search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டச்சத்து"

    • போசன் மா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

    திருப்பூர் :

    மத்திய அரசின் அறுவுறுத்தலின் படி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக தத்தெடுத்த கருமாபாளையம் கிராமத்தில் போசன் மா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கருமாபாளையம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டார். அவர் கூறுகையில், அனைவரும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். நமது உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நெகிழி பைகளில் சூடான உணவு பொருட்களை வாங்க கூடாது. ஏனெனில் அதில் உள்ள நச்சுத்தன்மை உணவுடன் வினைபுரிந்து கெடுதல் ஏற்படுத்தும்.

    சத்தான உணவுகளான கீரைகள், பழங்கள், காய்கறிகளை அன்றாடும் சாப்பிடும் உணவில் சேர்க்கவேண்டும். நோய் வராமல் தடுக்க பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என அறிவுறுத்தினர். பிறகு மாணவ செயலர்கள் சுந்தரம், அருள்குமார், பூபதிராஜா, ரமேஷ், அரவிந்தன் ஆகியோர் தலைமையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நடனம் நடத்தியும், வீடுவீடாக சென்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஊட்டச்சத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அங்கன்வாடி பணியாளர்களின் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
    • கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு பயன் பெற்றனர்.

    வாழப்பாடி:

    பேளூர் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அங்கன்வாடி பணியாளர்களின் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். வட்டார ஊட்டச்சத்து திட்ட மேற்பாற்வையாளர்கள் பத்மாவதி, பத்மா, திட்ட ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி ஆகியோர், ஊட்டச்சத்து கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்து முன்னிலை வகித்தனர்.

    டாக்டர் கார்த்திகா, சமுதாய சுகாதார செவிலியர் ராணி, மணிமாலா ஆகியோர் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.

    கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு பயன் பெற்றனர்.

    அங்கன்வாடி பணியாளர்களின் ஊட்டச்சத்து கண்காட்சி, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்ததாக தெரிவித்தனர். முடிவில், வட்டார சுகாதார மேற்பாற்வையாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

    • ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
    • விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நடுவச்சேரி கிராமத்தில் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலையில் வீடு வீடாக சென்று இயற்கை சார்ந்த உணவுகளை உட்கொள்ளும் போது உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    மாணவ செயலாளர்கள் அருள்குமார், அரவிந்தன், ரமேஷ், கோவிந்தராஜ், பூபதிராஜா ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு நடனம், நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனி, ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகேசன், நவீன்பிரபு மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றுவருகிறது
    • கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

    புதுக்கோட்டை,:

    சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30 வரை தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் 'ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல்" என்ற தலைப்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கையெழுத்து இட்டு துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் வாசிக்க அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்செல்வி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கர்ப்பிணி பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் தாய்பாலின் மகத்துவத்தையும், அவசியத்தையும் விரிவாக எடுத்துரைத்தனர்.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை லயன் சங்கம், தஞ்சை டெம்பிள்சிட்டி லயன் சங்கம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து உலக தாய்பால் வாரவிழா நிகழ்ச்சியை அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தியது .

    அம்மாபேட்டை லயன்ஸ் சங்க தலைவர் முரளி, தஞ்சை டெம்பிள்சிட்டி லயன்சங்க தலைவர் சிவா, மாவட்ட தலைவர்கள் சுப்ரமணியன், நைனா குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் வெங்கடேஷ்குமார், சித்த மருத்துவர் ரெங்கநாயகி ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் தாய்பாலின் மகத்து வத்தையும், அவசியத்தையும், விரிவாக எடுத்துரைத்தனர்.

    நிகழ்ச்சியில் லயன்சங்க நிர்வாகிகள்பொன்மணி, மோகன்ராம், செயலாளர் வேல்மணி,பொருளாளர் ஜனார்த்தனன், சுகாதார ஆய்வாளர் பெரியண்ணன், செவிலியர் சித்ரா மற்றும் ஏராளமான தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருநெறி மன்ற நிர்வாகி ராமநாதன் மற்றும் லயன் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • விழுப்புரத்தில் 15 காசநோயாளிகளை தத்து எடுத்து ஊட்டச்சத்துகள் கலெக்டர் வழங்கினார்.
    • நோய் தொற்றிலிருந்து விடுபடும் வரை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சிகிச்சை வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட காசநோய் ஒழிப்பு மன்றக்கூட்டம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர், காசநோயாளிகளை தத்தெடுத்து, அவர்களுக்கு சிகிச்சை காலத்தில் ஊட்டச்சத்து வழங்குதல், காசநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காசநோய் பற்றிய தகவல்களையும், காசநோய் கண்டறியவும் அரசோடு சேர்ந்து அனைவரும் பங்குகொண்டால் மட்டுமே 2025-க்குள் காசநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க முடியும்.

    மேலும் காசநோய் உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு மாதந்தோறும் தேவையான மருந்து மாத்திரை களை வழங்கி கண்காணித்து நோய் தொற்றிலிருந்து விடுபடும் வரை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சிகிச்சை வழங்கிட வேண்டும். காசநோய் தொடர்பான விழிப்பு ணர்வை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 2015-ஆம் ஆண்டினை காட்டிலும் 2022-ஆம் ஆண்டு காசநோய் 20 சதவீதம் குறைந்துள்ளதாக கள ஆய்வில் கண்டறியப்பட்டு காசநோய் விகிதத்தை குறைத்ததற்காக தமிழக முதல்-அமைச்சர் அவர்களால் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்ப ட்டுள்ளதுநமது மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும்.

    மேலும் இதுபோன்ற தொடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற காலத்தில் காசநோய் இல்லாத மாவட்டமாக நமது மாவட்டத்தை உருவாக்கிட அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். மேலும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் காசநோயாளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் மோகன் கேட்டுக்கொண்டார். தொடர்ந்துக முதல்-அமைச்சரால் தலைமைச் செயலகத்தில் காசநோய் விகித்ததை குறைத்ததற்காகவும், காசநோய் குழு சிறப்பாக செயல்பட்டதற்காகவும் துணை இயக்குநனருக்கு (காசநோய்) பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பதக்கத்தை (வெண்கலம்) வழங்கியதையொட்டி அதனை மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். மேலும் காசநோயாளிகளை தத்தெடுத்து ஊட்டச்சத்து வழங்கிய விழுப்புரம் கிரீன்ஸ்ரூபவ் விழுப்புரம் ரோட்டரி கிளப் (சென்ட்ரல்), விழுப்புரம் மகாவீர் சூப்பர் மார்க்கெட் ஆகியோரும் சென்னையில் தாங்கள் பெற்ற சான்றிதழினை காட்டி மாவட்ட கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து 5 காசநோயாளிகளை ரோட்டரி கிளப் (சென்ட்ரல்) தத்தெடுத்து அவர்களுக்கு ஊட்டச்சத்தினை வழங்கினார்கள். 15 காசநோயாளிகளை தத்தெடுத்து அவர்களுக்கு ஊட்டச்சத்தினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) சண்முகக்கனி, துணை இயக்குநர் (காசநோய்) சுதாகர், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பொற்கொடி, காசநோய் தடுப்புதிட்ட ஒருங்கிணைப்பாளர்கள். ரோட்டரி கிளப் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • காசநோய் கண்டறியும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ் வீடியோ வாகனங்களை தொடங்கி வைக்கும் விழா நடந்தது.
    • 100 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கும் பொருட்டு முதல் 10 தொண்டு நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    திருத்துறைப்பூண்டி:

    முதல்-அமைச்சர்மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற காசநோய் கண்டறியும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ் வீடியோ வாகனங்களை தொடங்கி வைக்கும் விழா நடந்தது.

    விழாவில்காசநோ யாளி களின் ஊட்டச்ச த்து நிலையை மேம்படுத்துவதற்காக பணியாற்றிய 100 தன்னார்வ தொண்டு நிறுவனகளுக்கு விருது வழங்கி சிறப்பிக்கும் பொருட்டு முதல் 10 தொண்டு நிறுவனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார்.இந்நிக ழ்ச்சியில்திருத்துறை ப்பூண்டிபாரத மாதா குடும்ப நலநிறுவன இயக்குனர் எடையூர் மணிமாறனுக்கு மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வு த்துறை அமைச்சர் மா.சுப்பி ரமணியன் பாரா ட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, மருத்துவம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு வீட்டிலும் ஊட்டச்சத்து காய்கறி தோட்டங்கள் அமைத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
    • கூட்டத்தில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு பங்கேற்றவர்களுக்கு காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் உள்ள மகளிர் குழு பிரதிநிதி களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வனம் தன்னா ர்வ அமைப்பின் நிறுவனர் கலைமணி முன்னிலை வகித்து கூட்டத்தின் நோக்கம் குறித்தும், எதிர்காலத் திட்டம் குறித்தும் பேசினார். இதில் தொடர்ச்சியாகசெய ல்படாத மகளிர் குழுக்களை செயல்பட வைத்தல், ஒவ்வொரு வீட்டிலும் ஊட்ட ச்சத்து காய்கறி தோட்டங்கள் அமைத்தல், தனித்தொழில் செய்ய ஆர்வமுள்ள மகளிர் சுயஉதவிக் குழுவி னரை அடையாளம் காணுதல் ஆகியன பற்றி பயிற்சி நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்தும், பங்கேற்றவர்களுக்கு காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர், பணித்தள பொறுப்பாளர் ஐயப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அம்மாபேட்டை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து உணவுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெங்கடேஷ்குமார், சித்த மருத்துவர் ரெங்கநாயகி ஆகியோர் கலந்து கொண்டு கரப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

     அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை திருநெறி தமிழ் மன்றம் நிர்வாகி ருக்மணிஆச்சி நினைவு தினத்தை முன்னிட்டு அம்மாபேட்டை அரசு மருத்துவமனை வரும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து உணவுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுகாதார ஆய்வாளர் பெரியண்ணன், திருநெறி தமிழ் மன்ற நிர்வாகி ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெங்கடேஷ்குமார், சித்த மருத்துவர் ரெங்கநாயகி ஆகியோர் கலந்து கொண்டு கரப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு வந்திருந்த ஏராளமான நோயாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செவிலியர் சித்ரா, கிராம செவிலியர்கள் சரளா, சர்மிளா, வினோதினி, மஞ்சுளா. கண்ணையன், கண்ணன், வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்ஏற்பாடுகளை திருநெறி தமிழ்மன்றம் நிர்வாகி ராமநாதன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    ×