search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேபி நட்டா"

    • பா.ஜ.க. பொதுச்செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடந்தது.
    • பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து ஜே.பி.நட்டா ஆலோசனை மேற்கொண்டார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக மண்டல வாரியாக பாரதிய ஜனதா பொதுச்செயலாளர்கள் கூட்டம் நேற்று முதல் டெல்லயில் நடந்து வருகிறது. இன்று 2-வது நாளாக வடக்கு மண்டல பா.ஜ.க. பொதுச்செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் இமாசலபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பாரதிய ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து ஜே.பி.நட்டா ஆலோசனை மேற்கொண்டார்.

    • குடும்ப அரசியல் மற்றும் வாக்கு வங்கி அரசியலை பா.ஜனதா அழித்து விட்டது.
    • ராஜஸ்தானில் ஆளும் கெலாட் அரசின் ஊழல் கழுத்து அளவு ஆழமாக உள்ளது.

    ஜெய்ப்பூர் :

    பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்டவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். பிரதமரின் இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இதை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாராட்டி உள்ளார். ராஜஸ்தானின் பரத்பூரில் கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பேசியபோது, இதை அவர் தெரிவித்தார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளையும் அவர் கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    குடும்ப அரசியல் மற்றும் வாக்கு வங்கி அரசியலை பா.ஜனதா அழித்து விட்டது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் குடும்பங்களின் கட்சிகளாக மாறிவிட்ட நிலையில், பா.ஜனதாவிலோ கட்சிதான் குடும்பம் ஆகும். முன்பெல்லாம் இந்திய பிரதமர்கள் அமெரிக்காவுக்கு செல்லும்போது, பயங்கரவாதம் குறித்து மட்டுமே விவாதித்து விட்டு வந்துவிடுவார்கள்.

    ஆனால் பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது, விண்வெளித்துறை, அன்னிய நேரடி முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டுவிட்டு வந்து இருக்கிறார்.

    தற்போது இந்தியாவை குறித்து பேசும்போது, யாரும் பாகிஸ்தானை குறிப்பிடுவதில்லை. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் திறனை நாம் அடைந்துள்ளோம்.

    உலகம் முழுவதும் பிரதமர் மோடியை புகழ்வதை பார்த்து காங்கிரஸ் கட்சிக்கு வயிற்றெரிச்சல். எனவே அவர்கள் பிரதமரை 'பாம்பு', 'தேள்', 'டீ விற்பவன்' என்றெல்லாம் அழைக்கிறார்கள். ராஜஸ்தானில் ஆளும் கெலாட் அரசின் ஊழல் கழுத்து அளவு ஆழமாக உள்ளது. ஊழல் செய்வதற்கு தங்கள் கட்சியின் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் அவர்கள் வெளிப்படையாக லைசென்ஸ் கொடுத்திருக்கிறார்கள். எங்கும் ஊழல் பரவி இருக்கிறது.

    இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டார்.
    • கடந்த 2 மாதமாக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்தார்.

    புவனேஷ்வர்:

    பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பா.ஜ.க.வுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், எமர்ஜென்சியின்போது பாட்டி இந்திரா காந்தியால் சிறைக்குச் சென்றவர்கள் தற்போது பேரன் ராகுல் காந்தியை வரவேற்கின்றனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இதுதொடர்பாக ஒடிசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசுகையில், இன்று அரசியலில் விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்கள் தற்போது அவரது பேரன் ராகுல் காந்தியை வரவேற்கின்றனர்.

    ஜெயப்பிரகாஷ் நாராயணின் மாணவ தலைவர்களாக செயல்பட்ட நிதிச்ஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை இந்திரா காந்தி அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அப்போது லாலு பிரசாத் 22 மாதங்களும், நிதிஷ் குமார் 20 மாதங்களும் சிறையில் இருந்தனர்.

    எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உத்தவ் தாக்கரே பாட்னா சென்றதைப் பார்த்தேன். அவரது தந்தை, இந்து ஹிருதய் சாம்ராட் பாலாசாகேப் தாக்கரே காங்கிரசை எதிர்த்தார். பாலாசாகேப் ஒருமுறை காங்கிரசில் சேர்வதற்குப் பதிலாக துகானை (தனது அரசியல் கட்சியான சிவசேனாவைக் குறிப்பிட்டு) மூடுவதாகக் கூறியிருந்தார். இப்போது, அவரது மகன் துகானை மூடுகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடியை உலக தலைவர்கள் பாராட்டியதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. வாரிசு அரசியலை கடுமையாக எதிர்க்கும் மோடி, நாட்டில் வளர்ச்சி அரசியலை அறிமுகப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.

    • கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது.
    • இதையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது.

    இந்நிலையில், கொப்பால் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:

    ராகுல் காந்தி ஜாமீனில் உள்ளார். சோனியா காந்தி ஜாமீனில் உள்ளார். டி.கே. சிவகுமார் ஜாமீனில் உள்ளார். ஜாமீனில் வெளியில் வந்துள்ளவர்கள் ஊழலைப் பற்றி பேசுகிறார்கள்.

    நீங்கள் (காங்கிரஸ்) பிஎப்ஐ மீதான வழக்குகளை வாபஸ் பெற்றீர்கள். பஜ்ரங்தளத்தை தடை செய்யக் கோருகிறீர்கள். ஊழலில் ஈடுபட்டீர்கள். வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டீர்கள்.

    எனவே, இதை நினைவில் கொள்ளுங்கள். காங்கிரசுக்கு வாக்களித்தால் பிஎப்ஐ மீண்டும் வருவதற்கு வாக்களிக்கிறீர்கள்.

    9 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஊழலுக்கு பெயர் பெற்றிருந்தது. தற்போது பிரதமர் மோடி தலைமையின் கீழ் ஜி20 மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு கூட்டம் இந்தியாவில் நடைபெறுகிறது.

    உலகம் முழுவதிலுமிருந்து பிரதமர்கள், அமைச்சர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் வருகிறார்கள். இந்தியாவின் இந்த அடையாளம் பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்டது என தெரிவித்தார்.

    • கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.
    • விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஜனதாதளம் (எஸ்) கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடாமல் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்பட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆளும் பா.ஜனதா கட்சி தொகுதியில் உள்ள நிபுணர்கள், அனுபவசாலிகள் உள்ளிட்டோரின் கருத்துகளை சேகரித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.

    இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    யுகாதி, விநாயக சதுர்த்தி மற்றும் தீபாவளி மாதங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

    கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

    போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும். ஏழைகளுக்கு 10 கிலோ தானியங்கள் வழங்கப்படும்.

    உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

    விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

    திருப்பதி, அயோத்தி, காசி மற்றும் பிற இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல ஏழைக் குடும்பங்களுக்கு ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

    மாநிலம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும்.

    ஆயுஷமான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை தற்போதுள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.

    அனைத்து தாலுகாக்களிலும் கீமோதெரபி மற்றும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்.

    மாநிலம் முழுவதும் மலிவு மற்றும் தரமான உணவை வழங்க ஒவ்வொரு மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் அடல் ஆஹாரா கேந்திரா அமைக்கபப்டும். 'சர்வாரிகு சுரு யோஜனே' திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்,.

    கர்நாடக அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம், 1972-ஐ சீர்திருத்தவும், குறை தீர்க்கும் வழிமுறையை நவீனப்படுத்தவும் கர்நாடக குடியிருப்போர் நல ஆலோசனைக் குழுவை அமைக்கும்.

    மூத்த குடிமக்களுக்கு இலவச வருடாந்திர முதன்மை சுகாதார பரிசோதனை நடத்தப்படும். பெங்களூருவை 'மாநில தலைநகர் மண்டலமாக' நியமித்து, விரிவான, தொழில்நுட்பம் சார்ந்த நகர மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    மேற்கண்டவை உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், இந்த தேர்தல் அறிக்கையை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், மேலும் மாநிலத்தில் ஆட்சியமைக்க மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.

    காங்கிரஸ் கட்சி இலவசம் என்ற பெயரில் அளித்த வாக்குறுதிகளை விமர்சித்த பா.ஜ.க. தற்போது வாக்காளர்களை கவர பல திட்டங்களை அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

    • தனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பியுள்ளார்.
    • தனிப்பட்ட காரணத்துக்காக ராஜினாமா செய்து இருப்பதாக சுரேஷ் தெரிவித்துள்ளார்.

    இமாச்சல பிரதேசத்தில் சிம்லா மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வரும் நிலையில் அம்மாநில பா.ஜ.க. தலைவர் சுரேஷ் காசியாப் பதவியில் இருந்து விலகி உள்ளார்.

    அவர் தனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பியுள்ளார். தனிப்பட்ட காரணத்துக்காக ராஜினாமா செய்து இருப்பதாக சுரேஷ் தெரிவித்துள்ளார்.

    ஆனால் தொடர் தோல்வி காரணமாக அவர் ராஜினாமா செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    • ஜி20 நாடுகளின் சபைக்கு அனைவரையும் இந்தியா வரவேற்கிறது.
    • கர்நாடக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் நிற்கவில்லை.

    உப்பள்ளி :

    பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தார். அன்று இரவு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் தங்கிய அவர் நேற்று கட்சி நிா்வாகிகள், கல்வியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது ஜே.பி.நட்டா பேசியதாவது:-

    கர்நாடக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் நிற்கவில்லை. நாட்டில் 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் பிரிவினை அரசியலை தான் செய்தது. சமுதாயத்தை இரண்டாக உடைத்த அக்கட்சி இன்று பலவீனம் அடைந்துள்ளது. பா.ஜனதா மண்டல ரீதியிலான அடையாளங்களை கவுரவிக்கிறது. பிரதமர் மோடியின் துடிப்பான தலைமையின் கீழ் நாடு வலுவாக உள்ளது. இந்திய அரசியல் கலாசாரத்தை மோடி மாற்றியுள்ளார். மத்திய பணிக்கான தேர்வை ஆங்கிலம், இந்தி மட்டுமின்றி நாட்டின் 13 மொழிகளில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மோடி பிரதமரான பிறகு பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. அண்டை நாடுகளில் அவசர நேரங்களில் தேவையான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது. முன்பு இந்தியா, பாகிஸ்தான் பெயர்கள் குறித்து விவாதம் நடந்தது. தற்போது இந்தியாவின் பெயர் பேசப்படும்போது, பாகிஸ்தான் பெயர் வருவது இல்லை. இதை எல்லாம் மோடி மாற்றி அமைத்துள்ளார்.

    ஜி20 நாடுகளின் சபைக்கு அனைவரையும் இந்தியா வரவேற்கிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தபோது, அங்கிருந்த 23 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக தாய் நாட்டிற்கு அழைத்து வந்தோம். இதற்கு பிரதமர் மோடி காரணம்.

    இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

    அதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேசுகையில், 'பா.ஜனதா கட்சி வலுவாக வளர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜே.பி.நட்டா, கட்சியை சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறார். சில மாநிலங்களில் பா.ஜனதா தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம். அதனால் நீங்கள் கட்சிக்கு பலம் கொடுக்கும் பணியை செய்ய வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகங்கள் உள்பட பிற சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். நாங்கள் இட ஒதுக்கீடு என்ற தேன்கூட்டில் கை வைத்தோம். ஆனால் எங்களை தேனீக்கள் கடிக்கவில்லை' என்றார்.

    • ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி, பீகார் ஆகிய 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா மாநில தலைவர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர்.
    • ஒடிசா மாநில தலைவராக இருந்த சமீர் மோகண்டிக்கு பதில் மன்மோகன் சமால் புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    புதுடெல்லி:

    ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி, பீகார் ஆகிய 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா மாநில தலைவர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பதில் புதிய தலைவர்களை பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நியமித்து உள்ளார்.

    அதன்படி, ராஜஸ்தான் மாநில தலைவராக இருந்து வந்த சதீஷ் பூனியாவுக்கு பதில் சி.பி. ஜோஷியும், ஒடிசா மாநில தலைவராக இருந்த சமீர் மோகண்டிக்கு பதில் மன்மோகன் சமாலும் புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    தலைநகர் டெல்லி மாநில தலைவராக வீரேந்திர சச்தேவாவும், பீகார் மாநில தலைவராக இருந்த சஞ்சய் ஜெய்ஸ்வால் மாற்றப்பட்டு சம்ராத் சவுத்திரியும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    • ராகுல் காந்தி போன்ற தலைவர்களை (அரசியலில்) இருக்க நாம் அனுமதிக்க வேண்டுமா? என்று கேள்வி.
    • நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியதில் பிரதமர் நரேந்திர மோடி முக்கியப் பங்காற்றியுள்ளார்.

    நாட்டில் ஆபத்தில் இருப்பது காங்கிரஸ் கட்சியே தவிர ஜனநாயகம் அல்ல என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் லண்டன் சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக ஆட்சியின் கீழ் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக குறிப்பிட்டு பேசி இருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ராகுல் காந்தியை கடுமையாக சாடி பேசியுள்ளார்.

    பொதக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சியினர் இப்போது எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டார்கள். ராகுல் காந்தி இங்கிலாந்து சென்று இந்தியாவின் இறையாண்மை மீது கேள்வி எழுப்புகிறார். அவர் ஜனநாயகம் இங்கே முடிந்துவிட்டது என்று கூறுகிறார். சமீபத்திய சட்டசபைத் தேர்தலின் போது நாகாலாந்தில் காங்கிரஸ் பூஜ்ஜியமும், மேகாலயாவில் 5 இடங்களும், திரிபுராவில் 3 இடங்களும் கிடைத்தன. ஆபத்தில் இருப்பது ஜனநாயகம் அல்ல, உங்கள் கட்சி (காங்கிரஸ்) ஆபத்தில் உள்ளது.

    இந்தியாவில் ஜனநாயகம் குறித்த பிரச்சினையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தலையீட்டை நாடியதாகக் கூறப்படும் ராகுல் காந்தி போன்ற தலைவர்களை (அரசியலில்) இருக்க நாம் அனுமதிக்க வேண்டுமா? அவர்களை வீட்டில் உட்கார வைக்க வேண்டும்.

    இந்திரா காந்தியின் தலைமையில் நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியது அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுதான்.

    நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியதில் பிரதமர் நரேந்திர மோடி முக்கியப் பங்காற்றியுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் ஊழல், கமிஷன், கிரிமினல் மயமாக்கலில் ஈடுபட்டுள்ளனர். பிரித்து ஆட்சி செய்வதே அவர்களின் கொள்கை. ஆனால் பொறுப்பான தலைமையுடன் பிரதமர் அரசியலைத் தொடங்கிவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்று பேசியதன் மூலம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.
    • மக்களால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்ட பிறகு ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ‘டூல்கிட்டின்’ நிரந்தர அங்கமாகி விட்டார்.

    பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்று பேசியதன் மூலம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். வலுவான இந்தியாவுக்கு எதிராக இந்திய எதிர்ப்பு சக்திகள் எப்போதும் பிரச்சினையாக உள்ளன. இந்திய ஜனநாயக நிலையை விமர்சித்ததன் மூலம், அந்நிய மண்ணில் அமெரிக்கா, ஐரோப்பா தலையீட்டை நாடுவதன் மூலமும் ராகுல் காந்தி நாட்டின் இறையாண்மையை தாக்கியுள்ளார்.

    மக்களால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்ட பிறகு ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராக செயல்படும் 'டூல்கிட்டின்' நிரந்தர அங்கமாகி விட்டார். இந்தியாவையும் பாராளுமன்றத்தையும் ஜனநாயக முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்ட அரசையும், நீண்ட காலமாக இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தில் உள்ள மக்களையும் அவர் அவமதித்து விட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் காந்தியை ஜே.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

    • தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து தான்.
    • வாரிசு அரசியலால் மாநில கட்சிகள் சுருங்கி வருகிறது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மற்றும் 9 மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகங்கள் காணொலி காட்சி மூலம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவிற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஜே.பி. நட்டா பேசியதாவது:-

    வடமாநிலங்களில் தேர்தல் முடிந்து முடிவுகள் வந்து விட்டன. திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மேகாலயாவில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முக்கிய காரணம், மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொண்டதே ஆகும்.

    தமிழகத்தில் பா.ஜனதா தொண்டர்களின் கடின உழைப்பால், தாமரை மலர்ந்தே தீரும். பா.ஜ.க.வால் மட்டுமே குடும்ப அரசியலை ஒழிக்க முடியும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    தமிழ் மொழி, கலாசாரம், மக்கள் மீது மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். வட இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திருக்குறள் கற்று தரவேண்டும் என மோடி அறிவுறுத்தி உள்ளார். ஒவ்வொரு முறையும் தனது உரையை தொடங்கும்போது, திருக்குறள், சுப்பிரமணிய பாரதியாரின் வரிகளை மேற்கொள் காட்டியே மோடி பேச தொடங்குகிறார். தமிழகத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.31,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. மாநில கட்சிகள் பெரும்பாலும் வாரிசு அரசியல் கட்சியாக தான் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் முதல் தமிழகம் வரை பல மாநிலங்களில் உள்ள கட்சிகளில் வாரிசுகளின் வளர்ச்சியை தான் மையமாக கொண்டுள்ளது.

    நான் ஏற்கனவே கூறியது போல், தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து தான். தற்போது தி.மு.க. குடும்ப அரசியல் என்பதற்கு, முதல்-அமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுள்ளார். இன்னும் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என தெரியவில்லை. வாரிசு அரசியலால் மாநில கட்சிகள் சுருங்கி வருகிறது. மக்கள் அரசியலால் பா.ஜனதா வளர்ந்து வருகிறது.

    தமிழகத்திற்கு நல்லதொரு சிறந்த ஆட்சியை பா.ஜ.க.வால் மட்டுமே தர முடியும். இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் என அனைத்து தரப்பினரின் வளர்ச்சியை மட்டுமே கொள்கையாக கொண்ட கட்சி பா.ஜ.க. குறிப்பாக தமிழக வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரே கட்சி பா.ஜ.க. தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை மிகுந்த மரியாதையுடன் வரவேற்கிறோம்.
    • பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இடையே அண்மைக் காலமாக பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், ஜே.பி.நட்டாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பா.ஜ.க. மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த ஜே.பி.நட்டா, பின்னர் காணொலி வாயிலாக தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட பா.ஜ.க. அலுவலகங்களையும் திறந்து வைத்தார்.

    இந்நிலையில் ஜே.பி.நட்டாவின் வருகை தமிழக பா.ஜ.க.வினருக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இடையே அண்மைக் காலமாக பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், ஜே.பி.நட்டாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது;- "தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை மிகுந்த மரியாதையுடன் வரவேற்கிறோம். அவரது வருகை எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கும் தமிழக பா.ஜ.க.வினருக்கு, ஜே.பி.நட்டாவின் வருகை புதிய உத்வேகத்தை அளித்துள்ளது."

    ×