search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 238040"

    • கார் மற்றும் மோட்டார் சைக்கிளை காட்டுயானை தாக்கி சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது.
    • வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    ஊட்டி

    கூடலூர் அருகே ஓவேலி கிளன்வன்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் காலையில் காட்டுயானை நுழைந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுயானையும் பொதுமக்களை விரட்டியவாறு இருந்தது. இந்த சமயத்தில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளை காட்டுயானை தாக்கி சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதனால் பரபரப்பு காணப்பட்டது. மேலும் பெண்கள், குழந்தைகள் காட்டு யானையை கண்டு வீட்டுக்குள் ஓடி பதுங்கி கொண்டனர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஓவேலி வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானை ஊருக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் வருகின்றனர்.

    • கொளத்தூர் அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை யானை உலா வருகிறது.
    • தோட்டத்தில் புகுந்து, அங்கு பயிர் செய்யப்பட்டுள்ள வாழையை தின்றும், மிதித்தும் நாள்தோறும் நாசம் செய்து வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை யானை உலா வருகிறது.

    இந்த யானை, அந்த பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருடைய தோட்டத்தில் புகுந்து, அங்கு பயிர் செய்யப்பட்டுள்ள வாழையை தின்றும், மிதித்தும் நாள்தோறும் நாசம் செய்து வருகிறது.

    இதுகுறித்து செந்தில் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையில் வனவர் வெங்கடேஷ் மற்றும் வனக்காப்பாளர்கள், சின்னத்தண்டா கிராமத்தில் முகாமிட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • தென்னை மரங்களை சேதப்படுத்தி, தென்னங் குருத்துகளை பிடுங்கி தின்றன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் உணவு, நீர் தேடி வன எல்லையிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன.

    திருமூர்த்தி நகர், வலையபாளையம் கிராமங்களில் இரு குட்டிகளுடன் கூடிய 10 யானைகள் கொண்ட கூட்டம் தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை சேதப்படுத்தி, தென்னங் குருத்துகளை பிடுங்கி தின்றன.

    மேலும் மலையடிவாரத்தில் 1 கி.மீ., வரையில் 20க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பல்வேறு பயிர்களை உண்டதுடன் சோலார் மின் வேலிகளையும், நீர்ப்பாசன கட்டமைப்புகளையும் சேதப்படுத்தின. யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதையடுத்து உடுமலை வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். வன எல்லை கிராமங்களில் யானைகள் நுழைவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும், அகழி, சோலார் மின்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குருமலை, மாவட்ட பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்களை மீட்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள சந்தியூர் ஊராட்சியில் சமீபத்தில் 2 லட்சும் ரூபாய் மதிப்பில் இந்த சுகாதார வளாகம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
    • சமூக விரோத கும்பல் முகாமிடுவதால் பாதுகாப்பு காரணங்க ளுக்காக சுகாதார வளாகத்தை பூட்டி வைத்துள்ளோம் என்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பன மரத்துப்பட்டி அருகே உள்ள சந்தியூர் ஊராட்சி யில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்ற னர். அங்கு ஏரிக்கரை அருகே சுகாதார வளாகம் உள்ளது. அதை ஊராட்சி நிர்வாகம் பூட்டி வைத்துள்ள தால், மக்கள் பயன்படுத்த முடியவில்லை.

    இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், சமீபத்தில் 2 லட்சும் ரூபாய் மதிப்பில் இந்த சுகாதார வளாகம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. ஆனால் கதவு, பைப் உள்ளிட்டவற்றை சமூக விரோதிகள் உடைத்த னர்.

    மேலும் சுகாதார வளாகத்தில் மது அருந்து கின்றனர். இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த மக்கள் தயங்கு கின்றனர். சமூக விரோத கும்பல் முகாமிடுவதால் பாதுகாப்பு காரணங்க ளுக்காக சுகாதார வளாகத்தை பூட்டி வைத்துள்ளோம் என்றனர்.

    • குடிமங்கலம் பகுதியில் தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
    • அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாப்பாத்தியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 50) .இவர் தோட்டத்து வேலைக்கு சென்றார். அப்போது காட்டுப்பன்றி ஒன்று அவரை கீழே தள்ளி காலில் கடித்தது .அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாப்பாத்தியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடிமங்கலம் பகுதியில் தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்வதால் வனத்துறையினர் இதை தடுக்க வேண்டும் அல்லது சுட அனுமதிக்க வேண்டுமென விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காட்டுப்பன்றி மனிதர்களையே தாக்க ஆரம்பித்துள்ளதால் தோட்ட வேலைக்கு செல்வோர் பீதி அடைந்துள்ளனர் .எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • இரவு நேர ங்களில் காட்டு–ப்பன்றிகளின் கூட்டம் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயங்கர சத்தத்துடன் சென்று வருகிறது.
    • காட்டுப்பன்றி கூட்டத்தை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் பாதுகாப்பை காத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நகலூர் ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ெபாதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேர ங்களில் காட்டு–ப்பன்றிகளின் கூட்டம் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயங்கர சத்தத்துடன் சென்று வருகிறது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்பட்டு அச்சத்தோடு இருந்து வரு கிறார்கள்.

    இதனால் வீட்டின் கதவுகளை பொதுமக்கள் மூடி கொண்டு வெளியே வர தயங்குகின்றனர்.அந்தியூர் அருகே உள்ள நகலூரை யொட்டி உள்ள வனப்பகுதியான கொம்பு தூக்கி வனப்பகுதியில் இருந்து இந்த காட்டுப் பன்றிகள் ெவளியேறி அருகே உள்ள ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு பன்றிகள் பெருமாள் பாளையம், முனியப்பன் பாளையம், ஈச்சப்பாறை உள்ளிட்ட பகுதியில் உள்ள கரும்பு தோட்டங்களில் பகல் நேரங்களில் தங்கி விடுகிறது. அவை இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக நகலூர் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    எனவே நகலூர் பகுதியில் ஊருக்குள் வரும் காட்டுப்பன்றி கூட்டத்தை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் பாதுகாப்பை காத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் ஒற்றை காட்டு யானை மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து கரும்பை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின.
    • எனவே வனத்துறை விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கேரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவருகிறது. இதில் கருப்பன் என்ற ஒற்றை யானை திகனாரை மற்றும் தர்மாபுரம் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் புகுந்து 2 விவசாயிகளை கொன்றது.

    இந்த ஆட்கொல்லி யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த யானையை விரட்ட பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் என இரண்டு கும்கி யானைகள் தாளவாடி அடுத்த இரியபுரம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது.

    அதை தொடர்ந்து கருப்பன் யானையை வனத்துறையினர் கும்கியானை உதவியுடன் அடர்ந்த வனப்பகுதியில் விரட்டினர்.

    இந்நிலையில் ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகனாரை அருகே உள்ள ஜோரகாடு பகுதியை சேர்ந்த மாதேவசாமி (28) என்பவர் தனது 5 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் ஒற்றை காட்டு யானை மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து கரும்பை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. சத்தம் கேட்டு சென்ற விவசாயி ஒற்றை காட்டு யானை பயிர்களை சேதம் செய்வது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி வனத்துறைக்கும் அருகில் இருந்த விவசாயிகளுக்கும் தகவல் அளித்தார். பின்னர் விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை விரட்டினர். சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு யானை வனப்பகுதியில் சென்றது. இதில் 1 ஏக்கர் கரும்பு சேதம் ஆனது. கருப்பன் ஆட்கொல்லி யானையை விரட்ட இரண்டு கும்கி யானைகள் இருக்கும் நிலையில் கருப்பன் யானை இரியபுரம் கிராமத்தில் இருந்து தற்போது திகனாரை கிராமத்திக்கு சென்றுள்ளதால் விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறை விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கேரிக்கை வைத்துள்ளனர்.

    • தாளவாடி அருகே வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை புலி அடித்து கொன்றது.
    • மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தாளவாடி வனச் சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரசுவாமி (49)இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார் வழக்கம் போல் மாடுகளை அங்குள்ள மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார் நேற்று மதியம் மாடுகளை அழைத்தை வர சென்ற போது ஓரு பசு மாடு இறந்துகிடந்தது மாடு இறந்துகிடந்த இடம் கர்நாடக வனப்பகுக்கு உட்பட்டது.

    இதுபற்றி தாளவாடி வனத்துறை மற்றும் கர்நாடக வனத்துறைக்கு தகவல் அளித்தார் சம்பவயி–டத்திக்கு வந்த வனத்துறை இறந்த மாட்டை ஆய்வு செய்தனர் புலி தாக்கி பசு மாடு இறந்தது தெரியவந்தது.

    இதனால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். குறிப்பாக கால்நடை வளர்போர் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது:-

    கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்றனர்.

    ×