என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கவுன்சிலர்கள் கோரிக்கை"
- திருப்புல்லாணி யூனியன் கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- அதனை தொடர்ந்து 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் ஒன்றியக்குழு தலைவர் புல்லாணி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் துணைத்தலைவர் சிவலிங்கம் முன்னிலையில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.
தொடக்கத்தில் ஒன்றிய குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வரவேற்று கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கூறினார்.
இந்த கூட்டத்திற்கு கீழக்கரை மின்வாரி யத்துறையில் இருந்தும் கல்வித்துறையில் இருந்தும் எந்த ஒரு அதிகாரியும் கலந்து கொள்வதில்லை என்று கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
மக்களின் நிறைகுறைகளை கூட்டத்தில் தெரி விப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வராதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. மேலும் முறையாக தகவல் கொடுத்தும் ஒன்றிய குழு கூட்டத்தை புறக்கணிக்கும் கீழக்கரை மின்வாரியத்துறை அதிகாரிகள் மீதும் கல்வித்துறை அதிகா ரிகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுமாறு அனைத்து கவுன்சிலர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முத்துப்பேட்டை சுற்றியுள்ள கிராமங்களில் நோய் பரவுதல் ஏற்படாமல் இருக்கவும், கொசு தொல்லைகள் அதிகமாக இருப்பதாகவும் ஒன்றிய குழு உறுப்பினர் தெரிவித்தார்.
அதற்கு சுகாதார ஆய்வாளர் பதிலளித்து கடுமையாக பேசினார்.
உடனே துணைத் தலைவர் இடைமறித்து கொசு தொல்லைக்கு மருந்து அடிப்பதும்,நோய் வராமல் முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததற்கு ஏன் இவ்வளவு கடுமையாக பேசுகிறீர்கள் என்று கூறினார். இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
நோய் பரவலை தடுக்க வேண்டும் என அனைத்து கவுன்சிலர்களும் கோரிக்ைக வைத்தனர். கவுன்சிலர்கள் கேட்கும் கேள்விக்கு அதிகாரிகள் முறையாக பதில் சொல்ல வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- கவுன்சிலர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றபடும் என்று தலைவர் லதாஅண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
- முடிவில் மேலாளர் தவ மணி நன்றி கூறினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை தலைமை யில் நடைபெற்றது. ஆணை யாளர் சாந்தி வரவேற்றார்.
கூட்டத்தில் முதல் தீர்மானமாக கீழடி அருங்காட்சிய கத்தை திறந்து வைத்த தற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டு உள்ளது.
கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. கவுன்சிலர் முருகேசன் பேசும்போது, கீழபசலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசனேந்தல் சாலையை சீரமைக்க வேண் டும்.
கீழபசலை நடுநிலைப் பள்ளி சுற்றுச்சுவரை உடனே கட்டித் தர வேண்டும். எம்.கரிசல்குளம் பகுதியில் இருந்து பார்த்திபனூர் மதகு அணை வரை மோச மான சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதே போல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து வலியுறுத்தினர்.
தலைவர் லதா அண்ணா துரை பேசும்போது, கூட்டத்தில் கவுன்சி லர்கள் தெரிவித்த கோரிக்கைகள் மற்றும் திட்ட பணிகள் கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும் என்றார். முடிவில் மேலாளர் தவ மணி நன்றி கூறினார்.
- ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
- அனைவருக்கும் கடை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊட்டி
ஊட்டி நகா்மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவா் வாணீஸ்வரி தலைமை தாங்கினாா். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
அரசினா் தாவரவியல் பூங்கா பகுதியில் ஆக்கிரமிப்பு எனக் கூறி அகற்றப்பட்ட 178 கடைகளில் தற்போது 55 பேருக்கு மட்டுமே கடை கட்டித் தரப்படுகிறது. இதை மாற்றி அனைவருக்கும் கடை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கடைகளை ஒதுக்கும்போது உண்மை–யான பயனாளிகளை அடையாளம் கண்டு கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.பெரிய வணிக நிறுவனங்களின் விதி மீறலை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இந்நிலை மாற வேண்டும்.
அடுத்த மழைக் காலத்துக்குள் காந்தல் கால்வாயை தூா்வாரி சீரமைக்க வேண்டும். மழைக் காலங்களில் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ெரயில்வே பாலத்தின் அடியில் தண்ணீா் தேங்குவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காந்தல் பகுதியில் பொது கழிப்பறைகளுக்கு தண்ணீா் இணைப்பு இல்லாததால் 5 மாதமாக உபயோகம் இல்லாமல் உள்ளது. மாா்லிமந்து அணை தண்ணீா் மிகவும் கலங்கலாக வருகிறது.கோழிப் பண்ணை, மாா்லிமந்து பகுதிகளில் புலி நடமாட்டம் உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் தெரு விளக்கு எரிவதில்லை.
இதற்கு பதில் அளித்து ஆணையா் காந்திராஜன் பேசுகையில், இப்பகுதியில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும் அடுத்த மாதம் நடக்க உள்ள நகராட்சி கூட்டத்துக்கு மின்விளக்குப் பணிகள் ஒப்பந்ததாரா் நேரில் வரவ–ழைக்கப்படுவாா் என்றார்.
இதற்கிைடயே தமிழகத்தில் தி.மு.க அரசு அறிவித்த மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.இதில் கவுன்சிலர்கள் ஜாா்ஜ், கே.ஏ.முஸ்தபா, தம்பி இஸ்மாயில், அபுதாகீா், கீதா, வனிதா, முஸ்தபா, விஷ்ணு, ரகுபதி, ஜெயலட்சுமி, ராஜேஸ்வரி, ரவிக்குமாா் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வடமதுரை யூனியன் அலுவலகத்திற்கு ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
- அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வடமதுரை:
வடமதுரை யூனியன் அலுவலகத்திற்கு ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி தலைமை வகித்தார்.
துணைத்த–லைவர் தனலட்சுமி கண்ணன், வடமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிங்கார கோட்டை கவுன்சிலர் மோகன் பேசுகையில்,
வடமதுரை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 144 குளங்கள் உள்ளன. அரசு அனுமதியின்றி மணல், மண் அள்ளுவதால் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது.
எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கோர்ட்டு உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதுமட்டுமன்றி 15 ஊராட்சிகளிலும் ஊராட்சி அனுமதியின்றி மண், மணல் அள்ளக் கூடாது எனவும் தெரி–வித்தார்.
கவுன்சிலர்களை ஊராட்சிகளில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைக்காதது வேதனை அளிப்ப–தாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர். மேலும் ஊராட்சிகளில் துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கே அதிக சம்பளம் கிடைக்கும்போது அதைவிட குறைவான ஊதியம் அவர்கள் பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தனர்.
முக்கிய தீர்மானமாக வடமதுரை ஒன்றிய ஊராட்சிகளின் தாலுக்கா தலைமை இடமான வேடசந்தூர் சென்றுவர பொதுமக்கள் அவதியுறு–கின்றனர். இதனால் வடமதுரையில் தாலுகா அலுவலகம் அமைத்து பொது மக்களின் சிரமங்களைக் குறைக்க வேண்டும் என்றும், வட மதுரையை தலைமை–யிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கிட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாலட்சுமி முடிவில் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்