என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வைஷாலி"
- 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார்.
- மகளிருக்கான செஸ் பிரிவில் கிளாசிக்கல் ஆட்டத்தில் வைஷாலி வென்றார்.
நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.
தொடர்ந்து, மகளிருக்கான செஸ் பிரிவில் கிளாசிக்கல் ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை ஹம்பியை முதல் முறையாக வீழ்த்தி அசத்தினார் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி.
இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் வைஷாலி முதலிடத்தில் இருக்கிறார்.
நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தாவுக்கும், அவரது சகோதரி வைஷாலிக்கும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நார்வே செஸ் தொடரில் கலக்கியுள்ள கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கிளாசிக்கல் செஸ்ஸில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தாவும், மகளிர் நார்வே செஸ் அறிமுகப் போட்டியிலேயே ஹம்பி கோனேருவை வீழ்த்தி வைஷாலியும் புதிய சாதனை படைத்துள்ளனர்.
அக்கா - தம்பியின் வெற்றிப் பயணம் தொடரட்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இது முதல் முறை.
- தம்பியைத் தொடர்ந்து அக்காவும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
ஸ்டாவஞ்சர்:
நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். பெண்கள் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோதவேண்டும்.
இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.
இந்நிலையில், மகளிருக்கான செஸ் பிரிவில் கிளாசிக்கல் ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை ஹம்பியை முதல் முறையாக வீழ்த்தி அசத்தினார் வைஷாலி. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் வைஷாலி முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் 2வது இடத்தில் 4.5 புள்ளிகளுடன் வென்ஜுன் 2வது இடத்தில் இருக்கிறார்.
நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தாவும், அவரது சகோதரி வைஷாலியும் முன்னிலையில் இருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் பிரான்சின் அலிரேசா பிரோஸ்ஜாவை சந்தித்தார்.
- 6-வது ரவுண்டு முடிவில் வைஷாலி, ஹம்பி தலா 2.5 புள்ளிகளுடன் 6 முதல் 8-வது இடங்களில் உள்ளனர்.
டொராண்டோ:
உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.
14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 7-வது ரவுண்டு நேற்று நடந்தது.
சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் பிரான்சின் அலிரேசா பிரோஸ்ஜாவை சந்தித்தார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் எதிர்பாராதவிதமாக 40-வது நகர்த்தலுக்கு பிறகு தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த அவர் 2-வது இடத்துக்கு பின்தங்கினார்.
மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா அமெரிக்காவை சேர்ந்த பேபியானோவுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்னொரு இந்திய வீரர் விதித் குஜாராத்தி அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவுடன் மோதிய போட்டியும் டிரா ஆனது.
7 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி ( ரஷியா ) 4.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். குகேஷ், பேபியானோ , பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். விதித் குஜராத்தி 3 .5 புள்ளிகளுடன் 5 முதல் 6-வது இடத்திலும் உள்ளார்.
பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சீன வீராங்கனை லீ டிங்ஜிடம் தோற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பி உக்ரைனை சேர்ந்த அன்னா முசிச்சுக்குடன் டிரா செய்தார்.
6-வது ரவுண்டு முடிவில் வைஷாலி, ஹம்பி தலா 2.5 புள்ளிகளுடன் 6 முதல் 8-வது இடங்களில் உள்ளனர்.
- மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார்.
- பெண்கள் பிரிவில் வைஷாலி, ஹம்பி ஆகியோர் எதிர் அணி வீராங்கனைகளுடன் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது.
டொராண்டோ:
உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடை பெற்று வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 5-வது ரவுண்டு நேற்று நடந்தது.
சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 87-வது நகர்த்தலுக்கு பிறகு கடும் போராட்டத்துக்கு பிறகு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு கிட்டத்தட்ட 6 மணி நேரம் தேவைப்பட்டது.
மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்னொரு இந்திய வீரர் விதித் குஜாராத்தி அமெரிக்காவின் பேபியானோவுடன் மோதிய போட்டியும் டிரா ஆனது.
5 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி, குகேஷ் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பிரக்ஞானந்தா 2.5 புள்ளியுடன் 4 முதல் 5-வது இடத்திலும், விதித் குஜாராத்தி 2 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.
பெண்கள் பிரிவில் வைஷாலி, ஹம்பி ஆகியோர் எதிர் அணி வீராங்கனைகளுடன் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது. 5 ரவுண்டு முடிவில் வைஷாலி 2.5 புள்ளிகளுடன் 3 முதல் 5-வது இடங்களிலும், ஹம்பி 2 புள்ளிகளுடன் 6 முதல் 8-வது இடங்களிலும் உள்ளனர்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
- கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.
புதுடெல்லி:
2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை ராஷ்டிரபதி பவனில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.
தொடர்ந்து, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை பேட்மிண்டன் வீரர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோர் பெறுகின்றனர். அர்ஜூனா விருதை 26 பேரும் பெறுகின்றனர்.
விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது லலித் குமார், ஆர்.பி. ரமேஷ், ஷிவேந்திர சிங், கணேஷ் பிரபாகர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மஞ்சுஷா கன்வார், வினீத் குமார் ஷர்மா மற்றும் கவிதா செல்வராஜ் ஆகிய வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை பஞ்சாபை சேர்ந்த குருநானக் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட உள்ளது.
?#NationalSportsAwards?
— PIB India (@PIB_India) January 9, 2024
President Droupadi Murmu confers #ArjunaAward, 2023 on R Vaishali in recognition of her outstanding achievements in #Chess@rashtrapatibhvn#NationalSportsAwards pic.twitter.com/T0W7IGfCxg
#WATCH | Delhi: Mohammed Shami received the Arjuna Award from President Droupadi Murmu at the National Sports Awards. pic.twitter.com/znIqdjf0qS
— ANI (@ANI) January 9, 2024
#WATCH | Delhi: Ojas Pravin Deotale received the Arjuna Award from President Droupadi Murmu at the National Sports Awards. pic.twitter.com/o8kj1t2pRv
— ANI (@ANI) January 9, 2024
#WATCH | Delhi: Para-archer Sheetal Devi received the Arjuna Award from President Droupadi Murmu at the National Sports Awards. pic.twitter.com/jwkFEd2CjH
— ANI (@ANI) January 9, 2024
- கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.
- தமிழகத்தை சேர்ந்த உடன் பிறந்தவர்களான ஆர்.பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி ஆகியோர் தகுதி பெற்று இருந்தனர்.
சென்னை:
கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் ஏப்ரல் 2-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடக்கிறது.
இதன் ஆண்கள் பிரிவில் 8 வீரர்களும், பெண்கள் பிரிவில் 8 பேரும் விளையாடுகிறார்கள். இதில் சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியனை எதிர்கொள்வார்கள். சீனாவை சேர்ந்த டிங் லிரென் உலக செஸ் சாம்பியன் ஆவார். பெண்கள் பிரிவில் ஜூ வென்ஜுன் (சீனா) தற் போது உலக சாம்பியனாக உள்ளார்.
இதனால் கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.
இந்த நிலையில் கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டிக்கு சென்னையை சேர்ந்த டி.குகேஷ் தகுதி பெற்றுள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த உடன் பிறந்தவர்களான ஆர்.பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி ஆகியோர் தகுதி பெற்று இருந்தனர். இந்த வரிசையில் 17 வயதான குகேசும் இணைந்துள்ளார்.
பீடே சர்க்கியூட் போட்டியில் அவர் 2-வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் குகேஷ் கேன்டிடேட் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் சமீபத்தில் நடந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் பட்டம் பெற்று இருந்தார்.
இதேபோல ஹம்பியும் கேன்டிடேட் செஸ் போட்டியின் பெண்கள் பிரிவுக்கு தகுதி பெற்றார். அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அதிக புள்ளிகளை பெற்றிருந்ததால் அவர் வாய்ப்பை பெற்றார்.
1991-ம் ஆண்டு விஸ்வ நாதன் ஆனந்த் மட்டுமே கேன்டிடேட் செஸ் போட் டிக்கு தகுதி பெற்றார். தற்போது அடுத்த ஆண்டு நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டியில் 5 இந்தி யர்கள் பங்கேற்கிறார்கள். ஆண்கள் பிரிவில் பிரக் ஞானந்தா, குகேஷ் (தமிழ் நாடு), விகித் குஜராத்தி (மராட்டியம்) பெண்கள் பிரிவில் வைஷாலி (தமிழ்நாடு), ஹம்பி (ஆந்திரா) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
கேன்டிடேட் செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகள் வருமாறு:-
ஆண்கள்: பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, குகேஷ் (இந்தியா) இயன் நேபோம்னி யாச்சி (ரஷியா), பேபினோ கருவானா, ஹிகாரு நகமுரா (அமெரிக்கா), நிஜாத் அபாசோவ் (அஜர்பை ஜான்), அலிரேசா பிர ஷஸ்ஜா (பிரான்ஸ்)
பெண்கள்: வைஷாலி, ஹம்பி (இந்தியா), லீ டிங்ஜி, டான் ஷோங்கி (சீனா), கேத்தரினா லாக்னோ, அலெக்சான்ட்ரோ கோரியச்சினா (ரஷியா), நூர்சி யுல் சலிமோவா (பல்கேரியா), அன்னா முஷிசெக் (உக்ரைன்).
- விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ஒன்றிய அரசு ஆண்டுதோறும் பல உயரிய விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.
- இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் உயரிய விருதுகளை பெற்றுள்ளவர்களுக்கு என்னுடைய அன்பையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ஒன்றிய அரசு ஆண்டுதோறும் பல உயரிய விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் உயரிய விருதுகளை பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை தங்கை வைஷாலி, ஸ்குவாஷ் வீரர் தம்பி ஹரிந்தர் பால் சிங் சந்து மற்றும் திறமையான பல விளையாட்டு வீரர்கள் - வீராங்கனைகளை உருவாக்கி வரும் செஸ் பயிற்றுநர் R.B.ரமேஷ், கபடி விளையாட்டிற்கான பயிற்றுநர் சகோதரி கவிதா செல்வராஜ் ஆகியோருக்கு என்னுடைய அன்பையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் மென்மேலும் பல்வேறு சாதனைகளை புரிந்து தமிழ்நாட்டிற்கு பெருமைகளை தேடித்தர எனது வாழ்த்துகள்! என கூறியுள்ளார்.
விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ஒன்றிய அரசு ஆண்டுதோறும் பல உயரிய விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.
— Udhay (@Udhaystalin) December 20, 2023
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் உயரிய விருதுகளை பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை தங்கை @chessvaishali, ஸ்குவாஷ் வீரர்… pic.twitter.com/7lBXNIZycu
- இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி பெற்றுள்ளார்.
- தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளைப் பதிவுசெய்ததன் மூலம் 2,500 புள்ளிகளை வைஷாலி கடந்தார். இவர் இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெரும் 3-வது பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இவர் பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
- வெள்ளை நிற காய்களுடன் விளையாடினேன்.
- இந்த போட்டி 4 மணி நேரம் நீடித்தது.
பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணியில் இடம்பெற்றுள்ள ஆர்.வைஷாலி முதல் சுற்று வெற்றி குறித்து கூறியதாவது:-
தஜிகிஸ்தான் வீராங்கனை சபரினாவுடன் நான் முதல் சுற்றில் ஆடினேன். வெள்ளை நிற காய்களுடன் விளையாடினேன். இந்த போட்டி 4 மணி நேரம் நீடித்தது. தொடக்கத்தில் இருந்தே ஆட்டம் என் வசம் இருந்தது. ஆட்டத்தின் போக்கை மாற்றுவதற்கு கொஞ்சம் நேரமாகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓபன் பிரிவு இந்திய 'ஏ' அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் சசிகிரண் வெற்றி குறித்து கூறும் போது, தொடக்கமே சிறப்பாக அமைந்துள்ளது. அடுத்தடுத்த சுற்றுகளில் மேலும் திறம்பட விளையாடுவோம். அமெரிக்காவை எதிர் கொள்ளும் போட்டி கடும் சவாலாக இருக்கும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்