search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல்"

    • தி.மு.க. இப்போது மாதம் ரூ.1000 வழங்குகிறதே.
    • எந்த கட்சியும் வாய் திறக்கவில்லையே.

    மத்திய அரசு கியாஸ் விலை ரூ.200 குறைத்ததும் அரசியலுக்காக பா.ஜனதா செய்யும் தந்திரம் என்கிறார்கள். தி.மு.க. இப்போது மாதம் ரூ.1000 வழங்குகிறதே. இது அரசியலுக்காக இல்லையா? எந்த கட்சியும் வாய் திறக்கவில்லையே.

    இருநூறுன்னா அரசியல். ஆயிரம்னா அவியலா...? சூப்பர் அரசியல் என்று தமிழக பா.ஜனதா ஊடக பிரிவு முன்னாள் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் தனது வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணியில் இடம் பெற்று எப்படியும் வெல்ல வேண்டும்.
    • டெல்லியில் இந்த முறை முதல் முறையாக தே.மு.தி.க. முரசு ஒலிக்கும் என்று அந்தக் கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள்.

    தமிழக அரசியல் களத்தில் அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வரும் நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகமும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. தோல்வியை தழுவியது. 2019-ம் ஆண்டு தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தோல்வியடைந்த எல்.கே.சுதீசை இந்த முறை எப்படியாவது எம்.பி.யாக்கி விடவேண்டும் என்பதே கட்சியின் நோக்கமாக உள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணியில் இடம் பெற்று எப்படியும் வெல்ல வேண்டும் என்று அந்த கட்சி கணக்கு போட்டு உள்ளது.

    குறிப்பாக டெல்லியில் இந்த முறை முதல் முறையாக தே.மு.தி.க. முரசு ஒலிக்கும் என்று அந்தக் கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். அதற்கேற்ற வகையில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சு நடக்கும் போது தங்களுக்கு கண்டிப்பாக மேல் சபை எம்.பி. பதவி ஒன்றை வழங்க வேண்டும் என கூட்டணிக்கு கட்சி தலைமை தாங்கும் கட்சிகளிடம் கேட்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து இருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தல் களத்தில் முரசு கொட்டுமா? முடங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    • ஜோதி மணியை பொருத்தமட்டில் காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்கு வைத்துள்ளார்.
    • கரூர் மாவட்டத்தை பொருத்தமட்டில் காங்கிரஸ் கட்சியினர் இடையே இணக்கம் இல்லாத நிலையும் இருக்கிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணியின் வெற்றிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக உழைத்தார். பின்னர் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே முட்டல் மோதல்கள் வெடித்தது.

    அப்போதே மீண்டும் தி.மு.க. கூட்டணியில் கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று பேச்சு அடிப்பட்டது. அது விரைவில் உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் ஜோதி மணியை பொருத்தமட்டில் காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்கு வைத்துள்ளார்.

    ஆகவே தனக்கான ரூட்டில் சென்று காதும் காதும் வைத்தர்போல் மீண்டும் கரூர் தொகுதியை பெற்று அனைவரையும் வியக்க வைப்பார் என்று அம்மணியின் தீவிர ஆதரவு கதர் சட்டைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

    அதே நேரம் கரூர் மாவட்டத்தை பொருத்தமட்டில் காங்கிரஸ் கட்சியினர் இடையே இணக்கம் இல்லாத நிலையும் இருக்கிறது.

    • எடப்பாடி பழனிசாமி உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
    • கூட்டணி கட்சிகளும் ஒத்துழைப்பு தரும் என்று நம்புவதாக கூறினார்.

    தமிழகத்தில் பா.ஜனதா 25 தொகுதிகளில் போட்டியிடும் என்று அண்ணாமலை அடித்து சொன்னார். ஆனால் தேர்தல் பேச்சு எழ தொடங்கியதும் பேச்சிலும் மாற்றம் வர தொடங்கி இருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்று பேச்சு வார்த்தை நடத்திய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பா.ஜனதா தலைமை 20 தொகுதி கேட்டு இருப்பதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா துணை தலைவர் வி.பி.துரைசாமி 'எப்படியும் 15 தொகுதிகளில் போட்டியிடுவோம். அதற்கு கூட்டணி கட்சிகளும் ஒத்துழைப்பு தரும் என்று நம்புவதாக கூறினார்.

    25-ல் இருந்து 15 ஆக குறைந்து இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது இன்னும் குறையுமோ என்று தாமரை சொந்தங்கள் சந்தேகிக்கிறார்கள். அரசியலில் எதுவும் நடக்கலாமே.

    • சனாதனத்தின் மீதான தாக்குதல் என்பது இந்துக்களுக்கு எதிரானது அல்ல.
    • சனாதனம் பற்றிய புரிதலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கிறது.

    இந்தியா கூட்டணி உருவானதில் இருந்து மோடி பதற்றத்தில் இருக்கிறார். சனாதனத்தின் மீதான தாக்குதல் என்பது இந்துக்களுக்கு எதிரானது அல்ல.

    சனாதனம் பற்றிய புரிதலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கிறது. தமிழகத்தில் புரிந்து கொள்வதற்கும், வட இந்தியாவில் புரிந்து கொள்வதற்கும் வேறுபாடு தெரிகிறது.

    • தி.மு.க. எண்ணம் வேறு விதமாக உள்ளது.
    • இந்தியா கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் 40-க்கு 40 என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

    இந்தியா கூட்டணிக்குள் தொகுதி பங்கீடுகள் திரைமறைவில் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தற்போது கைவசம் இருக்கும் 9 தொகுதிகளையும் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறது.

    அதே நேரம் தற்போதைய எம்.பி.க்கள் அனைவரும் எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால் தி.மு.க. எண்ணம் வேறு விதமாக உள்ளது. இந்தியா கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் 40-க்கு 40 என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

    அதற்கு ஏற்றவாறு தொகுதியின் நிலைமை, கட்சியின் செல்வாக்கு, எந்த வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு என்பதை தீர ஆராய்ந்தே தொகுதி ஒதுக்க வேண்டும். எனவே தொகுதி மாறலாம், குறையலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இது காங்கிரஸ் நிர்வாகிகள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஆனாலும் நம்பிக்கை தளரவில்லை. எல்லாம் மேலிருப்பவர்கள் பார்த்து கொள்வார்கள் என்கிறார்கள் நம்பிக்கையுடன். அதாவது டெல்லி தலைமை பார்த்துக் கொள்ளும் என்கிறார்கள். நம்பிக்கை பலித்தால் சரிதான்.

    • அரசியல் கட்சிகள் அடுத்த தலைமுறைக்கான அரசியலை கையில் எடுத்தால் வரவேற்போம்.
    • மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார்.

    மதுரை

    முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தே.மு.தி.க. சார்பில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இன்று தே.மு.தி.க. 19-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். அதனை தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறோம். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது உரிமைத் தொகை ஆயிரம் வழங்கியுள்ளது.

    இது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், இந்த பணம் மக்களின் வரிப்பணம். அரசு இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்கிறது. அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். மதுரையில் பல சாலைகள் குண்டும் குழியுமாகவும், குப்பை கூழமாகவும் இருக்கிறது.

    மேலும் இந்த உரிமை தொகை ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் போன்று. 'உன் பணம் பணம். என் பணம் பணம், உன் பணம் என் பணம்' என்ற நிலையில் தான் இருக்கிறது. மேலும் தேர்தல் வருவதையொட்டி தற்போது அரசியல் கட்சிகள் சனாதன பிரசாரத்தில் இறங்கி இருக்கிறது. மக்களிடம் சனாதனம் குறித்து எந்த பாகுபாடும் இல்லை. மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள், அரசியல் கட்சிகள் தான் தங்களுக்கு அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக சனாதன பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள்.

    இப்போது சனாதனத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வருகிறது. இதனால் சனாதனத்தை கையில் எடுக்கிறார்கள். அனைத்து மதத்தினரும், அனைத்து ஜாதியினரும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலுக்கான அரசியலை கையில் எடுப்பதை விட்டுவிட்டு, அடுத்த தலைமுறைக்கான அரசியலை கையில் எடுத்தால் வரவேற்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பாலன், அழகர்சாமி, கணபதி, முத்துப்பட்டி மணிகண்டன், பாலச்சந்திரன், அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தக்காளி விலை அதிகரிப்பானது நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் பேசு பொருளாக மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
    • விவசாயிகள் அதிகளவில் தக்காளி பயிரிட்டதன் காரணமாக தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது.

    தென்காசி:

    தமிழகத்தில் தக்காளி விளைச்சல் போதிய அளவில் இல்லாததால் அதன் விலையானது கடந்த 1½ மாதத்திற்கு முன்பு வரை வரலாறு காணாத அளவில் ஏற்றத்துடன் காணப்பட்டு வந்ததால் குடும்பப் பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

    தக்காளி விலை அதிகரிப்பானது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் பேசு பொருளாக மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்தைகளாக விளங்கி வரும் பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை மார்க்கெட்டுகளிலும் அதன் விலையானது அதிகரித்த வண்ணமே இருந்தது. காரணம் உள்ளூர் விவசாயிகளிடம் அதிக அளவில் தக்காளி விளைச்சல் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

    தக்காளி விலையேற்றத்தை அறிந்து பாவூர்சத்திரம், வீரகேரளம்புதூர், சுரண்டை, இலத்தூர், ஆலங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட தொடங்கினர். குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் வீரகேரளம்புதூர் பகுதியில் அதிகளவில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டதன் காரணமாக தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது.

    பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகளவில் இருப்பதால் அதன் விலையானது கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் மேலும் இதன் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

    எனவே விளைச்சல் அதிகம் இருக்கும் வேளாண்மை பொருட்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

    • வெற்றி பெறும் தொகுதிகள், வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் என இரண்டு விதமாக பட்டியல் தயாரிக்கிறார்கள்.
    • வெற்றி பெறும் தொகுதிகளை கூட்டணிக்கு விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

    மதுரை மாநாட்டு வெற்றி, கோர்ட்டில் கிடைத்த வெற்றியால் அ.தி. மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குஷிமூடில் இருக்கிறார். இதே உற்சாகத்துடன் தேர்தல் களத்திலும் நிர்வாகிகளை இறக்கி விட்டுள்ளார். அ.தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதிகளை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்க ஒரு டீமையே இறக்கி உள்ளார். இந்த குழுவினர் தொகுதிகளில் சென்று சாதக, பாதகங்களை அலசி வருகிறார்கள். கண்டிப்பாக வெற்றி பெறும் தொகுதிகள், வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் என இரண்டு விதமாக பட்டியல் தயாரிக்கிறார்கள்.

    கண்டிப்பாக வெற்றி பெறும் தொகுதிகளை கூட்டணிக்கு விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் 4 வேட்பாளர் பட்டியலையும் தயாரித்து வருகிற 15-ந்தேதிக்குள் ஒப்படைக்கும்படி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாராம். அ.தி.மு.க.வுக்குள் தேர்தல் ஜூரம் வந்துவிட்டது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

    • தமிழ்நாடு முழுவதுமிருந்து வந்த கூட்டம் காட்டுகிறது.
    • தமிழக அரசியலே மாறி விடும்.

    கமகமத்த கறி விருந்துடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா களைக்கட்டியது. விழாவுக்கு விஜயகாந்தையும் அழைத்து வந்திருந்தார்கள். அவரால் எதுவும் பேச முடியாத நிலையில் கட்டை விரலை தூக்கி மட்டும் காட்டினார். திரண்டிருந்த தொண்டர்கள் 'கேப்டன்' ஒரு வார்த்தைக்கூட பேச முடியவில்லையே என்று ஆதங்கப்பட தவறவில்லை. இது குறித்து தே.மு.தி.க. துணைச் செயலாளர் பார்த்தசாரதியிடம் கேட்ட போது, "தலைவர் மீது இருக்கும் பற்று இன்னும் குறையவில்லை என்பதையே, தமிழ்நாடு முழுவதுமிருந்து வந்த கூட்டம் காட்டுகிறது. அவரது உடல்நிலை சரியாக இருந்தால் தமிழ்நாட்டின் நிலைமையே வேறு. அவர் ஒரு வார்த்தை பேசினால் போதும்... தமிழக அரசியலே மாறி விடும். அதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறோம்" என்றார்.

    • நமக்கும் அ.தி.மு.க.வுக்கும் தொடர்பு இல்லைன்னு நாமே ஒதுக்கியதுபோல் ஆகிவிடும்.
    • அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்தபோது தனிக்கட்சி தொடங்கலாம் என்று சிலர் ஐடியா கொடுத்து இருக்கிறார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் நம்பி இருந்த கடைசி ஆயுதமும் கைநழுவி போனது. அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கையும் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இதன்மூலம் இனி அ.தி.மு.க. என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லாமல் ஆகிவிட்டது.

    அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்தபோது தனிக்கட்சி தொடங்கலாம் என்று சிலர் ஐடியா கொடுத்து இருக்கிறார்கள்.

    தனிக்கட்சியா? அப்படி ஆரம்பித்தால் நமக்கும் அ.தி.மு.க.வுக்கும் தொடர்பு இல்லைன்னு நாமே ஒதுக்கியதுபோல் ஆகிவிடும். இந்த மாதிரி தெருவுக்கு போகும் வழிகளை சொல்லாதீங்க... என்று விரக்தியுடன் கூறி இருக்கிறார்.

    • ஒரே தீர்வு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சரியாக இருக்காது.
    • சாத்தியம் இல்லாத ஒரு திட்டத்தை மோடி திணிக்க பார்க்கிறார் என்றார்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்று எழுந்துள்ள பிரச்சினை பற்றி இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-

    அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதால் கோடிக்கணக்கில் நிதி வீணாக செலவழிகிறது .அதிகாரிகள் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்துவதை விட தேர்தல் நடத்துவதில் தான் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்பதெல்லாம் உண்மைதான்.

    இதற்கு ஒரே தீர்வு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சரியாக இருக்காது. ஏற்கனவே 1967 வரை ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தான் அமலில் இருந்தது .அதன் பிறகு தான் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டப்படி தேர்தலையும் நடத்தி முடித்து விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். சட்டமன்றங்கள் கலைந்தால் என்ன செய்வது? ஒருவேளை பாராளுமன்றமே கவிழ்ந்து போனால் என்ன செய்வது? இதற்கு தீர்வு என்ன? சர்வாதிகார நாட்டில் தான் இது சாத்தியமாகும். ஜனநாயக நாட்டில் சாத்தியம் இல்லை. ஆனால் சாத்தியம் இல்லாத ஒரு திட்டத்தை மோடி திணிக்க பார்க்கிறார் என்றார்.

    ×