search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரவுபதி முர்மு"

    • பிரதமர் மோடியை சித்தராமையா சந்தித்து பேசவும் அனுமதி கேட்டுள்ளார்.
    • மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தியை சந்தித்து மந்திரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்பு மந்திரிகளை டெல்லிக்கு வரும்படி காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது அதன்படி, வருகிற 21-ந் தேதி மந்திரிகள் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்கள். அங்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து மந்திரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் பங்கேற்க உள்ளனர்.

    இந்த நிலையில், டெல்லிக்கு செல்லும் முதல்-மந்திரி சித்தராமையா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசுவதற்கு அனுமதி கேட்டு இருந்தார். அதன்படி, வருகிற 21-ந் தேதி முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து பேசுவதற்கு ஜனாதிபதி அலுவலகம் அனுமதி வழங்கி இருக்கிறது. இதன்மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சித்தராமையா சந்தித்து பேசுவது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் பிரதமர் மோடியை சித்தராமையா சந்தித்து பேசவும் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் பிரதமரை, முதல்-மந்திரி சித்தராமையா சந்தித்து பேசுவதற்கு இன்னும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • ஏப்ரல் 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றார்.
    • விழாவுக்கான அழைப்பிதழ் அச்சடிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.

    சென்னை :

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவன வளாகத்தில் கலைஞர் கருணாநிதி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் என்று கூறினார்.

    அதன்படி, தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் 3 கட்டிடங்களை கொண்ட இந்த மருத்துவமனை, ஆயிரம் படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த மருத்துவமனையை ஜூன் 3-ந்தேதியன்று கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்முவை வைத்து திறப்பதற்கு அரசு திட்டமிட்டது. அதற்காக கடந்த ஏப்ரல் 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றார். ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

    அதைத்தொடர்ந்து ஜூன் 5-ந்தேதியன்று நடக்கும் மருத்துவமனை திறப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் ஜனாதிபதி பங்கேற்பார் என்று கூறப்பட்டது.

    எனவே இந்த விழாவுக்கான அழைப்பிதழ் அச்சடிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. ஆனால் ஜூன் 5-ந்தேதி சென்னைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவில்லை என்ற தகவல் வெளியானது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் அவர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வதால் மருத்துவமனை திறப்பு விழாவை வேறு தேதிக்கு ஒத்திவைக்கும்படி ஜனாதிபதி அலுவலக தரப்பில் கூறப்பட்டது.

    அதன் அடிப்படையில் விழா தள்ளிவைக்கப்பட்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் சென்னைக்கு ஜூன் 15-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு வருவதாக ஜனாதிபதி அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை அவர் ஜூன் 15-ந்தேதி திறந்து வைக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    • புதிய பாராளுமன்றத்தை பிரதமர் திறப்பது பழங்குடியினரையும், பெண்களையும் அவமதிப்பதாகும் என பேட்டி.
    • பழங்குடியினரை குறிவைத்து அரசியல் செய்யும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட்டம்

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. ஜனாதிபதி திரவுபதி முர்முவை வைத்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் தலைவர் சிவாஜிராவ் மோகே இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனாதிபதிக்கு பதிலாக பிரதமர் மோடி புதிய பாராளுமன்றத்தை திறந்து வைப்பது ஜனநாயகத்தை அவமதிப்பதாகும். முதல் முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாகி இருக்கிறார். அதுவும் பெண் ஜனாதிபதியை பெற்றிருக்கிறோம். புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி திறப்பது பழங்குடியினரையும், பெண்களையும் அவமதிப்பதாகும்.

    பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது ஜனாதிபதி என்பதால், அவர் பாராளுமன்றத்தின் முக்கிய அங்கம். எனவே, புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும். அவர் பழங்குடியினர் என்பதால் இப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை.

    பழங்குடியினர் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் இந்த முயற்சிக்கு எதிராக, நாளை நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம். புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் அல்ல. முடிவை மாற்றுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. பிரதமர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதியை அழைத்து திறந்து வைக்க வேண்டும்.

    பழங்குடியினரை குறிவைத்து அரசியல் செய்யும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவோம். பழங்குடியினரை அரசியலுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜார்கண்டில் நாளை வரை இருக்கும் ஜனாதிபதி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
    • திரவுபதி முர்மு 2015-21-ம் ஆண்டுகளில் ஜார்கண்டில் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ராஞ்சி :

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று ஜார்கண்ட் சென்றார். இதற்காக திேயாகர் விமான நிலையத்தில் சென்று இறங்கிய அவரை மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    பின்னர் அவர் அங்குள்ள பாபா பைத்யநாதர் கோவிலுக்கு சென்றார். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இந்த புகழ்பெற்ற கோவிலில், வேத மந்திரங்கள் முழங்க முர்மு சிறப்பு வழிபாடு நடத்தினார்.

    முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் வாரியம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. முர்முவின் வருகையை முன்னிட்டு கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    ஜார்கண்டில் நாளை வரை இருக்கும் ஜனாதிபதி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக தலைநகர் ராஞ்சியில் நேற்று மாலையில் ஐகோர்ட்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார்.

    ரூ.550 கோடியில் 165 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த ஐகோர்ட்டு வளாகம் நாட்டின் மிகப்பெரிய ஐகோர்ட்டு வளாகங்களில் ஒன்றாகும்.

    இதற்காக தியோகரில் இருந்து ராஞ்சி சென்றடைந்த திரவுபதி முர்முவை, அங்குள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில், மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் அங்கிருந்து பிர்சா சவுக் சென்ற ஜனாதிபதி, அங்கு பழங்குடியின தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன் தியாகி ஆல்பர்ட் எக்காவுக்கும் அஞ்சலி செலுத்தினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (வியாழக்கிழமை) குன்றி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக மத்திய பழங்குடி நலத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெண்கள் மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார். அத்துடன் ராஞ்சி ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவிலும் மாலையில் பங்கேற்கிறார்.

    ஜனாதிபதியாக 2-வது முறையாக ஜார்கண்ட் சென்றுள்ள திரவுபதி முர்முவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகின்றன. அவர் கடந்த 2015-21-ம் ஆண்டுகளில் ஜார்கண்டில் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால் எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • இல்லாத பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. அத்துடன், சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உளள்து.

    எனவே, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, கடும் அவமதிப்பு மட்டுமின்றி, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டறிக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கையெழுத்திடவில்லை. அதேசமயம் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளது.

    நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.

    இந்நிலையில், திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை 19 எதிர்க்கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு முன்பும் பாராளுமன்ற வளாகத்தில் கட்டிடங்களை பிரதமர்கள் திறந்து வைத்திருக்கிறார்கள் என்றும், இல்லாத பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    'மக்களவை சபாநாயகர் தான் பாராளுமன்றத்தின் பொறுப்பாளர், அவர்தான் பிரதமரை அழைத்துள்ளார். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா வரலாற்று நிகழ்வு. ஒவ்வொரு நிகழ்வையும் அரசியலாக்குவது நல்லதல்ல. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வரலாற்று நிகழ்வு நடக்கிறது' என்றும் ஜோஷி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திமுகவும் விழாவை புறக்கணிப்பதாக அக்கட்சியின் எம்.பி திருச்சி சிவா இன்று அறிவிப்பு வெளியிட்டார்.
    • கூட்டறிக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கையெழுத்திடவில்லை.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்றம் கட்டுவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல, என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். 'ஜனாதிபதிதான் நாட்டின் அரசியலமைப்புத் தலைவர். எனவே, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும்' என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். குறிப்பாக சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உளள்து.

    எனவே, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்தன. திமுகவும் விழாவை புறக்கணிப்பதாக திமுக தரப்பில் அக்கட்சியின் எம்.பி திருச்சி சிவா இன்று அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவினை புறக்கணிக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, கடும் அவமதிப்பு மட்டுமின்றி, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டறிக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கையெழுத்திடவில்லை. அதேசமயம் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளது.

    • சாவர்க்கரின் பிறந்தநாளில் இதை செய்திருக்கக் கூடாது என சுதிப் பந்தோபாத்யாய் கூறி உள்ளார்.
    • ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும் என அசோக் கெலாட் கூறியுள்ளார்.

    கொல்கத்தா:

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல, என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    'ஜனாதிபதிதான் நாட்டின் அரசியலமைப்புத் தலைவர். எனவே, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும்' என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

    குறிப்பாக சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் சுதிப் பந்தோபாத்யாய் இதுபற்றி கூறுகையில், "மே 28ம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். சுதந்திர தினத்திலோ அல்லது குடியரசு தினத்திலோ அல்லது மகாத்மா காந்தி பிறந்த நாளிலோ இந்த விழா நடந்திருக்க வேண்டும். சாவர்க்கரின் பிறந்தநாளில் இதை செய்திருக்கக் கூடாது" என்றார்.

    பாராளுமன்றம் என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல, பழைய மரபுகள், முன்னுதாரணங்கள் மற்றும் ஜனநாயக அடித்தளம் ஆகியவற்றை கொண்டு நிறுவப்பட்டது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் கூறினார்.

    • பாராளுமன்ற திறப்பு விழா நடைபெறும் தேதி காங்கிரசை எரிச்சல் அடைய வைத்துள்ளது.
    • உலக அளவில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும் கெலாட் சுட்டிக்காட்டி உள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற வளாகம் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ளது. இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. அத்துடன், பாராளுமன்ற திறப்பு விழா நடைபெறும் தேதியும் காங்கிரசை எரிச்சல் அடைய வைத்துள்ளது. அந்த தினம் சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால், அந்த நாளை தேர்வு செய்தது தேசத்தை கட்டமைத்த தலைவர்களுக்கு அவமானம் என்றும் காங்கிரஸ் கூறுகிறது.

    "புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    இதே கருத்தை ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். ராகுல் காந்தியின் ட்வீட்டை பகிர்ந்துள்ள அவர், 'ஜனாதிபதி நாட்டின் அரசியலமைப்புத் தலைவர். எனவே, அரசியலமைப்புச் சட்டம், நெறிமுறைகள் மற்றும் பாராளுமன்ற அவைகளின் கண்ணியத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில், புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும்' என கூறியுள்ளார்.

    மேலும், அரசியல் ஆதாயம் மற்றும் விளம்பரம் தேடும் நோக்கத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உலக அளவில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும் கெலாட் சுட்டிக்காட்டி உள்ளார்.

    • தேஜ்பூர் விமானப்படை நிலையத்தில் இருந்து போர் விமானத்தில் (சுகோய் 30 எம்.கே.ஐ. ரகம்) பறக்கிறார்.
    • காஜிரங்கா தேசிய பூங்காவில் 'காஜ் உத்சவ்-2033'- கொண்டாட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதல் அசாம் மாநிலத்தில் 8ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் 8ம் தேதியன்று (சனிக்கிழமை) தேஜ்பூர் விமானப்படை நிலையத்தில் இருந்து போர் விமானத்தில் (சுகோய் 30 எம்.கே.ஐ. ரகம்) பறக்கிறார்.

    மேலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது அசாம் பயணத்தின்போது நாளை (7-ந்தேதி) காஜிரங்கா தேசிய பூங்காவில் 'காஜ் உத்சவ்-2033'- கொண்டாட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    கவுகாத்தி ஐகோர்ட்டு தொடங்கப்பட்டதன் 75-வது ஆண்டு விழா நாளை நடக்கிறது. இதிலும் ஜனாதிபதி முர்மு கலந்துகொண்டு பேசுகிறார். இந்த தகவல்களை ஜனாதிபதி மாளிகையின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    • நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்தார்.
    • ஏழை மக்களின் அரசியல் சாசன உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.

    கொல்கத்தா:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ளார். இதற்காக கொல்கத்தா சென்ற அவரை முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரவேற்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, திரவுபதி முர்முவை 'தங்க மங்கை' என வர்ணித்தார். மேலும் அவர் பேசியதாவது:

    பல்வேறு சமூகங்கள், சாதிகள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்கள் காலங்காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் பெருமைமிக்க பாரம்பரியத்தை நாடு கொண்டுள்ளது. இந்த நாட்டின் அரசியலமைப்பின் தலைவராக நீங்கள் இருக்கிறீர்கள்.

    இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தையும், நாட்டு ஏழை மக்களின் அரசியல் சாசன உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    ஒரு பேரழிவில் இருந்து இதை பாதுகாக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

    • சுபாஷ் சந்திரபோஸின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
    • ரவீந்திரநாத் தாகூரின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

    புதுடெல்லி:

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மேற்கு வங்கத்திற்கு இன்று முதல் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அப்போது கொல்கத்தாவில் உள்ள நேதாஜி பவனுக்கு செல்லும் குடியரசுத்தலைவர் அங்கு சுபாஷ் சந்திரபோஸின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

    அதன்பிறகு, பிற்பகலில் ஜேராசங்கோ தாகுர்பாரி-ரவீந்திரநாத் தாகூரின் இல்லத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திகிறார். மாலையில் நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். நாளை மறுநாள் பேலூர் மடத்திற்கு வருகை தர உள்ளார்.

    • ஜனாதிபதி சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு கேரளா புறப்பட்டு சென்றதும் கவர்னர் ஆர்.என். ரவி சென்னை புறப்பட்டு செல்கிறார்.
    • கவர்னர் வருகையையொட்டியும் கன்னியாகுமரியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி:

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (சனிக்கிழமை) காலை கன்னியாகுமரி வருகிறார்.

    அவரை வரவேற்பதற்காகவும் அவரது சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் அவரை வரவேற்கிறார்கள். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அவர் மாலை 6.20 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன்மறையும் காட்சியை கண்டு ரசிக்கிறார். அதன் பின்னர் அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குசெல்கிறார். அங்கு அவர் பயபக்தியுடன் சாமிகும்பிடுகிறார். இரவு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    மறுநாள் காலையில் கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை வரவேற்கிறார். அதன் பிறகு அவருடன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்கிறார். ஜனாதிபதி சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு கேரளா புறப்பட்டு சென்றதும் கவர்னர் ஆர்.என். ரவி சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் வருகையையொட்டியும் கன்னியாகுமரியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ×