search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 239009"

    • ராமநாதபுரத்தில் வள்ளலார் 200-வது ஆண்டு முப்பெரும் விழா நடந்தது.
    • தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடந்தது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் ராமநாதபுரம் அரண்மனை மேற்குத்தெரு பகுதியில் உள்ள திருமண அரங்கத்தில் வள்ளலார் என்ற ராமலிங்க சுவாமிகள் இந்த உலகத்திற்கு வந்து 200-வது ஆண்டு தொடக்கம், தர்மச்சாலை தொடங்கி 156-வது ஆண்டு தொடக்கம், ஜோதி தரிசனம் தந்த 152-வது ஆண்டு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை தாங்கினார். வள்ளலார் முப்பெரும் விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சிவராம்குமார், ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சுப்புராயலு, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், வள்ளலார் உயர்மட்ட குழுவினர்கள் உமாபதி சிவம், அருள்நந்தி சிவம், தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) சுகுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 5-ந்தேதி அனைத்து மதுபான க்கூடங்கள் இயங்காது என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
    • தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தவிட்டுள்ளார்.

    விழுப்புரம்: 

    வடலூர் ராம லிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, 5-ந்தேதி அனைத்து மதுபான க்கூடங்கள் இயங்காது என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-

    வடலூர் இராமலிங்கர் நினைவு நாள் நாளை 5-ந்தேதி (ஞாயிற்று க்கிழமை) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தவிட்டுள்ளார். தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் (கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள்) 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு 5-ந்தேதியை டிரை டே ஆக அனுசரித்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி நாளை வடலூர் இராமலிங்கர் நினைவு நாளன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மதத்தின் பெயரில் நடக்கும் வெறுப்பு அரசியலை முறியடிக்க வேண்டும்
    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்பில் வள்ள லார் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக குமரி மாவட்ட அறநிலையத்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்ட பத்தில் நேற்று வள்ளலார் முப்பெரும் விழா நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சுவிதா பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமயங்கள், மதங்களின் அடிப்படையில் மக்களை அடிமைப்படுத்தி ஒரு கூட் டம் வளர்ந்து வந்தது. அதை எதிர்த்தவர் வள்ளலார். ஆனால் இன்றைய உலகில் பொறாமையும், பகைமையும் வளர்ந்து வருகிறது. கடவுளை யும், இயற்கையையும் நேசிக்க வேண்டும். ஆனால் இப் போது கடவுளின் பெயரால் இயற்கையை அழிக்கிறோம்.

    அனைத்து மதங்களும், சமயங்களும் அன்பையும், நீதியையும்தான் போற்று கின்றன. அனைவரும் சமம். அன்பு ஒன்றுதான் இந்த உலகில் நிலையானது. வள்ள லார் கூறிய பல சித்தாந்தங் கள் இப்போது மிகவும் அவ சியமாகிறது. அமைதியும், நீதியும்தான் மக்களை நல்வ ழிப்படுத்தும் தற்போது சிலர் மக்கள் மத்தியில் வெறுப்பு பிரசாரத்தை மேற் கொண்டு வருகிறார்கள். குமரி மாவட் டத்தில் பரவி வரும் இந்த வெறுப்பு பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். நமது நாட் டில் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் செய்ய நினைப்பவர்களின் முயற் சியை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

    விழாவில் கலெக்டர் அர விந்த், மாநகராட்சி மேயர் மகேஷ், அருட்பெருஞ்ஜோதி அகல் விளக்கு மன்ற தலை வர் சவுந்தர்ராஜன், வடலூர் வள்ளலார் உலக மய தலை வர் சூரியமூர்த்தி, அறநிலை யத்துறை உதவி ஆணையர் தங்கம், அறநிலையத்துறை பொறியாளர்ராஜ்குமார் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் அருட்பிரகாச வள்ளலார் 200-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
    • இதில் அகவல் பாராயணம் ஓதப்பட்டது.

    சேலம்:

    சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் அருட்பிரகாச வள்ளலார் 200-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஜோதிகண்ணன் மற்றும் குழுவினரால் அகவல் பாராயணம் ஓதப்பட்டது. சன்மார்க்க கொடியை கோல்டன் பி.தங்கவேல் ஏற்றி வைத்தார்.

    சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சேலம் சிட்டிபாபு தலைமை தாங்கினார். கலை, மதியழகன் ஆகியோர் வரவேற்றனர். தாரை குமரவேலு, ஹரிகிருஷ்ணன் ராமலிங்கம், ஓம்சக்தி கணபதி, குணசேகரன், சீனிவாசன், சவுந்திரராஜன், மகா பாண்டியன், மாரிமுத்து ஆகியோர் வள்ளலார் கொள்கைகள் குறித்து பேசினர். சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மாவட்ட சன்மார்க்க தலைவர் அங்கப்பன், ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    சேலம் ஸ்ரீ ராமானுஜர் மணிமண்டபம் தலைவர் ஸ்ரீராமன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். லோகநாதன் நன்றி கூறினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர். 

    • வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் நித்திய சத்திய தர்மச்சாலை சார்பில், திரு வருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் 200-வது பெருநிலைப் பெருவிழா நடந்தது.
    • இவ்விழாவில், பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம், மூலிகை தேநீர் வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் நித்திய சத்திய தர்மச்சாலை சார்பில், திரு வருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் 200-வது பெருநிலைப் பெருவிழா, வாழப்பாடி வாசவி மஹால் மண்டபத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

    சாது செல்வராஜ் தலை மையில் அகவல் பாராயணத்துடன் தொடங்கிய இவ்விழாவில், திருவிளக்கு பூஜை, மகா மந்திர வேள்வி மற்றும் ஆயில்பட்டி சன்மார்க்க சான்றோர்கள் கந்தசாமி, சண்முகம் மற்றும் வைத்தியகவுண்டன்புதுார் அங்கமுத்து ஆகியோரது திருவருட்பா இசைத்தல் நிகழ்வும் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து, திருவண்ணாமலை சாது ஜானகிராமனின், சன்மார்க்க நெறி வாழ்வு முறை, உடல், உள்ளம் பேணி காக்கும் முறைகள் குறித்த சொற்பொழிவும், இறையருள் பெறும் நெறி முறை குறித்து சென்னை கொளப்பாக்கம் சாது சந்தானம் அறவுரை நிகழ்வும் நடைபெற்றது. இவ்விழாவில், பங்கேற்ற அனைவருக்கும் அன்னதா னம், மூலிகை தேநீர் வழங்கப்பட்டது. நிறைவாக, சாது கலாவதி நன்றி கூறினார்.

    • திருப்பத்தூர் தர்மசாலாவில் வள்ளலார் பிறந்த தினவிழா நடந்தது.
    • வள்ளலார் ஜோதியை ஏற்றி வைத்ததுடன் அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருட்பெருஞ்ஜோதி தர்மசாலாவில் வள்ளலாரின் 200-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதனையடுத்து திருப்பத்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு மும்தாஜ் வள்ளலார் ஜோதியை ஏற்றி வைத்ததுடன் அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். 1500 பேருக்கு மேல் உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ‌தர்மசாலா நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • வள்ளலார் 200-வது அவதார தின நாள் அன்னதானம் 8-ந் தேதி நடக்கிறது.
    • 9.30 மணிக்கு அகவல் பாராயணம் கூட்டு வழிபாடு நடக்கிறது.

    மதுரை

    மதுரை மதிச்சியம் சமரச சன்மார்க சத்திய பிரார்த்தனை மன்றம் சார்பில் 59-வது ஆண்டு விழா வடலூர் வள்ளலார் 200-வது அவதார தின விழா, அன்னதான விழா ஆகியவை நடைபெறுகிறது.

    நாளை (7-ந் தேதி)காலை 8 மணிக்கு திருவாசகம் முற்றோதல் நடக்கிறது. 8-ந் தேதி காலை 8 மணிக்கு அருட்ஜோதி விளக்கேற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. கார்த்திகாயினி ஜோதியை ஏற்றி வைக்கிறார்.

    இதைத்தொடர்ந்து 9.30 மணிக்கு அகவல் பாராயணம் கூட்டு வழிபாடு நடக்கிறது.

    முன்னாள் சன்மார்க்க சங்க தலைவர் ஜவஹர்லால் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்க முன்னாள் தலைவர் ஹரிகோவிந்தன், மதுரை சன்மார்க்க சங்கம் சந்திரமோகன், மதுரை சூர்யா நகர் சன்மார்க்க சங்க ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

    பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருப்புகழ், திருவருட்பா, இன்னிசை கச்சேரி நடக்கிறது.

    • நாகர்கோவில் வடசேரியில் உள்ள வள்ளலார் பேரவையில் நடைபெறுகிறது.
    • அருள் அன்னம் நடைபெறுகிறது.

    அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது அவதார தினவிழா வருகிற 2-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவில் வடசேரியில் உள்ள வள்ளலார் பேரவையில் காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை தாங்குகிறார். பத்மநாபபுரம் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் கோலப்பன் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் உணர்ந்தோதல் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

    வள்ளலார் பேரவை பொதுச்செயலாளர் மகேஷ் வரவேற்புரையாற்றுகிறார். நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சிலதா, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வளர்மதி கேசவன், சுகாதார ஆய்வாளர் ஜாண், வள்ளலார் பேரவை துணை தலைவர் ரெகுராம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். காலை 8 மணிக்கு வள்ளலார் உருவப்படத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.

    அருட்ஜோதியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஏற்றுகிறார். திருவடி புகழ்ச்சி வேள்வியை வள்ளலார் முப்பெரும் விழா அரசு உயர்மட்ட குழு உறுப்பினர் உமாபதி தொடங்கி வைக்கிறார். காலை 8.30 மணிக்கு அருள் அன்னம் ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட வள்ளலார் பேரவையினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • நான் கண் திறந்து விழித்துப் பார்த்தேன். என் வலது பக்கத்தில் 2அடி தொலைவில் அருட்ஜோதி இராமலிங்க வள்ளலார் சுத்த வெள்ளை ஆடையோடு தலையை அதே வெள்ளைத் துணியால் மூடிய நிலையில் அமர்திருந்தார்.
    • எனக்கு ஒரு படபடப்பு ஏற்பட்டது. அவருக்கு வணக்கம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்து அவர் அடியை நாடினேன்.

    எனக்கு சுமார் 42 வயது இருக்கலாம். நான் தெருத் திண்ணையில் அடிக்கடி பல நாட்கள் படுத்துறங்குவது உண்டு.

    ஒரு நாள் பௌர்ணமி தினம் இரவு சுமார் மணி 12.30 இருக்கும். நல்ல நிலவு ஒளி. திண்ணையில் கால் பாகம் இருக்கிறது.

    நான் கண் திறந்து விழித்துப் பார்த்தேன். என் வலது பக்கத்தில் 2அடி தொலைவில் அருட்ஜோதி இராமலிங்க வள்ளலார் சுத்த வெள்ளை ஆடையோடு தலையை அதே வெள்ளைத் துணியால் மூடிய நிலையில் அமர்திருந்தார்.

    எனக்கு ஒரு படபடப்பு ஏற்பட்டது. அவருக்கு வணக்கம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்து அவர் அடியை நாடினேன்.

    'நான் உன்னோடு பத்தாண்டு காலம் இருக்கப் போகிறேனப்பா. இதை இப்போதே யாரிடமும் சொல்லாதே' என்று கூறிய வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்டேன். உருவமும் பார்த்தேன். அருள்பாலித்த உரையும் கேட்டேன். உடனே காட்சி மறைந்துவிட்டது. உடம்பெல்லாம் புல்லரித்தது. மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை.

    என் மனைவியை எழுப்பிக் கூறி மகிழலாம் என்றால் பிறரிடம் அப்போதே கூறவும் கூடாது என்ற அருள் ஆணை.

    என்ன செய்வேன். இருதய பூரிப்போடு தவத்தில் உட்கார்ந்தேன். ஆனால் வள்ளலாரின் காட்சி நினைவு தவிர தவமும் வேறு செய்ய முடியவில்லை.

    அன்று முதல் பத்தாண்டு காலத்துக்குள் நான் எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவ மயம்.

    இராமலிங்க வள்ளலார் அவர் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டு வைத்த செயல்களையெல்லாம் என் எளிய உடலை ஆட்கொண்டு முடித்தார் என்றே எண்ணுகிறேன்.

    (அருள்தந்தை வாழ்க்கை குறிப்பிலிருந்து..ஆர்.எஸ். மனோகரன்)

    ×