என் மலர்
நீங்கள் தேடியது "உடல் ஆரோக்கியம்"
- குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா மற்றும் நீதிபதிகள் பங்கேற்றனர்.
- அனைவரும் புரிந்துகொண்டு ரத்தம் கொடுக்க முன்வர வேண்டும் என்றார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நீதிமன்றத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் சார்பு நீதிபதி சந்தானகிருஷ்ணன் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா மற்றும் நீதிபதிகள் பங்கேற்றனர்.
இதில் சார்பு நீதிபதி சந்தானகிருஷ்ணன் ரத்த தானம் செய்தார். முன்னதாக பேசிய அவர், அனைவரும் ரத்தம் கொடுத்தால் உடலுக்கு இடையூறு ஏற்படும் என்று எண்ணுவதை விட்டுவிட்டு ரத்தம் கொடுப்பது மீண்டும் மீண்டும் உடலில் ரத்தம் உருவாகி புத்துணர்ச்சியை ஏற்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவும். இதனை அனைவரும் புரிந்துகொண்டு ரத்தம் கொடுக்க முன்வர வேண்டும் என்றார்.
- பனங்கிழங்கு பொடி, கதர் பொருட்கள், காதி சோப்பு, வகைகள் என பல பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் இப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் - கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியினை கலெக்டர் தீபக் ஜேக்கப் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கதர் கிராம பொருட்கள் மற்றும் பனைப் பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும், மக்களிடையே பனைப் பொருட்களைப் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதற்கட்டமாக விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டிணம், இராணிப்பேட்டை, வேலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி மற்றும் தூத்துக்குடி ஆகிய 10 மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியினை தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பனைப் பொருட்கள் மற்றும் காதி கிராப்ட் கைவினைப் பொருட்கள் விற்பனை அங்காடி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு பனங்கற்கண்டு, பனங்கற்கண்டு மிட்டாய், பனம்பழச்சாறு, சுக்குகாபி, பனை ஓலைப் பொருட்கள், சுக்கு காபித் தூள், பனங்கிழங்கு பொடி, பதநீர், பனங்கருப்பட்டி, கதர் பொருட்கள், காதி சோப்பு, வகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட வைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கையாக விளையும் பனை பொருட்களைக் கொண்டு, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக இவ்வங்காடி விற்பனைக்காக தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், தஞ்சாவூர் கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் ப்ரான்ஸீஸ் தெரஸா மேரி, மேலாளர் சாவித்திரி, பனைப்பொருள் பெருவளத்திட்டம் திட்ட அலுவலர் மாரியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- குழந்தை பருவத்தில் கீரை என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கும்.
- அனைத்து சத்துக்களும் கீரைகளில் நிரம்பி இருக்கின்றன.
குழந்தை பருவத்தில் கீரை என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கும். கீரையை உணவாக சாப்பிடுவது, மாத்திரையை விழுங்குவது போல முகத்தை சுழித்துதான் சாப்பிட்டிருப்போம். உண்மையில், கீரை சாப்பிடுவதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அதுகுறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.
உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கீரைகளில் நிரம்பி இருக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான இரும்பு சத்து, மக்னீசியம் உள்ளிட்ட தாது சத்துக்கள், வைட்டமின்கள் பி-1, பி-2, பி-6 மற்றும் சி, இ, கே ஆகியவை கிடைக்கின்றன. கீரைகளில் உள்ள கரோட்டினாய்டுகள் வைட்டமின் ஏ சத்தாக மாறி, உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் பாகங்கள் புத்துணர்ச்சியுடன் செயலாற்ற உதவுகிறது.
உடல் இயக்கத்துக்கு நார்ச்சத்து மிக மிக அத்தியாவசியமாகும். அந்த நார்ச்சத்து கீரைகளில் அதிகளவு கிடைக்கின்றன. செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கின்றன. சரியான நேரத்தில் பசியை தூண்டுவதற்கு கீரைகளில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது. உடலில் தேவையற்ற கலோரிகள் தங்கி உடல் எடை கூடுவதை கீரைகளில் உள்ள வைட்டமின்கள் தடுக்கின்றன. குடல் இயக்க மாறுபாட்டை தடுப்பதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதிலும் கீரைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
உணவு பழக்க வழக்க மாறுபாட்டால், இதய பிரச்சினைகள் வாழ்வியல் நோயாக மாறியுள்ளது. சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல், வைட்டமின் மற்றும் நார்ச்சத்து இல்லாத உணவுகளை சுவைக்காக மட்டும் எடுத்துக்கொள்வதால் இதயப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.
கீரைகள் சாப்பிடும்போது இதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. கீரைகளில் உள்ள நைட்ரேட் ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்துக்கு சீரான அளவில் ரத்தத்தை அனுப்புகிறது. நைட்ரிக் ஆக்சைடு ரத்த நாளங்களை அகலப்படுத்தி தமனிகளில் அடைப்பை தடுக்கிறது. இதன்மூலம் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
கண் பார்வைத் திறனை பராமரிப்பதில் கரோட்டினாய்டு நிறமிகளான லுடீன் மற்றும் ஜியாக்சாண்டீன் மிக அவசியமானவை என பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இவை கண் பார்வைக்கு துணைபுரிவதுடன், விழித்திரை பாதிப்பு அபாயத்தையும் குறைக்கின்றன.
மேலும், கண்புரை உருவாகுவதை தடுப்பதுடன், இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் வயதாவதையும் குறைக்கின்றன. இந்த சத்துக்களும் கீரைகளில் நிரம்ப கிடைக்கின்றன.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலான அனைத்து பாகங்களின் செயல்பாடுகளுக்கும் தேவையான மிக அத்தியாவசிய வைட்டமின்கள் கீரைகளில் இயல்பாகவே கிடைக்கும்போது, அவற்றை தவிர்க்காமல் அன்றாட உணவில் எடுத்துக்கொண்டால், ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிப்பீர்கள்.
- தோற்றத்தில் பிரகாசிக்க செய்ய வேண்டிய விஷயங்கள்
- தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு விட்டாலே பெண்கள் முகத்தில் ஒருவித பூரிப்பு குடிகொள்ளும். 'கல்யாணக் களை' வந்துவிட்டதாக சொல்வார்கள். அந்த பூரிப்பை மணமேடை வரை தக்கவைத்து பொலிவுடன் ஜொலிக்கவும், கட்டுடல் தோற்றத்தில் பிரகாசிக்கவும் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

நீரேற்றம்
திருமண நாள் நெருங்கும்போது உற்சாகம் பெருகும். அது முகத்தில் பிரகாசிக்கவும், சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கவும் உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது அவசியமானது. காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது வளர்சிதை மாற்றத்தை தொடங்குவதற்கு வழிவகுக்கும். உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும். செரிமானத்துக்கும் உதவும். உடல் இலகுவாகவும், ஆற்றலுடனும் இருப்பதை உணர்வீர்கள்.
உணவுக் கட்டுப்பாடு
உணவோ, உணவு பதார்த்தங்களோ, நொறுக்குத்தீனிகளோ, பழங்களோ எதுவாக இருந்தாலும் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பெரிய தட்டுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக சிறிய தட்டுகள், கிண்ணங்களை பயன் படுத்தலாம். அது இயல்பாகவே அதிக அளவில் சாப்பிடுவதை தவிர்க்க உதவும். திருமணத்திற்கு தயாராவதற்குரிய இலக்குகளை நோக்கி பயணிக்க உதவிடும்.
பாதாம்
தினசரி உணவில் பாதாம் சேர்த்துக்கொள்வது அவசியமானது. அதில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், ஆன்டி ஆக்சிடென்டுகள் உட்பட 15 அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கின்றன. முக்கியமாக பாதாம் பருப்பில் காணப்படும் கொழுப்புகள், வைட்டமின் ஈ ஆகியவை சரும நலனை மேம்படுத்தும். இளமையாகவும், துடிப்பாகவும் தோற்றமளிக்க செய்யும். வயதான தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கும். நீண்ட நேரம் வயிற்றை முழுமையாக உணர செய்து அதிகம் சாப்பிட அனுமதிக்காது. உடல் எடையை சீராக பராமரிப்பதுடன் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் உதவும்.
தூக்கம்
உடலுக்குத் தேவையான ஓய்வை வழங்க தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். போதுமான நேரம் தூங்குவது பசிக்கு காரணமான ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தும். உணவை அதிகம் உண்பதற்கான சாத்தியக்கூறுகளை தடுக்கும். மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் செயல்பட வைக்கும்.
மன அழுத்தம்
திருமண ஏற்பாடுகளில் முழுக் கவனம் செலுத்துவதும், திட்டமிடுதல்களை மேற்கொள்வதும் மன அழுத்தத்தைத் தரக்கூடியது. அதனை கட்டுப்படுத்த தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டு வரலாம். அவை ஆரோக்கியத்தையும், தோற்றப் பொலிவையும் பராமரிக்க உதவும். மனம் அமைதியாகவும், சருமம் பொலிவாகவும் இருப்பதை உறுதிசெய்யும்.
பொறுமை
உடல் ஆரோக்கியம் மற்றும் அழகு இலக்குகளை அடைவதற்கு நிதானமும், பொறுமையும் தேவை. மனதை அலைபாயவிடாமல், தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டும். இத்தகைய வழி முறைகளை முறையாக கடைப்பிடிப்பது திருமண நாளில் உங்கள் தோற்றத்தை பிரகாசிக்க வைக்கும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சியில் பளு தூக்குதல் போன்ற வலிமை பயிற்சிகளை இணைத்துக்கொள்வது தசையை வலுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். ஒட்டுமொத்த உடல் வலிமையையும் அதிகரிக்கச் செய்யும். உடல் தோரணையையும் மேம்படுத்தும்.
சர்க்கரை உணவுகள்
சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் பலகாரங்கள், உணவுப்பொருட்கள் மற்றும் பானங்களை உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும். அது எடை அதிகரிப்பு மற்றும் சரும பிரச்சினைகளை தடுக்க உதவும்.
- நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்கிறது மற்றும் பெருந்தமனி தடிப்பு மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது .
- க்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்பு தடுப்பது மட்டுமல்லாமல், உறுப்பு மிகவும் திறம்பட செயல்படச் செய்கிறது.
கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.
இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க...
கறிவேப்பிலை ஒருவரின் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த இலைகள், எல்டிஎல் கொழுப்பை (கெட்ட கொலஸ்ட்ரால்) உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ரால் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கின்றன. இது நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்கிறது மற்றும் பெருந்தமனி தடிப்பு மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது .
செரிமானத்தை அதிகரிக்க...
பழங்காலத்திலிருந்தே கறிவேப்பிலையின் நன்மைகளில் ஒன்று செரிமானத்திற்கு உதவுகிறது. கடி பட்டா ஆயுர்வேதத்தில் மிதமான மலமிளக்கிய பண்புகளைக் கொண்டுள்ளது என்று கருதப்படுகிறது, இது வயிற்றில் தேவையற்ற கழிவுகளை அகற்ற உதவுகிறது.
கல்லீரலுக்கு...
கறிவேப்பிலை ஆய்வின்படி, இலைகளில் உள்ள டானின்கள் மற்றும் கார்பசோல் ஆல்கலாய்டுகளின் வலுவான ஹெபடோ-பாதுகாப்பு பண்புகள் உள்ளன. மேலும், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றுடன் இணைந்தால், அதன் மிகவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்பு தடுப்பது மட்டுமல்லாமல், உறுப்பு மிகவும் திறம்பட செயல்படச் செய்கிறது.

முடி வளர்ச்சிக்கு...
சேதமடைந்த கூந்தலுக்கு சிகிச்சையளிப்பதில், கறிவேப்பிலை மிகவும் வெற்றிகரமானது, தளர்வான முடிக்கு துள்ளல் சேர்க்கிறது, மெல்லிய முடி தண்டுக்கு வலுவூட்டுகிறது மற்றும் முடி உதிர்வை தடுக்கிறது. இது தவிர, இலைச் சாறு மலாசீசியா ஃபர்ஃபரின் பூஞ்சை உச்சந்தலையில் தொற்றுக்கு எதிராக பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டை நிரூபித்துள்ளது, அதனால்தான் பொடுகுக்கு சிகிச்சையளிக்க இதைப் பயன்படுத்தலாம் .
கண் ஆரோக்கியத்திற்கு...
கறிவேப்பிலையில் கரோட்டினாய்டு கொண்ட வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இதனால் கார்னியா பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது. வைட்டமின் A இன் குறைபாடு இரவு குருட்டுத்தன்மை , பார்வை இழப்பு மற்றும் மேகம் உருவாக்கம் உள்ளிட்ட கண் கோளாறுகளை ஏற்படுத்தும் . இதனால், இலைகள் விழித்திரையைப் பாதுகாப்பாக வைத்து, பார்வை இழப்பிலிருந்து பாதுகாக்கின்றன.
பாக்டீரியாவை நீக்க...
கார்பசோல் ஆல்கலாய்டுகள், ஆக்ஸிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட கலவைகள், கறிவேப்பிலைகள் நிறைந்தவை மற்றும் பாக்டீரியாவை அழிக்கும் திறன் கொண்டவை மற்றும் செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் இந்த மரங்களின் மலர் வாசனைக்கு காரணமான கலவை லினலூல் ஆகும்.
எடை இழப்பை ஊக்குவிக்க...
உடல் எடையை குறைக்கும் போது, கறிவேப்பிலை ஒரு நல்ல மூலிகை. உடலில் தேங்கியுள்ள கொழுப்பை வெளியேற்ற இது சிறந்த மருந்து. கறிவேப்பிலை ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ரால் எண்ணிக்கையை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, இது உடல் பருமனை தடுக்க உதவுகிறது .
பக்க விளைவுகளை கட்டுப்படுத்த...
கறிவேப்பிலை உட்கொள்வது கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையின் விளைவுகளை குறைக்கிறது மற்றும் குரோமோசோமால் சேதம் மற்றும் எலும்பு மஜ்ஜை பாதுகாப்பிலிருந்து பாதுகாக்கிறது.
இரத்த ஓட்டத்திற்கு...
கறிவேப்பிலையை வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மாதவிடாய் பிரச்சினைகள், கோனோரியா , வயிற்றுப்போக்கு மற்றும் வலிகளைப் போக்க உதவுகிறது .
நீரிழிவு எதிர்ப்பு பண்புக்கு...
கறிவேப்பிலையின் மிகப்பெரிய ஆரோக்கிய நன்மைகளில் ஒன்று, இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது . ஒருவரின் உணவில் கறிவேப்பிலையைப் பயன்படுத்துவதன் மூலம், இன்சுலின் உற்பத்தி செய்யும் கணைய செல்கள் தூண்டப்பட்டு மறைக்கப்படலாம்.

காயங்களை குணப்படுத்த...
கறிவேப்பிலையின் பேஸ்ட்டை தடவுவதால் காயங்கள், சொறி, கொதிப்பு மற்றும் லேசான தீக்காயங்கள் போன்றவற்றில் குணமடையும் . இலைகளின் பேஸ்ட் எந்தவொரு தீங்கு விளைவிக்கும் தொற்றுநோயையும் தடுக்கவும் அகற்றவும் உதவுகிறது.
- பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் லெக்டின்கள் நிறைந்துள்ளன.
- உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவது நல்லதல்ல என்பது பொதுவான நம்பிக்கை.
உடல் ஆரோக்கியத்தை சீராக பேணுவதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். உணவு, ஊட்டச்சத்து விஷயத்தில் சரியான புரிதலின்றி செயல்படுகிறார்கள். அதனால் அவை சார்ந்த கட்டுக்கதைகளும் ஏராளம் உலவுகின்றன. அவற்றுள் கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி பார்ப்போம்.
கட்டுக்கதை 1 : காலை உணவை தவிர்த்தால் உடல் எடை அதிகரிக்கும்.
உண்மை: காலை உணவு முக்கியமானதுதான். அதனை தவிர்ப்பது நல்லதல்ல. அதேவேளையில் காலை உணவு சாப்பிடாவிட்டால் மதிய உணவை அதிகமாக சாப்பிட தோன்றும், உடல் எடை அதிகரிக்கும் என்பதெற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை.
கட்டுக்கதை 2: நொறுக்குத்தீனி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
உண்மை: காலை-மதியம், மதியம்-இரவு உணவுக்கு இடையே நொறுக்குத்தீனி சாப்பிடுவது உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவிடும். இருப்பினும் நீங்கள் எந்தவகையான நொறுக்குத்தீனி தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது முக்கியமானது. அவை ஆரோக்கியமற்றவையாக இருந்தால் உடல் எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நொறுக்குத்தீனி வகைகளில் பழங்கள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் இடம் பெறுவது நல்லது.
கட்டுக்கதை 3: உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவிடும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். நச்சு நீக்கம் செய்ய வேண்டியது அவசியமானது.
உண்மை: நச்சு நீக்கம் என்பது கட்டுக்கதை. ஏனெனில் நச்சு நீக்க உணவுகள் பயனுள்ளவை, பாதுகாப்பானவை என்பதற்கு போதுமான சான்றுகள் இல்லை. அவை பெரும்பாலும் அறிவியல் ரீதியாக ஆதரிக்கப்படாத, மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டவை.
அவற்றை தொடர்ந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் சாதாரண உணவை உட்கொள்ள தொடங்கும்போது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கக்கூடும். மேலும் கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் இயற்கையான நச்சு நீக்க அமைப்புகளுக்கு தீங்குவிளைவிக்கும்.
கட்டுக்கதை 4: குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை உட்கொள்வது நல்லது.
உண்மை: குறைந்த கொழுப்பு உணவுகள் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் பிற ஆரோக்கியமற்ற பொருட்களை உள்ளடக்கி இருக்கின்றன. அவற்றுள் பெரும்பாலான உணவுகள் அதிகப்படியான பசி, எடை அதிகரிப்பு உள்பட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். பதப்படுத்தப்படாத உணவுகள் மற்றும் இயற்கையாகவே கொழுப்பு குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவதுதான் சிறந்தது.
கட்டுக்கதை 5: பீன்ஸ் நச்சுத்தன்மை வாய்ந்தவை.
உண்மை: பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் லெக்டின்கள் நிறைந்துள்ளன. அவை விஷத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் பீன்ஸை சமைக்கும்போது லெக்டினின் வீரியம் குறையக்கூடும். அத்துடன் பீன்ஸ் நார்ச்சத்து நிரம்பப்பெற்றது. உடல் எடை இழப்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
கட்டுக்கதை 6: சர்க்கரை வள்ளிக்கிழங்கு உருளைக்கிழங்கை விட ஆரோக்கியமானது.
உண்மை: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவது நல்லதல்ல என்பது பொதுவான நம்பிக்கை. பெரும்பாலானவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட விரும்புகிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரை வள்ளிக்கிழங்கும், உருளைக்கிழங்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டவைதான். சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகமாக உள்ளடங்கி இருக்கிறது.
கட்டுக்கதை 7: சிவப்பு ஒயின் இதயத்திற்கு ஆரோக்கியமானது.
உண்மை: மது பானங்களால் எந்த நன்மையும் இல்லை. எந்த வகை மதுபானமாக இருந்தாலும் அதனை பருகுவது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும், மிதமான அளவு சிவப்பு ஒயின் குடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தாது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
கட்டுக்கதை 8: முட்டை உட்கொள்வது இதயத்திற்கு நல்லதல்ல.
உண்மை: புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த சூப்பர் உணவாக முட்டை கருதப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, வாரத்திற்கு 7 முட்டைகள் வரை சாப்பிடலாம். இதய நோய் அபாயத்தை அதிகரிக்காது. முட்டை உட்கொள்வது சில வகை பக்கவாதம் மற்றும் மாகுலர் சிதைவு எனப்படும் கடுமையான கண் நோய்களை தடுக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
கட்டுக்கதை 9: சமச்சீரான உணவு பழக்கத்துக்கு இறைச்சியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உண்மை: உணவியல் நிபுணர்களின் கருத்துப்படி இறைச்சியை உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ளலாம். காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள்தான் பிரதான உணவாக அமைய வேண்டும்.
- குளிர்ந்த நீர் சிகிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
- மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் குளிர்ந்த நீரில் மூழ்கி எழுவது பலனளிக்கும்.
ஐஸ்கட்டி போல் ஜில்லென குளிர்ந்திருக்கும் நீரில் குளியல் போடுவது கூட ஆரோக்கியத்திற்கு ஏற்புடையதுதான். 'குளிர் நீர் தெரபி' எனப்படும் இந்த சிகிச்சையை மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
* தசை வலி
உடற்பயிற்சியின்போதோ, கடுமையான உடல் உழைப்பின்போதோ ஏற்படும் தசை வலியை போக்க குளிர்ந்த நீர் சிகிச்சை உதவும். ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த நாளங்களின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் பணியை எளிதாக்கும். மேலும் குளிர்ந்த நீர் சிகிச்சை உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைப்பதன் மூலம் தசைகளுக்கு புத்துயிர் அளிக்கும். லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப்பொருட்களை வெளியேற்றும். கடுமையான உடல் செயல்பாடுகளுக்கு பிறகு ஏற்படும் தசை வலியையும் குறைக்கும்.
* தூக்கம்
குளிர்ந்த நீர் சிகிச்சை நன்றாக தூங்கவும் உதவிடும். உடல் வெப்பநிலை குளிர்ச்சி சூழலில் இருப்பது தூக்கத்திற்கு உகந்தது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தூங்குவதற்கு முன்பு 5 முதல் 10 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் குளியல் போடுவது ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
குளிர்ந்த நீர் சிகிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதனால் சட்டென்று நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பும் குறையும். குளிர் நீர் சிகிச்சை மேற்கொண்டவர்கள் வலிமையான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பதாக நெதர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
* மனநிலையை மேம்படுத்தும்
ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டு மன ரீதியாக பலவீனமாக இருந்தாலோ, மன வேதனைக்கு ஆளானாலோ மன நிலையை மேம்படுத்துவதற்கு குளிர்ந்த நீர் குளியல் துணை புரியும். அப்படி உடலில் குளிர் வெப்பநிலை வெளிப்படுவது நோராட்ரெனலின் உற்பத்தியை அதிகரிக்கும். இது மூளையை தூண்டி கவனமுடன் செயல்படுவதற்கு ஊக்கமளிக்கும். மன நிலையை செம்மைப்படுத்தவும் வழி வகுக்கும்.
* மனச்சோர்வை போக்கும்
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் குளிர்ந்த நீரில் மூழ்கி எழுவது பலனளிக்கும். இந்த குளிர் நீர் குளியல் மூளையில் இருந்து நரம்பு மண்டலம் வழியாக பயணிக்கும் நரம்புகளை தூண்டி அதன் செயல்பாடுகளை மேம்படுத்த உதவிடும். உடலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி சோர்வை விரட்டிவிடும். அதிலும் மனதளவில் மந்தமாகவும், சோர்வாகவும் உணர்ந்தால் குளிர்ந்த நீர் சிகிச்சை சிறந்த தீர்வாக அமையும். மனத்தெளிவை உண்டாக்கும். கவனிக்கும் திறனையும், அறிவாற்றல் செயல்பாட்டையும் வலுப்படுத்தும்.
- அறுபது நிமிடம் நடைப்பயிற்சி செய்வது உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்க போதுமான நேரத்தை அளிக்கும்.
- தொடர்ந்து 60 நிமிடங்கள் நடப்பது உடலுக்கும், தசைகளுக்கும் பலம் சேர்க்கும்.
நடைப்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பலரும் அதனை தவறாமல் பின்பற்றுகிறார்கள். குறிப்பாக, காலை 6 மணி, மாலை 6 மணி என 60 நிமிடங்கள் நடப்பதும், 6 நிமிடங்கள் வார்ம்-அப் பயிற்சி செய்வதும், 6 நிமிடங்கள் உடலை குளிர்வடையச் செய்வதும்தான் நடைப்பயிற்சியின் பலன்களை அதிகமாக்கும். இந்த நடைப்பயிற்சி முறையை 6-6-6 நடைப்பயிற்சி என்கிறார்கள். இதன்படி நடைப்பயிற்சி மேற்கொள்வது எத்தகைய பயன்களை தரும் என்பதை அறிந்து கொள்வோம்.
காலை 6 மணி
தினமும் சராசரியாக 30 நிமிடங்கள் நடப்பது இதய நோய் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்வதில் குறிப்பிடத்தக்க நன்மைகள் உள்ளன. புதிய காற்றை சுவாசிக்கவும், வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் அது சிறந்த நேரமாக அமையும். அத்துடன் உடலை உற்சாகமாக செயல்பட வைக்கும், மனத்தெளிவை தூண்டும்.
அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கும் வித்திடும். பிற உடற்பயிற்சிகளை செய்வதற்கு போதிய நேரம் கிடைக்காவிட்டாலும் காலையில் சுறுசுறுப்பாக இருப்பதும், நடைப்பயிற்சி செய்வதும் இதயநோய் மற்றும் பக்கவாத நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்று ஐரோப்பிய இதயவியல் சங்கம் கூறுகிறது.
மாலை 6 மணி
மாலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்வது மனதை அமைதிப்படுத்த உதவிடும். அன்றைய நாளின் வேலைப்பளுவின்போது ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் வழிவகை செய்யும். அத்துடன் மாலை நேர நடைப்பயிற்சி உடலை தளர்வடைய செய்து நிம்மதியான தூக்கத்திற்கு வித்திடும். அன்றைய நாளில் நடந்த அனைத்தையும் சிந்தித்து பார்ப்பதற்கான நேரமாகவும் மாலை நேர நடைப்பயிற்சியை மாற்றிக்கொள்ளலாம். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும்போது சிறிது நேரத்தையாவது இந்த நடைப்பயிற்சியை செய்வதற்கு ஒதுக்கலாம். அது முடியாவிட்டால் அலுவலக வளாகத்திலாவது 2 நிமிடங்கள் வேகமாக நடக்கலாம்.
60 நிமிடம்
அறுபது நிமிடம் நடைப்பயிற்சி செய்வது உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்க போதுமான நேரத்தை அளிக்கும். இதய ஆரோக்கியம், நுரையீரல் செயல் திறனை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்கும் எண்ணத்தில் இருப்பவர்கள், நடைப்பயிற்சியை மட்டுமே தங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடியவர்கள் வாரத்தில் 5 முறையாவது குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
அப்படி தொடர்ந்து 60 நிமிடங்கள் நடப்பது உடலுக்கும், தசைகளுக்கும் பலம் சேர்க்கும். மனதை முழுமையாக மீட்டமைக்கும். அப்படி ஒரு மணிநேரம் நடப்பது உடல் நலனில் அக்கறை கொள்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும். தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துவிடும்.
தொடர்ந்து 60 நிமிடங்கள் நடப்பது உடலுக்கும், தசைகளுக்கும் பலம் சேர்க்கும். மனதை முழுமையாக மீட்டமைக்கும்.
- உடல் ஆரோக்கியம் குறித்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- தேவதாஸ் மருத்துவமனை இயக்குனர் சதீஷ் தேவதாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி சார்பில் சைக்கிள் பயணத்தால் ஏற்படும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடந்தது. திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளத்தில் இருந்து கண்டு குளம் வரை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பயணம் நடந்தது. இதில் மாணவ-மாணவிகளும், மற்ற பள்ளி மாணவர்கள், பெற்றோர்களும் பங்கேற்றனர். தேவதாஸ் மருத்துவமனை இயக்குனர் சதீஷ் தேவதாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தாளாளர் மதிவாணன், ஷாலினி முன்னிலை வகித்தனர். முதல்வர் கீதா ராணி, அகாடமி இயக்குனர் சத்யா, உடற் கல்வி ஆசிரியர் முத்தையா ஆகியோர் பள்ளி மாணவர்களுடன் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் கண்டு குளத்தில் உள்ள பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்களுக்கு நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.