search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 பேர் மாயம்"

    • இரவு 11 மணியளில் வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை
    • பெற்றோர்கள்,உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கருங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் கோகிலா (29). இவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெனசி கிராமத்தில் உள்ள ஜீவா என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த இரவு 11 மணியளில் வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை பெற்றோர், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

    இது குறித்து அவருடைய தந்தை முனுசாமி பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கோகி–லாவை தேடி வருகின்றனர்.

    இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர் கடந்த 8-ம் தேதி ஓசூருக்கு வேலைக்கு செல்வதாக இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. பெற்றோ ர்கள்,உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவருடைய மனைவி பன்னீர்செல்வி பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ரமேசை தேடி வருகின்றனர்

    இதேபோல் நல்லம்பள்ளி அடுத்த மேட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (32 ). லாரி ஓட்டுனர். சம்பவத்தன்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து மனைவி ஸ்ரீதேவி கொடுத்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அரூர் அடுத்த மூக்கனூர் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசு (71) . இவர் அச்சலவாடியில் உறவினரின் வீட்டு விசேஷத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை

    இவரது மகன், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன் மூவேந்தன் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முதியவரை தேடி வருகின்றனர்.

    • தேனி மாவட்டத்தில் கபடி வீராங்கனை உள்பட 4 பேர் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெரியபாண்டி மகள் தமயந்தி(19). சம்பவத்தன்று அவரது தந்தை வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த தமயந்தி மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தேனி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே சுருளிபட்டியை சேர்ந்தவர் சரவணன் மகள் சங்கனி(19). இவர் திருமங்கலத்தில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். குலதெய்வ வழிபாட்டுக்காக சொந்த ஊருக்கு வந்தார். வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார்.

    அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    ஆண்டிபட்டியை சேர்ந்தவர் ராஜயோக்கியம் மகள் சரண்யா(17). இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு கபடி வீராங்கனையாக உள்ளார். சம்பவத்தன்று அவரது தாய் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த சரண்யா திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆண்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சரண்யாவை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி அருகே எருமலை நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி மகள் மஞ்சுளா(17). இவர் பிளஸ்-1 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலை யில் அவர் திடீரென மாயானார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மஞ்சுளாவை தேடி வருகின்றனர்.

    • பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • வங்கி ஊழியர் உள்பட 4 பேர் மாயமனர்

    திருச்சி:

    திருச்சி மன்னார்புரம் 1 -வது தெரு புது காலனியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 38). இவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். வீட்டில் இருந்து பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார்வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் திருவானைக்காவல் மேல உத்திரவீதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 35 )என்பவர் வேலை இல்லாமல் இருந்தவர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி திருவானைக்காவல் ஐந்தாம் பிரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சிவரஞ்சனி (வயது 19). ஸ்வீட் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது உறவினர் ஐயப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் ஸ்ரீரங்கம் ஆர் .எஸ்.ரோடு பகுதியைச் சேர்ந்த அழகரசன் என்பவரது மனைவி லாவண்யா என்பவர் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .இது குறித்து அழகரசன் கொடுத்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • டிவி பார்த்து கொண்டிருந்த மாணவி திடீரென மாயமானார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள மெணசி பகுதியை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் சேலம் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். மேலும் மாலை நேரங்களில் தட்டச்சி பயின்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று தட்டச்சி பயிற்சி பெறுவதற்காக சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    பாலக்கோடு அடுத்துள்ள மண்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் 20 வயது மாணவி. இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 4-ந்தேதி அன்று வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்த மாணவி திடீரென மாயமானார். இதனால் அவரை பல்வேறு இடஙகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    மாரண்டஅள்ளி அடுத்துள்ள திருமல்வாடி பகுதியை சேர்ந்தவர் 15 வயது 10-ம் வகுப்பு மாணவி. இவர் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துள்ளதால் திரும்பவும் தேர்வு எழுத அங்குள்ள பயிற்சி வகுப்பில் படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் படிக்க சென்றார். பின்னர் மாலை வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.இதனால் அவரை பல்வேறு இடஙகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தந்தை மாரண்டஅள்ளி போலீசில் எனது மகளை ஜருகு பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் மோகன் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகேந்திரமங்கலம் அடுத்துள்ள கக்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் பவித்ரா (22). இவருக்கு கடந்த 5 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பவித்ரா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். அங்கிருந்து பவித்ரா தளி அருகேயுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வழக்கம் போல் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பல்வேறு இடஙகளில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து மகேந்திர மங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 19-ந்தேதி வீட்டை விட்டு சென்ற சசிகலா அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
    • புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் அனுமன் தீர்த்தம் அருகேயுள்ள மொட்டங்குறிச்சி புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மன். இவரது மனைவி சசிகலா (வயது 48).

    கடந்த 19-ந்தேதி வீட்டை விட்டு சென்ற சசிகலா அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. இது குறித்து அவரது மகன் சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல பர்கூர் போலீஸ் சரகம் கோட்டை பகுதியை சேர்ந்த நவீன்குமார் தனது மனைவி சுமா (26) என்பவரை கடந்த 19-ந்தேதி முதல் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்.

    மேலும் ஓசூர் ரெயில்வே ஸ்டேசன் பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மனைவி இவாஞ்சலின் விஜிதா (35) என்பவரை கடந்த 12-ந்தேதி முதல் காணவில்லை என்று ஹட்கோ போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

    இந்த வகையில் பேகைபள்ளி பகுதியை சேர்ந்த குமார் என்பவரது மகள் நந்தினி (19) என்ற கல்லூரி மாணவி கடந்த 20-ந்தேதி முதல் மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தாய் கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 29-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
    • புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஜாகீர் மோட்டூர் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த 29-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து அவரது தந்தை சங்கர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் தனது மகளை புது ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அரவிந்த் (வயது 24) என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மத்திகிரி வனத்துறை குடியிருப்பை சேர்ந்த விக்னேஸ்வரி (23) என்பவர் கடந்த 30-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இது குறித்து அவரது கணவர் கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதபோல பழைய மத்திகிரி பகுதியை சேர்ந்த சுதா என்ற இளம்பெண் மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் ரகு தந்த புகரின்பேரில் மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல உத்தனப்பள்ளி அருகேயுள்ள உப்பர தம்மன்டரபள்ளி பகுதியை சேர்ந்த காரிஎலப்பா (58) என்பவரும் மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தம்பி மாரப்பா கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தேனி மாவட்டத்தில் பெண்கள் உள்பட 4 பேர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மாயமானவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ மனைவி ராஜபந்தானம் (வயது 70). சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற மூதாட்டி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    தேனி அருகே வட புதுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தீஸ்வரி (20). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் அல்லி நகரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பிஸ்மி நகரைச் சேர்ந்தவர் கலையரசன் மகன் கவியரசன் (26). சம்பவத்தன்று வெளியே சென்ற கவியரசன் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் அருள் மகன் கரன் (19). இவர் கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று உறவினர் வீட்டு விசேஷத்துக்காக சொந்த ஊர் திரும்பினார். மீண்டும் ேவலைக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. இது குறித்து ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    ×