search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து காயம்"

    • கடந்தா 13-ம் தேதி,பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தால் மனமுடைந்த சரண்யா, பூச்சி மருந்தை குடித்தார்.
    • ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

    ஐதராபாத்:

    தெலங்கானா மாநிலம், எல்லாரம் கிராமத்தை சேர்ந்தவர் மல்லி கார்ஜுன ராவ் (31). இவரது மனைவி சரண்யா (29).

    கடந்தா 13-ம் தேதி,பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தால் மனமுடைந்த சரண்யா, பூச்சி மருந்தை குடித்தார்.

    இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மல்லிகார் ஜூனராவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர், ஆம்புலன்ஸில் சரண்யாவின் உடலை ஏற்றிவிட்டு, பின்னால், பைக்கில் சென்றார்.

    அப்போது, எதிரே வந்த லாரி வேகமாக மோதியது. இந்த விபத்தில் மல்லிகார்ஜுன ராவ் சம்பவ இடத்திலேயே பலியானார். தாயும், தந்தையும் இறந்ததால் இவர்களின் 2 பிள்ளைகளும் கதறி அழுதனர். இது அனைவரின் மனதையும் கலங்கச் செய்தது.

    • லட்சுமி மற்றும் கோவிந்தம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேதராப்பட்டு:

    புதுச்சேரி அடுத்த தமிழகப்பகுதியான கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டி புதுக்குப்பம் மீனவ கிராமம் உள்ளது.

    இப்பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரம் செய்யும் மீனவ பெண்கள் புதுச்சேரியில் மீன்களை மொத்தமாக வாங்கி வந்து கிராமப் பகுதியில் விற்பனை செய்வது வழக்கம்.

    அதுபோல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீன்கள் அதிகம் விற்பனையாகும் என்பதால் புதுச்சேரிக்கு மீன் வாங்க அதிகாலை புதுக்குப்பம் மீனவ பெண்கள் லட்சுமி(45), கோவிந்தம்மாள்(50) நாயகம், கமலம், கெங்கையம்மாள்,பிரேமா ஆகிய 6 பேர் ஆட்டோவுக்காக கிழக்கு கடற்கரை சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த 6 பெண்கள் மீது மோதியது.

    இதில் லட்சுமி மற்றும் கோவிந்தம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மற்ற 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கெங்கையம்மாள் (வயது 45) பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. காயமடைந்த மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் கார் கவிழ்ந்து நொறுங்கியது. காரை ஓட்டிவந்த சென்னையை சேர்ந்த டிரைவர் விக்னேஸ்வரன், மற்றும் காரில் பயணம் செய்த கவுதம், சேது, பிரசாந்த், திரிஷா,ஆகிய 5 பேர் புதுச்சேரி தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • விபத்தில் 5 பெண்கள், 6 வயது சிறுமி உள்பட 7 பேர் பலியானார்கள்.
    • பஸ்சில் மொத்தம் 45 பேர் பயணித்தனர்.

    அமராவதி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இன்று அதிகாலை திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 5 பெண்கள், 6 வயது சிறுமி உள்பட 7 பேர் பலியானார்கள். 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ்சில் மொத்தம் 45 பேர் பயணித்தனர்.

    • பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான அனுமந்தையை சேர்ந்த சங்கர் என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கொளத்தூர்:

    வியாசர்பாடி,மேல்பட்டி பொன்னப்பன் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ராஜேஷ் (வயது16). இவர் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பகுதி நேரமாக திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கேட்டரிங் சர்வீஸ் செய்து வந்தார். இவர் மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வேலை முடிந்து செந்தில்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டு இருந்தார்.

    மாதவரம் ரவுண்டானா அருகே வந்தபோது பின்னால் வந்த மாநகர பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். செந்தில்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான அனுமந்தையை சேர்ந்த சங்கர் என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • காரில் பயணம் செய்த ஜெயஸ்ரீ மற்றும் சண்முகராஜா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
    • விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருமங்கலம்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 40). இவரது தலைமையில் கோவையில் ஆன்லைன் விளம்பர கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பங்கேற்பதற்காக செங்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணி மனைவி ஜெயஸ்ரீ (50), சுவைதீர்த்தபுரத்தை சேர்ந்த செந்தில் இசக்கி (28), வீரகேளரபுரம்புதூரைச் சேர்ந்த கிருஷ்ணன் (38) ஆகியோரையும் காரில் அழைத்து சென்றார்.

    காரை கடையநல்லூரை சேர்ந்த வைரமுத்து ஓட்டிச் சென்றார். கருத்தரங்க கூட்டம் முடிவடைந்த பின்னர் நேற்று இரவு அவர்கள் அனைவரும் மீண்டும் தென்காசிக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் மொட்டமலை பகுதியில் வந்த போது, முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்குவேனை முந்த முயன்றார்.

    அந்த சமயம் எதிர்பாராவிதமாக கார், முன்னால் சென்ற வேனின் பக்கவாட்டு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த ஜெயஸ்ரீ மற்றும் சண்முகராஜா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். செந்தில் இசக்கி, கிருஷ்ணன், டிரைவர் வைரமுத்து ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காரில் சிக்கி உயிருக்கு போராடிய செந்தில் இசக்கி, கிருஷ்ணன், வைரமுத்து ஆகியோரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். நீண்டநேரம் போராடி காரில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சண்முகராஜா, ஜெயஸ்ரீ உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இன்று அதிகாலை நடந்த இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • விபத்தில் சிக்கிய கார், மோட்டார் சைக்கிள்கள் அப்பளம் போல நொறுங்கியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானூர்:

    திண்டிவனத்தில் இருந்து புதுவை நோக்கி தனியார் பஸ் நேற்று இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இரவு 8.30 மணியளவில் வானூர் அடுத்த மொரட்டாண்டி அருகே வந்த போது, திடீரென சாலையின் குறுக்கே மாடு வந்தது. தனியார் பஸ் மாடு மீது மோதியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரும்பை கிராமத்தை சேர்ந்த சத்யா (35), காரில் வந்த சத்தியமூர்த்தி (42), அவரது மனைவி வனிதா (37) ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும், விபத்தில் மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    விபத்தில் சிக்கிய கார், மோட்டார் சைக்கிள்கள் அப்பளம் போல நொறுங்கியது. அவ்வழியே சென்றவர்கள், விபத்துக்குள்ளான 3 பேரையும் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சத்தியமூர்த்தி இறந்து போனார். இவர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கம்பெனிகளில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவரது மனைவி வனிதா, மோட்டார் சைக்கிளில் வந்த சத்யா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுராந்தகம்:

    சென்னை, மதுரவால், கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் முத்துதுரை (வயது 50). இவரது மனைவி தங்க மேகலா (40). இவர்களது மகள்கள் முத்து ராதா (16), அக்ஷயா(13). இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று அதிகாலை காரில் புறப்பட்டனர். காரை டிரைவர் ஒருவர் ஓட்டினார்.

    இன்று அதிகாலை 5.30 மணியளவில் கார் மதுராந்தகம் அருகே அச்சரப்பாக்கம் புறவழிச் சாலையில் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது சாலையோரத்தில் ஒரு வளைவில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் மீது அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. காரில் இருந்த தங்கமேகலா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் முத்துதுரை, மகள்கள் முத்துராதா, அக்ஷயா மற்றும் டிரைவர் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வண்டலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், திம்மச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(வயது25). கட்டிட மேஸ்திரி. இவர் இன்று காலை செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான ஆந்திராவை சேர்ந்த போனு சீனிவாசன்(38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நகுல்ராஜ் டிராக்டருக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
    • தர்மராஜ் உள்ளிட்ட 3 சிறுவர்களும் லேசான காயத்துடன் தப்பினர். பின்னர் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்தனர்.

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா, மரவத்தூர் போலீஸ் சரகம், சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வாளி கண்டபுரம் பகுதியில் வயல் உள்ளது. மகன் நகுல்ராஜ் (வயது 16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்த நிலையில் நகுல்ராஜ் தனது நண்பர்கள் தர்மராஜ் (16) மற்றும் இரண்டு சிறுவர்களுடன் அந்த வயலுக்கு சென்றார். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை நகுல்ராஜ் ஓட்டிச் செல்ல அருகாமையில் தர்மராஜ் மற்றும் 2 சிறுவர்கள் உட்கார்ந்திருந்தனர்.

    வயல் காட்டில் இருந்து சற்று தொலைவில் டிராக்டர் வந்தபோது எதிர்பாராத விதமாக அங்குள்ள ஓடை பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. இதில் நகுல்ராஜ் டிராக்டருக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

    தர்மராஜ் உள்ளிட்ட 3 சிறுவர்களும் லேசான காயத்துடன் தப்பினர். பின்னர் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மாணவன் நகுல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருவண்ணாமலையில் இருந்து வந்த பஸ் முன்னால் சென்ற பஸ் மீது மோதியது.
    • படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நெல்லையில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சின் பின்னால் குறுகிய இடைவெளியில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சின் டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.

    அப்போது திருவண்ணாமலையில் இருந்து வந்த பஸ் முன்னால் சென்ற பஸ் மீது மோதியது.

    இதில் பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த அசோக்குமார் (45) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பஸ்களில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மகன் இறந்து சோகத்தில் இருந்த குப்பனுக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • மகன், தந்தை என அடுத்தடுத்து இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருநின்றவூர்:

    ஆவடி அருகே உள்ள பாலவேடு கிராமத்தை சேர்ந்தவர் குப்பன்(வயது72). இவரது மகன் அசோக் குமார்(49). தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் திருநின்றவூர் அடுத்த பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த மினி வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அசோக்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அசோக் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுபற்றி வீட்டில் இருந்த அவரது தந்தை குப்பனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் மிகவும் மனவேதனை அடைந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சென்றனர்.

    இதற்கிடையே மகன் இறந்து சோகத்தில் இருந்த குப்பனுக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குப்பன் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மகன், தந்தை என அடுத்தடுத்து இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குர்பானி கொடுப்பதற்காக சென்ற சிறுமி டிராக்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கரட்டுமேடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் கரட்டுமேடு பகுதியை சேர்ந்தவர் சையது முஸ்தபா (40). இவரது ஒரே மகள் இபான் நசீரா. இவர் அந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று பக்ரீத் பண்டிகை என்பதால் தந்தை சையது முஸ்தபா மற்றும் மகள் இபான் நசீரா உள்ளிட்ட இருவரும் குர்பானி கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்று விட்டு அன்னூர் சாலையின் வழியாக வந்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் அன்னூர் சாலையில் டேங்குமேடு பகுதியில் இருந்து நேசனல் பள்ளி வழியாக கரட்டுமேடு செல்வதற்காக சென்று கொண்டிருந்த போது சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த டிராக்டரை சையது முஸ்தபா முந்த முயன்றுள்ளார்.

    அப்போது,திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கிழே விழுந்ததில் தந்தை மற்றும் மகள் இருவரும் சாலையில் விழுந்துள்ளனர்.

    இதில் டிராக்டரின் பின்சக்கரத்தில் இபான் நசீரா சிக்கி கொண்ட நிலையில் அவர் மீது டிராக்டர் ஏறி இறங்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.தந்தை சையது முஸ்தபா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இச்சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த மேட்டுப்பாளையம் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குர்பானி கொடுப்பதற்காக சென்ற சிறுமி டிராக்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கரட்டுமேடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×