என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரம்மோற்சவ விழா"
- 15 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும்.
- கொடியேற்றத்துடன் தொடங்கி 21 நாட்கள் நடக்கும்.
சித்தூர்:
சித்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில். கோவிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் நடக்கும். மற்ற கோவில்களில் 9 நாட்கள், 11 நாட்கள், 15 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும். ஆனால், காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 21 நாட்கள் நடக்கும்.
பிரம்மோற்சவ விழாவின் 13-வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து காலை ராவணாசூர வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர் வரசித்தி விநாயகர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மாலை யாளி வாகனத்தில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக அகரம்பள்ளி, சின்னகாம்பள்ளி உள்பட 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் காணிப்பாக்கம் கோவிலுக்கு வந்து பூஜைகளை செய்து யாளி வாகன வீதிஉலாவை தொடங்கி வைத்தனர். வாகன வீதிஉலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர மற்றும் நெய் தீப ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம், குடிநீர், மோர் வழங்கப்பட்டது.
- மாட வீதிகளில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் மற்றும் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
- பிரம்மோற்சவ நிறைவு நாளான நாளை காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ 7-வது நாளான நேற்று காலை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
8-வது நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
மாட வீதிகளில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் மற்றும் தீபம் ஏற்றி வழிபட்டனர். இன்று இரவு அஸ்வ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.
பிரம்மோற்சவ நிறைவு நாளான நாளை காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
தீர்த்தவாரி நடைபெறுவதையொட்டி கோவில் அருகே உள்ள புஷ்கரணியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு புதியதாக தண்ணீர் நிரப்பப்பட்டது. மேலும் புஷ்கரணி முழுவதும் தேவஸ்தான ஊழியர்களால் தூய்மைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
திருப்பதியில் நேற்று 66,598 பேர் தரிசனம் செய்தனர். 25,103 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.88 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதியில் நேற்று கூட்டம் குறைவாக இருந்தது.
இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சுமார் 3 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு சிம்ம வாஹனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடைபெற்றன.
- இரவு ஆஞ்சநேயர் வாஹனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடக்கிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில், 37-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி தொடங்கி ஜூன் 8-ந் தேதி வரை வெகு விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி கடந்த 26-ந் மாலை மிருத்சங்கரஹணம்,
அங்குராற்பணம் ஆகியவை நடந்தன. 27-ந் தேதி காலை கலச ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், பிரகார உற்சவம், இரவு அன்னபட்சி வாகனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடைபெற்றன. நேற்று காலை 6 மணிக்கு அபிஷேகம், பிரகார உற்சவமும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு சிம்ம வாஹனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடைபெற்றன.
தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை அபிஷேகம், பிரகார உற்சவமும், இரவு ஆஞ்சநேயர் வாஹனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடக்கிறது. தொடர்ந்து அபிஷேகம், பிரகார உற்சவமும், இரவில் சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், சந்திரபிரபா வாகனம், புஷ்ப பல்லக்கும் நடக்கிறது. வரும் 31-ந் தேதி பகல் 10.30 மணிக்கு நரசிம்மருக்கு திருக்கல்யாணமும், 11.30 மணிக்கு மாங்கல்யதாரணமும், அன்னதானமும், இரவு கருட வாகனத்தில் நகர் வலமும் நடக்கிறது.
- பிரம்மோற்சவ விழா நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசியில் ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி 5-வது நாளான இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாதர் பெருமாளை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவில் சுற்றி வலம் வந்தனர்.
பின்னர் கோவில் வளாகத்தில் பட்டாச்சாரியார்கள் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ ரங்கநாத பெருமாளுக்கும் ஸ்ரீ ரங்கநாயகிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இந்த சிறப்புமிக்க திருக்கல்யாண உற்சவத்தை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பிரசன்ன வேங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது
- 26-ந்தேதி தொடங்குகிறது
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் குணசீலத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பதியான வைகுண்ட வாசுதேவன் குணசீல மகரிஷியின் தவத்திற்காக பிரசன்ன வெங்கடேசனாக காட்சியளித்த அற்புத ஸ்தலமாகும். அவ்வாறு காட்சி அளித்த புனித தினமான புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தை முக்கியமாக கொண்டு ஆண்டுதோறும் 11 நாட்கள் பிரமோற்சவ விழா கொண்டாடப்படுகிறது.
இங்கு எழுந்தருளிருக்கும் எம்பெருமான் சங்குசக்கரதாரியாக திருமார்பில் லட்சுமி துலங்க கையில் செங்கோல் ஏந்தி நின்ற திருக்கோலத்திலேயே சேவை சாதிக்கிறார். குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டோர் 48 நாட்கள் விரதமுறைப்படி வணங்கினால் அவ்வினைகள் போக்கி அருட்பாலிக்கிறார் என்பது ஐதீகம். மேலும் திருப்பதி சென்று தங்களது பிரார்த்தனைகளை செலுத்த இயலாதவர்களும் அந்த பிரார்த்தனைகளை இந்த கோவிலில் செலுத்தி பலன் பெறுகிறார்கள். எனவே இந்த கோவில் தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பிரம்மோற்சவ விழா முக்கியமானதாகும். 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொள்வதும் வழக்கம்.
இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவையொட்டி வருகிற 26-ந்தேதி காலை 7 மணிக்கு பகவத் பிரார்த்தனை, புண்யாக வாசனம், ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடக்கிறது. 27-ந்தேதி காலை 10.35 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. அன்று இரவு அன்ன வாகனத்திலும், 28-ந்தேதி இரவு சிம்ம வாகனத்திலும், 29-ந்தேதி இரவு ஹனுமந்த வாகனத்திலும், 30-ந்தேதி இரவு கருட சேவையும், அடுத்த மாதம் 1-ந்தேதி இரவு சேஷ வாகனத்திலும், 2-ந்தேதி இரவு யானை வாகனத்திலும் சுவாமி வலம் வருகிறார்.
விழாவையொட்டி வருகிற 3.10.2022 அன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு செல்வர் புறப்பாடும், மாலை 6 மணிக்கு ஸ்ரீபெருமாள் உபய நாச்சியாருடன் திருக்கல்யாண எழுந் தருளல், 6.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி புறப்பாடாகிறார்.
8-ம் திருவிழாவான 4-ந்தேதி காலை 7 மணிக்கு செல்வர் புறப்பாடு, பல்லக்கு புறப்பாடு நடக்கிறது. சுவாமி வெண்ணை தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9-ம் திருவிழா அன்று தேரோட்டம் வருகிற (5-ந்தேதி, புதன்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் காலை 5.30 மணிக்கு பெருமாள் உபநாச்சியாருடன் தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் காலை 9.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. முக்கிய வீதிகளின் வழியாக தேரோட்டம் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.
மாலை 5.30 மணிக்கு தீர்த்தவாரியும் நடக்கிறது. 6-ந்தேதி இரவு சப்தாவரணமும், விழாவின் கடைசி நாளான 7-ந்தேதி இரவு 9 மணிக்கு புஷ்ப பல்லக்கும், 10 மணிக்கு ஏகாந்த மண்டப கும்ப தீபாராதனையும், 10.30 மணிக்கு கண்ணாடி அறை சேவையும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை நிர்வாக டிரஸ்டி கே.ஆர்.பிச்சுமணி அய்யங்கார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
- ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நடைபெற இருக்கிறது.
- இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ரிஷிவந்தியம் அருகே ரிஷிவந்தியத்தில் பிரசித்திபெற்ற முத்தாம் பிகை சமேத அர்த்த நாரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இக்கோவி லில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவம் 11 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக் கான பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. முத்தாம்பிகை சமேத அர்த்த நாரீஸ்வரருக்கும், கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்துக்கும் சிறப்பு பூஜை செய்து, பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டம் விழாவை யொட்டி தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடைபெற உள்ளது. விழா வின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ரிஷிவந்தியம் பகுதி பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்