search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்சங்கர்"

    • இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நமீபியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • நமீபியா வாழ் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.

    வின்ட்ஹோக்:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நமீபியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக நமீபியாவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.

    நமீபியா வாழ் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஒடிசாவில் நடந்த கோரமான ரெயில் விபத்தைத் தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்திய அரசுக்கு தங்களது இரங்கலையும், ஆறுதலையும் வழங்கினர்.

    இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கோரமான ரெயில் விபத்து சம்பவம் நிகழ்ந்த நிலையில், நமீபியாவின் வெளியுறவுத்துறை மந்திரி உள்பட உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்திய அரசுக்கு தங்கள் அனுதாபத்தையும், ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தினர்.

    உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் மற்றும் தலைவர்களிடம் இருந்து எனக்கும், பிரதமர் மோடிக்கும் பல குறுஞ்செய்திகள் வந்தன. இது உலகமயமாக்கலுக்கும், உலகம் எவ்வாறு இந்தியாவுடன் இணைந்துள்ளது என்பதற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

    ஒரு துயரம் ஏற்பட்ட சமயத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் பக்கம் நின்றன என தெரிவித்தார்

    • மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    • அவர் வங்காளதேசம், சுவீடன் மற்றும் பெல்ஜியம் ஆகிய 3 நாடுகளுக்கு செல்கிறார்.

    புதுடெல்லி:

    இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் வங்காளதேசம், சுவீடன் மற்றும் பெல்ஜியம் ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாட்கள் வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வங்காளதேசத்துக்கு முதலில் சுற்றுப்பயணம் செய்கிறார். அதன்பின் மே 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சுவீடன் நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

    இந்தப் பயணத்தில் ஐரோப்பிய யூனியனின் இந்தோ-பசிபிக் மந்திரிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் அவர் பங்கேற்க இருக்கிறார். இதன் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் அவர் இருதரப்பு கூட்டங்களை நடத்துகிறார். சுவீடனில் முக்கிய தலைவர்கள் மற்றும் மந்திரிகளைச் சந்தித்துப் பேசுகிறார்.

    இந்திய முத்தரப்பு மாநாட்டில் (இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா) சுவீடன் வெளியுறவு மந்திரியுடன் சேர்ந்து அவரும் பங்கேற்க உள்ளார். இதன்பின் பெல்ஜிய நாட்டு பயணத்தில், பிரஸ்செல்ஸ் நகரில் பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துகிறார். அதனுடன், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தகம் மற்றும் தொழில் நுட்ப கவுன்சிலுக்கான முதல் மந்திரிகள் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டம் வரும் 16-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    • ரஷியாவின் துணை பிரதமர் நேற்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
    • ரஷியா துணை பிரதமர் டெனிஸ் மாண்டுரோவ் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார்.

    புதுடெல்லி:

    உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்துள்ள சூழலில் உலக அளவில் அதன் தாக்கம் பெருமளவில் எதிரொலித்துள்ளது.

    வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளிலும் இந்த போரால் எரிபொருள், உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தலைதூக்கி உள்ளன.

    இந்நிலையில், ரஷியாவின் துணை பிரதமர் மற்றும் தொழில்துறை மற்றும் வர்த்தக மந்திரியான டெனிஸ் மான்டுரோவ் இந்தியாவுக்கு நேற்று வருகை தந்தார். அவருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்தியாவில் 2 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அவர், இந்தப் பயணத்தின் முதல் நாளில் ரஷியா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் ராஜாங்கபூர்வ ஆணைய கூட்டத்திற்கு (ஐ.ஜி.சி.) ரஷியா சார்பில் தலைமையேற்கிறார்.

    அவர் இந்தக் கூட்டத்தில் வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

    இந்நிலையில், ரஷியா துணை பிரதமர் டெனிஸ் மாண்டுரோவ் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். இரு நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து பேசினார்.

    அப்போது பேசிய அவர், மாஸ்கோ நம்பகமான வெளிநாட்டு கூட்டாளர்களை நம்பியிருக்கும் என தெரிவித்தார்.

    இன்று நடைபெற உள்ள இரு நாடுகளின் ராஜாங்க அளவிலான ஆணைய கூட்டத்தில் 24-வது ஐ.ஜி.சி. கூட்டம் பற்றி இறுதி முடிவு செய்யப்படுகிறது.

    • தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி பங்கு குறைந்து கொண்டே போகிறது.
    • சுமார் ரூ.25 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி :

    தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் நிதித்துறை செயலாளரை சந்தித்து பேசினார். இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    கடந்த முறை நான் டெல்லி வந்தபோது வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து வெளிநாட்டு முதலீடுகள் பற்றி பேசினேன். அவர் அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்திய தூதராக இருந்துள்ளார். உலக பொருளா தாரத்தின் கவனம் இந்தியா மீது இருக்கும் சூழ்நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதில் மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. அது தொடர்பாக அவரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தேன். அவற்றை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

    தமிழகத்தில் இந்த ஆட்சி தொடங்கும்போது நிதி நிலைமை கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருந்தது. அதை படிப்படியாக சரிசெய்து, கடந்த ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையையும், நிதி பற்றாக்குறையையும் குறைத்தோம். இந்த ஆண்டும் அந்த செயல்பாடு தொடர்கிறது.

    மத்திய அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாநிலங்களின் கடன் வாங்கும் உச்ச வரம்புக்கும், தற்போதைய புதிய அறிவிப்புக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த கடன் வாங்கும் உச்ச வரம்பு அளவுக்கு தமிழகம் கடன் வாங்க போவதில்லை. அதைப்போல தமிழ்நாடு பட்ஜெட்டுக்காக கூடுதல் நிதி கேட்டும் கோரிக்கை வைக்கவில்லை.

    கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு நிதிக்குழு காலத்திலும் தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி பங்கு குறைந்து கொண்டே போகிறது. மத்திய அரசின் பங்களிப்பு 4 சதவீதம் வரை இருந்தது. தற்போது 3 சதவீதத்துக்கு கீழே குறைந்துள்ளது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்ததில் மகிழ்ச்சி அளிப்பதாக ஜெய்சங்கர் கூறி உள்ளார்.
    • சீன வெளியுறவுத்துறை மந்திரி கின் காங்கையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெறும் ஜி20 வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி பிளிங்கன் வந்துள்ளார். அவரை, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்சர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் உக்ரைன் மோதல் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்வதற்கும் உலகளாவிய பிரச்சினைகளை விவாதிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது' என தெரிவித்துள்ளார்.

    இதேபோல் ஜி20 வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தின் நடுவே சீன வெளியுறவுத்துறை மந்திரி கின் காங்கையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் அமைதி முயற்சி, அமைதிக்கான தற்போதைய சவால்களை எதிர்கொள்வது தொடர்பாக விவாதித்ததாகவும், ஜி20 நிகழ்ச்சி நிரல் பற்றி பேசியதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார். 

    • ஒவ்வொரு நாட்டுக்கும் சவால்கள் உள்ளன.
    • நம்மை சுயேச்சையான நாடாக உலகம் பார்க்கிறது.

    புனே :

    புனேவில், சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு நாட்டுக்கும் சவால்கள் உள்ளன. ஆனால், தேச பாதுகாப்பு போல், கூர்மையான சவால்கள் வேறு எதுவும் இல்லை.

    கடந்த சில ஆண்டுகளாக நமது மேற்கு எல்லையில் நமக்கு சோதனைகள் கொடுத்தனர். இப்போது நிலைமையில் சற்று மாற்றம் வந்துள்ளது. அதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.

    கடந்த 2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சில விஷயங்கள் நடந்தன. வடக்கு எல்லையில் நமக்கு சோதனை அளிக்கிறார்கள். இந்த சோதனைகளை இந்தியா எப்படி கடந்து வந்துள்ளது என்பதுதான் நமது திறமையை காட்டுகிறது.

    தேசத்தை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய நாடு என்பதுதான் இப்போது இந்தியாவுக்கு உள்ள கவுரவம். இது ஒரு சகிப்புத்தன்மையும், பொறுமையும் கொண்ட நாடு. மற்றவர்களுடன் சண்டை போடும் நாடு அல்ல. ஓரங்கட்டக்கூடிய நாடு அல்ல.

    நம்மை சுயேச்சையான நாடாக உலகம் பார்க்கிறது. நாம் நமது உரிமைகளுக்காக மட்டும் குரல் கொடுக்காமல் தெற்குலக நாடுகளுக்கும் சேர்த்து குரல் கொடுப்பதாக உலகம் பார்க்கிறது.

    ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்த காலகட்டத்தில், எந்த அமைப்பிலும் இடம்பெறாத நாடுகளின் நலன்களுக்காகவும் பாடுபட உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் தேர்தல் காலம் தொடங்கிவிட்டது என ஜெய்சங்கர் தெரிவித்தார்
    • பிபிசி ஆவணப்படம் வெளியான நேரம் எதிர்பாராமல் நடந்தது என்று நினைக்கிறீர்களா?

    புதுடெல்லி:

    குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் இந்திய அரசியலில் தொடர்ந்து விவாதப்பொருளாகி உள்ளது. 'இந்தியா: மோடி கேள்விகள்' என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.  ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் டெல்லி வன்முறை, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது. ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனாலும் தடையை மீறி இந்த ஆவணப்படம் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டது.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று ஏஎன்ஐ செய்தி முகமைக்கு பேட்டியளித்தார். அப்போது பிபிசி ஆவணப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து ஜெய்சங்கர் கூறியதாவது:

    நீங்கள் ஆவணப்படம் எடுக்க வேண்டுமா? 1984ல் டெல்லியில் பல விஷயங்கள் நடந்தன. ஏன் ஒரு ஆவணப்படத்தையும் நாம் பார்க்கவில்லை? எனவே, பிபிசி ஆவணப்படம் வெளியான நேரம் எதிர்பாராமல் நடந்தது என்று நினைக்கிறீர்களா?.

    ஒன்றை மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியாவிலும் டெல்லியிலும் தேர்தல் சீசன் தொடங்கிவிட்டதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் தேர்தல் காலம் தொடங்கிவிட்டது. அரசியல் களத்திற்கு வர தைரியமில்லாதவர்களால் விளையாடப்படும் அரசியல் இது. இதை கொண்டாடுபவர்கள் யார் என்று பாருங்கள். இந்தியா, இந்திய அரசு, பாஜக, பிரதமர் மீது தீவிரவாத தன்மை கொண்ட பார்வையை வடிவமைக்கும் வேலை சிறிது சிறிதாக நடைபெறுகிறது. இது 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2011க்கு பிறகு இதுவரை 16,63,440 பேர் குடியுரிமையை துறந்துள்ளனர்.
    • இந்தியாவில் இருந்து சென்றவர்கள் 135 நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர்

    புதுடெல்லி:

    இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் தொடர்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது, 2011ம் ஆண்டுக்கு பிறகு ஆண்டு வாரியாக குடியுரிமையை துறந்தவர்கள் குறித்த தகவலை வெளியிட்டார்.

    இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களில் 2011க்கு பிறகு இதுவரை 16,63,440 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 2,25,620 பேர் குடியுரிமையை துறந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

    இந்தியாவில் இருந்து சென்ற இவர்கள் 135 நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர் என்று கூறிய அவர், அந்த நாடுகள் தொடர்பான பட்டியலை வெளியிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 5 இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

    • நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகள் இலங்கையில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் நன்மை பயக்கும்.
    • அரசியலமைப்பு சட்டம் 13ஏ, தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வை வழங்குகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரே ஆகியோரை சந்தித்து பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுபான்மை தமிழ் சமூகத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, இலங்கையில் அரசியலமைப்பு சட்டம் 13A முழுவதுமாக அமல்படுத்தப்படுவது முக்கியம் என இந்தியா கருதுகிறது, என்றார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை நிலவுவதற்கு இந்தியா எப்போதும் ஆதரிக்கும். கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதும், மாகாணசபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதும் முக்கியம் என்ற எங்களது பார்வையை, இலங்கை அதிபர் விக்கிரமசிங்கவுடன் பகிர்ந்துகொண்டேன்.

    நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகள் இலங்கையில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் நன்மை பயக்கும். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் தேவைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் நான் பேசினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இலங்கைத் தமிழர் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில், 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் தேதி, இலங்கை அரசியலமைப்பில் 13வது திருத்தச்சட்ட உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அரசியலமைப்பு சட்டம் 13ஏ, தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வை வழங்குகிறது.

    அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி அவர்கள் ஒன்றாக வாழ முடியும்.

    இந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கையில் உள்ள பெரும்பான்மையான தமிழ் கட்சிகள் கோரிக்கை முன்வைக்கின்றனர். 13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரியா நாட்டில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • இந்தியாவுக்கு மிக அருகே பயங்கரவாதத்தின் மையம் அமைந்துள்ளது என பாகிஸ்தானை சாடினார்.

    வியன்னா:

    ஆஸ்திரியா நாட்டில் மத்திய வெளிவிவகாரத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அந்நாட்டின் வெளிவிவகார மந்திரியான அலெக்சாண்டர் ஸ்காலென்பர்க்கை சந்தித்துப் பேசினார். அதன்பின் இரு நாட்டு மந்திரிகளும் கூட்டாகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:

    பயங்கரவாதத்தினால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை பற்றி ஆஸ்திரிய நாட்டு தலைவர்களுடன் பேசினேன். எல்லை கடந்த பயங்கரவாதம், வன்முறை, தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் உள்ளிட்டவற்றை பற்றியும் நாங்கள் விரிவாக பேசினோம்.

    போதை பொருட்கள், சட்டவிரோத ஆயுத விற்பனை மற்றும் பிற வடிவிலான சர்வதேச குற்றங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று ஆழ்ந்த தொடர்பில் இருக்கும்போது, மேற்குறிப்பிட்ட பயங்கரவாத விளைவுகளை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அடக்கிவிட முடியாது.

    இந்த பயங்கரவாதத்தின் மையம் இந்தியாவுக்கு மிக அருகே அமைந்துள்ளது. எங்களுடைய அனுபவங்கள் மற்றும் பார்வைகள் பிறருக்கு பயனுள்ளவையாக இருக்கும் என தெரிவித்தார்.

    • மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று சைப்ரஸ் குடியரசு சென்றார்.
    • இதையடுத்து ஆஸ்திரியா நாட்டுக்கும் பயணம் மேற்கொள்கிறார்.

    நிகோசியா:

    மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சைப்ரஸ் குடியரசு நாட்டுக்கு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நாளை வரை அவர் அந்நாட்டில் இருக்கிறார்.

    இந்தியா, சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே 60 ஆண்டுகளுக்கான தூதரக உறவுகளை இந்த ஆண்டு குறிக்கிறது.

    இந்நிலையில், சைப்ரஸ் நாட்டுக்குச் சென்றுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர் நிகோசியா நகரில் நடந்த தொழில் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    உலக பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மூலம் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீட்டிற்கான வலுவான இலக்குகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றியது.

    2025க்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதுமே எங்களது இலக்கு.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் பெரிய மையங்களில் ஒன்றாக இந்தியா இருந்தது. 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கினோம்.

    உலகமே ஒரே குடும்பம் என்ற இந்தியாவின் நம்பிக்கையே ஜி20 அமைப்பின் மையக்கருத்தாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 100 சதவீதம் உறுதிபூண்டுள்ளோம். இதற்காக ஜி20 அமைப்பின் தலைமை பதவியை பயன்படுத்த விரும்புகிறோம் என தெரிவித்தார்.

    • இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டம் யாங்சி பகுதி சீன நாட்டையொட்டி உள்ளது.
    • இந்தியாவின் தவாங் பகுதியை கைப்பற்ற சீனா பலமுறை முயற்சி செய்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டம் யாங்சி பகுதி சீன நாட்டையொட்டி உள்ளது.

    தவாங் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புத்த மடாலயம் உள்ளது. இங்கிருந்து திபெத் பகுதியை முழுமையாக கண்காணிக்கலாம். இதனால் இந்தியாவின் தவாங் பகுதியை கைப்பற்ற சீனா பலமுறை முயற்சி செய்தது.

    கடந்த 9-ந் தேதியும் சுமார் 600 சீன ராணுவ வீரர்கள் தவாங் பகுதிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி விரட்டியது.

    இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது புகார் கூறினார். இந்திய நில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளது. இந்தியா மீது போர் தொடுக்க சீனா ராணுவம் தயாராகி வருகிறது.ஆனால் மத்திய அரசு தூங்கி கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    எல்லை பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். சிலர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. இந்திய எல்லையை இனி யாராலும் தன்னிச்சையாக மாற்ற முடியாது.

    குறிப்பாக சீனாவால் எல்லை கோட்டை தாண்ட முடியாது. சீனாவின் அத்துமீறல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். பிரதமர் மோடியின் உத்தரவுப்படியே எல்லைக்கு ராணுவ வீரர்கள் சென்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் பாராளுமன்றத்திலும் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தை அரசியல் ரீதியாக விமர்சிப்பதை நாங்கள் தடுக்கவில்லை.

    ஆனால் ராணுவ வீரர்களை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்றார்.

    இதற்கிடையே அருணாச்சல பிரதேச எல்லை பகுதியில் இந்திய ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டது. மேலும் அங்கு போர் விமானங்கள், டிரோன்களும் குவிக்கப்பட்டன. டிரோன்கள் மூலம் எல்லை பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இது தவிர இந்திய கடற்படையின் பி-81 ரக கண்காணிப்பு போர் விமானமும் எல்லையில் சீன படைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது.

    இந்திய எல்லைக்குள் இனி சீனா நுழைவதை தடுக்கவும், இந்திய ராணுவ வீரர்கள் எல்லையை விரைவாக சென்றடைய அருணாச்சல எல்லையில் புதிய சாலை அமைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    சுமார் 1748 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்த சாலை அமைய உள்ளது. அடர்ந்த மலை பகுதியில் அமையும் இச்சாலை 2026-ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது.

    ×