என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அறிமுக கூட்டம்"
- அனைத்து விவரங்களையும் சேகரித்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- கூட்டத்தில் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்த்தாண்டம் :
தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தூய்மை பணியாளர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடர்பான அறிமுக கூட்டம் நல்லூர் பேரூராட்சியில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவி வளர்மதி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அர்ஜூனன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செயல் அலுவலர் விஜிலா விஜி பேசுகையில், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்குவதற்கும் அவர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் சேகரித்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அப்போதுதான் அரசு செப்டிக் டேங்க் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கியும், முறையான பயிற்சி வழங்கியும் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. தலைவர் அறிவிக்கும் வேட்பாளர் வெற்றி பெற வர்த்தக அணி கடுமையாக உழைக்க வேண்டும்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும்.
சுரண்டை:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சுரண்டையில் உள்ள மாவட்ட பொறுப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வர்த்தக அணி தலைவரும், கடையநல்லூர் நகராட்சி சேர்மனுமான மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். அமைப்பாளர் முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் அறிவிக்கும் வேட்பாளர் வெற்றி பெற வர்த்தக அணி கடுமையாக உழைக்க வேண்டும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர்கள் பிலிப் ராஜா, சுப்பையா பாண்டியன், சண்முகராஜ், முத்தரசு, ராமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் புதிய உரங்கள் குறித்த அறிமுக கூட்டம் நடந்தது.
- விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மதுரை மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் புதிய உரங்கள் தயாரிப்பு குறித்த அறிமுக கூட்டம் நடந்தது.
மதுரை மண்டல கூட்டு றவு சங்கங்களின் இணைப் பதிவாளர் குருமூர்த்தி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான ஜீவா சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் அதிகமான விவசாயி களுக்கு டான்பெட் உரம் தயாரிப்பு குறித்தும், இதன் பயன்பாடு, உரமிடும் முறை குறித்தும், உயிர் உரங்கள், உயிர்பூச்சிக் கொல்லிகள், நுண்ணூட்ட உரங்கள், நீரில் கரையும் உரங்கள், மண்புழு உரம் மற்றும் நெல்விதைகள் குறித்தும் துணைப் பதிவாள ரும், மண்டல மேலாளருமான பார்த்திபன் விளக்கினார்.
இதில் மதுரை சரக துணைப்பதிவாளர் ராஜேந்திரன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளர் அமிர்தா, துணைப்பதிவாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது டான்பெட்டின் புதிய தயாரிப்புகள் விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னி லையில் அறிமுகப்படுத்தப் பட்டது.
- காரைக்குடியில் அ.ம.மு.க. செயலாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.
- தெற்கு நகர செயலாளராக கார்த்திக், வடக்கு நகர செயலாளராக அஸ்வின்குமார் நியமிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர்.
காரைக்குடி
காரைக்குடி நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் காரைக்குடி வடக்கு, காரைக்குடி தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது. புதிய நகர செயலாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மாவட்ட அ.ம.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமை தாங்கினார்.மாநில பொறியாளர் அணி தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விமல் வரவேற்றார்.
காரைக்குடி தெற்கு நகர செயலாளராக கார்த்திக், வடக்கு நகர செயலாளராக அஸ்வின் குமார் நியமிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர். அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி வழங்கி உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் பழனி பெரியசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் பந்தாபாண்டி, முத்துபாரதி, மாவட்ட பொருளாளர் லாரன்ஸ், மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் சுமதி உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் திரளாக கலந்துகொண்டனர்.நகர தலைவர் மைக்கேல் நன்றி கூறினார்.
- பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
- மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி பலர் மாவட்ட தலைவர் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன், மாவ ட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் மாவட்ட துணைத் தலைவர் சிவசாமி,தெற்கு ஒன்றிய தலைவர் சேசு மாரிமுத்து ஆகியோா் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பொதுச்செயலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். புதிதாக பொறுப்பேற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் நியமன கடிதம் வழங்கப்பட்டு சால்வை அணிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கலிராயன் விடுதி ஊராட்சியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி பலர் மாவட்ட தலைவர் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இறுதியாக ஒன்றிய பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்