search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடுபொருட்கள்"

    • அனைத்து விளைபொருட்களுக்கும் உரிய விலை கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • விவசாயம் என்பது லாபகரமான தொழிலாக மாறும் நிலை உருவாகும்.

    பல்லடம் :

    பல்லடத்தில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் தலா ரூ. 2ஆயிரம் மதிப்பில் 25 விவசாயிகளுக்கு வீரிய ரக மக்காச்சோளம் விதை மற்றும் இடு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கோவை வேளாண்மை பல்கலைக்கழக சிறுதானிய துறை தலைவர் பேராசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். வேளாண்மை துறை (தினை பயிர்) உதவி பேராசிரியர் கதிர்வேலன் வரவேற்றார். இந்த விழாவில் விவசாயிகளுக்கு வீரிய ரக மக்காச்சோளம் மற்றும் இடுபொருட்களை வழங்கி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமத்தின் இயக்குநரும், பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில தலைவருமான ஜி.கே. நாகராஜ் பேசுகையில்,விவசாயத்தில் பயிர் அறுவடைக்கு முன்பு நல்ல விலையில் விற்கும் விளை பொருட்கள் அறுவடை செய்யப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு வரும் போது விலை சரிவை சந்திக்கின்றன. அதற்கு காரணம் எந்த விளை பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதோ அதனையே அனைத்து விவசாயிகளும் பயிரிடுவதால் சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. இதனை சீரமைத்து அனைத்து விளைபொருட்களுக்கும் உரிய விலை கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இனி விவசாயம் என்பது லாபகரமான தொழிலாக மாறும் நிலை உருவாகும். வேளாண்மை துறை வளர்ச்சிக்காக பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை சிறப்பு கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறது. நாட்டின் அன்னிய செலவாணியை நாம் சமையல் எண்ணொய், பெட்ரோல், டீசல் போன்றவை இறக்குமதிக்கு தான் அதிக அளவில் செலவிடுகிறோம். அதனை தவிர்க்க உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் செந்தில்வேல், மாநில விவசாய அணி செயலாளர் மவுனகுருசாமி, மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தார்ப்பாலின் ஜிப்சம் சிங்சல்பேட் வரப்பு உளுந்து விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
    • வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பதிவு செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடுபொருட்கள் வழங்கப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரணயம் ஒன்றியத்தில்கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட செயல்படுத்தப்படும் ஊராட்சிகளான வாய்மேடு, பஞ்சநதிகுளம்கிழக்கு, பிராந்தியங்கரை, தகடூர் ,தேத்தாக்குடிதெற்கு ஆகிய கிராமங்களில் வேளாண்மை இடுபொருள்கள் சிறப்பு திட்டங்களாக வேளாண் கருவிகள் தொகுப்பு தார்ப்பாலின் ஜிப்சம் சிங்சல்பேட் வரப்பு உளுந்து விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தத் திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகவும் பதிவு செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடுபொருட்கள் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்தார். உடன் வேளாண்மை அலுவலர்கள் அனிஷ், நவீன்குமார் இருந்தனர்.

    • விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • உரங்கள் விவசாயிகளுக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது.

    உடுமலை :

    உடுமலை பகுதிகளில் அமராவதி ஆயக்கட்டு பகுதிகள் மற்றும் தென் மேற்கு பருவ மழையை தொடர்ந்து குறுவை, ஆடிப்பட்ட சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு தேவையான விதை ரகங்கள் மற்றும் இடு பொருட்கள் வேளாண் துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவையான அளவு இருப்பு உள்ளதால் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    வேளாண் விரிவாக்க மையத்தில் நெல் விதை, 105 நாட்கள் வயதுடைய ரகம் (கோ51) , 110 நாட்கள் வயதுடைய ஏடிடி (ஆர்) 45 ரகங்களும், 130 நாட்கள் சாகுபடி காலத்தை கொண்ட விஜிடி (வைகை டேம்) மற்றும் பிரியாணி தயாரிப்பு ஏற்ற வாசனை நெல் விதைகளும் தேவையான அளவு இருப்பு உள்ளது.மானிய விலையில் வழங்கப்படும் இந்த நெல் ரகங்களை வாங்கி, விவசாயிகள் பயன் பெறலாம்.மேலும் 75 நாட்கள் சாகுபடி காலத்தை கொண்ட உளுந்து வம்பன், 110 நாட்கள் சாகுபடி காலத்தை கொண்ட நிலக்கடலை (வி.ஆர்.டி-8), மக்காச்சோளம் (சி.ஓ.எச்.,எம்-8), கொண்டைக்கடலை, (என்.பி.இ.,ஜி 49) போன்ற சான்று பெற்ற விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    அதோடு விதை நேர்த்தி செய்வதற்கு உயிர் உரங்களும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. விதை நேர்த்தி செய்வதன் வாயிலாக பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது.மேலும் 25 சதவீதம் வரை உரச்செலவு குறையும். எவ்வளவுதான் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து பயிர்களுக்கு கொடுத்தாலும், நுண்Èட்டஉரமிடுதல் மிகவும் அவசிய தேவையாகும்.நெல், சிறு தானியங்கள், பயறு வகை பயிர்கள், தென்னைக்கு ஏற்ற நுண்Èட்ட உரங்கள், இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, காப்பர், போரான் உள்ளிட்ட சத்துக்களை கொண்ட நுண்Èட்ட உரங்கள் விவசாயிகளுக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.2466 மதிப்பிலான ரசாயன உரங்கள் வழங்கினார்.
    • ஒரு ஏக்கருக்கு பொதுப் பிரிவினருக்கு 50 சதவீத மானியமும், தனி பிரிவினருக்கு 70 சதவீத மானியத்தில் இடுபொருட்களும் வழங்கி பேசினார்.

    பேராவூரணி:

    தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டம்-2022 மானியத்தில் இடுபொருட்கள் வழங்கும் விழா சேதுபாவாசத்திரம் வட்டாரம் குருவிக்கரம்பையில் நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் ஈஸ்வர் தலைமை வகித்தார். அசோக் குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சாந்தி வரவேற்றார்.

    சேதுபாபாசத்திரம் வட்டாரத்தில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.2466 மதிப்பிலான ரசாயன உரங்களும், மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தில் சிறுதானிய பயிர்களான கேழ்வரகு, நிலக்கடலை, உளுந்து சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு பொதுப் பிரிவினருக்கு 50 சதவீத மானியமும், தனி பிரிவினருக்கு 70 சதவீத மானியத்தில் இடுபொருட்கள் தொகுப்பை சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் வழங்கி பேசினார். விடுபட்ட தகுதி உள்ள விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, கணினி சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி பாஸ் புத்தகங்க நகலுடன் நேரடியாகவோ, உழவன் செயலிலோ அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உழவர் சந்தையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்படி தோட்டக்கலை துறை சார்பில் இடுபொருட்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
    • இந்த விற்பனை அரங்கில் விதை, நாற்றுக்கள், மாடி தோட்ட விதைகள், மண்புழு உரம் உள்பட பல்வேறு இடுபொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருக்கும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோ ட்டை சாலையில் உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தையில் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள கடைகள் அருகே உள்ள கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து உழவர் சந்தையில் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் பணிகள் முடிவடைந்ததை முன்னிட்டு இன்று காலை உழவர் சந்தை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இதனை தொடர்ந்து 55 கடைகள் இன்று செயல்பட்டன. அதில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் 15.8 டன் அளவுக்கு காய்கறி, பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.இந்த நிலையில் உழவர் சந்தையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் றிவுறுத்தல்படி தோட்ட க்கலை துறை சார்பில் இடுபொருட்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    இதனை தொடர்ந்து தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் உழவர் சந்தையில் ஆய்வு செய்தார். தோட்டகலை துறை சார்பில் இடுபொருட்கள் விற்பனை அரங்கு அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். அப்போது அவர் கூறும்போது:-

    வேளாண் துறை அமைச்சர் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் தேர்ந்தெ டுக்கப்பட்ட உழவர் சந்தைகளில் தோட்ட க்கலை துறை சார்பில் இடுபொருட்கள் விற்பனை அரங்கு அமைக்கப்பட உள்ளது. அதில் தஞ்சாவூர் உழவர் சந்தையும் ஒன்றாகும். இந்த விற்பனை அரங்கில் விதை, நாற்றுக்கள், மாடி தோட்ட விதைகள், மண்புழு உரம் உள்பட பல்வேறு இடுபொருட்கள் விற்பனைக்காக வைக்க ப்பட்டு இருக்கும். விரை வில் இந்த உழவர் சந்தையில் இடுபொருட்கள் விற்பனையகம் தொட ங்கப்பட உள்ளது என்றார்.

    ×