என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வினியோகம்"
- நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்து சென்றுவிட்டனர்.
- ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட 2 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் ஆவின் பால் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை பாக்கெட்டுகளாக மாற்றி முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவனத்தில் நள்ளிரவு முதல் பால்பாக்கெட்டுகள் வாகனங்களில் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
பால்பாக்கெட்டுகள் எடுத்துச்செல்ல நேற்று முன்தினம் ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் ஆவின் அலுவலகத்துக்கு வந்திருந்தன.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆவின் பொது மேலாளர் (பொறுப்பு) சுந்தரவடிவேலு, 2 வாகனங்களையும் ஆய்வு செய்தார்.
அப்போது ஒரு வாகனம் போலியானது என தெரிய வந்தது. அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த வாகனம் மூலம் தினமும் சுமார் 2,300 லிட்டர் கடத்தப்பட்டு பல லட்சம் லிட்டர் பால் திருட்டு நடந்துள்ளது. 2 வேன்களை ஆவின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி விட்டு, ஆவின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்து சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக ஆவின் உதவி பொது மேலாளர் சிவக்குமார் (விற்பனை) நிர்வாகம் சார்பில் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட 2 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஆவினில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனை செய்த பின்பே வெளியே அனுப்பப்பட்டது.
பால் பாக்கெட்டுகள் செல்லும் ஊர், முகவர்களின் விவரம் மற்றும் சரியான நபரிடம் தான் சென்று சேருகிறதா? என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஆவின் நிறுவனத்திலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலசங்கத்தின், நிறுவன தலைவர் பொன்னுசாமி கூறுகையில்:-
ஆவின் விற்பனை பிரிவு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தக் கடத்தல் நடைபெற்று இருக்காது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
- நன்மை தரும் பூச்சி, நுண்ணுயிர்களை அவை அழிக்கும்.
- இலைப்புள்ளி, இலை கருகல், இலையுறை அழுகல் நோய்களை கட்டுப்படுத்தும்.
ஈரோடு,
வேளாண் பயிர்கள் உற்பத்தியில் பயிர்களை தாக்கி சேதத்தை ஏற்படுத்தும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த ரசாயன பூச்சி கொல்லி மருந்துகள், பூஞ்சாண கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது.
ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல், உடல் நல பாதிப்பு, உண்ணக்கூடிய பயிர்களை நச்சு கொண்டதாக மாற்றும். எனவே மனிதர்களுக்கு மட்டுமின்றி, கால்நடைகளுக்கும் பல பிரச்னைகளை ஏற்படுத்துவதுடன், நன்மை தரும் பூச்சி, நுண்ணுயிர்களை அவை அழிக்கும்.
எனவே, பூச்சி கொல்லி மருந்தால், பயிர்களுக்கான உற்பத்தி செலவு அதிகரிக்கும். எனவே உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேளாண் துறையின் கீழ் செயல்படும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் மூலம், உற்பத்தி செய்யப்படும்.
எதிரி உயிரி பூஞ்சாணமான டிரைகோடெர்மா விரிடி பயிர்களில் ஏற்படும் வேர் அழுகல், கிழங்கு அழுகல் போன்ற மண்ணின் மூலம் பரவு நோய்களையும், எதிரி உயிரி பாக்டீரியாவான சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் மண்ணின் மூலம் பரவும் நோய்கள் மட்டுமின்றி, இலைப்புள்ளி, இலை கருகல், இலையுறை அழுகல் நோய்களை கட்டுப்படுத்தும்.
மேலும் பல தொழில் நுட்பங்களை பயன்படுத்து–வதால், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் அனைத்தும், பூச்சி கொல்லி மருந்துகளை ஒப்பிடும்போது, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.ஈரோடு மாவட்ட விவசாயிகள், அருகே உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இந்த தகவலை வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது.
- 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாடு அரசு, ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறம் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவ சிய பொருட்களை வினி யோகம் செய்து வருகிறது.
இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி கள்ள சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர். இவர்கள் பற்றியும், ரேசன் பொருட்கள் பதுக்கல் குறித்தும் பொதுமக்கள், 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ரகசியம் பாதுகாக்கப்படும்.
இதற்காக மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு ள்ளது. இது காவல்துறை தலைவரின் நேரடி கண்கா ணிப்பில் செயல்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 4-வது குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.
- விரைவில் அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 4-வது திட்ட குடிநீரை அனைத்து வார்டுகளுக்கும் சீரான முறையில் வினியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கினார்.
மேயர் தினேஷ்குமார் பேசும்போது ,மாநகரில் 4-வது குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. பெரும்பாலான வார்டுகளில் 4 நாட்களுக்கு ஒரு முறை என்ற வகையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதுபோல் அனைத்து வார்டுகளிலும் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குடிநீர் திறப்புக்கான மண்டல பகுதிகள் குறைக்கப்பட்டு ஒரே நேரத்தில் பெரும்பாலான இடங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. விரைவில் அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.
இந்த கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியன், தலைமை பொறியாளர் வெங்கடேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கு நெல் மூட்டைகள் அனுப்பப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது.
இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் திருவள்ளூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.
இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2 ஆயிரம் டன் நெல், 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன.
பின்னர் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் நெல்மூட்டைகள் ஏற்றப்பட்டு அரவைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- வருகிற 13-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
- விடைத்தாளின் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275 கட்டணத்தை அந்தந்த பள்ளிகளில் செலுத்தலாம்.
திருப்பூர் :
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி மாணவ-மாணவிகள் உயர் படிப்புக்கு தயாராகி வருகிறார்கள். விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வருகிற 13-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விடைத்தாளின் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275-ம், மறுகூட்டல் செய்ய உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணத்தை அந்தந்த பள்ளிகளில் செலுத்தலாம்.
பிளஸ்-2 தேர்வு முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், தங்கள் பள்ளிக்கென்று வழங்கப்பட்ட யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை பயன்படுத்தி பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் விவரங்களை சரிபார்த்து பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
ஸ்டேடியம் மின்வழித்தடத்தில் மேம்பாலம், சிவாஜிநகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள் நகர், எஸ்.பி.குளம், விக்னேஸ்வராநகர், உமாசிவன் நகர், வெங்கடாசலபதி நகர், ஆர்.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன்நகர், டி.சி.டபிள்யூ.எஸ்.காலனி, களிமேடு.திலகர் திடல் மின்வழித்தடத்தில் மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடிரோடு, மேலஅலங்கம். வண்டிக்காரத்தெரு மின்வழித்தடத்தில் ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மகர்நோன்புச்சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி.கோவில் தெரு, சேவியர் நகர், சோழன்நகர்.
கீழவாசல் மின்வழித்தடத்தில் பழைய மாரியம்மன்கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம். சர்க்யூட் ஹவுஸ் வழித்தடத்தில் ஜி.ஏ.கேனல் ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன்சர்ச்ரோடு, ஜோதிநகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர்.மார்க்கெட் வழித்தடத்தில் பர்மாபஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். நகர், அரிசிக்காரத்தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு. வ.உ.சி. நகர் மின் வழித்தடத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேசன், வ.உ.சி.நகர். எனவே பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பூக்குளம் மின்பாதையில் மின்கம்பிகள் மாற்றும் பணி நாளை நடக்கிறது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை கரந்தை துணை மின் நிலையத்தில் பூக்குளம் மின்பாதையில் மின்கம்பிகள் மாற்றும் பணி நாளை (செவ்வாய்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அன்பழகன்நகர், ஆனந்தம்நகர், மேட்டுத்தெரு, சுங்கான்திடல், சின்னத்தெரு, பெரியதெரு, ஜெகநாதன்நகர், வடுகத்தெரு, ராஜராஜசோழன்நகர், திருவள்ளுவர் காலனி, பள்ளியக்கிரஹாரம் கடைதெரு மற்றும் பைபாஸ் ஆகிய இடங்களிலும், கம்பம் மாற்றும் பணிக்காக மூலைஅனுமார்கோவில், போலீஸ் ராமசாமி நாயக்கர் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்து உள்ளார்.
- தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் கம்பி தரம் உயர்த்தும் பணி நாளை நடைபெற உள்ளது.
- அலிகுப்தா தைக்கால் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியி–ட்டுள்ள செய்தி–க்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் கம்பி தரம் உயர்த்தும் பணி நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதனால் கீழவாசல் மின் வழித்தடத்தில் உள்ள கரம்பை முதல் புறவழி–ச்சாலை வரையும், வ.உ.சி. நகரில் மின் வழித்தடத்தில் ராமநாதன் மருத்துவமனை, மைனர் ஜெயில் ரோடு, திருச்சி ரோடு, தீர்க்க சுமங்கலி மகால், அலிகுப்தா தைக்கால் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இரு–க்காது.
இவ்வாறு அதில் கூற–ப்பட்டுள்ளது.
- 943 தொழிலாளர்களுக்கு ரூ3.58 கோடி வினியோகம் செய்யப்படுவதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
- பணியாற்றிய நிறுவனங்களில் இருந்து பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் மற்றும் குறைந்த பட்ச சம்பள சட்ட கமிஷனர் சுப்பிரமணியன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் கமிஷனர் அறிவுறுத்தலின்படி மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள தொழில்நிறுவனங்களில் குறைந்தபட்ச சம்பள சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு தொழில்நிறுவனத்தில் சிறப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கடந்தாண்டு ஆய்வு மேற்கொண்டதில், குறைந்தபட்ச சம்பள சட்டம் 1948-ன்படி, தொழில் வணிக நிறுவனங்களில் இந்த சட்டத்தின்படி சம்ப ளம் வழங்காத பணியா ளர்கள் தரப்பில் கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் 462 தொழிலாளர்கள் தங்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்திருந்தனர்.
- சாலை விரிவாக்கம் பணி நடைபெறுவதால் மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.
- காலை 9.30 மணி மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் பணி நடைபெறுவதால் மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.
இதனால் தஞ்சை தொகுப்பு துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் தோப்புகுளம், ராமகிருஷ்ணாநகர், ஸ்டேட் பேங்க் காலனி, விக்டோரியா நகர், முனிசிபல் காலனி, முத்தமிழ் நகர், சிலப்பதிகார வீதி , பெரியார் நகர், ரெயில் நகர், தமிழ் நகர், ரெட்டிபாளையம் ரோடு, மானோஜிப்பட்டி ரோடு, ஈஸ்வரி நகர், மருத்துவக்கல்லூரி சாலை 3-வது கேட் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள தனியார் செல்போன் கடை வரை மெயின் சாலையில் உள்ள வணிக வளாகங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணி மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பூண்டி மற்றும் ராகவம்மாள்புரம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள பூண்டி மற்றும் ராகவம்மா ள்புரம் துணை மின் நிலையங்களில் நாளை ( வியாழக்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளன.எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம் , மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம் , பள்ளியூர், களஞ்சேரி, இரும்பு தலை, ரங்கநாதபுரம், சூலியக் கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், வாளமார்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலை கோட்டை, சின்ன புலிகுடிகாடு, நார்த்தேவன், குடிக்காடு அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தி அம்மாள்புரம், பனையக்கோட்டை, சடையார் கோவில், துறையு ண்டார் கோட்டை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்