search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 253761"

    • பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
    • தற்போது, எல்லா அரசியல் கட்சிகளுமே இலவசம் அளிக்கின்றன.

    புதுடெல்லி :

    பா.ஜனதா எம்.பி. வருண்காந்தி, பல்வேறு பிரச்சினைகளில் பா.ஜனதா நிலைப்பாட்டுக்கு மாற்றாக கருத்து தெரிவித்து வருகிறார்.

    அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    இலவசங்களை அளிப்பதாக வாக்குறுதி அளிப்பது, வாக்காளர்களை அவமதிப்பது போன்றது. பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அல்லது பகுதி அளவுக்கு நிறைவேற்றப்படுகின்றன. இலவசங்கள் அளிப்பதன் மூலம் மக்கள் பணம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்.

    தற்போது, எல்லா அரசியல் கட்சிகளுமே இலவசம் அளிக்கின்றன. அதன் மூலம் இலவசங்கள் பெறுவது உரிமை என்ற மனநிலை ஊக்குவிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் இலவசங்களை அளித்து அளித்து, 'தொட்டில் முதல் கல்லறை வரை' இலவசங்கள் அளிக்கும் மாநிலத்தை உருவாக்குகின்றன. அதே சமயத்தில், எல்லா திட்டங்களையும், வாக்குறுதிகளையும் இலவசமாக கருத முடியாது. உதாரணமாக, பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதை அப்படி சொல்ல முடியாது. அது, மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    இலவசங்களை அளிப்பதற்கான நிதி ஆதாரம் குறித்து மத்திய, மாநில அரசுகள் தெரிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீஸ் வேலைக்கு 4 ஆண்டுகளாக காத்திருந்திருக்கும் இளைஞர்கள்.
    • இளைஞர்கள் தங்கள் குரலை சமூக ஊடகங்கள் வழியாக உயர்த்துகின்றனர்.

    புதுடெல்லி :

    உத்தரபிரதேச மாநிலம், பிலிப்பிட் தொகுதி பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி, அந்த மாநிலத்தில் போலீஸ் வேலைக்கு இளைஞர்கள் 4 ஆண்டுகளாக காத்திருந்தும் பலனில்லை என சாடி இருக்கிறார்.

    இதுபற்றி அவர் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், " போலீஸ் வேலைக்கு ஆள் எடுக்கப்படவில்லை. நம்பிக்கையும் வழங்கப்படவில்லை. இளைஞர்கள் தங்கள் குரலை சமூக ஊடகங்கள் வழியாக உயர்த்துகின்றனர். ஆனால் நிவாரணம்தான் கிடைப்பதாக இல்லை. ஆனால் அவர்கள் வீதிகளில் இறங்கி போராடினால் அவர்கள் தொந்தரவு செய்பவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இது அநீதி இல்லையா?" என கூறி உள்ளார்.

    வருண்காந்தி, பா.ஜ.க. எம்.பி. என்றபோதும், அந்தக் கட்சியின் மத்திய, உ.பி. மாநில அரசுகளை பல்வேறு விஷயங்களில் சாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.
    • ரேஷன் அட்டை தாரர்கள் தேசியக்கொடி வாங்க வற்புறுத்தப்படுகின்றனர்.

    புதுடெல்லி :

    சுதந்திர தின 75-வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி வீடுகள்தோறும் 13 முதல் 15-ந்தேதி வரை தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார். இதையொட்டி நாடு முழுவதும் தேசியக்கொடி விற்பனை அதிகரித்து உள்ளது.

    அதேநேரம் தேசியக்கொடி வாங்காதவர்களுக்கு பல இடங்களில் ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாக பா.ஜனதா எம்.பி. வருண் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

    அதில் ரூ.20 கொடுத்து தேசியக்கொடி வாங்க வற்புறுத்துவதாக சில ரேஷன் அட்டைதாரர்கள் குற்றம் சாட்டுவது பதிவாகி இருக்கிறது.

    இது குறித்து அவர், 'சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் ஏழைகளுக்கு ஒரு சுமையாக மாறினால், அது துரதிர்ஷ்டவசமானது. ரேஷன் அட்டை தாரர்கள் தேசியக்கொடி வாங்க வற்புறுத்தப்படுகின்றனர். வாங்காதவர்களுக்கு ரேஷன் உணவுப்பொருட்கள் மறுக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் வாழும் தேசியக்கொடிக்காக ஏழைகளின் உணவை பறித்து எடுப்பது வெட்கக்கேடானது' என்று குறிப்பிட்டு இருந்தார்.

    • ஊழல் தொழில் அதிபர்களின் ரூ.10 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • வாங்கிய கடனை செலுத்தத் தவறிய 10 நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

    புதுடெல்லி

    ஓட்டுகளை அள்ளுவதற்காக அரசியல் கட்சிகள் தேர்தலின்போது இலவசங்களை தருவதாக கூறுவதாக பிரதமர் மோடி சமீபத்தில் சாடினார்.

    இதற்கு பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி பதிலடி தந்துள்ளார்.

    அவர் டுவிட்டரில் இந்தியில் நேற்று வெளியிட்ட பதிவில், கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் தொழில் அதிபர்கள் ரூ.10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். அத்துடன் வாங்கிய கடனை செலுத்தத் தவறிய 10 நிறுவனங்கள் பட்டியலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டதை அவர் பகிர்ந்துள்ளார். இந்த நிறுவனங்களில் இரண்டில் மெகுல்சோக்சி, ரிஷி அகர்வால் உள்ளிட்ட தொழில் அதிபர்களுக்கு தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதையொட்டி வருண் காந்தி குறிப்பிடுகையில், " ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்கி விட்டு நாடாளுமன்றம் நன்றியை எதிர்பார்க்கிறது. ஆனால் 5 ஆண்டுகளில் ஊழல் தொழில் அதிபர்களுக்கு வழங்கிய ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்களை தள்ளுபடி செய்திருப்பதாக அதே நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. அரசின் கஜானாவில் முதல் உரிமை யாருக்கு? "என கேள்வி எழுப்பி உள்ளார்.

    ×