search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 242068"

    • இந்தியாவில் முறையாக தடுப்பூசி போடப்படாத தெரு நாய் கடிப்பதால் தான் 95 சதவீதம் ரேபிஸ் நோய் ஏற்படுகிறது.
    • நாய் கடித்த அன்றே இந்த சிகிச்சையை தொடங்கிவிட வேண்டும்.

    ரேபிஸ் என்பது வெறி நாய்க்கடியால் ஏற்படும் ஒருவகை நோய். ரேபிஸ் எனப்படும் வைரஸ் கிருமிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.

    இந்தியாவில் முறையாக தடுப்பூசி போடப்படாத தெரு நாய் கடிப்பதால் தான் 95 சதவீதம் ரேபிஸ் நோய் ஏற்படுகிறது.

    ரேபிஸ் நோய் உள்ள நாயின் உமிழ்நீரில் ரேபிஸ் வைரஸ்கள் வாழும். அந்த நாய் மனிதர்களை கடிக்கும் போது ஏற்படும் காயத்தின் வழியாக ரேபிஸ் கிருமிகள் உடலுக்குள் சென்று விடும்.

    பின்னர் உடலில் உள்ள தசை இழைகளில் பல மடங்கு பெருகும். அதன் பிறகு நரம்புகள் வழியாகவும், முதுகு தண்டு வடத்தின் வழியாகவும் மூளையை அடைந்து, மூளை திசுக்களை அழித்து ரேபிஸ் நோயை உண்டாக்குகிறது.

    மேலும் வெறிநாய் மனிதர்களின் மீது பிராண்டினாலும், உடல் காயங்களில் வெறிநாய் நாவினால் தடவினாலும், அதன் உமிழ்நீர் பட்டாலும் ரேபிஸ் நோய் வரலாம். வெறிநாய் காலில் கடித்தால் பாதிப்புகள் வெளியில் தெரிய அதிக நாட்கள் ஆகலாம். ஆனால் முகத்திலோ, கையிலோ கடித்தால் உடனடியாக அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.

    வெறிநாய் கடித்த 5 நாட்களுக்கு பிறகு ரேபிஸ் நோயின் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். சிலருக்கு 90 நாட்கள் கழித்து கூட அறிகுறிகள் தென்படலாம். இந்த நோயின் முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படும். அதன் தொடர்ச்சியாக காய்ச்சல், வாந்தி உருவாகும். உணவு சாப்பிட முடியாது. தண்ணீர் குடிக்க முடியாது.

    வெறிநாய் கடித்தவருக்கு தொப்புளை சுற்றி 14 ஊசிகள் போடுவது பழைய நடைமுறை. இப்போது நவீன தடுப்பூசிகள் வந்து விட்டன. 5 ஊசிகள் போட்டாலே ரேபிஸ் நோயை 100 சதவீதம் தடுத்துவிடலாம்.

    இந்த தடுப்பூசிகள் தொப்புளில் போடப்படுவது இல்லை. கைகளிலேயே போடப்படுகிறது. நாய் கடித்த அன்றே இந்த சிகிச்சையை தொடங்கிவிட வேண்டும்.

    நாய் கடித்த நாள், 3-வது நாள், 7-வது நாள், 14-வது நாள், 28-வது நாள் என 5 தவணைகள் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கடுமையான காயம் இருந்தால் 6-வது தடுப்பூசியை 90-வது நாளில் போட்டுக்கொள்ளலாம்.

    இந்த தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக போடப்படுகிறது. தனியார் மருத்துவ மனைகளிலும் கிடைக்கிறது.

    சென்னையில் தற்போது தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாய்க்கடியால் சிகிச்சைக்கு வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு 2 பெரிய மருத்துவமனைகளில் மட்டும் தினமும் 15 பேர் வரை ரேபிஸ் தடுப்பூசி போட வருகிறார்கள்.

    இதில் பெரும்பாலும் குழந்தைகளே நாய்க்கடியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள், தெரு நாய்களிடம் விளையாடும்போது அவர்கள் நாய்களிடம் கடி படுகிறார்கள்.

    மேலும் குழந்தைகள் தெருக்களில் ஏதாவது உணவை எடுத்து செல்லும் போது, அருகில் உள்ள கடைகளுக்கு தனியாக அனுப்பப்படும் போதும் நாய்க்கடிக்கு ஆளாகிறார்கள். பெரியவர்கள் தற்செயலாக நாயின் வாலை மிதிப்பது உள்ளிட்ட காரணங்களால் நாயிடம் கடிபடுகிறார்கள்.

    சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசி போட மாதம் 20 குழந்தைகள் வருகிறார்கள். நாய்க்கடியால் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் அது பொது சுகாதார பிரச்சினையாக மாறி உள்ளது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 6261 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அங்கு தினமும் 5 பேர் நாய்க்கடி சிகிச்சைக்கு வருகிறார்கள். ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் ஒரு மாதத்தில் 1400 முதல் 1500 டோஸ் ரேபிஸ் தடுப்பூசி போடப் பட்டுள்ளது. இங்கு தினமும் 10 பேர் சிகிச்சை பெற வருகிறார்கள்.

    ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த ஆண்டு 1385 டோஸ் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    நாய்க்கடி என்பது ஒரு தீவிர சுகாதார பிரச்சினையாகும். ரேபிஸ் நோய் 100 சதவீதம் ஆபத்தானது. ஆனால் அது 100 சதவீதம் தடுக்கக்கூடியது. தடுப்பூசி போடப்பட்ட நாய் கடித்தாலும், தடுப்பூசி போடாத நாய் கடித்தாலும் உடனடியாக சிகிச்சை எடுப்பது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    தண்டையார்பேட்டை, காசிமேடு, வியாசர்பாடி, புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை, பட்டாளம், ராயபுரம் போன்ற பகுதிகளில் நாய்கள் அதிகம் உள்ளன. இதனால் இந்த பகுதிகளில் அதிகம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார்கள்.

    நாய்க்கடிக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுபவர்கள் அனைத்து தவணை தடுப்பூசிகளையும் போட்டு முடிக்க வேண்டும்.

    மனிதர்களுக்கு ரேபிஸ் நோயின் பாதிப்பை தடுக்க நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவதே சிறந்த தடுப்பு நடவடிக்கையாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக தினமும் வெளியே சென்று வருகின்றனர்.
    • நகரின் முக்கிய வீதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், பணி நிமித்தமாகவும் தினமும் வெளியே சென்று வருகின்றனர். இந்நிலையில், நகரின் முக்கிய வீதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. கூட்டம் கூட்டமாக நாய்கள் சாலையில் வலம் வருகின்றன. அதிலும் சில நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களை துரத்துகிறது.

    மேலும், வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டி செல்வதால் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும், சில நாய்கள் நோய் வாய்ப்பட்டு காணப்படுகிறது. அதனால் வரும் துர்நாற்றத்தால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சில வாரங்களாக குப்பைகள் அள்ளப்பாடமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.
    • பல்வேறு குறைகளை கூறி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நகராட்சி வளாகம் அவைகூடத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரிராஜசேகரன் தலைமை வகித்தார்.

    நகராட்சி ஆணையர் வாசுதேவன், மேலாளர் காதர்கான், நகராட்சி பொறியாளர் சித்ரா, சுகாதார அலுவலர் செந்தில்ராம்குமார், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், ஓவர்சியர் விஜேந்திரன் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் முபாரக்அலி பேசுகையில், சீர்காழி நகரில் கடந்த சில வாரங்களாக குப்பைகள் அள்ளப்பாடமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.

    இதனால் வார்டு பகுதிகளில் கடும் சுகாதாரசீர்கேடு நிலவுவதால் சீர்மிகு நகராட்சி சீர்கேடு அடைந்து வருகிறது. இதனால் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் மக்களிடம் அவப்பெயர் ஏற்பட்டுவருகிறது.

    குப்பை களை அள்ள நடவடிக்கை எடுக்காவிட்டால் பொது மக்கள் சாலைமறியல் போரா ட்டம் நடத்தும் முடிவுக்கு வந்துள்ளனர். மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தானும் பங்கேற்பேன் என்றார்.

    நகர்மன்ற உறுப்பினர் வள்ளிபேசுகையில், நாய்கள் தொல்லைஅதிக ரித்துவருவதை கட்டுப்ப டுத்தவேண்டும்.கொசு மருந்து தெளிக்கவேண்டும்.

    இறப்பு சான்றிதழ் விண்ணப்பம் செய்பவர்களுக்கு உடனடியாக வழங்காமல் அலைகழிப்பு செய்கின்றனர் என்றார். ஜெயந்திபாபுபேசுகையில், நகர்மன்ற உறுப்பினர்கள் முழுமதி இமயவரம்பன், ராஜேஷ், பாலமுருகன், சாமிநாதன் கிருஷ்ணமூர்த்தி வேல்முருகன், பாஸ்கரன், நாகரத்தினம், ரேணுகாதேவி, கலைசெல்வி, ரஹ்மத்நிஷா உள்ளிட்ட பலரும் நகரில் குப்பைகள் 15 நாட்களுக்கு மேலாக எடுக்கப்படாமல் மூட்டை மூட்டையாக கிடைக்கின்றன.

    இதனால் பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சுகா தாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.

    குப்பைகள் எடுக்கப்படாததால் கவுன்சிலர்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எங்களால் பொதுமக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை உடனடியாக குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்தனர்.

    பாலமுருகன் பேசுகையில், ஈமகிரிகை மண்டபம் பகுதியில் தண்ணீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசுகையில், குப்பைகளை கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    கால்நடைகள், பன்றிகளை பிடிக்க உறுப்பினர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைக்கின்றனர்.

    அவ்வாறு பிடித்தால் சில உறுப்பினர்களே போராடும் மக்களுக்கு துணை போகின்றனர். இவ்வாறு செயல்படும் உறுப்பினர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பொதுமக்கள் அவதி
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து தெருக்களில் கடந்த சில ஆண்டுகளாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மாணவ மாணவிகளை, மோட்டார் சைக்கிளில் செல்வோரை துரத்திச் செல்கிறது.

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையை போக்க, கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து காடுகளிலோ அல்லது யாரும் இல்லாத இடத்திலோ விட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் பேருராட்சி அலுவலகம் சுற்றி தற்போது வாகனங்கள் நிறுத்து மிடமாக மாறி வருகிறது.

    எனவே வாகனங்கள் நிறுத்த பேரூராட்சி சார்பில் மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அவிநாசி, சேவூர் ரோடு காமராஜ் நகரில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் அப்பகுதியில் சுற்றிச்சுற்றி வருகிறது
    • வெளியில் தனியாக குழந்தைகளை அனுப்ப பயமாக இருக்கிறது.

    அவிநாசி :

    அவிநாசி, சேவூர் ரோடு காமராஜ் நகரில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் அப்பகுதியில் சுற்றிச்சுற்றி வருகிறது. பகல் மற்றும் இரவு நேரத்தில் சாலையில் சுற்றி திரிவதோடு, நடத்து செல்லும் குழந்தைகளை துரத்துதல், மோ ட்டார் சைக்கிள்களில் செல்வோரை கடிக்க துரத்துதல் போன்ற செயல்களில் நாய்கள் ஈடுபடுகின்றன.இது குறித்து காமராஜ் நகரை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    வெளியில் தனியாக குழந்தைகளை அனுப்ப பயமாக இருக்கிறது. அருகில் உள்ள மளிகை கடைக்கு செல்வதற்கே நாய்கள் எங்காவது சுற்றி கொண்டிருக்கின்றதா என்று பார்த்து விட்டு தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட நாய்கள் ரோட்டில் அங்கும் இங்கும் ஓடுவதால் எந்த சமயத்தில் என்ன நடக்குமே என்ற அச்சமே அதிகரிக்கிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ரோட்டில் வந்து நிற்க முடிவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், நாய்களை பிடித்து அதற்கு கருத்தடை ஊசி போட உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்றனர்.

    • குழந்தைகளை கடிப்பதாக குற்றச்சாட்டு
    • பொதுமக்கள் அச்சம்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. இதனால் அவ்வழியாக பொதுமக்களும் மற்றும் குழந்தைகளும் செல்லும்போது தெருநாய்கள் கடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் வந்தவாசி காந்தி சாலை பஜார் சாலை சன்னதி தெரு உள்ளிட்ட பகுதியில் ஒரே இடத்தில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் வருவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×