என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 235761"
- ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், ஒப்பந்த அடிப்ப டையில் தற்காலிகமாக பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஈரோடு மாவ ட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், ஒப்பந்த அடிப்ப டையில் தற்காலிகமாக பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஈரோடு மாவ ட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படு–வர். அரசு அறிவித்தபடி மாதம் ரூ.27,804 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் இளங்கலை பட்டம் (சமூகப்பணி, சமூகவியல், குழந்தை மேம்பாடு, மனித உரிமைகள், பொது நிர்வாகம், உளவியல், சட்டம், பொது சுகாதாரம், சமூக வளமுகாமைத்துவம்) பெற்றிருக்க வேண்டும்.
40 வயதுக்கு உட்பட்டோர் 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலகம், புதிய கட்டடம், 6-வது மாடி, ஈரோடு என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 800-க்கும் மேற்பட்ட பயிற்சிகள் நடத்தப்படுகிறது.
- இதில் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து, வேளாண்மை, ஆடை, வாகனம், அழகு மற்றும் ஆரோக்கியம், உணவு பதப்படுத்தும் முறை, தளவாடங்கள் மற்றும் பொருத்துதல், கற்கள் மற்றும் நகைகள், பசுமை வேலை, சுகாதார பாதுகாப்பு, ஹைட்ரோகார்பன், உள்கட்டமைப்பு உபகரணங்கள், கருவியாக்கம், ஐ.டி., வாழ்க்கை அறிவியல், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, சுரங்கம், வண்ணப்பூச்சுகள் மற்றும் பூச்சு, பிளம்பிங், சில்லறை விற்பனை, ரப்பர், விளையாட்டு, தொலை தொடர்பு மற்றும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளால் 800-க்கும் மேற்பட்ட பயிற்சிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் இந்த பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தை வருகிற 20-ந் தேதிக்குள் மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண். 0452-2308216-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 6-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்படவேண்டும்
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்பட்டிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பி த்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட தொடங்கும்.
புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 6-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்படவேண்டும். அதே போல் புதிய இனங்களுக்கு இணையதளம் வருகிற 15-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 20-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும்.
அரசு இணையதளம் https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarshipschemes -யிலும் இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற புதியதாக விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தொகை அனுமதிக்கப்படும்.
ஈரோடு:
முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற புதியதாக விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் தகுதிகள் பெற்று இருப்பின் விண்ணப் பிக்கலாம். ஆண் குழந்தை யின்றி 2 பெண் குழந்தைகள் (2-வது பெண் குழந்தைக்கு 3-வயதுக்குள்) அல்லது ஒரு பெண் குழந்தை இருப்பின் (3-வயதுக்குள்).
பெற்றோர்களில் ஒருவரில் 40 வயதிற்குள் குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மிகாமல் பெற்று இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தொகை அனுமதிக்கப்படும்.
ஏற்கனவே இத்திட்டத்தில் பயனடைந்து முதலீட்டு பத்திரம் பெற்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் சம்மந்தப்பட்டவரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் வரும் 30-ந் தேதிக்குள் சம்மந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக களப்பணி யாளர்களை அணுகுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
- விருதுநகர் மாவட்ட விவசாயிகள் வட்டியில்லா பயிர்க்கடன் பெற ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டில் ரூ.200 கோடி வரை பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 ஆயிரத்து 972 விவசாய உறுப்பினர்கள் ரூ.58.06 கோடி பயிர்க்கடன் பெற்றுள்ளனர்.
விவசாமிகள் அனைவரும் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் கோரி விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடந்தாண்டு 20 ஆயிரத்து 353 உறுப்பினர்களுக்கு ரூ.135.51 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் 3 ஆயிரத்து 420 புதிய உறுப்பினர்கள் ரூ.23.07 கோடிக்கு பயிர்க்கடன் பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டில் மாநில தொழில்நுட்ப குழுவினரால் நிர்ணயம் செய்யப்பட்ட 2022-23 ஆண்டு பயிர்க்கடனளவு திட்டத்தின்படி அருகில் உள்ள சங்கங்களில் அனைத்து விவசாயிகளும் கடன் பெறலாம்.
6 முதல் 15 மாதங்களுக்கு உட்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கே.சி.சி. குறுகிய கால பயிர் கடன்களை உரிய ஆவணங்களுடன் நபர் ஜாமீன் அல்லது தங்க நகை அடமானத்தின் பேரில், அதிகபட்சமாக ரூ.1.60 லட்சம் வரையிலும், தங்க நகை அடமானத்தின் பேரில் அல்லது சாகுபடி நில அடமானத்தின் பேரில் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரையிலும் அனைத்து சங்கங்களிலும் வட்டியில்லா பயிர்க்கடன் பெறலாம். உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்தினால் வட்டி செலுத்த தேவையில்லை.
இதன்படி ஏக்கர் ஒன்றுக்கு பயிர்க்கடன் அளவானது நெல் (பாசனம்/மானாவாரி) ரூ.26100, மக்காச்சோளம் (பாசனம்) ரூ.28750, (மானாவாரி) ரூ.19200, பருத்தி (பாசனம்) ரூ.26350, (மானாவாரி) ரூ.17550, மிளகாய் (பாசனம்) ரூ.26950, (மானாவாரி) -ரூ.20250, தென்னை (பராமரிப்பு) ரூ.25450, நிலக்கடலை (பாசனம்) ரூ.24900, நிலக்கடலை (மானாவாரி) ரூ.20200 ஆகும்.
விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை கீழ்க்காணும் ஆவணங்களுடன் அணுகி கடன் பெற்று பயன் அடையலாம்.
கடன் தேவையுள்ள விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல், 10(1) சிட்டா, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு உள்ள 2 புகைப்படம் ஆகியவற்றுடன் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரில் விண்ணப்பித்து பயிர்க்கடன் பெறலாம்.
இதுவரை பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரிய பங்குத் தொகை மற்றும் நுழைவு கட்டணம் செலுத்தி புதிய உறுப்பினர்களாக சேர்ந்து பயிர்க்கடன் பெறலாம். விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் போதிய உரம் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு ரொக்கமாகவும், கடன் அடிப்படையிலும் வழங்கப்பட்டு வருகிறது.கூடுதல் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர்-94899 27003, பொது மேலாளர்-94899 27001, உதவி பொது மேலாளர்-94899 27006, மேலாளர் (விவசாயம்) 94899 27177, களமேலாளர் (விருதுநகர்)-94899 27044, களமேலாளர் (ஸ்ரீவில்லிபுத்தூர்) 94899 27021, களமேலாளர் (அருப்புக்கோட்டை)-94899 27023 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், 45வயதுக்குஉட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- மாதம் ரூ.30 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலிப் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூா் மாவட்ட சமுக நலத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிா்வாகி, மூத்த ஆலோசகா், தகவல் தொழில் நுட்பப் பணியாளா், களப் பணியாளா் மற்றும் பாதுகாவலா், ஓட்டுநா் ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக தொகுப்பூதியத்தில் பணியாற்ற தகுதிவாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதில் மைய நிா்வாகி பணியிடத்துக்கு திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், 45 வயதுக்குஉட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எம்எஸ்டபிள்யூ அல்லது சட்டப்படிப்பு படித்திருப்பதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து மீட்பு மற்றும் ஆலோசனை வழங்குதல் தொடா்பான பணியில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும். அதே போல, மூத்த ஆலோசகா் பணிக்கு மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
தகவல் தொழில்நுட்பப் பணியாளா் பணிக்கு 40 வயதுக்கு மிகாமலும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். சுழற்சி முறையில் 24 மணி நேரம் பணிபுரிய ஆா்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு பட்டப்படிப்பு முடித்து கணினி அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாதம் ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
களப்பணியாளா் பணிக்கு எம்எஸ்டபிள்யூ படித்தவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், சுழற்சி முறையில் பணிபுரிய ஆா்வம் உள்ளவராகவும், 181 மற்றும் இதர உதவி எண்கள் மூலம் வரும் அழைப்பு தொடா்பான உதவிகளுக்கு தேவை அறிந்து உதவும் எண்ணம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். பெண்களுக்கு விழிப்புணா்வு மற்றும் ஊக்கப்படுத்தும் வகையில் அரசுத் திட்டங்கள் சென்றடைய செய்ய ஆா்வம் உடையவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
பாதுகாவலா் மற்றும் ஓட்டுநா் பணிக்கு திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்தவராகவும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தவறியவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆகவே மேற்கண்ட தகுதியுடைய நபா்கள் இதற்கான விண்ணப்ப படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னா் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலா், அறை எண் 35, 36, தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா் என்ற முகவரிக்கு நவம்பா் 10-ந் தேதிக்குள் தபால் மூலமாகவோ மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- இவ்விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.11.2022.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இனசுழற்சி அடிப்படையில் பொது பிரிவினர் முன்னுரிமையற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
இப்பணிகாலியிடத்திற்கு கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி ஆகும். இப்பணியிடத்திற்கு 01.07.2022 அன்றைய நிலையில் குறைந்தபட்ச வயது 18-ம், பொது பிரிவினர் 32 வயதிற்கு மிகாமலும், பி.சி., எம்.பி.சி., டி.என்.சி. பிரிவினர் 34 வயதிற்கு மிகாமலும், எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினர் 37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தகுதியான மனுதாரர்கள் திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அணுகி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
அதில் உரிய விவரங்களை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகின்ற 15.11.2022-க்குள் உதவி இயக்குநர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், கண்டோன்மென்ட், திருச்சி-620 001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம்.
இவ்விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.11.2022, மாலை 5.45 மணி. அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக பரிசீலிக்கப்படமாட்டாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தொழிலாளர் நலத்துறை சார்பில் தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
வேலையளிப்பர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணிப் பாதுகாக்கும், வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும்.
இவ்விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்திலிருந்து http://www.kdourtagoxin பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை, அந்தந்த மாவட்டத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை: ஆணையர் (சமரசம்) அலுவலகம் வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்கள், தொழில்க பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் சென்னை. தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தினையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு 11.11.2022க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்துடனும். விண்ணப்பக் கட்டணமாக விண்ணப்பித்தவர் தொழிற்சங்கமானால் ரூ.100/ம். வேலையளிப்பவரானால் ரூ.250/ம் கீழ்காணும் கணக்குத்தலைப்பின் கீழ் https:/www.karuvoolam.tn.gov.in/challanv/echallan வலைதளத்தில் tchallan மூலம் தொகை செலுத்திய அசல் செலுத்துச் சீட்டு(challam) வைத்து அனுப்ப வேண்டும்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
- தனியார் பள்ளியில் படிக்கும் சிறுபான்மையினர் உதவித்தொகைக்கு விண்ணபிப்பது 31-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- (www.scholarships.gov.in) என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர்
தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்க ப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜெயின் மதங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியாா கல்வி நிலையங்களில் 2022-23ம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் (www.scholarships.gov.in) என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு ள்ளது.
தகுதியான சிறுபான்மை யின மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தி ற்கு வருகிற 31-ந் தேதி வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் உதவித்தொகைக்கு விண்ண ப்பிக்கலாம்.
இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- தொழிலாளர் நலத்துறை சார்பில் தொழில் நல்லுறவு விருதுக்கு தகுதியுள்ளவர்கள் . விண்ணப்பிக்கலாம்.
- மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.
மதுரை
வேலையளிப்பர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணிப் பாதுகாக்கும், வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும்.இவ்விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்திலிருந்து http://www.kdourtagoxin பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை, அந்தந்த மாவட்டத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை: ஆணையர் (சமரசம்) அலுவலகம் வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்கள், தொழில்க பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் சென்னை. தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தினையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு 11.11.2022க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்துடனும். விண்ணப்பக் கட்டணமாக விண்ணப்பித்தவர் தொழிற்சங்கமானால் ரூ.100/ம். வேலையளிப்பவரானால் ரூ.250/ம் கீழ்காணும் கணக்குத்தலைப்பின் கீழ் https:/www.karuvoolam.tn.gov.in/challanv/echallan வலைதளத்தில் tchallan மூலம் தொகை செலுத்திய அசல் செலுத்துச் சீட்டு(challam) வைத்து அனுப்ப வேண்டும்.
மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.
- சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை சிவகங்ககை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிர்்ப்பதி வேட்டில் காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற, 9-ம் வகுப்பில் தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ.200, 10-ம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு (பி.இ. போன்ற தொழில்சார்் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகை நேரடியாக மனுதாரா்களது வங்கிக்கணக்கில் காலாண்டுக்கொருமுறை வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞா்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வி தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.
தொடா்ந்து, பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாராரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படமாட்டாது.
எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவா்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே, உதவித்தொகை பெற்று வருபவா்கள் தொடா்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடா்ந்து உதவித்தொகை பெற்றுகொள்ள வேண்டும்.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்று திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவா்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்துக் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 16 ஆய்வக நுட்புனர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- மாதாந்திர ஊதியமாக ரூ.13 ஆயிரம் வழங்கப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 16 ஆய்வக நுட்புனர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி டிப்ளமோ மெடிக்கல் லேபோரட்டரி டெக்னாலஜி, சர்ட்டிபிகேட் மெடிக்கல் லேபோரட்டரி டெக்னாலஜி, பி.எஸ்சி. மெடிக்கல் லேபோரட்டரி டெக்னாலஜி படித்து முடித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாதாந்திர ஊதியமாக ரூ.13 ஆயிரம் வழங்கப்படும். முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாகும். தகுதியுள்ளவர்கள் பதிவு தபால் மூலமாக தலைவர், மாநகராட்சி நல சங்கம், திருப்பூர் மற்றும் ஆணையாளர், திருப்பூர் மாநகராட்சி, திருப்பூர் ஆகிய முகவரியில் விண்ணப்பிக்கலாம். வருகிற 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களை திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள தேசிய நகர்ப்புற சுகாதார திட்ட பிரிவில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்