search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி"

    • நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
    • இன்று ஆறாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    இன்று ஆறாம் நாள் போற்றி பாடல் பாடி...

    ஆறாம் நாள் போற்றி

    ஓம் பொன்னரசியே போற்றி

    ஓம் நவமணி நாயகியே போற்றி

    ஓம் இன்னமுதாய் இருப்போய்போற்றி

    ஓம் சிங்கார நாயகியே போற்றி

    ஓம் செம்பொன் மேனியளேபோற்றி

    ஓம் மங்காத ஒளியவளே போற்றி

    ஓம் சித்திகள் தருவாய் போற்றி

    ஓம் திக்கெட்டும் பரவினோய்போற்றி

    ஓம் சுத்த பரிபூரணியே போற்றி

    ஓம் மகாமந்திர உருவே போற்றி

    ஓம் மாமறையுள் பொருளேபோற்றி

    ஓம் ஆநந்த முதலே போற்றி

    ஓம் ஐவர்க்கும் தலைவி போற்றி

    ஓம் செம்மேனியாய் மிளிர்வாய்போற்றி

    ஓம் மாகேஸ்வரியே போற்றி

    ஓம் மகா சண்டிகையே போற்றி

    • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து விடும்.
    • இன்று 6-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.

    6-வது நாள் 1-10-2022 (சனிக்கிழமை)

    வடிவம் : சண்டிகாதேவி (சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்)

    பூஜை : 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும்.

    திதி : சஷ்டி.

    கோலம் : கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.

    பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.

    நைவேத்தியம் : தேங்காய் சாதம், தோங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதுளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.

    ராகம் : நீலாம்பரி ராகத்தில் பாடலாம்.

    பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

    • கனக துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது.
    • பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், நெய் விளக்கேற்றியும் அம்மனை வழிபட்டனர்.

    சித்தூர், திருப்பதி மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலின் துணைக்கோவிலான காணிப்பாக்கம் மரகதாம்பிகை சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. அதையொட்டி அம்மனுக்கு நேற்று காயத்ரி தேவி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்புப்பூஜைகள், குங்கும அர்ச்சனை செய்யப்பட்டது.

    சுருட்டப்பள்ளி சர்வமங்கள சமேத பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு நவராத்திரி சிறப்புப்பூஜைகள் நடந்தது. ேநற்று முன்தினம் அம்பாள், மகாலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரியையொட்டி ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மூலவர் சன்னதி எதிரில் கொலு பொம்மை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது, பக்தர்களை கவரும் வகையில் இருந்தது. நேற்று ஞானப்பிரசுனாம்பிகை தாயார், ஸ்கந்தமாதாதேவி அலங்காரத்திலும், சிவன் கோவில் வளாகத்தில் உள்ள துர்க்கையம்மன், லலிதாதேவி அலங்காரத்திலும், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் துணைக்கோவிலான பொன்னாலம்மன், ஸ்கந்தமாதா அலங்காரத்திலும், ஏழுகங்கையம்மன் கோவிலில் உற்சவர் அம்மன், ஸ்கந்தமாதாதேவி அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    கனகாசலம் மலை மீதுள்ள கனக துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், நெய் விளக்கேற்றியும் அம்மனை வழிபட்டனர்.

    • கொலு பாட்டு, திருப்பூர் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடந்தது.
    • நவராத்திரி திருவிழா வருகிற 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 'சக்தி கொலு' என்ற பெயரில் 9 படிகள் கொண்ட பிரமாண்ட கொலு கோவிலின் 4 திசைகளிலும் வைக்கப்பட்டு உள்ளது. சக்தி கொலுவில் இதுவரை மீனாட்சி அம்மன் அலங்காரம், அன்னபூரணி அம்மன் அலங்காரம், அபிராமி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு இருக்கிறது.

    நவராத்திரி திருவிழாவின் 5-வது நாளான நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று கஜலட்சுமி அம்மன் அலங்காரத்தில் கொலு அமைக்கப்பட்டது. கோவில் அர்ச்சகர்களின் இல்லத்தரசிகள் மற்றும் உபயதாரர்கள் இணைந்து சக்தி கொலுவை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர். இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று கஜலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை தரிசனம் செய்தனர்.

    சக்தி கொலுவில் பக்தர்களின் கொலு பாட்டு, திருப்பூர் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடந்தது. நவராத்திரி திருவிழா வருகிற 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் செய்து உள்ளார்.

    • 26-ஆம் தேதி மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், கட்டளை பூஜையும் நடைபெற்றது.
    • கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி நான்காம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.


    பரமத்திவேலூர்:


    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை யில் உள்ள புதுமாரியம்மன் கோயிலில் 48-ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 26-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவை முன்னிட்டு 26-ஆம் தேதி மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், கட்டளை பூஜையும் நடைபெற்றது. 27-ம் தேதி முதல் வரும் 3-ம் தேதி வரை தினந்தோறும் அம்ம னுக்கு அபிஷேகமும், அலங்கா ரமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.


    4-ம் தேதி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், 5-ம் தேதி மாலை அம்மன் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்க ப்பட்ட வாகனத்தில் புறப்பட்டு ‌‌‌‌சந்தைபேட்டையில் உள்ள பகவதியம்மன் கோயிலுக்கு செல்கிறது. அதனை தொடர்ந்து அம்புசேர்வை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடு களை வேலூர் பேட்டை‌ புதுமாரியம்மன் கோயில் நவராத்திரி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


    அதேபோல் கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி நான்காம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நவராத்திரி நான்காம் நாளை முன்னிட்டு ப‌ரமத்திவேலூர் சுல்தான் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு கொலு மேடை அமைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு நவராத்திரி பூஜை நடைபெற்றது.


    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


    • வைணவர்கள் திருமாலுக்கு 9 நாளும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்வர்.
    • லட்சுமிக்கு தனி அலங்காரம் செய்வதில்லை.

    நவராத்திரி கொண்டாட்டத்தையொட்டி வைணவர்கள் திருமாலுக்கு ஒன்பது நாளும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்துவழிபடுவது வழக்கத்தில் உள்ளது. திருமாலின் மார்பிலேயே லட்சுமி இருப்பதால் அவருக்கென தனி அலங்காரம் செய்வதில்லை.

    முதல் நாள் - வெண்ணெய்த் தாழி கண்ணன்

    இரண்டாம் நாள் - காளிங்க நர்த்தன கண்ணன்

    மூன்றாம் நாள் - வேணுகோபாலன்

    நான்காம் நாள் - வைகுண்டநாதன்

    ஐந்தாம் நாள் - நாச்சியார் கோலம்

    ஆறாம் நாள் - சாரங்கபாணி

    ஏழாம் நாள் - ராஜகோபாலன்

    எட்டாம் நாள் - ஸ்ரீரங்கநாதன்

    ஒன்பதாம் நாள் - ராமர் பட்டாபிஷேகம்.

    • உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.
    • பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:-

    நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும். அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும். இதற்கென்று ஐதீகம் இல்லாவிட்டாலும் கூட முதல் மூன்று நாட்கள் சிவப்பு, அடுத்த 3 நாட்கள் மஞ்சள், நிறைவான 3 நாட்களில் பச்சை நிற உடை அணியலாம்.

    வசதி உள்ள பெண்கள் நவராத்திரி 9 நாட்களும், அன்றைய சக்தியின் ஆற்றலுக்கு ஏற்ப புடவை நிறத்தை தேர்வு செய்து அணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். அதன்படி 9 நாட்களும் பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:-

    26-ந் தேதி பச்சை,

    27-ந் தேதி மஞ்சள்,

    28-ந் தேதி நீலம்,

    29-ந் தேதி கருநீலம்,

    30-ந் தேதி சிவப்பு,

    அக்டோபர் 1-ந் தேதி கிளிப்பச்சை,

    அக்டோபர் 2-ந் தேதி இளஞ்சிவப்பு,

    அக்டோபர் 3-ந் தேதி பச்சை/அரக்கு பார்டர்,

    அக்டோபர் 4-ந் தேதி வெங்காய கலர்.

    • நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
    • இன்று ஐந்தாம் நாளுக்குரிய போற்றி பாடல்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    இன்று ஐந்தாம் நாள் போற்றி பாடல்...

    ஐந்தாம் நாள் போற்றி

    ஓம் வீரசக்தியே போற்றி

    ஓம் திரிசூலியே போற்றி

    ஓம் கபாலியே போற்றி

    ஓம் தாளிசினியே போற்றி

    ஓம் கவுரி தேவியே போற்றி

    ஓம் உத்தமத் தாயே போற்றி

    ஓம் தர்மம் காப்பவளே போற்றி

    ஓம் உதிரத்தின் தலைவியேபோற்றி

    ஓம் மெய்ஞான விதியே போற்றி

    ஓம் தாண்டவத் தாரகையேபோற்றி

    ஓம் போற்றுவோர் துணையேபோற்றி

    ஓம் பச்சைக் காளியே போற்றி

    ஓம் பவள நிறத்தினாய் போற்றி

    ஓம் ஆகாய ஒளியே போற்றி

    ஓம் பூதங்கள் உடையோய்போற்றி

    ஓம் காளிகாதேவி சக்தியேபோற்றி

    • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழியும்.
    • இன்று 5-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.

    5-வது நாள் 30-9-2022 (வெள்ளிக்கிழமை)

    வடிவம் : மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)

    பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.

    திதி : பஞ்சமி

    கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.

    பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.

    நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்புசுண்டல்.

    ராகம் : பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.

    பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

    • அம்மனை பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டு சென்றனர்.
    • நவராத்திரி திருவிழா அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 'சக்தி கொலு' என்ற பெயரில் 9 படிகள் கொண்ட பிரமாண்ட கொலு கோவிலின் 4 திசைகளிலும் வைக்கப்பட்டு உள்ளது. சக்தி கொலுவின் 2-ம் நாளில் மீனாட்சி அம்மன் அலங்காரமும், 3-ம் நாளில் அன்னபூரணி அம்மன் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நவராத்திரி திருவிழாவின் 4-ம் நாள் நிகழ்வு நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை லலிதா சகஸ்ரநா பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீருத்ரம், சமஹம், ஸ்ரீசுக்தம் நடந்தது.

    இதில் அபிராமி அம்மன் அலங்காரத்தில் கொலு அமைக்கப்பட்டது. இந்த கொலுவை பழம்பெரும் நடிகை சச்சு, கோவில் அர்ச்சகர்களின் இல்லத்தரசிகள் ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று அபிராமி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை மனமுருக வழிபட்டனர்.

    சக்தி கொலுவில் கிருஷ்ணரின் உபதேசங்கள் ஒலி வடிவில் ஒலிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கொலு பாட்டு, ரமணனின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன. தினந்தோறும் கொலுவுக்கு வரும் முதல் 250 பேருக்கு சுமங்கலி செட் பிரசாதமும், அம்மன், முருகன் கோவில்கள் அடங்கிய புத்தகமும் வழங்கப்பட்டு வருகின்றன.

    நவராத்திரி திருவிழா அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் செய்து வருகிறார்.

    • லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள்.
    • சரஸ்வதி கல்வியின் தெய்வம்.

    துர்க்கை

    துர்க்கை நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வையுடன் அழகாகத் திகழ்கிறாள். வீரத்தின் தெய்வம். சிவ பிரியை. இச்சா சக்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள். இவளைக் கொற்றவை என்றும், 'காளி' என்றும் குறிப்பிடுவார்கள். வீரர்கள் போரின் தொடக்கத்திலும், முடிவிலும் துர்க்கையை வழிபவார்கள்.

    மகிஷன் என்ற எருது வடிவம் கொண்ட அசுரனுடன் துர்க்கை ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே 'நவராத்திரி' எனப்படுகின்றன. அவனை வதைத்த பத்தாம் நாள் 'விஜயதசமி. மகிஷனை வதைத்தவள் 'மகிஷா சுரமர்த்தினி'.

    மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலம் மாமல்லபுரத்தில் சிற்பவடிவத்தில் இருக்கிறது.

    நவ துர்க்கை

    1.வன துர்க்கை, 2. சூலினி துர்க்கை, 3. ஜாதவேதோ துர்க்கை, 4. ஜ்வாலா துர்க்கை, 5. சாந்தி துர்க்கை, 6. சபரி துர்க்கை, 7. தீப துர்க்கை, 8. ஆசுரி துர்க்கை, 9. லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

    முதல் மூன்று நாள் நிவேதன வினியோகம் :

    1. வெண் பொங்கல், 2. புளியோதரை, 3. சர்க்கரை பொங்கல்.

    லட்சுமி

    லட்சுமி மலரின் அழகு. அருள்பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி என்றும் அழைப்பதுண்டு.

    லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள்; பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள்.

    இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகின்றன. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள்புரிபவள்.

    இவளுக்குத் தனிக்கோயில் இருக்குமிடம் திருப்பதியில் உள்ள திருச்சானூர்.

    அஷ்ட லட்சுமிகள்

    1.ஆதிலட்சுமி, 2.மகாலட்சுமி, 3.தனலட்சுமி, 4. தானிய லட்சுமி, 5. சந்தானலட்சுமி, 6.வீரலட்சுமி, 7. விஜயலட்சுமி, 8.கஜலட்சுமி இவர்கள் லட்சுமியின் அம்சங்கள்.

    இடை மூன்று நாள் நிவேதன வினியோகம்.

    4. கதம்ப அன்னம், 5. தயிர் சாதம், 6. தேங்காய் சாதம்.

    சரஸ்வதி

    சரஸ்வதி வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்மபிரியை. ஞானசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள். சரஸ்வதியை ஆற்றங்கரைச் சொற்கிழத்தி என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. இவளுக்குத் தனிக் கோயில் இருக்கும் ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள கூத்தனூர்.

    விஜயசதமி

    ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி வெற்றி தருகிற பத்தாம் நாள்.

    பல குழந்தைகளின் வித்யாரம்பம் இன்று தான் ஆரம்பம்.

    இன்று தொடங்கும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம். நவராத்திரி பத்து நாட்களும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் சப்தமி, மகா அஷ்டமி, மகா நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமாவது (7, 8, 9) தேவி வழிபாடு செய்யலாம்.

    அதுவும் முடியாதவர்கள் மகா அஷ்டமி 8-ம் நாள் அன்று நிச்சயம் தேவி வழிபாடு செய்ய வேண்டும்.

    அஷ்ட சரஸ்வதிகள்

    1. வாகீஸ்வரி, 2. சித்ரேஸ்வரி, 3. துளஜா, 4, கீர்த்தீஸ்வரி, 5. அந்தரிட்ச சரஸ்வதி, 6. கட சரஸ்வதி, 7. நீல சரஸ்வதி, 8. கினி சரஸ்வதி.

    கடைசி மூன்று நாள் நிவேதன வினியோகம்: 7. எலுமிச்சை சாதம், 8. பாயாசம், 9. அக்கார அடிசில்.

    • குமரியாக வீற்றிருப்பதால் கன்னியாகுமரி என்று பெயர் பெற்றாள்.
    • இக்கோவில் தேவியின் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    கன்னியாகுமரி பகவதி அன்னையின் ஒளிமிகுந்த மூக்குத்தி யோக சக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது. சிவபெருமானை மணம்புரிய விரும்பி கன்னியாகுமரியில் பகவதி அம்மன் தவமிருந்தாள். ஆனால் சிவன் வராமல் போகவே கோபத்தில் இருந்த பகவதி தேவியை திருமணம் செய்து கொள்ளுமாறு பாணாசுரன் வற்புறுத்தினான்.

    இதனால் மேலும் கோபமாகி அசுரனை அழித்தாள் பகவதி. தேவர்களின் வேண்டுதலால் சினம் தணிந்து, தனது கோப சக்தியை எல்லாம் ஒரு ஒற்றைக்கல் மூக்குத்தியில் இறக்கி சாந்தமானாள். அவள் குமரியாகவே அங்கு வீற்றிருப்பதால் கன்னியாகுமரி என்று பெயர் பெற்றாள்.

    இந்த மூக்குத்தியின் ஒளியை கலங்கரை விளக்க ஒளி என்று எண்ணி வந்த கப்பல்கள் கரையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அதனாலேயே கோவிலின் கடற்கரை நோக்கிய முன் கோபுரவாயிலான கிழக்கு வாயில் மூடப்பட்டு வடக்குப்புற வாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ×