என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குறை தீர்வு கூட்டம்"
- மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு உதவி கலெக்டர் மந்தாகினி தலைமை தாங்கினார். தாசில்தார்கள் முருகன் (செங்கம்), சக்கரை (தண்டராம்பட்டு), சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் ரேணுகா (செங்கம்), சுகுணா (கீழ்பெண்ணாத்தூர்), பரிமளா (தி.மலை), வட்ட வழங்கல் அலுவலர்கள் முனுசாமி (செங்கம்), மணிகண்டன் (கீழ்பென்னாத்தூர்), வருவாய் ஆய்வாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செங்கம் தாசில்தார் முனுசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை உதவி கலெக்டர் மந்தாகினியிடம் வழங்கினர்.
மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பரசுராமன், வருவாய்த்துறையினர், தமிழ்நாடு போக்குவரத்து துறை செங்கம் பணிமனை மேலாளர் சேட்டு உள்பட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் செங்கம் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார்.
- தாசில்தாருடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்
- குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பு
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. தாசில்தார் வேண்டா தலைமை தாங்கினார். துணை தாசில்தார் திருகுமரேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசுகையில்:- கடந்த மாதம் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் சாதாரண விவசாயிகள் ஆடு, மாடு கொட்டகைகளை மற்றும் வீடு உள்ளிட்டவை கேட்டு மனு அளித்தனர். இதனை பி.டி.ஓ.க்கள் கண்டு கொள்ளவில்லை. ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு மட்டுமே அடிப்படை வசதிகள் ஆடு, மாடு கொட்டகைகளை ஒதுக்கீடு செய்கின்றன.
இது குறித்து பி.டி.ஓ.க்கள் அடுத்த கூட்டத்தில் வந்து பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால் கூட்டத்தை நடத்த விடாமல் பி.டி.ஓ. அலுவலகத்திற்கு பூட்டு போட்டு விடுவோம். பி.டி.ஓ.க்களுக்கு அழைப்பு விடுத்திருந்தும் கூட அவர்கள் ஏன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை? என கேட்டு விவசாயிகள் தாடில்தாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பி.டி.ஓ.க்கள் வந்து பதில் சொல்லும் வரை கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து பி.டி.ஓ.க்களிடம், தாசில்தார் வேண்டா செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது அவர்கள், வேலூரில் நடக்கும் கூட்டத்திற்கு சென்று விட்டதாக கூறினர். இதனை அடுத்து துணை பி.டி.ஓ.க்கள் லோகநாதன், சதீஷ்குமார் ஆகியோர் வேக வேகமாக வந்து கூட்டத்தில் பங்கேற்றனர். இதை தொடர்ந்து கூட்டம் நடந்தது. அப்போது தாசில்தார் வேண்டா பேசுகையில்:-
கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் குறித்து (அட்டனன்ஸ்) வருகை பதிவேடு பின்பற்றப்பட்டு, கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று வருகை தராத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்
கூட்டத்தில் விவசாயிகள், தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மை துறையில் 100 சதவீதம் மானியத்துடன் இலவசமாக கொடுக்கப்படும் திட்டத்தை செயல்படுத்த பயனாளி களிடமிருந்து, அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும் அதனை முழுமையாக தடுக்க வேண்டும் என தாசில்தாரிடம் மனு வழங்கினர்.
இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்
- கரும்பு அறுவடை செய்ய ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் செலவாகிறது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசினார்.
பல்வேறு பகுதிகளி லிருந்து வந்திருந்த விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மாவட்டத்தில் நீர்நிலை களில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும், நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும்.
கரும்பு அறுவடை செய்ய ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் செலவாகிறது. எனவே ஒரு டன்னுக்கு கொள்முதல் விலையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். சோளிங்கர் ஒன்றியம் மருதாலம்-ஜம்புகுளம் இடைப்பட்ட மையப்பகுதியில் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்க வேண்டும்.
வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும்.ஏரிகளிலிருந்து மண் எடுக்க முறையான அறிவிப்புகள் இல்லை. மண் எடுப்பதற்கான அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திலகவதி, துணை இயக்குநர் (தோட்டக்கலை) லதா மகேஷ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் தேவிபிரியா உள்பட விவசாயிகள், துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- குறை தீர்வு கூட்டம் நடந்தது
- 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இதில் காட்பாடி செங்குட்டையை சேர்ந்த பாரதி (வயது 43). என்பவர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்க வந்தார். நீண்ட நேரம் வரிசையில் நின்று சென்ற பாரதி, மனு அளிக்க கலெக்டர் அருகே சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவருக்கு தண்ணீர் தெளித்து, எழுப்பினர். காலை முதல் பாரதி சாப்பிடாமல் இருந்ததால் திடீரென மயக்கம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவரிடம் இருந்த கோரிக்கை மனுவை ஏற்று, அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதனையடுத்து பாரதி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்
- குறைகளை கேட்டறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. போலீஸ் சூப்பி ரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். அவரிடம் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் மனுவை அளித்த னர். அதனை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சம் பந்தப்பட்ட போலீசாரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும் கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 10 மனுதாரர்களை நேரில் அழைத்து. அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
- குறை தீர்வு கூட்டங்கள் மாதத்தில் முதல் வாரத்தில் வட்ட அளவிலும், 2-வது வாரம் கோட்ட அளவிலும், 3-வது வாரம் மாவட்ட அளவிலும் நடைபெறும்
- பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வேளாண்மை துறை இணை இயக்குனர் வடமலை உள்பட அதிகாரிகள் பலர் முன்னிலை முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ,விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் குறித்த நேரத்தில் நடத்த வேண்டும்,நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் நடைபெறுகிறது,நெல் பயிர் செய்யாத, விவசாயி அல்லாதவர்கள் நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து விற்பனை செய்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விலை பட்டியல் இருப்பது போன்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் விலை பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அந்தந்த பகுதி விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து தான் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
குறை தீர்வு கூட்டங்கள் மாதத்தில் முதல் வாரத்தில் வட்ட அளவிலும், இரண்டாவது வாரம் கோட்ட அளவிலும், மூன்றாவது வாரம் மாவட்ட அளவிலும் நடைபெறும், விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் இருந்தால் திடீர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- டி.ஐ.ஜி, எஸ்.பி மனுக்களை பெற்றனர்
- ஆலோசனை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
வேலூர்:
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைவு முகாம் இன்று காலை நடைபெற்றது.முகாமிற்கு வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர்.
பெறப்பட்ட மனுக்களை அந்தந்த பிரிவு அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.
குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த ஒருவர் மனு அளித்தார். அந்த மனுவில் தனது சொந்த நிலத்தில் செல்போன் டவர் அமைக்க அருகில் இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் வணிகர் சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், அண்ணா கலையரங்கம் அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு கரும்புகளை லாரியில் கொண்டு வந்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கரும்பு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பலர் பாதிப்படைகின்றனர்.எனவே சற்று தொலைவில் பெரியார் பூங்கா அருகே அவர்கள் கரும்பு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு வணிகர்களையும், சம்பந்தப்பட்ட கரும்பு வியாபாரிகளும் அழைத்து ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
- குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
- காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்துவதாக புகார்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது.கோட்டாட்சியர் பாத்திமா தலைமை தாங்கினார்.
வங்கி கடன்
இதில் அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகா பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:- மத்திய மாநில அரசு விவசாயிகளுக்கு கடன் தர ஒப்புதல் அளித்தும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அதிகாரிகள் அலைக்கழிக்க செய்கின்றனர்.
பெருவளையம் கிராமத்தில் 20 ஆண்டுகளாக குளத்தை ஆக்கிரமித்து உள்ளனர். இதுகுறித்து பலமுறை வருவாய் துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்கு விவசாய நிலங்களில் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றது. இது சம்பந்தமாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறை தீர்வு கூட்டத்திற்கு அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், நெமிலி தாசில்தார் சுமதி, நேர்முக உதவியாளர் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி, நெமிலி தோட்டக்கலை உதவி அலுவலர் சுமதி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- ரூ.1.17 லட்சத்தை மீட்டு தர கோரி மகளிர் சுய உதவி குழுவினர் மனு
- போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
பள்ளிகொண்டா அருகே ஈடியர் பாளையத்தை சேர்ந்த பெண்கள் சிலர் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தை சேர்ந்த சுமார் 14 பெண்கள் ஒன்றிணைந்து மகளிர் சுய உதவிக் குழு ஒன்று கடந்த 2019 -ம் ஆண்டு ஆரம்பித்தோம். 2020 -ம் ஆண்டு எங்கள் குழுவை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் எடுத்தார்.
சில மாதங்கள் அதற்கான வட்டி செலுத்தினார். பின்னர் அவர் வட்டியும் செலுத்தவில்லை, வாங்கிய தொகையும் திருப்பி கொடுக்கவில்லை. தற்போது நாங்கள் அனைவரும் அந்த தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த உறுப்பினரிடம் கேட்கச் சென்றால் அவர் தலைமறைவாகிவிட்டார்.
பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாளை நடக்க ஏற்பாடு
- கலெக்டர் அறிவிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க உள்ளனர்.
எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன் அடையுமாறு திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
- ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் நடந்தது
- குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்
ராணிப்பேட்டை:
வேலூர் மின் பகிர்மான வட் டம் , ராணிப்பேட்டைகோட் டத்தில் ஒவ்வொரு மாதமும் 3 - வது செவ்வாய்க்கிழமை மின் நுகர்வோர் குறை தீர்வு நாள் கூட்டம் நடத்தப்படு கிறது .
இம்மாதத்திற்கான கூட் டம் இன்று ( செவ்வாய்க்கி ழமை ) காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் , வேலூர் மின் பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளரால் நடத்தப்படுகிறது.
இதில் மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரி வித்து நிவர்த்தி செய்து கொள் ளலாம் .
இந்த தகவலை செயற்பொ றியாளர் குமரேசன் தெரிவித் துள்ளார் .
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்