search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு துறை"

    • கூட்டுறவு துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.
    • வருகிற டிசம்பர் 1-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப் பாட்டின்கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள். கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள்.

    மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவி யாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக ராமநாத புரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

    இத்தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் www.drbramnad.net என்ற இணையதளம் வழியாக (through online only) மட்டுமே வருகிற 1-ந் தேதி அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப் படுகின்றன. இதற்கான எழுத்துத் தேர்வு வருகிற 24-ந் தேதி அன்று முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது. இதற்கான கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree 10+2+3 முறையில்) மற்றும் கூட்டு றவு பயிற்சி ஆகும். வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்த வர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்க ளும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24-ம் ஆண்டு நேரடி பயிற்சி/அஞ்சல்வழி பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று/கட்டணம் செலுத்தியதற்கான ரசீதினை ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.முற்பட்ட வகுப்பின ருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. எழுத்துத் தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல் கூட்டுறவு கணக்கியல், பயன்பாடு, பொது அறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) 200 வினாக்களுடன் 170 மதிப்பெண்களுக்கான உக்காரதாகவும் தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும் இருக்கும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

    எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் முறையே 85:15 என்ற விகிதத்தில் இருக்கும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்ப டையில் அரசாணைப் படியான ஒதுக்கீடு இனச்சுழற்சி முறை, அவர்கள் தெரிவித்த முன்னுரிமை விருப்பச் சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, உரிய சங்கத்திற்கு இதுக்கீடு செய்யப்படுவார்கள்.

    • கூட்டுறவு துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
    • சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சின்னப்பன் வாழ்த்தி பேசினார்.

    சிவகங்கை

    தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் சிவகங்கையில் நடந்தது. சங்க கொடியை நிர்வாகி கவிதா ஏற்றி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாண்டி கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் வினோத்ராஜா தலைமையில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சின்னப்பன் வாழ்த்தி பேசினார்.

    அரசு ஊழியர்கள் சங்க வட்ட கிளை தலைவர் முத்தையா நிறைவுரையாற்றினார். கூட்டத்தில் புதிய மாவட்ட தலைவராக ஜெயபிரகாஷ், துணைத்த லைவர்களாக மூகாம்பிகை, லாரன்ஸ், மாவட்ட செயலாளராக கிங்ஸ்டன் டேவிட், மாவட்ட இணைச்செ யலாளர்களாக பாண்டி, நிரஞ்சனா, மாவட்ட பொருளாளராக பொன்னையா, மாநில செயற்குழு உறுப்பினராக குறிஞ்சி செழியன், மாவட்ட தணிக்கையாளராக சேக் அப்துல்லா, மாவட்ட மகளிர் துணை குழு அமைப்பாளராக அனிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    • ஒரே நபர் ஆண்டுதோறும் கூட்டுறவு சங்க நிர்வாகியாக தேர்வு செய்வது சரியல்ல.
    • மத்திய கூட்டுறவு அமைச்சகம் ஒரு புதிய கூட்டுறவு கொள்கையை உருவாக்கி வருகிறது

    புதுடெல்லி :

    கூட்டுறவு சங்கங்களை அரசின் இ-மார்க்கெட் தளத்தில் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூட்டுறவுத்துறை நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வந்ததாகவும், அதை நவீனப்படுத்தி அதிக சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கூட்டுறவுத்துறையில் விரைவான மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அந்த மாற்றங்களை நாம் செய்யவில்லை என்றால், மக்கள் நம்மை மாற்றி விடுவார்கள்.

    கூட்டுறவுத்துறையில் அனைத்து மட்டங்களிலும், குறிப்பாக தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை அவசியம்.

    ஒரே நபர் ஆண்டுதோறும் கூட்டுறவு சங்க நிர்வாகியாக தேர்வு செய்வது சரியல்ல. இந்த முறை நல்லதல்ல. நானே தொடக்க வேளாண்மை கடன் சங்கம் ஒன்றில் கடந்த 25 ஆண்டுகளாக தலைவராக இருக்கிறேன். இது இந்த ஆண்டு மாற்றப்படும்.

    இது மட்டுமின்றி இந்த தேர்தல் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை அவசியம். இதற்கான விதிமுறைகளை அமைச்சகம் வகுத்து வருகிறது.

    இதைப்போல கொள்முதல் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். கொள்முதல் நடவடிக்கைகளுக்காக அரசின் இ-மார்க்கெட் தளத்தை தவிர, வேறு எந்த தளமும் சிறந்ததாக இருக்காது.

    மத்திய கூட்டுறவு அமைச்சகம் ஒரு புதிய கூட்டுறவு கொள்கையை உருவாக்கி வருகிறது. ஒரு தரவுத்தளத்தை தயார் செய்கிறது. பயிற்சி நோக்கங்களுக்காக ஒரு பல்கலைக்கழகத்தை அமைக்கிறது மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிகளை அதிகரிக்க ஒரு ஏற்றுமதி இல்லத்தை நிறுவுகிறது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினி மயமாக்கி மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.

    அதன்படி சுமார் 63,000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை 5 ஆண்டுகளில் கணினிமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான மொத்த செலவினம் ரூ.2,516 கோடி. இதில் மத்திய அரசின் பங்கு ரூ 1,528 கோடி ஆகும்.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    • கர்நாடகா அரசு மேக தாதுவில் அணை கட்டுவது சம்பந்தமாக காவிரி ஆணைய கூட்டத்தில் விவாதிப்பதை மத்திய அரசு அனுமதிக்க கூடாது
    • நுகர்பொருள் வாணிப கழக நெல் கொள்முதல் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்

    திருச்சி :

    தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநிலத் தலைவர் பூரா.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், லால்குடி ஒன்றிய தலைவர் ராமலிங்கம், ஒன்றிய நிர்வாகிகள் மதியழகன், சதாசிவம், விஜயகாந்த், துரைராஜ், நடராஜன் மற்றும் தொழிலாளர் விவசாயிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-

    கர்நாடகா அரசு மேக தாதுவில் அணை கட்டுவது சம்பந்தமாக காவிரி ஆணைய கூட்டத்தில் விவாதிப்பதை மத்திய அரசு அனுமதிக்க கூடாதுஎன்றும், மாநில அரசு மின்சார கட்டணத்தை உயர்த்த கூடாது என்றும்,

    மாதா மாதம் மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், நெல் குவிண்டாலுக்கு ரூ. 2500 வழங்க வலியுறுத்தியும் வருகிற 17ம் தேதி சென்னையில் நமது சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    செப்டம்பர் 1ம் தேதி கு றுவை சாகுபடி நெல்லை கொள்முதல் செய்வோம் என தமிழக முதலமைச்சர் அறிவிப்பு படி கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

    நுகர்பொருள் வாணிப கழக நெல் கொள்முதல் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.இலவச மின் இணைப்பில் மீட்டர் பொருத்துவதை கைவிட வேண்டும்.

    வடகிழக்கு பருவமழை தண்ணீரை ஏரிகளிலும் குளங்களிலும் சேமித்து வைக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும். சின்ன வெங்கா–யத்தை அரசு கொள்முதல் செய்து கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கிகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×