search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 241910"

    • 5 முதல் 8 வயதுக்கு உட்பட்டோர், 9 முதல் 12 வயதிற்கு உட்பட்டோர், 13 முதல் 16 வயதிற்கு உட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.
    • பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களை ஆடலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு வார விடுமுறை நாட்களான சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும் குரல் இசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம் போன்ற கலை பயிற்சி வகுப்புகள் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது.

    மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும் , கலை விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் பரதநாட்டியம் , கிராமிய நடனம்,, குரல் இசை, ஓவியம் ஆகிய கலைகளில் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரல் இசை, ஓவியம் ஆகிய போட்டிகள் நடக்கிறது.

    இந்த போட்டிகள் 5 முதல் 8 வயதுக்கு உட்பட்டோர், 9 முதல் 12 வயதிற்கு உட்பட்டோர், 13 முதல் 16 வயதிற்கு உட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.

    இதில் கலந்து கொள்ளும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது வயது சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்பு சான்றிதழ்களுடன் காலை 9 மணிக்கு வர வேண்டும். இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களை ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

    தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய கலை நடனங்கள் ஆடலாம். பக்க வாத்தியங்களையோ, ஒலிநாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். அதிகபட்சம் ஐந்து நிமிடம் நடனம் ஆட அனுமதிக்கப்படும்.

    குறலிசை போட்டியில் கர்நாடக இசை, தேசிய பாடல்கள் , சமூக விழிப்புணர்வு பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் ஆகியவற்றில் தமிழ் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். ஓவியப்போட்டி தொடங்கப்படும் போது ஒவ்வொரு வயதினருக்கும் தனித்தனியாக தலைப்புகள் அறிவிக்கப்படும். ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கராத்தே பயிற்சி பள்ளியில் தகுதி பட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது
    • இப்பயிற்சி பள்ளியில் கராத்தே வீரர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது

    முசிறி:

    முசிறி புடோகன் கராத்தே பயிற்சி பள்ளியில் தகுதி பட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கராத்தே மாஸ்டர் செவன்த் டான் அசோக்ராஜ் தலைமை வகித்தார். சீனியர் மாணவர்கள் உமாராஜா, தமிழரசன், சுகுமார், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் தமிழரசன், செங்கனிசெல்வி ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர். விழாவை முன்னிட்டு முசிறி, தா.பேட்டை, தொட்டியம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கராத்தே மாணவர்களுக்கு பயிற்சியும், போட்டிகளும் நடத்தப்பட்டது.

    பின்னர் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கராத்தே மாஸ்டர் அசோக்ராஜ் கருப்பு, வெள்ளை, ஆரஞ்சு, நீலம் உள்ளிட்ட பல்வேறு நிற பட்டைகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார். இப்பயிற்சி பள்ளியில் கராத்தே வீரர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் முசிறி பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.


    • அகில இந்திய கராத்தே டேக்வாண்டோ போட்டிகள் நடந்தது.
    • சிறப்பாக பயிற்சி அளித்து மாணவர்களை வெற்றி பெற செய்த மாஸ்டருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியை சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் பாண்டியனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    புதுவை உப்பளம் ராஜீவ் காந்தி விளையாட்டு அரங்கில் அகில இந்திய கராத்தே டேக்வாண்டோ போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.

    அதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஸ்பார்க் அகாடெமியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற டேக்வாண்டோ போட்டி களில் இம்மாணவர்கள் 13 தங்க பதக்கமும், 12 வெள்ளி பதக்கமும், 17 வெண்கல பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர்.

    தேசிய அளவில் புதுச்சேரி மாணவர்கள் முதலிடமும் தமிழ்நாடு மாணவர்கள் (நாகப்பட்டினம்) 2வது இடமும் கர்நாடகா மாநிலம் 3-வது இடத்தை யும் பெற்றுள்ளனர்.

    குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக பயிற்சி அளித்து மாணவர்களை வெற்றி பெறச் செய்த மாஸ்டர் பாண்டியனுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கராத்தே பயிற்சி முகாம் நடந்தது.
    • இந்த முகாமை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட கராத்தே சங்கம் சார்பில் சிறப்பு கட்டா பயிற்சி முகாம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் ருக்மா சரவணன் தலைமை தாங்கினார்.காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மதுரையில் இருந்து வருகை புரிந்த பிளாக் பெல்ட் 3-வது டான் பயிற்சியாளர் தன நாராயண பிரபு குழுவினர், சிறப்பு பயிற்சி அளித்தனர். இதில் சிவகங்கை மாவட்ட கராத்தே சங்க நிர்வாகிகள் வீரசேகர், தியாகராஜன், சிரஞ்சீவி, சந்தீப், அயயாரு, சண்முகவேல், கஸ்பாரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழை ஜே.சி.ஐ. காரைக்குடி கிங்ஸ் இயக்க தலைவர் ராஜீவ் வழங்கினார்.சங்க செயலாளர் சென்டாய் சுகுமார் நன்றி கூறினார்.

    • அகில இந்திய சிலம்ப போட்டியில் எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக 11 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • இதே போல் ஓபன் கராத்தே போட்டியில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக அகாடமி மாணவர்கள் 18 பேர் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    சேலத்தில் அகில இந்திய சிலம்ப போட்டி நடந்தது. இதில் 700 பேர் கலந்துகொண்டனர். இதே போல் ஈரோடு சிஎஸ்ஐ அரங்கத்தில் ஈரோடு ஓபன் கராத்தே போட்டிகள் நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அகில இந்திய சிலம்ப போட்டியில் எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக 11 மாணவர்கள் கலந்துகொண்டனர். வெவ்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் சூரியா, சர்வேஷ், அபிநயா, துர்கா  முதல் பரிசையும் குமரவேலு, பாலாஜி, வெற்றிவேலன் 2-ம் பரிசையும், 4 மாணவர்கள் 3-ம் பரிசையும் வென்றனர்.

    இதே போல் ஓபன் கராத்தே போட்டியில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக அகாடமி மாணவர்கள் 18 பேர் கலந்து கொண்டனர். இதில் பவித்ரா தேவி முதல் பரிசையும், கனிஷ்கா, சந்தோஷ் 2-ம் பரிசையும் 17 மாணவர்கள் 3-ம் பரிசையும் வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பெரிய செங்குந்தர் மண்டபத்தில் நடந்தது. ஜான்சன்ஸ் நிறுவனங்களின் தலைவரும் செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தலைவருமான ஜான்சன்ஸ் நடராஜன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் சிந்தியா பாபு தலைமை வகித்தார். வக்கீல் ஜனார்த்தனன், ஹைடெக் ரோட்டரி சங்கத்தலைவர் பாலாஜி ஆகியோர் வாழ்த்தினார்கள்.

    ×