search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டம்"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
    • இதை பரமத்தி வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதை பரமத்தி வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    மாரத்தான் ஓட்டம் கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி பள்ளி சாலை ,திருவள்ளூர் சாலை ,பழைய தேசிய நெடுஞ்சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை அடைந்தது. இதில் பரமத்திவேலூர் உட்கோட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம், பரமத்தி, நல்லூர், வேலகவுண்டன்பட்டி ஆகிய 5 காவல் நிலையங்களை சேர்ந்த காவலர்கள், பரமத்தி வேலூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், செந்தில்வேல் பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75- வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நாமக்கல் நகராட்சி குளக்கரைத்திடலில் 6.8.2022 தொடங்கி 12.8.2022 வரை நடைபெற்று வருகின்றது.
    • அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75- வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நாமக்கல் நகராட்சி குளக்கரைத்திடலில் 6.8.2022 தொடங்கி 12.8.2022 வரை நடைபெற்று வருகின்றது.

    அமுதப்பெருவிழாவின் ஒரு பகுதியாக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி மாணவிகள் மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. நாமக்கல் நகராட்சி குளக்கரைத்திடலில் அமுதப்பெருவிழா மற்றும் அரசுத்துறைகளின் பணிவிளக்க கண்காட்சி முகாமில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினிமராத்தான் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மல்லிகா, நாமக்கல் நகராட்சித்தலைவர் கலாநிதி முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

    முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா தலைமையில் போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை மாணவ, மாணவிகள் ஏற்றனர். இந்த பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் நாமக்கல் உழவர் சந்தை, ஆஞ்சிநேயர் கோவில், சேலம் ரோடு, திருச்செங்கோடு சாலை, நாமக்கல் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் குளக்கரைத்திடல் வந்தடைந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் பால்கிரேஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் அம்பிகா உள்பட கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதனை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர்.
    • அகஸ்தியன் பள்ளி உப்புசத்திய கிரக நினைவு ஸ்தூபியில் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடக்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதனை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர்.

    அதன்படி வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன் பள்ளி உப்புசத்திய கிரக

    நினைவு ஸ்தூபியில் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடக்கி வைத்தார். கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் வரவேற்றார்.

    இந்த ஜோதி ஓட்டமானது சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் தொடங்கி தலைஞாயிறு, கீவளுர், வேளாங்கண்ணி வழியாக நாகை சென்றடைகிறது. தலைஞாயிறுக்கு வந்தபோது பேரூராட்சி செயல் அலுவலர் குகன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா ,நகரமன்ற தலைவர் புகழேந்தி, துணை தலைவர் மங்களநாயகி, நகர மன்ற ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹீம், தாசில்தார் ரவிச்சந்திரன்ரூ, பேராட்சி மன்றத் தலைவர் செந்தமிழ்செல்வி, துணைத்தலைவர் கதிரவன் , செஸ் விளையாட்டு வீரர்கள், பள்ளிக் கல்லூரி மாணவர்கள் , வணிகர்கள், சுய உதவி குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • தாரமங்கலம் அருகில் உள்ள கருக்கல்வாடி கிராமம் கரட்டூர் பகுதியில் தங்கை கணவருடன் இளம்பெண் ஓட்டம் பிடித்தார்.
    • இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 ஆண்டுகளாகியும் இதுவரை குழந்தைகள் இல்லை.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள கருக்கல்வாடி கிராமம் கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 33). இவருடைய மனைவி கோகிலா (27). இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 ஆண்டுகளாகியும் இதுவரை குழந்தைகள் இல்லை .

    இந்நிலையில் தளவாய்பட்டியில் உள்ள கோகிலாவின் தங்கை கணவர் மோகன்ராஜ் (28) என்பவரோடு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த விவரம் கணவர் நாகராஜுக்கு தெரியவந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தில் சண்டை நடந்து வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி முதல் கோகிலாவை காணவில்லை என்றும் மோகன்ராஜ் தனது மனைவியை கடத்தி சென்று விட்டதாகவும் நாகராஜ் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசனூரில் அமைக்கப்பட்டிருந்த எடைமேடை பயனற்ற நிலையில் இருந்ததை வனத்துறையினர் சீரமைத்து நேற்று முதல் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எடை போட்டு அனுப்பி வைத்தனர்.
    • அனைத்து வாகனங்களும் எடை போட்ட பிறகே 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை உள்ளது.

    இந்த திம்பம் மலைப்பாதை திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடு ஞ்சாலையில் அமைந்து உள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலை ப்பாதை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரு கின்றன.

    வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி திம்பம் மலைப்பாதையை கடப்பது வழக்கம். அவ்வாறு சாலையை கடக்கும் வனவிலங்குகள், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன.

    இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    மேலும் இந்த வழியாக 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆசனூரில் அமைக்கப்பட்டிருந்த எடைமேடை பயனற்ற நிலையில் இருந்ததை வனத்துறையினர் சீரமைத்து நேற்று முதல் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எடை போட்டு அனுப்பி வைத்தனர்.

    நேற்று முதல் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். விரைவில் அனைத்து வாகனங்களும் எடை போட்ட பிறகே 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும். மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பபடும் என தெரிவித்தனர்.

    ×