என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தங்கம் தென்னரசு"
- மருத்துவத்துறைக்கு கூடுதலாக ரூ. 1,537 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு.
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ரூ. 13,720 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். அதில் குறிப்பிட்டுள்ள முக்கியம்சங்கள்:-
* உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ₹1,245 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2023-24 பட்ஜெட்டில் ரூ. 6,967 கோடி ஒதுக்கீடு. 2024-25 பட்ஜெட்டில் ரூ. 8,212 கோடி ஒதுக்கீடு.
* பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ. 3743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2023-24 பட்ஜெட்டில் ரூ. 40,299 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2024-25 பட்ஜெட்டில் ரூ. 44,042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ. 2500 கோடி ஒதுக்கீடு
* நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு
* தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்திற்கு ரூ. 360 கோடி ஒதுக்கீடு
* மருத்துவத்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ. 1,537 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2023-24 பட்ஜெட்டில் ரூ. 18,661 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2024-25 பட்ஜெட்டில் ரூ. 20,198 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ரூ. 26 கோடி ஒதுக்கீடு
* கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ரூ. 13,720 கோடி நிதி ஒதுக்கீடு
- இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
- பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
இந்தநிலையில் சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.
அதற்கான லோகோவை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில், "தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.." என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
- ஏற்கனவே ஜனவரி 2ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
- நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிற மின் நுகர்வோருக்கும் அவகாசம் பொருந்தும்.
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு மின் கட்டணத்தை அபராதம் இல்லாமல் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரும் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
வீடு, வணிக பயன்பாடு, தொழிற்சாலைகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிற மின் நுகர்வோருக்கும் அவகாசம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இரு மாவட்ட மக்களுக்கும் ஏற்கனவே ஜனவரி 2ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- வெள்ளம் பாதித்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி விவரங்களை கேட்டறிகிறார்.
- சிறு,குறு வணிகர்களையும் சந்தித்து பேச உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 16,17,18-ந் தேதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டியது.
இரண்டு மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்த மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடி மாவட்டத்தில் 1,000 கிராமங்கள் தனித்தீவாக மாறியது.
பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டும், ரெயில் தண்டவாளங்கள் மண் அரிப்பால் அந்தரத்தில் தொங்கியதாலும் சாலை, ரெயில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விமான சேவையும் பாதிக்கப்பட்டது. உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் கடற்படை, விமானம், ராணுவம் என முப்படைகளும் தூத்துக்குடியில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது.
கடந்த 21-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் வெள்ள சேத நிவாரணத்தை அறிவித்தார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு அதிக நிவாரண தொகை வழங்க வேண்டும் என பிரதமரை வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெள்ள சேதங்களை பார்வையிட இன்று தூத்துக்குடி வந்தார்.
இதற்காக நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.
பின்னர் அவர் அங்கிருந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெள்ள சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அதிக கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நிவாரண பணிகள் குறித்தும், இனி மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண பணிகள் குறித்தும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு விளக்கி கூறினர்.
இந்த கூட்டத்தை முடித்து கொண்டு தூத்துக்குடி மாநகரில் வெள்ளம் அதிகம் பாதித்த குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்ய உள்ளார்.
அப்போது வெள்ளம் பாதித்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி விவரங்களை கேட்டறிகிறார்.
இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் சாலை வழியாக கார் மூலம் சென்று மாவட்டத்தில் மழை வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மேலும் சிறு,குறு வணிகர்களையும் சந்தித்து பேச உள்ளார்.
- சில முகவர்கள் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டு மொத்த நிலைமையை மதிப்பிடாதது குறித்து கவலையை எழுப்பினர்.
- தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்- அமைச்சர்
மிச்சாங் புயலைத் தொடர்ந்து 17 மற்றும் 18-ந்தேதிகளில் தென்மாவட்டங்களான திருநேல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 100 வருடங்கள் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டித்தீர்த்தது.
கனமழையுடன் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் குளங்கள், கால்வாய்கள் உடைத்து கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.
தேசிய பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட முப்படைகளும் மீட்புப் பணியில் களம் இறங்கியுள்ளன. மாநில அரசும் துரித மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. சுமார் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்களில் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று தென்மாவட்ட மழை வெள்ளம் பாதிப்பு, மீட்புப்பணி குறித்து தமிழக ஆளுநர் மத்திய அமைப்புகள் மற்றும் ஆயுதப்படைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கப் பிறகு ஆளுநர் மாளிகையில வெளியிட்ட அறிக்கையில் "தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நிலைமை மோசமாக உள்ளது. மத்திய அரசு நிறுவனங்கள் தங்கள் வளங்களை மாநில அரசின் வசம் வைத்து, மாநிலம் கோரும்போது செய்து வருகின்றன. அவர்கள் மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி மீட்பு மற்றும் நிவாரணம் வழங்குகிறார்கள்.
சில முகவர்கள் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டு மொத்த நிலைமையை மதிப்பிடாதது குறித்து கவலையை எழுப்பினர். மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கூடுதல் ஆதாரங்களைத் திரட்டுமாறு ஆளுநர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பதில் அளித்த தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, "மத்திய அரசின் மீட்பு துறைகளுக்கும், மாநில அரசுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருந்தது. வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப் பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். களத்தில் உள்ள அனைவருக்கும் முதலமைச்சர் அறிவுரைகளை வழங்கி வருகிறார்" என்றார்.
- 4 மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்களுக்கும் பொருந்தும்.
- அபராத தொகை இல்லாமல் வரும் 18ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு.
மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்களுக்கும் பொருந்தும் என மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்களுக்கும் பொருந்தும்.
அபராத தொகை இல்லாமல் வரும் 18ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மின் கட்டண கால அவகாசம் நிறுவனங்களுகு்கும் பொருந்தும் என மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
- பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க மின்சார வாரியம் முழுமூச்சுடன் பணியாற்றி வருகிறது.
- சென்னையில் மொத்தமுள்ள 1,812 மின்னூட்டிகளில் 1,610 மின்னூட்டிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன.
மிச்சாங் புயல் எதிரொலியால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக தொடர் மழை ஏற்பட்டது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னையில் படிப்படியாக மின் விநியோகம் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம், ஈரப்பதம் நிலவுவதால் மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
பொதுமக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் படிப்படியாக மின் விநியோகம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
பொது மக்கள் அசாதாரண சூழலை புரிந்துகொண்டு மின் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்
பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க மின்சார வாரியம் முழுமூச்சுடன் பணியாற்றி வருகிறது.
சென்னையில் மொத்தமுள்ள 1,812 மின்னூட்டிகளில் 1,610 மின்னூட்டிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள மின்னூட்டிகளை சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பட்டினப்பாக்கம், புளியந்தோப்பு, பின்னி மில், நேரு ஸ்டேடியம், தாமோதரன் தெரு, முத்தமிழ் நகர், கொளத்தூர் பாலாஜி நகர், சாத்தாங்காடு, மீஞ்சூர், கல் மண்டபம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, முடிச்சூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் மழை நீர் தேக்கம் இருப்பதால் மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாற்றுத் திறனாளிகள் மீது அன்பும், அக்கறையும், மதிப்பும் எப்போதும் உடையவன்.
- எவ்வித உள் நோக்கமுமின்றி பேட்டியின் ஊடே வெளிப்பட்டதொரு சொல்.
அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
கடந்த 18-11-23 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, எனது பேச்சின் ஊடே நான் பயன்படுத்திய வார்த்தை மாற்றுத் திறனாளி நண்பர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
மாற்றுத் திறனாளிகள் மீது அன்பும், அக்கறையும், மதிப்பும் எப்போதும் உடையவன் என்ற வகையில், எவ்வித உள் நோக்கமுமின்றி பேட்டியின் ஊடே வெளிப்பட்டதொரு சொல் எனினும், மனம் புண்பட்டிருக்கும் அவர்களது உணர்வினை முழுமையாகப் புரிந்து கொள்கிறேன். எனது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- விஜயகரிசல்குளம் ஆய்வில் 5 ஆயிரம் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
- வைப்பாற்றங்கரையில் சிறந்த நாகரீகம் இருந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் மற்றும் ராஜ பாளையம், ராஜீக்கள் கல்லூரி (முதுகலை மற்றும் வராலாற்று ஆய்வு மையம்) இணைந்து "வைப்பாற்றங் கரையின் வரலாற்றுத் தடம்" என்ற தலைப்பில் நடைபெற்ற, மாநில அளவி லான தொல்லியல் மற்றும் வரலாற்றுக் கருத்தரங்கம் மற்றும் தொல்லியல் கண்காட்சியை நடத்தினர்.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி. தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், ராஜ பாளையம் நகர் மன்றத்தலைவர் பவித்ரா ஷியாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.பின்னர் அவர் கூறியதாவது:-
நம்முடைய வரலாறு என்பது காவிரிக்கரையில் இருந்து எழுதிட வேண்டும் என்பதன் உண்மையான கோட்பாட்டின் அடிப்படை யில்தான், தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வுகளில் மிகபெரிய முன்னெடுப்பு கள் முதல்-அமைச்சர் தலைமையில் எடுத்து வருகிறோம்.
தாமிரபரணி ஆற்றங் கரையில் கொற்கை, ஆதிச்ச நல்லூர், சிவகளை என்று பல இடங்களில் ஆய்வுகளை நடத்தி, நம் வரலாற்று னுடைய காலம் எங்கிருந்து தொடங்குகிறது என்பதை ஆய்வுகளின் முடிவில் தீர்மானித்தோம். அந்த வரிசையில், நம்முடைய விருதுநகர் மாவட்டத்திலே வைப்பாற்றங்கரையிலே ஒரு சிறந்த நாகரீகம் இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது என்பதன் அடிப்படையில், வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வுகள் மூலம் சுமார் 5 ஆயிரம் பொருள்கள் கிடைத்தி ருக்கின்றது என்று சொன் னால் நாம் அனைவரும் ஆச்சரியப்படக்கூடிய ஒரு அற்புதமான சமுதாயம் வைப்பாற்றங்கரையில் வாழ்ந்திருக்கின்றது. கீழடி உள்ளிட்ட நாகரிகங்களுக்கு குறையாத நாகரீகமாக வைப்பங்காற்றங்கரை நாகரீகம் இருந்துள்ளது.
கீழடியில் உள்ள உலகத்த ரம் வாய்ந்த அருங்காட்சி யகத்தை போல ஒரு அருங்காட்சியகம் விருதுநகர் மாவட்டத்தின் சிறப்புகளை சொல்லும் அளவுக்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் ஒப்புதலு டன் வழங்கி சுமார் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து அந்த பணிகள் மிக விரை வில் தொடங்க இருக்கிறது.
இந்த சமுதாயம் என்னவாக இருந்தது என் பதை இன்றைய சமுதாயம் தெரிந்து கொண்டால் தான், நாளை என்னவாக இருக்க வேண்டும் எப்படிப்பட்ட வர்களாக உருவாக வேண் டும், எதிர்காலம் நமக்கு என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளக் கூடிய சமுதாயமாக மாண வர்கள் உருவாக முடியும். அந்த உணர்வினை மாண வர்கள் பெறக் கூடிய வகையில் இந்த கண்காட்சி கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
- தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நமக்கு 29 பைசாதான் திரும்பக் கிடைக்கிறது.
- பாஜக ஆளும் மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கு 2.73 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது என்றார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
ஒன்றிய அரசுக்கு வரியாக தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நமக்கு 29 பைசாதான் திரும்பக் கிடைக்கிறது.
பா.ஜ.க. ஆளும் மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கு 2.73 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது.
2014 முதல் 2022 வரை ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால் வரிப் பகிர்வாக நமக்குக் கிடைத்தது ரூ.2.08 லட்சம் கோடி.
உ.பி.யின் பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடி. ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது ரூ.9.04 லட்சம் கோடி.
உத்தர பிரதேசம், பீகாருக்கு 200 சதவீதம் பேரிடர் நிதி வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டிற்கு 64 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது.
நிதிப்பகிர்வில் ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது என தெரிவித்தார்.
- நெல்லை மாவட்டத்தில் மாபெரும் கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டுள்ளது.
- நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கடன் வழங்குதல் என்பது மிகப் பெரிய அங்கமாக உள்ளது.
நெல்லை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லையில் மாவட்ட அளவில் சிறப்பு கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். விழாவில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் மாபெரும் கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,500 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.56 கோடிக்கு கடன் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் மாணவர்கள், தொழிலாளர்கள், சிறு-குறு தொழில் நிறுவனங்கள், பெண்கள், விளிம்பு நிலையில் உள்ளவர்கள் என ஏராளமானவர்கள் பயன் பெறுகின்றனர். இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கடன் வழங்குதல் என்பது மிகப் பெரிய அங்கமாக உள்ளது. இதன் மூலம் நாட்டில் மறுமலர்ச்சியை உருவாக்க முடியும்.
தமிழ்நாட்டில் ஏழை-எளிய மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . ரூ.3½ லட்சம் கோடி பட்ஜெட் போடும் நம் மாநிலத்தில் ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்குவது என்பது பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்சியை எட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து 6,500 பயனாளிகளுக்கு ரூ.156 கோடி மதிப்பில் கடன் உதவி வழங்கினார். மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் கிரகாம்பெல், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, ஜோசப் பெல்சி, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் நவநீதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகையை பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
- முதலமைச்சரின் உதவி மைய தொலைபேசி எண் 1100-ஐ அழைத்து புகார் அளிக்கலாம்.
சென்னை:
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ.1000 வீதம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகையை பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த தொகையை பிடித்தம் செய்யக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தியும், அதனை சில வங்கிகள் பின்பற்றாதது ஏற்கத்தக்கது அல்ல.
இதுகுறித்து முதலமைச்சரின் உதவி மைய தொலைபேசி எண் 1100-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இப்புகார்கள் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்