என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 239526"
- கடந்த 2013-ம் ஆண்டு, பழனிசாமிக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
- தொடர் சிகிச்சையில் இருந்த பழனிசாமிக்கு, இன்று அதிகாலை நெஞ்சுவலி அதிகமான நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் சின்ன சீரகாபாடி கடத்தூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 73). இவர் ஆட்டையாம்பட்டி பகுதியில் கடந்த 1992-ம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு, பழனிசாமிக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய சிறையில் இருந்து வந்த பழனிச்சாமிக்கு, கடந்த 14-ந் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
சிறை காவலர்கள் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சையில் இருந்த பழனிசாமிக்கு, இன்று அதிகாலை நெஞ்சுவலி அதிகமான நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்சோ வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற ஆசை தம்பி கடந்த ஆண்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- வேலூர் ஜெயிலில் நெஞ்சுவலி காரணமாக கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.
வேலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் ஆசை தம்பி (வயது 35). போக்சோ வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற இவர் கடந்த ஆண்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
நேற்று ஜெயிலில் இருந்த ஆசை தம்பிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. தரையில் சரிந்து விழுந்த அவரை மீட்டு ஜெயில் ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆசைத்தம்பி பரிதாபமாக இறந்தார்.
பாகாயம் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் ஜெயிலில் நெஞ்சுவலி காரணமாக கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.
இதனை தடுக்க ஜெயிலில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் விசாரணை கைதிகளுக்கான அறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
- புழல் ஜெயில் தரப்பில் இருந்து புழல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருவள்ளூர்:
வங்காளதேச நாட்டை சேர்ந்தவர் முகமது ஆலா ஷேக் (வயது 45). இவர் கடந்த மாதம் 16-ந்தேதி சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் விசாரணை கைதிகளுக்கான அறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இவருக்கு நேற்று இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புழல் ஜெயில் தரப்பில் இருந்து புழல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் வயிற்று வலியால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயிலில் இருந்த ராஜூ போயனுக்கு கடந்த 25-ந் தேதி திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
- ராஜூ போயன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கோவை:
ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி அருகே உள்ள ஓடந்துறையை சேர்ந்தவர் ராஜூ போயன்(வயது 76). இவர் 2016-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஜெயிலில் இருந்த ராஜூ போயனுக்கு கடந்த 25-ந் தேதி திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதனை பார்த்த கைதிகள் இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக அறைக்கு விரைந்து சென்று ராஜூ போயனை சிகிச்சைக்காக ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் ராஜூ போயன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை டாக்டர்கள் ஜெயில் கைதிகள் வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராஜூபோயன் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்