search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருள் விழிப்புணர்வு"

    • எவ்வித அச்சமுமின்றி ஆசிரியர்களிடமோ அல்லது போலீசாரிடமோ தெரிவிக்க வேண்டும்.
    • போதைப் பொருட்களால் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிப்பதோடு, அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகில் உள்ள ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், போதைப் பொருள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    இப்பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதாராணி தொடங்கி வைத்து பேசுகை யில், பள்ளி மாணவர்கள், பள்ளிப் பருவத்தில் தேவையில்லாத சமூக வலைதளங்கள் மற்றும் போதை வஸ்து போன்ற பழக்கங்களுக்கு உள்ளாகக் கூடாது.

    கஞ்சா உள்பட போதைப் பொருட்கள் பயன்படுத்தும் சகமாணவர்கள் அல்லது பயன்படுத்த வற்புறுத்தும் மாணவர்கள் குறித்த தகவலை எவ்வித அச்சமுமின்றி ஆசிரியர்களிடமோ அல்லது போலீசாரிடமோ தெரிவிக்க வேண்டும். போதைப் பொருட்களால் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிப்பதோடு, அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் போதைப் பொருட்களை பயன்படு த்தக்கூடாது என்றார்.

    இப்பேரணி மேல்சோ மார்பேட்டை வழியாக கடைத்தெருவரை சென்று மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது. இதில், உதவி தலைமை ஆசிரியர் விஜய், போதைப் பொருள் தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ராம்பிரசாத் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் துண்டு பிரசுரம் வழங்கினர்
    • போதை பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத் யன் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து அந்தந்த போலீஸ் நிலையங்கள் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி சோளிங்கர் பஸ் நிலையத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட் களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், விபத்துக்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.

    • கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை
    • எஸ்.பி. எச்சரிக்கை

    செங்கம்:

    செங்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கஞ்சா புகைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் செங்கம் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் நேற்று செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அப்போது எஸ்.பி. கார்த்திகேயன் பேசுகையில்:-

    பள்ளி மாணவர்கள் பள்ளி பருவத்தில் தேவையில்லாத சமூக வலைதளங்கள் மற்றும் போதை வஸ்து போன்ற பழக்கங்களுக்கு உள்ளாக கூடாது என்றும், கஞ்சா உள்பட போதை பொருட்கள் பயன்படுத்தும் சகமாணவர்கள் அல்லது பயன்படுத்த வற்புறுத்தும் மாணவர்கள் குறித்த தகவலை எவ்வித அச்சமுமின்றி ஆசிரியர்களிடமும் அல்லது போலீசாரிடம் தெரிவிக்கலாம்.

    வருங்காலம் இந்தியா மாணவர்கள் கையில் தான் உள்ளது, மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறையில் படித்து முன்னேறி தங்களது பங்களிப்பை இந்திய நாட்டிற்கு அளிக்க வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. சின்னராஜ், இன்ஸ்பெக்டர் சரவணகுமரன், தலைமை ஆசிரியர் காமத், கவுன்சிலர் முருகமணி உள்பட ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறியதாவது:-

    கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக தனி படைகள் அமைக்கப்பட்டு+ செயல்பட்டு வருவதாகவும், கஞ்சா விற்பனை செய்து சிறைக்கு சென்று திரும்பியவர்கள், பிணையில் வெளிவந்தவர்கள் உள்ளிட்டோர் குறித்த பதிவேடுகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இனிவரும் காலங்களில் போதை பொருட்கள் நடமாட்டத்தை குறைக்க தேவையான அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது, பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை போலீசாருக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும்.

    கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றார்.

    • திருச்சி மாவட்டகலெக்டர் பிரதிப் குமார் அறிவுறுத்தலின்படி லால்குடி நகராட்சி பகுதியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியை சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ தொடங்கிவைத்தார்.

    திருச்சி :

    லால்குடி நகராட்சி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ தொடங்கிவைத்தார்.

    மாவட்டகலெக்டர் பிரதிப் குமார் அறிவுறுத்தலின்படி லால்குடி நகராட்சி பகுதியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    முன்னதாக சந்தைப்பேட்டை புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை நகர்மன்ற தலைவர் துரைமாணிக்கம் தலைமையில் நகராட்சி ஆணையர் குமார் துணைத்தலைவர் சுகுனா ராஜ்மோகன் முன்னிலையில் சவுந்தரபாண்டியன் எம் எல் ஏ கொடி அசைத்து தொடங்கிவைத்து பேரணியில் கலந்துகொண்டார்.

    பேரணியில் லால்குடி ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் நெஸ்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவ-மாணவிகள் எல் என் பி பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும் கோஷமிட்டு பேரணியில் சென்றனர்.

    பேரணி சந்தைப்பேட்டையில் தொடங்கி கடைவீதி பஸ் நிலையம் அரியலூர் சாலையில் தனியார் திருமணமண்டபம் அருகே நிறைவுற்றது. இதில் நகராட்சி பணியாளர்கள் தன்னார்வலர்கள் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

    • காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • போதை பொருளின் தீமைக்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கல்லூரி மாணவர்கள் விடுதியில் காவல்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பி1 இன்ஸ்பெக்டர் மணிகுமார்,மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருளின் தீமைக்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினர். மாணவ பருவங்களில் போதை பொருட்களை அறவே தவிர்த்து கலவிக்கு மட்டுமே முக்கியம் அளித்து வாழ்கையில் மேன்மையடையும் வழிகள் குறித்தும் பல்வேறு ஆலோசகளை வழங்கினர்.

    ×