என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசு நிலம் மீட்பு"
- மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.51 கோடி இருக்கும்.
- நகராட்சி சார்பில் மேல்நிலைப்பள்ளி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 1991-ல் அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில் கட்டிடம் கட்டப்பட்டது.
அப்போது கட்டிடம் அருகில் உள்ள 51 சென்ட் நிலத்தையும் ஆக்கிரமித்து மேல் வாடகைக்கு சைக்கிள் ஸ்டான்ட் நடத்த குத்தகைக்கு விட்டதாக கூறப்படுகிறது.
நகரின் முக்கிய சாலையில், வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கிட்டத்தட்ட 32 வருடமாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்தது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து வட்டாட்சியர் சுரேஷ்குமார், நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா, நகர அமைப்பு அலுவலர் குணசேகரன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் ஜே.சி.பி எந்திரத்துடன் இன்று காலை வந்தனர்.
அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்த தடுப்புகளை ஜே.சி.பி.எந்திரத்தால் இடித்து அகற்றினர். முன்னதாக அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.51 கோடி இருக்கும். அந்த இடத்தில் நகராட்சி சார்பில் மேல்நிலைப்பள்ளி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றனர்.
- கத்தேரி கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.
- இதன் அடிப்படையில், வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கத்தேரி கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.
இதன் அடிப்படையில், வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர். இதில், சிங்காரவேலு என்பவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை மீட்டனர். அப்போது ஆர்.ஐ.கீதா, வி.ஏ.ஓ சக்தி ஆகியோர் உடனிருந்தனர்.
- ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
- ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர்.
ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து வண்டலூர் தாசில்தார் பாலாஜி தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர் புஷ்பராணி, கூடுவாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் அனிதாபீவி, காரணைப்புதுச்சேரி கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரன் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ. 80 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஐகோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
- மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் அங்கு சென்று ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அந்த இடத்தை மீட்டனர்.
கோவை:
கோவை மாநகராட்சியில் மாநகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்கள், பூங்காக்கள் போன்றவற்றை மாநகராட்சி நிர்வாகம் மீட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 22 வார்டு ராமகிருஷ்ணா லே-அவுட் பகுதியில் சுமார் 40 சென்ட் இடம் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது.
இந்த இடம் மாநகராட்சியின் பூங்காக்கு சொந்தமான இடமாகும். இதனை அடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முத்துராமலிங்கம் தலைமையில், உதவி நகரமைப்பு அலுவலர் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் அங்கு சென்று ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அந்த இடத்தை மீட்டனர்.
இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.16 கோடி ஆகும். அந்த இடத்தில் உள்ள கட்டிடம் இடித்து பூங்கா பணிகளுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டது. இதே போல அனைத்து ஆக்கிரமிப்பு பூங்காக்களையும் மீட்டெடுப்போம் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
- அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது.
- சுமார் 20 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் ராஜா என்பவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகி லுள்ள செலவடை ராஜா கோவில் அருகே அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது.
இதில் சுமார் 20 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் ராஜா என்பவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தார். இது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் நாகலட்சுமி இடத்தை ஆய்வு செய்தார்.
அப்போது அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதியா னது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
- ஆரூர்பட்டி கிராமம் வெள்ளகல்பட்டியில் ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது.
- ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் அவர் விவசாயம் செய்து வந்தது வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமம் வெள்ளகல்பட்டியில் ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சுமார் 20 சென்ட் இடத்தை அதே பகுதியை சேர்ந்த பழனி யப்பன் மகன் சரவணன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.
ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் அவர் விவசாயம் செய்து வந்தது வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று தாரமங்கலம் வரு வாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி உட்பட வருவாய் துறையினர் அங்கு சென்றனர். உரிய அளவீடு கள் செய்து ஆக்கிர மிப்பில் இருந்த நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
- சரபங்கா வாய்க்காலில் சுமார் 39 சென்ட் அளவிற்கு அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது.
- இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த கணபதி மற்றும் சந்திரமதி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்தனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் ஊராட்சி தெசவிளக்கு தெற்கு கிராமம் வீதன் வளவு பகுதியில் அமைந்துள்ள சரபங்கா வாய்க்காலில் சுமார் 39 சென்ட் அளவிற்கு அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த கணபதி மற்றும் சந்திரமதி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்தனர்.
இதையடுத்து தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அதிகாரி சங்கர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
- தொடுகாடு பகுதியில் 5½ ஏக்கர் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு.
- எந்திரங்கள், இரும்பு தளவாட பொருட்கள் போன்றவற்றை பொக்லைன் மூலம் முழுவதுமாக அகற்றினார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளுரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு கிராமத்தில் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி வருவதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு புகார்கள் வந்தது.
அவரது உத்தரவின் பேரில் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில், மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தொடுகாடு கிராமத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தொடுகாடு பகுதியில் 5½ ஏக்கர் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி வந்ததை உறுதி செய்தனர்.
மேலும் அந்த இடத்தில் இருந்த இரும்பு தகடுகள், எந்திரங்கள், இரும்பு தளவாட பொருட்கள் போன்றவற்றை பொக்லைன் மூலம் முழுவதுமாக அகற்றினார்கள்.
மேலும் மீண்டும் இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என வருவாய்த்துறையினர் அறிவிப்பு பலகையும் அந்த இடத்தில் வைத்தனர். மீட்கப்பட்ட இந்த அரசின் சொத்து மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.
இனிமேலும் அரசு நிலத்தை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்தால் ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் எச்சரித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்