரி, நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உள்ளிட்ட உலக எரிசக்தி சவால்களை இந்திய அரசு சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது என்றார். இந்தியாவில் நாளொன்றுக்கு 5 மில்லியன் பீப்பாய்கள் பெட்ரோலியம் பயன்படுத்தப்படுவதாகவும், இது தற்போது 3 சதவீதம் அதிகரித்து வருகிறது என்றும், கூறினார்.

    • மத்திய உள்துறை, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நிஷித் பிரமானிக்
    • விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்தார்.

    கன்னியாகுமரி:

    மத்திய உள்துறை, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நிஷித் பிரமானிக் நேற்று கார் மூலம் கன்னியாகுமரி வந்தார். அவரை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் குமரி மாவட்ட பாரதிய ஜனதா பொருளாதார பிரிவு தலைவர் சி. எஸ். சுபாஷ் உள்பட பலர் வரவேற்றனர்.

    பின்னர் அவர் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இன்று காலை 9 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகில் சென்றார். படகு துறைக்கு வந்த அவரை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக கன்னியாகுமரி படகு துறை மேலாளர் செல்லப்பா, துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகரன் ஆகியோர் வரவேற்றனர். அதன் பிறகு அவர் விவேகானந்த மண்டபத்துக்கு சென்றார். அங்கு வந்த அவரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர். சி. தாணு, பாறை நினைவாலய மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் ஆகியோர் வரவேற்று அவருக்கு சுற்றி காண்பித்தனர்.

    மத்திய மந்திரி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் உள்ள பாறையில் பகவதி அம்மனின் கால் பாதம் பதிந்து இருந்த இடத்தை தரிசித்தார். அதன் பிறகு மெயின் மண்டபமான சபா மண்டபத்தில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரின் உருவப்படம் மற்றும் அன்னை சாரதா தேவி ஆகியோரின் உருவப்படம்முன்பு நின்று வணங்கி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அங்குள்ள சுவாமி விவேகானந்தரின் 7 அடி உயர முழு உருவ வெண்கல சிலை முன்பு நின்று வணங்கி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அங்கு உள்ள தியான மண்டபத்தில் தரையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார்.

    அவருடன் குமரி மாவட்ட பாரதிய ஜனதா பொருளாதார பிரிவு தலைவரும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலருமான சுபாஷ் உள்பட பாரதிய ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தகுதியான பயனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • பொருளாதாரத்தில் இந்தியா சர்வதேச அளவில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    விருதுநகரில் நடைபெற்ற முன்னோடி வங்கி மூலம் நிதி உள்ளடக்கம் தொடர்பான மதிப்பாய்வுக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் கலந்து கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி மற்றும் பலதுறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் பிரதம மந்திரி காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டம் , கல்வி கடன் , பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் பிரதமர் ஜீவன் ஜோதி காப்பீடு திட்டம், பிரதமர் விபத்துக் காப்பீடு திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்களை 111 கிராமங்களில் 68 வங்கிக் கிளைகளின் மூலம் அனைத்து தகுதி வாய்ந்த பயனாளிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    மத்திய அரசுத் திட்டங்களை விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கு உறுதுணையாக செயல்பட்ட 68 வங்கியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

    கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை இணை மந்திரி, இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் கரன்சி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார் என்றார். 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 75 டிஜிட்டல் வங்கிகளை பிரதமர் தொடங்கி வைத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

    அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக பொருளாதாரத்தில் சர்வதேச அளவில் இந்தியா முன்னேறியுள்ளதாக கூறிய அவர், பிரதமரின் தற்சார்பு திட்டத்தினை ஊக்குவிக்கும் விதமாக தகுதியான பயனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    • மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, மதுரையில் மத்திய மந்திரி ஆய்வு.
    • திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடி வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்தார்.

    மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை மந்திரி கவுசல் கிஷோர் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் , மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது திட்டப் பயனாளிகள் விவரங்கள், திட்டங்களை செயல்படுத்த ஒதுக்கப்ட்டுள்ள நிதி, நடைபெற்று வரும் திட்ட பணிகள் ஆகியவை குறித்து அவர் விரிவாக கேட்டறிந்தார். மேலும் திட்ட பயனாளிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடிய அவர், அவர்களது வாழ்வாதாரம், தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவை குறித்தும் விசாரித்தார்.

    தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி கவுசல் கிஷோர், பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீடுகள் திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் அடித்தட்டு மக்களை இணைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • பெண் கல்வி, சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
    • பள்ளி மதிய உணவு திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னப்பூர்ணாதேவி நேற்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அப்போது மத்திய மந்திரி அன்னப்பூர்ணாதேவி பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. பெண் குழந்தைகளுக்கு உரிய கல்வி மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 

    பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் 226 பள்ளிகளில் தனித்திறன் மேம்பாட்டு மையத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    போஷான் அபியான் திட்டத்தின்கீழ் 2022-23 ஆம் ஆண்டில் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்திற்கு அதிக அளவிலான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, தமிழகம் முழுவதும் இதுபோன்று ஆய்வு பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விண்வெளித் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
    • புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்திய விண்வெளி கூட்டமைப்பின் முதலாம்  ஆண்டுவிழா மாநாட்டு டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய விண்வெளி மற்றும் அணுசக்தித் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:

    இந்திய விண்வெளித் துறையில், தனியார் துறையினருக்கு சுதந்திரம் வழங்குவது, இளம் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. 


    செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விரைவில் தொடங்கும். இந்திய இளம் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆற்றல் மற்றும் புதிய சிந்தனைகள் நமது விண்வெளி தொழில்நுட்பத்தை உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றி வருகிறது.

    தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளிக் கூட்டமைப்பு,முதலீடுகளையும் பெற்று வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இஸ்ரோவின் சாதனைகள் மூலம் உலக அளவில் இந்திய விண்வெளி கூட்டமைப்பு அங்கீகாரத்தையும், புகழையும் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பல ஆண்டுகளாக மூன்று பெரிய தடைகள் இருந்தன.
    • முந்தைய அரசுகள் வடகிழக்கு பகுதி வளர்ச்சியில் ஆர்வம் காட்டவில்லை.

    கவுகாத்தி:

    வடகிழக்கு கவுன்சிலின் 70வது கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. வடகிழக்கு பிராந்தியத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய மந்திரி ஜி. கிஷன் ரெட்டி மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சக இணை மந்திரி பி.எல்.வர்மா, வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள், மத்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச்சேர்ந்த பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:

    வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையில் பல ஆண்டுகளாக மூன்று பெரிய தடைகள் இருந்தன. வன்முறை, தீவிரவாத குழுக்களால் அமைதியின்மை, ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்து இணைப்பு இல்லாதது ஆகியவையே அந்த தடைகள். 


    முந்தைய அரசுகள் வடகிழக்கு பகுதி வளர்ச்சியில் ஆர்வம் காட்டவில்லை. வடகிழக்கு வளர்ச்சிக்கு அவை ஒருபோதும் முன்னுரிமை வழங்கவில்லை ஆனால், பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்தவும், அனைத்து போக்குவரத்து இணைப்புகளையும் அதிகரிக்கவும், வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

    வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம், சுற்றுலா, காடு வளர்ப்பு, விவசாயம் ஆகியவற்றில் வடகிழக்கு நிலப்பயன்பாட்டுக் கவுன்சிலின் தரவுகளை வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள் முழுமையாகப் பயன்படுத்தி பயனடைய வேண்டும். இதற்காக தங்களது மாநிலங்களில் ஒரு தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×