search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் தற்கொலை"

    • சாய்குமார் ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்ததால் சோகமாக இருந்துள்ளார்.
    • தற்கொலை குறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கேட்டு தோட்டம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்தவர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சாய்குமார் (வயது 32) என்பதும், இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    அவர் ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்ததால் சோகமாக இருந்துள்ளார். மேலும் சொந்த ஊரில் உள்ள தனது குடும்பத்தினரிடம் தனக்கு பண தேவை உள்ளது. அனுப்பி வைக்குமாறும் இல்லையென்றால் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்வதாக செல்போனில் பேசி உள்ளார்.

    இந்தநிலையில் அவர் திருப்பூர் வந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.
    • ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லாகாபுரம் அருகே உள்ள கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (53). இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சங்கர் கொங்கணாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சங்கர் கரட்டாங்காடு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்ற அங்கு இரவில் தங்கினார். அப்போது சங்கர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.

    இன்று காலை வெளியே சென்று வருவதாக தாயிடம் கூறிவிட்டு சங்கர் சென்றார். வெளியே சென்ற சங்கர் நேராக அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்றார். அந்த சமயத்தில் தண்டவாளத்தில் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சங்கர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் சங்கர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இருந்தது. அதில் இந்த கடிதம் கிடைக்கும்போது நான் உயிருடன் இருக்க மாட்டேன். எனக்கு கடன் தொல்லை அதிகம் உள்ளது.

    அதனால் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இதற்கு யாரும் பொறுப்பில்லை. நான் விருப்பப்பட்டு இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். இப்படிக்கு சங்கர் என எழுதப்பட்டிருந்தது.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் ரெயில் முன் பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தில்லை நாயகம் முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
    • மனமுடைந்து காணப்பட்ட தில்லை நாயகம் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரையண்ட் நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் தில்லை நாயகம் (வயது44). இவர் முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இவருக்கும், இவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மனைவி கே.டி.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் மனமுடைந்து காணப்பட்ட தில்லை நாயகம் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அருண்பிரசாத் எழுதிய பரபரப்பு கடிதம் போலீசில் சிக்கியது.
    • எனது வீட்டுக்கும், பக்கத்து வீட்டுக்கும் சென்று வர பொது வழிப்பாதை இருந்தது.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தை சேர்ந்தவர் அருண்பிரசாத் (வயது 46).

    இவர் பத்திரெட்டிஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தணிகையேஸ்வரி (42). இவர் மணலூர் அரசு நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த தம்பதிக்கு தீபன், ரித்திக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் அருண்பிரசாத், தணிகையேஸ்வரி பள்ளிக்கு சென்றனர்.

    திடீரென அருண்பிரசாத், மணலூருக்கு சென்று, தணிகையேஸ்வரியிடம் வீட்டு சாவியை பெற்றுக்கொண்டு, வீட்டுக்கு திரும்பினார்.

    பின்னர் தணிகையேஸ்வரி செல்போன் மூலம் பலமுறை அழைத்தும், அருண்பிரசாத் போனை எடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த தணிகையேஸ்வரி வீட்டுக்கு திரும்பினார். அப்போது அங்கு அருண்பிரசாத் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து பொம்மிடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அருண்பிரசாத் எழுதிய பரபரப்பு கடிதம் போலீசில் சிக்கியது.

    அதில் எனது வீட்டுக்கும், பக்கத்து வீட்டுக்கும் சென்று வர பொது வழிப்பாதை இருந்தது.

    அதனை பக்கத்து வீட்டுக்காரர் ஆக்கிரமித்து, வேலி அமைத்து விட்டார்.

    இதுகுறித்து பக்கத்து வீட்டுகாரர்களிடம் கேட்டபோது, என்னை மிரட்டினார்.

    மேலும் எனது வீட்டருகே வசிக்கும் உடன்பிறவா தம்பி சாந்து என்பவர் மீது பக்கத்து வீட்டுகாரர்கள் கொட்டகைக்கு தீ வைத்ததாக கூறி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.

    அதை நான் பார்த்ததாகவும் காவல் நிலையத்தில் பொய் சாட்சி கூற சொன்னார்கள். இதனால் நான் மனமுடைந்து போனேன். எனது உடன்பிறவா தம்பி சாந்து இவர் கொடுத்த தொல்லையால் ஜெயிலுக்கு சென்றுள்ளார்.

    சாட்சி சொல்லவில்லை என்றால் என்னையும், எனது மனைவியும் வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டினார்.

    அதனால் எங்கள் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் உள்ளோம் என்று ஆசிரியர் அருண்பிரசாத் அந்த கடிதத்தில் எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஆசிரியரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பக்கத்து வீட்டுகாரர்களான நாமக்காரர் என்னும் சிவசங்கர், அவரது மனைவி ஜெயா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தற்கொலை செய்துக்கொண்ட சுடலை முத்துவின் வீடு, கல்லூரி வளாகத்திற்கு மிக அருகிலேயே உள்ளது.
    • குடும்ப பிரச்சினை காரணமாக சுடலை முத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதிகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை செந்தமிழ்நகரை சேர்ந்தவர் கொம்பன். இவரது மகன் சுடலைமுத்து (வயது 30). இவர் நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை பேட்டையில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதனை பார்த்து கல்லூரிக்கு சென்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது சுடலைமுத்து மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுடலை முத்துவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்துக்கொண்ட சுடலை முத்துவின் வீடு, கல்லூரி வளாகத்திற்கு மிக அருகிலேயே உள்ளது. அவர் அதே கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர் ஆவார்.

    குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதிகிறார்கள். இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. 

    • குருசுந்தர் மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக கூறப்படுகிறது.
    • ஆசிரியர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கதவை திறந்து பார்த்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குருசுந்தர் (வயது 41), தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி செண்பகக்கனி. இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.

    இந்த நிலையில் குருசுந்தர் மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனைத்தொடர்ந்து மனவேதனை அடைந்த செண்பகக்கனி 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம், சிவகிரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதன் பின்னர் கடந்த 2 நாட்களாக ஆசிரியர் குடும்பத்தினர் வசித்து வந்த வீடு திறக்கப்படாமல் இருந்தது. ஆசிரியர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கதவை திறந்து பார்த்தனர். அப்போது ஆசிரியர் குருசுந்தர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

    இதுபற்றி அவரது மனைவியின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×