search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயநாடு"

    • பலர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    • சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து பணிகளை செய்து வருகின்றனர்.

    கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாட்டில் 3 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதனிடையே, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.

    மேலும் நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசவிருக்கிறேன். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து பணிகளை செய்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

    • காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
    • மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

    கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமான வயநாட்டில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் சிக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பெரும் கவலையளிக்கிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடுபத்தினருக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் குறித்து பேசினேன்.

    மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

    மேலும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.5௦ஆயிரம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.



    • முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
    • தொடர் மழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்டுப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும், தொடர் மழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகன மழைக்கான ரெட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    இதனிடையே தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கோட்டயம், வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், எர்ணாகுளம், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
    • மீட்புக் குழுவினர் அப்பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

    கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

    நேற்று காலை முதலே கனமழை பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், முண்டகையில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால்  பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலையில் பெரிய அளவிலான 2வது நிலச்சரிவு ஏற்பட்டது. 

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்டுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

    • குடை வாங்க கூட வழியின்றி தவித்தேன்.
    • 7 குடைகள் தொலைந்துபோன சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலம் ஆகும். வனம் மற்றும் நீர்நிலை பரப்புகளை அதிகம் கொண்டிருக்கும் இந்த மாநிலத்தில் எங்கு பார்த்தாலும், கோடை காலத்தை தவிர மற்று காலங்களில் அனைத்து இடங்களிலும் மரங்கள் பச்சை பசேலென்றே காணப்படும்.

    பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்ளிலும் மழை கொட்டும். இதனால் பருவமழை காலங்களில் எப்போது மழை பெய்யும் என்பது தெரியாது எனபதால் வீட்டி லிருந்து வெளியே செல்லக் கூடிய பொது மக்கள் குடையுடனே செல்வார்கள். அனைவரின் வீட்டிலும் ஏராளமான குடைகள் இருக்கும்.

    இப்படிப்பட்ட சூழலில் கடந்த 49 வருடங்களாக ஒரு நபர் குடையே பயன்படுத்தாமல் இருந்து வருகிறார். கனமழை கொட்டினாலும், கடும் வெயில் வாட்டி வதைத்தாலும் அவர் குடையை பயன்படுத்து வதில்லை. அவர் அவ்வாறு இருப்பதற்கு ருசிகரமான சம்பவம் அவரது வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

    அந்த நபர் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியை சேர்ந்த மேத்யூ. கூலித் தொழிலாளியான இவர் கனமழை கொட்டினாலும் நனைந்தபடி தான் செல்கிறார். கடும் வெயில் அடித்ததாலும் குடையை பயன்படுத்துவதில்லை.

    49 ஆண்டுகளாக குடையை பயன்படுத்தாமல் இருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, தான் பட்ட கஷ்டங்கள் மற்றும் கஷ்டப்பட்டு வாங்கிய குடைகள் தொலைந்து போனபடி இருந்தது உள்ளிட்ட விஷயங்களை கண்ணீர் மல்க தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    நான் கூலி வேலை பார்த்து வந்தேன். எனது மனைவி எல்சி எழுத்தறிவு வகுப்புகளை சொல்லிக் கொடுப்பவராக இருந்தார். அவர் வீட்டில் இருந்து வேலை விஷயமாக எங்கு சென்றாலும் குடை தேவைப்பட்டது. எனக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் ஒரு குடை வாங்கக்கூட வழியின்றி தவித்தேன்.

    இருந்தபோதிலும் எனது மனைவிக்கு குடை வாங்கி கொடுத்தேன். ஆனால் அவருக்கு வாங்கிக் கொடுக்கும் குடை எப்படியாவது தொலைந்துவிடும். மீண்டும் வாங்கி கொடுத்தாலும், அந்த குடையும் தொலைந்தபடி இருந்தது. எனது மனைவிக்கு அவரது தந்தை கூட 2 குடைகள் வாங்கி கொடுத்தார். அந்த குடைகளும் திருட்டு போகின.

    ஒரு முறை அரிசி வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தில் மனைவிக்கு குடை வாங்கி கொடுத்தேன். அரிசி வாங்க வைத்திருந்த பணத்தில் குடை வாங்கி விட்டதால், ஒருநாள் எனது கர்ப்பிணி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உருளைக் கிழங்கை வேகவைத்து சாப்பிட்டோம்.

    மற்றொரு முறை வங்கியில் அடகு வைத்த மனைவியின் நகையை திருப்புவற்கு ஏற்பாடு செய்த பணத்தில், மீதமிருந்த தொகையில் ஒரு குடை வாங்கினேன். இந்த இரு குடைகளுமே தொலைந்து விட்டன. 7 குடைகள் தொலைந்துபோன சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தது.

    சாப்பாட்டுக்கு அரிசி வாங்கக்கூட கஷ்டப்பட்ட நேரத்திலும் மனைவிக்காக வாங்கிக்கொடுத்த குடைகள் அனைத்தும் தொலைந்தபடி இருந்தது எனக்கு கவலையை ஏற்படுத்தியது. அதன் காரணமாக "இனி குடையை பயன்படுத்த மாட்டேன்" என்று சபதம் எடுத்தேன்.

    இந்நிலையில் எனது மனைவி எல்சி எலி காய்ச்சல் பாதித்து உயிரிழந்தார். அதன்பிறகு எனது குழந்தைகளை பராமரிப்பதற்காக கிளாரம்மா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்தேன். தற்போது அவருடன் வாழ்ந்து வரும் நிலையில், குடையை பயன்படுத்த மாட்டேன் என்று நான் எடுத்த சபதத்தை இன்றளவும் கடைபிடித்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

    கஷ்டப்பட்டு வாங்கிய குடைகள் திருட்டு போன தால ஏற்பட்ட மன கஷ்டம் காரணமாக எடுத்த சபதத்தை மேத்யூ 49 ஆண்டு களாக கடைபிடித்து வருவது மானந்தவாடி பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

    • வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • 2 டிரோன்களை அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் ரேணுராஜ் ஒப்படைத்தார்.

     கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பொதுமக்கள் காட்டு விலங்குகளால் தாக்கப்படுவதை தடுக்கும் விதமாக வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    "வயநாடு முன்முயற்சி" என்ற திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 2 டிரோன்களை வனத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் ரேணுராஜ் ஒப்படைத்தார். அப்போது அவர் புதிய டிரோன்களை பறக்கவிட்டார்.

    • பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
    • பாரளுமன்றத்தில் எங்களுடன் அவர் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றார். இதனால் இரண்டில் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வடக்கில் காங்கிரசை வலுப்படுத்தவேண்டிய கட்டாயத்தால் வயநாடு தொகுதியை தனது தங்கை பிரியங்கா காந்திக்கு விட்டுக்கொடுக்க முடிவெடுத்துள்ளார் ராகுல்.

    நேற்று அவரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அடுத்த 6 மாதத்துக்குள் வயநாட்டில் மறு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் முதல் முறையாக பிரியங்கா காந்தி வேட்பாளராக களம் இறங்க உள்ளார். இதுநாள்வரை உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த பிரியங்கா காந்தி பொதுக்கூட்டங்களில் நாட்டின் பிரச்சனைகள் குறித்து தனது துணிகரமான பேச்சுகளால் பாஜகவின் செய்லகளை சரமாரியாக கேள்வி எழுப்புபவராக அறியப்படுகிறார்.

    மக்களவைத் தேர்தலில் அவரின் சூறாவளிப் பிரச்சாரம் உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறலாம். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருவானந்தபுர எம்.பியுமான சசி தரூர் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரவேசம் குறித்து மனம் திறந்துள்ளார்.

     

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராகுல் காந்தி ரேபரேலியை தேர்வுசெய்தது காங்கிரசுக்கு அவசியமான நகர்வு. அவர் அதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றே நான் ஆரம்பத்தில் இருந்து விரும்பினேன். அதேசமயம் பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அங்கு நின்ற காங்கிரஸ் வேட்பாளரை விட மோடி குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வென்றிருக்கிறார்.

    தற்போது பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பாராளுமன்றத்தில் ஒரு சக்தி வாய்ந்த குரலாக பிரியங்கா காந்தி இருப்பார். அவர் தேர்தல் பிரச்சரத்தின்போது எப்படி செயல்பட்டார் என்று நாம் அனைவரும் பார்த்திருப்போம். பிரியங்கா ஒரு சிறந்த பேச்சாளர். பாரளுமன்றத்தில் எங்களுடன் அவர் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், இது குடும்ப அரசியல் என்று கூறி வரும் பாஜக சார்பில் வெற்றிபெற்றுள்ள 15 எம்.பிக்கள் அரசியல் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்த்தவர்கள் என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார். 

    • வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதால் ராகுல் இறுதியாக ரேபரேலியை தேர்ந்தெடுத்து வயநாட்டை விட்டுக்கொடுத்துள்ளார்.
    • வயநாடு எம்.பி பதவியிலிருந்து தான் விலகுவதாக ராகுல் காந்தி ராஜினாமா கடிதம் அளித்தார்.

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளிலும் தனது வெற்றியை பதிவு செய்தார்.

     

    வழக்கமாக அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் இந்த முறை தாய் சோனியா காந்தியின் நட்சத்திரத் தொகுதியான ரேபரேலியில் முதல் முறையாக நின்ற நிலையில் தாய் சோனியா கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வென்ற இரண்டு தொகுதிகளில் ஏதெனும் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே நீடிக்க முடியும் என்ற சூழலில் ராகுல் வயநாட்டை தேர்ந்தெடுப்பாரா அல்லது ரேபரேலியைத் தேர்தெடுப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

     

    வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதால் ராகுல் இறுதியாக ரேபரேலியை தேர்ந்தெடுத்து வயநாட்டை விட்டுக்கொடுத்துள்ளார். அதன்படி வயநாடு எம்.பி பதவியிலிருந்து தான் விலகுவதாக ராகுல் காந்தி, அளித்த ராஜினாமா கடிதம் ஜூன் 18 அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது என்று மக்களவைச் செயலகம் தனது செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது. இதற்கிடையில் வயநாடு தொகுதியில் நடக்கும் மறுதேர்தலில் ராகுலின் தங்கையும் காங்கிரஸ் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி, வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார்.
    • ராகுல் காந்தி ரேபரேலி தொகுதி எம்.பி.யாக நீடிப்பார் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். தற்போது இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதனால் இரு தொகுதியில் எந்தத் தொகுதியை விட்டுக்கொடுப்பார் என்ற கேள்வி எழுந்தது.

    இதற்கிடையே, ராகுல் காந்தி வயநாடு தொகுதியை விட்டுக்கொடுக்கிறார். ரேபரேலி தொகுதி எம்.பி.யாக நீடிப்பார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று அறிவித்தார்.

    இந்நிலையில், வயநாடு தொகுதி மக்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    பிரியங்கா காந்திக்கு நாட்டில் எங்கிருந்தும் போட்டியிட உரிமை உண்டு. ஆனால் காங்கிரசின் இந்த முடிவால் பல கேள்விகள் எழுகின்றன.

    குறிப்பாக, ராகுல் காந்தி ரேபரேலியிலும் போட்டியிடப் போவதை வயநாடு மக்களிடம் மறைத்துவிட்டார்.

    இவர்களை ஏமாற்றிவிட்டு, இன்று அவர்கள் நல்லெண்ணத்தில் அவருக்கு ஆதரவளித்து இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.

    அவர்களுக்காக ஏதாவது செய்ய ரேபரேலி செல்கிறேன் என கைகழுவிக் கொண்டிருக்கிறார்...இது வயநாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம்.

    பிரியங்காவின் அரசியல் அறிமுகத்தை ஐ.யு.எம்.எல். ஆதரிப்பதால் அவருக்கு வெற்றி பெறுவது மிக எளிதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

    • வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்கிறார்.
    • பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு வெளியானதில் இருந்து 14 நாட்களுக்குள் இரண்டில் ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும். அதன்படி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேவேளையில் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ராகுல் காந்தியிடம் தோல்வியடைந்த ஆனி ராஜா, காங்கிரஸ் கட்சி அவர்களுடன் மிகப்பெரிய எதிர் யார் என்பது முடிவு செய்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆனி ராஜா கூறியதாவது:-

    பிரியங்கா காந்தியை வயநாடு தொகுதியில் நிறுத்தியது காங்கிரஸ் கட்சியின் முடிவு. அவர்களுடைய முடிவிற்கு நாங்கள் மரியாதை அளிக்கிறோம். பெண் வேட்பாளரை அறிவித்தது நல்ல விசயம். ஏராளமான பெண்கள் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். அனைத்து கட்சிகளும் இது குறித்து கருதுவது அவசியம்.

    பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவதை நான் வரவேற்கிறேன். ஆனால், நான் ராகுல் காந்தியிடம் எழுப்பிய அதே கேள்வியை மரியாதை நிமித்தமாக பிரியங்காக காந்தியிடம் கேட்கிறேன். உங்களுடைய மற்றும் உங்கள் கட்சியுடைய மிகப்பெரிய எதிரி யார்?. வகுப்புவாத-பாசிசப் படைகளா? அல்லது இடது சாரிகளா? என்று கேட்கிறேன்.

    இவ்வாறு ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.

    • வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியிட இருக்கிறார்.
    • காங்கிரஸ் பெண் ஒருவரை நிறுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது- ஆனி ராஜா

    கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டபோது, கம்யூனிஸ்டு கட்சி தலைவர் ராஜாவின் மனைவி ஆனி ராஜா அங்கு போட்டியிட இருக்கிறார். இதனால் ராகுல் காந்தி போட்டியிடக் கூடாது என வெளிப்படையாக விமர்சனம் வைக்கப்பட்டது.

    ஆனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். அதேவேளையில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து அங்கேயும் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் ஒரு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் இன்று இரவு வயநாடு தொகுதியை ராஜினாமா செய்ய இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார். அதேவேளையில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்தது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி ரேபரேலி எம்.பி. பதவியை தக்கவைத்துக் கொள்ளும் அவரது முடிவை வரவேற்பதாக ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆனி ராஜா கூறியதாவது:-

    தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ராகுல் காந்தியை போன்ற முக்கியமான தலைவர்கள் இந்தி பேசும் முக்கியமான மாநிலத்தில் பணியாற்றுவது முக்கியமானது. ஆகவே அவர் எடுத்த இந்த முடிவில் தவறு இல்லை. நான் இதை வரவேற்கிறேன்.

    இடைத்தேர்தலில் பெண் ஒருவரை நிறுத்துவதாக கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த முறையை விட தற்போது பெண்கள் சதவீதம் மக்களவை எம்.பி. எண்ணிக்கையில் குறைவாக உள்ளது. ஆகவே, அதிகமான பெண்கள் வருவதை விரும்புகிறேன்.

    இவ்வாறு ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.

    பிரியங்கா காந்தி பொது வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்ற கேள்விக்கு, கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி, இடது சாரி கூட்டணி தனித்தனியாக போட்டியிடுவதாக இந்தியா கூட்டணியில் முடிவு செய்யப்பட்டது. இதில் ஏதாவது மாற்றம் என்றால் அது இந்தியா கூட்டணியை உருவாக்கிய, அதில் உள்ள கட்சிகளால் மட்டுமே முடியும்.

    • வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்கும் நிலை ஏற்பட்டது.
    • வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என கார்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயாநடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். 2019-ல் அமேதி தொகுதியில் தோல்வியடைந்து வயநாட்டில் வெற்றி பெற்றார்.

    தற்போது இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இதனால் இரண்டு தொகுதியில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். இரண்டு தொகுதியில் எந்த தொகுதியை விட்டுக்கொடுப்பார்? என்ற கேள்வி எழுந்தது. மக்களிடம் கேட்டு முடிவு எடுப்பேன் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியை விட்டுக்கொடுக்கிறார். ரேபரேலி தொகுதி எம்.பி.யாக நீடிப்பார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று இரவு தெரிவித்தார். இன்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது இவ்வாறு தெரிவித்தார்.

    பின்னர் பிரியங்கா காந்தி பேசும்போது "வயநாடு மக்களின் பிரதிநிதியாக இருப்பதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் அங்குள்ள மக்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், ராகுல் காந்தி இல்லையே என வயநாட்டு மக்களை உணர விடமாட்டேன்.

    தேர்தலில் போட்டியிடுவது பற்றி எனக்கு பதட்டம் இல்லை. வயநாட்டிற்கு என்னுடைய சிறந்ததை கொடுப்பேன். ராகுல் காந்தி தொடர்ந்து வயநாட்டிற்கு அடிக்கடி வருவார். ஆனால், நான் கொஞ்சம் கடினமாக உழைத்து எல்லோரையும் மகிழ்ச்சியாக முயற்சிப்பேன்" என்றார்.

    ×