என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஹேமந்த் சோரன்"
- கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது.
- கைது எதிராக உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்தபோது, உயர்நீதிமன்றம் மனுதாக்கல் செய்ய வலியுறத்தப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். இவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனுதாக்கல் செய்தார். அப்போது உச்சநீதிமன்றம் முதலில் அம்மாநில உயர்நீதிமன்றத்தை அணுகவும் எனக் கூறியது.
இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி கைது செய்யப்பட்ட நிலையில், கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான இறுதிகட்ட விசாரணை பிப்ரவரி 27 மற்றும் 28-ந்தேதிகளில் நடைபெற்றது.
அதன்பின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் உள்ளது. இதுவரை தீர்ப்பு வழங்காத நிலையில் தற்போது ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யுள்ளார்.
ஹேமந்த் சோரனிடம் சுமார் ஏழு மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். கைது செய்வதற்கு முன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்ட நிலையில், நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
- ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்
- சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்
ஜார்கண்ட் முதல்-மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நடந்த நிதி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இதில் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். முன்னதாக அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
கைது செய்யப்பட்டு உள்ள ஹேமந்த் சோரன் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த வழக்கில் ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை கோர்ட்டு நேற்று தொடங்கியது.
இதற்கிடையே சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். ராஞ்சி பராகெய்ன் பகுதியில் உள்ள இந்த நிலம் ரூ.31.07 கோடி மதிப்பிலானது ஆகும்.
கடந்த 2010-11-ம் ஆண்டு முதலே இந்த சொத்தை சொந்தமாக வைத்திருக்கும் சோரன், அதை மோசடியாக பெற்றுக்கொண்டதாக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில், இந்த சொத்தை பறிமுதல் செய்ய அனுமதியும் கோரப்பட்டு உள்ளது.
ஹேமந்த் சோரன் முறைகேடாக பெற்றதாக கூறப்படும் 8,86 ஏக்கர் சொத்தின் காப்பாளராக 14 முதல் 15 ஆண்டுகள் வரை இருந்ததாக அமலாக்கத்துறை விசாரணையின்போது சந்தோஷ் முண்டா என்பவர் தெரிவித்திருக்கிறார்.
அந்த நிலத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற சோரன் கூறியதை பொய் என நிரூபிக்க சந்தோஷ் முண்டாவின் வாக்குமூலத்தை அமலாக்கத்துறை பயன்படுத்தி உள்ளது. மேலும், அந்த நிலத்திற்கு ராஜ்குமார் பஹான் என்ற நபர் உரிமை கோரியதையும் அமலாக்கத்துறை நிராகரித்தது.
அந்த நிலத்தை ஒதுக்கீடாக பெற்றவர்கள், சில நபர்களுக்கு விற்றதாகவும், அவர்களை சோரன் வெளியேற்றிவிட்டு 2010-11ல் நிலத்தின் கட்டுப்பாட்டை பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது.
ஹேமந்த் சோரனும் அவரது மனைவி கல்பனாவும், இரண்டு முதல் மூன்று முறை அந்த நிலத்திற்குச் சென்றதாகவும், அந்த இடத்தில் சுற்றுச் சுவர் கட்டுமான பணியின்போது ஹேமந்த் சோரன் கூடவே இருந்து வேலை செய்ததாகவும் அமலாக்கத்துறை விசாரணையின்போது சந்தோஷ் முண்டா தெரிவித்துள்ளார்.
சோரனின் உத்தரவின் பேரில் சொத்துக் காப்பாளர் பொறுப்பு சந்தோஷ் முண்டாவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை கூறுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹிலாரியாஸ் கச்சாப், அங்கு மின்சார மீட்டர் பொருத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த நிலத்தில் சந்தோஷ் முண்டாவும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர் என்பதும், குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமார் பஹான் வசம் இல்லை என்பதும் நிரூபணமாகியிருப்பதாக அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.
இந்நிலையில், அமலாக்கத்துறை தனது குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் முக்கிய ஆதாரமாக, பிரிட்ஜ் மற்றும் ஸ்மார்ட் டி.வி.யின் பில்களை காட்டியிருக்கிறது. இந்த ரசீதுகளை ராஞ்சியைச் சேர்ந்த இரண்டு டீலர்களிடமிருந்து பெற்று குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளது.
இந்த 2 ரசீதுகளும் சந்தோஷ் முண்டாவின் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
குற்றப்பத்திரிகையில் ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ள பிரிட்ஜ், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முண்டாவின் மகன் பெயரிலும், ஸ்மார்ட் டிவி 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முண்டாவின் மகள் பெயரிலும் வாங்கப்பட்டுள்ளது. அந்த பில்லில், வழக்கில் உள்ள நிலத்தின் முகவரி உள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அரசுத் தரப்பு புகாரை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
- ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.
- சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
ராஞ்சி:
ஜார்கண்ட் முதல்-மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நடந்த நிதி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இதில் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். முன்னதாக அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
கைது செய்யப்பட்டு உள்ள ஹேமந்த் சோரன் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த வழக்கில் ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை கோர்ட்டு நேற்று தொடங்கியது.
இதற்கிடையே சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
ராஞ்சி பராகெய்ன் பகுதியில் உள்ள இந்த நிலம் ரூ.31.07 கோடி மதிப்பிலானது ஆகும்.
கடந்த 2010-11-ம் ஆண்டு முதலே இந்த சொத்தை சொந்தமாக வைத்திருக்கும் சோரன், அதை மோசடியாக பெற்றுக்கொண்டதாக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில், இந்த சொத்தை பறிமுதல் செய்ய அனுமதியும் கோரப்பட்டு உள்ளது.
அதேநேரம் இந்த சொத்துக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சோரன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- பா.ஜ.க.வில் சேராதவர்கள், சிறைக்குச் செல்வோர் முற்றிலும் நிரபராதிகள் என்றார் மெகபூபா முப்தி.
ஸ்ரீநகர்:
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகள் பா.ஜ.க.வில் சேருகிறார்கள், அதன்பின் அவர்களுக்கு எதிராக எல்லாமே அழிக்கப்படுகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்பாவிகள்.
பா.ஜ.க.வில் சேராதவர்கள், சிறைக்குச் செல்வோர் முற்றிலும் நிரபராதிகள்.
தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கிறது பா.ஜ.க. என தெரிவித்தார்.
- ஹேமந்த் சோரன் மனைவியை முதல் மந்திரி ஆக்குவதற்கு அண்ணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
- 2019 தேர்தலுக்குப் பிறகு தான் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன் எனவும் குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி:
ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மீதான நில மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அப்போது சோரனின் மனைவி கல்பனாவை முதல் மந்திரி ஆக்குவதற்கு ஹேமந்த் சோரனின் அண்ணியான சீதா சோரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
2019 தேர்தலுக்குப் பிறகு தான் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன். வளர்ந்து விட்ட தனது 2 மகள்களையும் ஹேமந்த் சோரன் கண்டு கொள்வதில்லை என சீதா சோரன் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, சீதா சோரன் கட்சியில் இருந்து திடீரென விலகினார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் சீதா சோரன் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அவரை பாஜகவினர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
#WATCH | Delhi: Former JMM MLA and sister-in-law of former Jharkhand CM Hemant Soren- Sita Soren joins BJP. pic.twitter.com/HiG9Nlsm8I
— ANI (@ANI) March 19, 2024
- பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி ஹேமந்த் சோரன் மனு செய்தார்.
- சோரனின் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் இன்று உத்தரவிட்டது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மீது நிலக்கரி சுரங்கம் மற்றும் நில மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறையின் பிடியில் சிக்கினார்.
இவரது கோர்ட் காவல் பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் ராஞ்சி பி.எம்.எல். சிறப்பு கோர்ட் பிப்ரவரி 22-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது.
இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி ஹேமந்த் சோரன் கோர்ட்டில் மனு செய்தார்.
இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஐகோர்ட் சோரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- பண மோசடி வழக்கு தொடர்பில் அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது.
- முதல் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் சம்பாய் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.
அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், சம்பாய் சோரன் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளார். காங்கிரஸ் ஆதரவுடன் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்தார்.
இந்த நிலையில் இந்த வருடத்தில ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 3 அல்லது 4 துண்டுகளாக உடையும் உன பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளா்.
இதுதொடர்பாக நிஷிகாந்த் துபே கூறுகையில் "சோரன் குடும்பம் ஜெயலுக்கு போகும் என்பதை நான் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். சில எம்.எல்.ஏ.-க்கள் தொடர்பில் இருப்பதாகவும் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் ஆகியவை தங்கள் இருப்புகளை இழந்துவிடும் எனவும் டுவீட் செய்திருந்தேன்.
நான் தவறாக டுவீட் செய்துள்ளதாக சிலர் நினைக்கின்றனர். எல்லோரும் என்னுடைய டுவீட்டை பாதுகாத்து வைத்துக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன். ஜார்கண்ட் மோர்ச்சா அல்லது காங்கிரசை பார்க்க முடியாது. 2024-ல் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மூன்று அல்லது நான்கு துண்டுகளாக உடையும்" என்றார்.
- நாங்கள் கண்ணீர் வடிக்க மாட்டோம். சரியான நேரத்தில் பதிலடி கொடுப்போம்.
- மத்திய அரசின் சதிக்குப் பிறகு எனது கைது நடவடிக்கையில் ராஜ்பவன் கருவியாக செயல்பட்டது.
ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்தில் சம்பாய் சோரன், நம்பிக்கை வாக்கெடுப்பான தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அப்போது சம்பாய் சோரன் "ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்கண்ட் அரசை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சி செய்தது. பொய் வழக்குகளில் ஹேமந்த் சோரனை சிக்க வைக்க பா.ஜனதா விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது. என்னுடைய அரசு ஹேமந்த் சோரனின் நிர்வாகத்தில் 2-ம் பகுதி ஆகும்" என்றார்.
ஹேமந்த் சோரன் பேசும்போது "நாங்கள் கண்ணீர் வடிக்க மாட்டோம். சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும். மத்திய அரசின் சதிக்குப் பிறகு எனது கைது நடவடிக்கையில் ராஜ்பவன் கருவியாக செயல்பட்டது.
நான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31 இந்திய வரலாற்றில் கருப்பு நாள். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகுகிறேன். இதை பா.ஜனதாவுக்கு சவலாக விடுகிறேன்" என்றார்.
- ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ததால், சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
- குதிரை பேரம் நடக்காமல் இருக்க ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் தெலுங்கான அழைத்துச் செல்லப்பட்டனர்.
அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றதில் இருந்து 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை சட்டசபையில நிரூபிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதன்படி ஜார்கண்ட் சட்டமன்றத்தில் சம்பாய் சோரன் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.-க்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு அழைத்துச் சென்றனர். பா.ஜனதா குதிரை பேரம் பேசிவிடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக இந்த ஏற்பாட்டைச் செய்தனர். இன்று காலை அவர்கள் ஜார்கண்ட் அழைத்து வரப்பட்டனர். அழைத்து வரப்பட்ட அவர்கள் நேராக சட்டமன்றம் சென்று வாக்கெடுப்பில் பங்கேற்க வைக்கப்படுவார்கள்.
81 இடங்களை கொண்ட ஜார்கண்டில் ஆட்சியமைக்க 41 இடங்கள் தேவை. ஜார்கண்ட் மோர்ச்சா கூட்டணிக்கு 47 இடங்கள் உள்ளது. இதில் 43 எம்.எல்.ஏ.க்கள் சம்பாய் சோரனுக்கு உறுதியான ஆதரவு கொடுக்க உள்ளனர்.
ஜார்கண்டில் பா.ஜனதாவுக்கு 25 எம்.எல்.ஏ.க்களும், அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் அமைப்பிற்கு 3 எம்.எல்.ஏ.-க்களும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிக்கு தலா ஒரு எம்.எல்.ஏ.-க்களும் உள்ளனர்.
- அமலாக்கத்துறையின் நம்பகத்தன்மை குறித்து பலமுறை கேள்விகள் எழுந்துள்ளன.
- பாஜக-வின் குறிக்கோள் எதிர்க்கட்சிகளை குறிவைத்து அவர்களை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவது ஆகும்.
டெல்லி மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்.பி.யுமான கபில் சிபல் கூறியதாவது:-
ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அமலாக்கதுறை ஒரு நம்பகத்தன்மையற்றதாக உள்ளது. பதவியில் உள்ள முதல்வர்கள் மீது பொய்யான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டுகிறது.
இது நாட்டில் மிகவும் சோகமான நிலையை உருவாக்கி வருகிறது. இது எங்கேபோய் முடியும்.
அமலாக்கத்துறையின் நம்பகத்தன்மை குறித்து பலமுறை கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கு முன்பும் தேர்தலில் போட்டியிட்ட பலரின் பெயர்களை உங்களிடம் கூறி உள்ளேன். அவர்கள் மீது எந்தெந்த வழக்குகள் உள்ளன என்பதை கூறியுள்ளேன்.
இதுபோல வழக்குகள் உள்ள வேறு மாநிலங்களில் அமலாக்கத்துறை இதுபோன்ற நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை? பாஜக-வின் குறிக்கோள் எதிர்க்கட்சிகளை குறிவைத்து அவர்களை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவது ஆகும்.
இது போன்ற நடவடிக்கையால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளால் பிரசாரம் செய்ய முடியாது. அவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை என்றால், அது கண்டிப்பாக பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கைது நடவடிக்கையை தொடர்ந்து ஹேமந்த் சோரன் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
- இதையடுத்து, சம்பாய் சோரன் முதல் மந்திரியாக நேற்று பதவி ஏற்றுள்ளார்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநில முதல் மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் புதிய முதல் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்திவருகிறது.
பதவி ஏற்றுக்கொண்ட சம்பாய் சோரன் 10 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
இதனால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடத்தமுடியாத வகையில், அவர்கள் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, திங்கட்கிழமை சட்டமன்றம் கூட்டப்பட்டு அன்றைய தினம் சம்பாய் சோரன் பெரும்பான்மையை நிரூபிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பாய் சோரன் தனக்கு 43-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். 81 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில் 41 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திங்கட்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு ராஞ்சி கோர்ட் அனுமதி
அளித்து உத்தரவிட்டுள்ளது.
- 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
- ஜார்க்கண்டில் இருந்து மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.600 கோடி மதிப்புள்ள நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக ஜார்க்கண்ட் முதல்-மந்திரியும் ஜே.எம்.எம். கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது.
இதனை தொடர்ந்து தனது முதல் மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்தார். புதிய முதல் மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார். அவர் 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் தடுக்க ஜே.எம்.எம். கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஐதராபாத் அழைத்துவரப்பட்டனர் அவர்கள் அங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்டில் இருந்து மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 4 எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு பராமரிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் எம்.எல்.ஏ.க்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகிறார். வருகிற 5-ந் தேதி வரை ஜார்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
5-ந் தேதி தனி விமான மூலம் அவர்களை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி இன்று ஜார்கண்ட் மாநில எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தங்கி உள்ள சொகுசு விடுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்