என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 249797"
- ஆழ்வார் திருநகரி ரெயில் நிலையத்திற்கும் இந்த பாலத்தையே பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
- பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளதாலும் வாகனத்தில் செல்லவே அச்சமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தாமிரபரணி ஆற்று பாசனத்தை சார்ந்த விவசாயத்தையே வாழ்வா தாரமாக கொண்ட விவசாய பூமி ஆகும்.
ஸ்ரீவைகுண்டம் தென் கால் பாசனவசதி மூலம் சுமார் 1,500 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் விவ சாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் நெல் மற்றும் வாழை பயிரிட்டு வருகின்றனர்.
விவசாயத்திற்கு தென் கால் பாசனம் இரண்டு வாய்க்கால் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றனர். இந்த 2 வாய்க்காலில், ஒரு வாய்க்கால் கடம்பா குளத்திற்கும், ஒரு வாய்க்கால் ஆத்தூர் குளத்தி ற்கும் நேரடியாக பாசன வசதி பெறுகிறது.
இந்த வாய்க்காலில் சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக பாலம் போடப்பட்டு அந்த பாலத்தின் வழியாக ஆழ்வார்திருநகரி பேரூ ராட்சி 10-வது வார்டு மற்றும் 15-வது வார்டுக்கு உட்பட்ட அழகிய மணவாளபுரம், முஸ்லிம் தெரு, பத்தவாசல், பிள்ளமடை, வேலவன் தெருவை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது ஊருக்கு சென்று வந்தனர்.
அதுமட்டுமின்றி ஆழ்வார் திருநகரி ரெயில் நிலையத்திற்கும் இந்த பாலத்தையே பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தபாலம் ஒரு வழி பாதை போன்ற பால மாக இருப்பதால் கனரக வாகனங்கள், நெல் அறுவடை எந்திரம், மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்கள் பாலத்தின் வழியாக செல்ல முடியாமல் சுற்றி செல்ல வேண்டியது உள்ளது. மேலும் அவசரமான சூழ்நிலை நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
பாலம் பழுதடைந்த நிலை யில் உள்ளதாலும் வாகனத்தில் செல்லவே அச்சமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி தான் ஆழ்வார் திருநகரிக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் புதிய பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம் தலைமையில் ஆழ்வார்திருநகரி பேரூர் செயலாளர் கோபிநாத், செம்பூர் நயினார் ஆழ்வை போஸ், 10-வது வார்டு செயலாளர் மந்திர மூர்த்தி, 15-வது வார்டு செயலாளர் ரமேஷ், சங்கர், சின்னத்துரை, ஆபிரகாம், பாண்டி, குருசாமி, ரஸ்வி ஆகியோர் மீன் வளம் மற்றும் மீன்வளத்துறை, கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து பாலத்தை அகலப்ப டுத்தி புதிய பாலம் கட்டி கொடுக்க கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்று கொண்ட அமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், புதிய பாலம் கட்ட ஆவனம் செய்வதாகவும் கூறினார்.
- பூடான் எல்லையில் டோக்லாம் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
- பூடான் எல்லையில் சீனாவால் அமைக்கப்பட்டு வரும் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:
அருணாச்சல பிரதேசத்தில் தவாங் செக்டார் பகுதியில் உள்ள யாங்ட்ஸி பகுதியில் கடந்த 9-ந் தேதி சீன ராணுவத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர்.
அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்தி நிறுத்தியபோது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய ராணுவத்தினரின் பதிலடியால் சீன வீரர்கள் ஓட்டம் பிடித்தனர்.
சீன ராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில் சீன ராணுவத்தினர் சென்றபோது அவர்கள் விட்டு சென்ற உபகரணங்களை இந்திய ராணுவத்தினர் மீட்டுள்ளனர். அவற்றில் ஒரு சில பைகளில் ஆடைகளும், சில பைகளில் கடுமையான குளிரில் வாழ்வதற்கு தேவையான பொருட்களும் இருந்தன.
இதற்கிடையே பூடான் எல்லையில் டோக்லாம் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே 2017-ம் ஆண்டு பூடான் எல்லையில் அமைந்திருக்கும் டோக்லாம் பகுதியில் இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினரிடையே வெடித்த மோதல் 73 நாள் வரை நீடித்தது.
அந்த பகுதியில் சீன ராணுவத்தினர் சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாகவும் அப்போது தகவல் வெளியானது.
பின்னர் டோக்லாம் அருகே பூடானுக்கு சொந்தமான பகுதியில் சீன ராணுவம் கிராமங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
அதாவது டோக்லாமின் கிழக்கு திசையில் 9 கிலோ மீட்டர் தொலைவில் சீனா ஒரு கிராமத்தை உருவாக்கி அந்த கிராமத்திற்கு பாங்டா என்று பெயர் சூட்டி இருப்பதாகவும் தகவல் வெளியானதோடு, இதுதொடர்பான செயற்கைகோள் படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் தற்போது டோக்லாம் பகுதியில் சீனா ஒரு பாலம் உள்பட புதிய கட்டுமான பணிகளை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. டோக்லாமிற்கு தெற்கு பகுதியில் லாங் மார்போ எனப்படும் பகுதியில் புதிய கிராமங்கள் காணப்படுகின்றன.
பூடான் எல்லையில் சீனாவால் அமைக்கப்பட்டு வரும் இந்த கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சைபுரு, கைடாங்ஷா மற்றும் குலே ஆகிய பகுதிகளிலும் 2 மாதங்களுக்கு மேலாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவின் இந்த கட்டுமான பணிகளை இந்தியா கவனித்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி முகமை மூலம் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு ரூ. 2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- சட்டமன்ற தேர்தலின்போது மலைவாழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியானது இந்த பாலம் அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
பேச்சிப்பாறை ஊரா ட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கிளவியாறு. மழை காலங்களில் இந்த ஆற்றை கடந்து செல்வதற்கு மலைவாழ் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
கடந்த மழை காலங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் வெளியே வரமுடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்கள்.
இந்த பகுதியில் பாலம் கட்டவேண்டும் என்று மலைவாழ் மக்கள் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்க ராஜிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்று தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி முகமை மூலம் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு ரூ. 2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி, பணியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கிவைத்தார் இந்நிகழ்ச்சியில் திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் யசோதா, கீதா, மாவட்ட அரசு வக்கீல் ஜாண்சன், குலசேகரம் பேரூராட்சி துணை தலைவர் ஜோஸ் எட்வர்ட், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அலா வுதின்,
மாவட்ட கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜே.எம்.ஆர், பேரூர் செயலாளர்கள் ஜாண் எபனேசர், சேம் பெனட் சதீஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வினித் ஜெரால்ட், மாவட்ட பிரதிநிதி பொன்.ஜேம்ஸ், தி.மு.க. உறுப்பினர் வெண்டலி கோடு சூர்யகுமார், அரசு ஒப்பந்தகாரர் பென்ராஜாசிங் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.பால பணியை தொடங்கிவைத்து அமைச்சர் மனோதங்கராஜ் பேசியதாவது:-
சட்டமன்ற தேர்தலின்போது மலைவாழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியானது இந்த பாலம் அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் ஆணைக்கு இணங்க ஊரக வளர்ச்சி முகமை மூலம் ரூ 2.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மலைவாழ் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற முயற்சி எடுப்பேன் என்று கூறினார்.
- விருதுநகரில் கட்டப்பட்ட புதிய பாலத்தை இடிக்க வந்த அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
- கச்சேரி ரோட்டில் இருந்து விக்னேஷ் காலனிக்கு செல்லும் வழியில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சியில் அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு கச்சேரி ரோட்டில் இருந்து விக்னேஷ் காலனிக்கு செல்லும் வழியில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆஷா முயற்சியின் பேரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மற்றும் நகராட்சி பங்களிப்பு மூலம் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்ட ஒப்புதல் பெறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாலம் கட்டும் பணி நகராட்சி என்ஜினீயர்களின் வழிகாட்டுதலின்படி நடந்ததாக தெரிகிறது. அப்போது 2 முறை என்ஜினீயர்கள் பாலம் வடிவமைப்பில் திருத்தம் செய்தனர். அதனையும் ஏற்றுக்கொண்டு பாலம் கட்டப்பட்டது. பாலம் பணிகள் முழுமையாக முடிவடைந்த பின் தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட பாலம் நகராட்சி என்ஜினீயர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக கூறி அதனை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து இன்று காலை ஜே.சி.பி. எந்திரத்துடன் நகராட்சி அலுவலர்கள் பாலத்தை இடிக்க வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வார்டு கவுன்சிலர் ஆஷா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து பாலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கவுன்சிலருக்கும் நகராட்சி அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து பொது–மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பாலம் இடிக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டு அலுவ–லர்கள் பாதியிலேயே திரும்பச் சென்றனர். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பாலத்தை நகராட்சி இடிக்க முயற்சி மேற்கொண்டது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தி.மு.க. கவுன்சிலர் ஆஷா கூறுகையில், விருதுநகர் நகராட்சி ஒப்புதலின்படி பணியானை பெறப்பட்டு பாலம் கட்டுவதற்கு ஆய்வு பணிகள் நடந்தது. அதனை தொடர்ந்து பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டு 2 முறை திருத்தம் செய்ய வேண்டும் என கூறினர். அதனை ஏற்று திருத்தமும் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அதிகாரிகள் பல வடிவமைப்பு சரியில்லை என்று கூறி இடிக்க நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாது. பாலத்தை இடிக்க நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்