search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 260854"

    • தா.பழூர் அருகே ரூ.48.81 லட்சத்தில் சாலை பணிகள் தொடங்கப்பட்டது
    • இதற்கான பூமி பூஜையில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தலைமையேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் கோடங்குடி கிராமத்தில் இருந்து சோழமாதேவி செல்லும் மண் சாலையை விவசாய பயன்பாடுகளுக்காக மெட்டல் சாலையாக தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் 2022-23, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22, 2022-23 திட்டங்களின் கீழ் ரூ.48 லட்சத்து 81 ஆயிரம் திட்ட மதிப்பில் சாலை பணிகள் நடைபெற உள்ளன.

    இதற்கான பூமி பூஜையில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தலைமையேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம் (வட்டார ஊராட்சி), விஸ்வநாதன் (கிராம ஊராட்சிகள்), உதவி பொறியாளர் சுமதி, இளநிலை பொறியாளர் சரோஜினி, கோடங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா நடராஜன், துணைத் தலைவர் சுமதி மதியழகன், ஊராட்சி செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 3,649 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
    • 106.693 கி.மீ., புறவழிச்சாலையாக அமையும் வகையில் திட்ட வடிவமைப்பு உள்ளது.

     உடுமலை :

    மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி - திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலை திட்டம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.மத்திய அரசு 40 சதவீதம், தனியார் 60 சதவீதம் என்ற அடிப்படையில் 3,649 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

    பொள்ளாச்சி - மடத்துக்குளம் 50.07 கி.மீ., மடத்துக்குளம் - ஒட்டன்சத்திரம் 45.38 கி.மீ., ஒட்டன்சத்திரம் - கமலாபுரம் 36.51 கி.மீ., என 131.96 கி.மீ., சாலை அமைக்கவும், இதில் 106.693 கி.மீ., 80 சதவீதம் புறவழிச்சாலையாக அமையும் வகையில் திட்ட வடிவமைப்பு உள்ளது.இத்திட்டத்தின் கீழ் மடத்துக்குளம் முதல் திண்டுக்கல் கமலாபுரம் வரை பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்று போக்குவரத்திற்கு தயாராக உள்ளது.

    அதே போல் பழநி சண்முகநதி, அமராவதி ஆறுகளின் குறுக்கேயும் இரண்டு ரெயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 47 கி.மீ.,க்கு அணுகுசாலை, 146 பஸ் ஸ்டாப்கள், நான்கு கனரக வாகன ஓய்விடங்கள் அமையும் வகையில் திட்ட வடிவமைப்பு உள்ளது.இத்திட்டத்தின்கீழ் பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. அதிலும் உடுமலை - தாராபுரம் ரோட்டை கடக்கும் வகையில் உள்ள பாலம் வழக்கு காரணமாக நிலுவையில் உள்ளது.

    ஏற்கனவே திட்ட பணிகள் நிறைவு பெறும் காலக்கெடு முடிந்துள்ள நிலையில் இன்னும் பணிகள் நிறைவு பெறாமல் இழுபறியாகி வருகிறது. அதிவிரைவு சாலை பணிகள் தாமதத்தால் பிரதான ரோடுகளில் போக்குவரத்து பாதிப்பு, விபத்துகள் ஏற்படுவதோடு விவசாய நிலங்கள், கிராமங்களுக்கு செல்வதிலும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.எனவே பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளிலும் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பணிகளை தொடங்குவதற்கு பூமி பூஜை போட்டு ஒன்றரை மாதங்கள் கடந்த பின்னும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
    • சில தினங்களாக மழை பெய்து வருவதினால் சேரும் சகதியுமாக மாறுவதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொப்பையாறு அணை வழியாக பொம்மிடி வரை செல்லும் தார்சாலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சாலையின் இருபுறமும் பிளவு ஏற்பட்டு போக்குவரத்துப் பாதை தடைப்பட்ட நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இச்சாலையை தினமும் 1000- க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லுகின்ற முக்கிய சாலையாக உள்ளது.

    தொப்பையாறு அணை நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டிய நிலையில் இருந்ததால் இச்சாலையை சீரமைக்க முடியாத நிலையில் இருந்தன. அதனை தொடர்ந்து அணையின் நீர்மட்டம் குறைந்ததால் பழுதான தடுப்பு சுவர் பகுதியின் அருகே தற்காலிக புதிய மாற்று பாதை ஏற்படுத்தப்பட்டு, பழுதான சாலையில் பெரிய அளவிலான புதிய தடுப்பு சுவர் அமைத்து சாலையை சீரமைக்க, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ. 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிக்கான பூமிபூஜை, அடிக்கல் நாட்டும் விழா மார்ச் மாதம் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிலையில் பணிகளை தொடங்குவதற்கு பூமி பூஜை போட்டு ஒன்றரை மாதங்கள் கடந்த பின்னும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் ஏமாற்றத்துக்குள்ளாகி உள்ளனர். மேலும் தற்காலிக மண்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் தற்போது அதில் பயணம் செய்து வருகின்றனர். சில தினங்களாக மழை பெய்து வருவதினால் சேரும் சகதியுமாக மாறுவதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாலப்பணிகளை தொடங்கி உடனடியாக முடித்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

    • சாலைகள்மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
    • கழிவுநீர் கால்வாய் பழுதடைந்துள்ளதால் அதை சீரமைத்து தரவேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சி லரும், ம.தி.மு.க.மாநகர் மாவட்ட செயலாளருமான ஆர்.நாகராஜ் மேயர் தினேஷ்கு மாரை நேரில் சந்தி த்து அடிப்படைவசதிகள் தொடர்பாகமனு கொடுத்தார்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :- 24-வது வார்டுக்குட்பட்ட அம்மன் வீதிகள் முழுவதும் 4-வது குடிநீர்திட்ட குழாய் அமைக்கும் பணி நிறைவ டைந்துள்ள நிலையில் சாலைகள்மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த பகுதியில் வீடுகளுக்கு இன்னும் பாதாளசாக்கடை இணைப்பு கொடுக்க ப்படவில்லை.அந்த பணிகளும் நிறைவடை ந்தால் சாலைகள் மேலும் பழுதடையும். எனவே வீடுகளுக்கான பாதாள சாக்கடைஇணைப்பு பணியை விரைந்து முடித்து அம்மன் வீதிகள் முழுவது ம்சாலையை சீரமைத்து தர வேண்டும்.மேலும் அம்மன் வீதிகளில் 70 சதவீதத்திற்கு மேல் கழிவுநீர் கால்வாய் பழுதடைந்து இருப்பதாலும், சாலைகள் குறுகிய சாலைகளாககாணப்படு வதாலும்கூடுதல் கவனம் செலுத்தி கழிவுநீர் கால்வாய் மற்றும் புதிய சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதே போல் வார்டுக்குட்பட்ட திருமலைநகர்,சத்யாநகர், அறிவொளிவீதி, டி.என்.சேஷன் வீதி,லட்சுமி தியேட்டர் பிரதான சாலை, ராமர் வீதி, சண்முகாநகர், ஆர்.பி.கே.கம்பெனி வீதி, முருங்கை தோட்டம், செல்லம்மாள் காலனி, திருநீலகண்டர்வீதி, அம்சவிநாயகர்கோவில் கிழக்கு பகுதி, ஆர்.ஜி.பி. குடோன் வீதி ஆகிய பகுதிகளில்கழிவுநீர் கால்வாய்பழுதடை ந்துள்ளதால்அதை சீரமைத்து தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.முன்னதாக 24-வது.வார்டு க்குட்பட்ட பகுதிகளில் காணப்படும்அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை படத்துடன் கூடிய தொகுப்பாக கவுன்சிலர் நாகராஜ், மேயர், கமிஷனர் ஆகியோ ரிடம் வழங்கினார்.

    • நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமனோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகராட்சி 36 வார்டுகளில் 5 தொகுப்புகளாக தமிழ்நாடு கிராமப்புற சாலை அபிவிருத்தி துரிப் திட்ட மூலம் (2022-2023) ரூ.7.83 கோடி மதிப்பீட்டில் 13.745 கி.மீ அளவிலான 133 சாலை பணிகள் செயல்படுத்த திட்டம் தொடக்க விழா திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு 14 வது வார்டு பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமை தாங்கினார். அனைவரையும் நகராட்சி பொறியாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.

    133, சாலை பணிகளை பூமி பூஜை போட்டு பணிகளை திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி தொடங்கி வைத்தார்.

    இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆவின் சேர்மன் நகர கழக செயலாளர் எஸ். ராஜேந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் அகால் சுந்தர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் நகராட்சி மேற்பார்வையாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் ஆய்வு மேற்கொண்டு விரைவில் சாலை பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது ஏலகிரி மலையில் பல்வேறு பணிகள் சட்டமன்ற உறுப்பினர் மூலம் நடைபெற்று வருகிறது.

    இதனை நேற்று ஏலகிரிமலை ஊராட்சியில் ராயனேரி முதல் கீழ்காடு வரையும், அத்தனாவூர் முதல் கோட்டூர், பள்ளக்கணியூர், ஐயம்பாறை வரையும், பாடனூர் முதல் புத்தூர், தாயலூர் வரையும் சாலை அமைக்க திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் கு.செல்வராசு, வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், துணைத் தலைவர் திருமால், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி, சங்கர், மணிமேகலை, ராஜ்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளம் அருகேரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.
    • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் சாலை, புதிய நியாய விலை கடை, கலையரங்கம் ஆகியவற்றுக்கான கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்புராஜன், ஊராட்சி மன்ற தலைவர் சீதா லட்சுமி, வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் கிள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலைகள் அமைக்க திட்ட மிடப்பட்டது.

    இதற்கான பணியை அமைச்சர்மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், மாவட்டத்தில் பேரூராட்சி கள், ஊராட்சிகள், மாநக ராட்சி, நகராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலன் கருதி சாலைகளை சீரமைத்தல், மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக, கிள்ளியூர் பேரூராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட ஐரேனிபுரம் கூட்டுறவு வங்கி முதல் பேராலி வரையில் 15-வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், இப்பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில், கிள்ளியூர் பேரூராட்சி தலைவர்சீலா சத்தியராஜ், துணைத்தலை வர் சத்தியராஜ், கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • ஊத்துக்குளி கிளையின் ஏ.டி.எம். எந்திரத்தினை அமைச்சர் திறந்து வைத்தார்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி, குன்னத்தூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் வளர்ச்சி பிரிவு நேர்முக உதவியாளர் வாணி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மதுமிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்சீனிவாசன், ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    மழை காலம் தொடங்க இருப்பதால் சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அனைத்து பொது மக்களுக்கும் குடிநீர் வசதி தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊராட்சிகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்கள் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கூட்டு குடிநீர் திட்டம் மூலம் முழு கொள்ளளவு தண்ணீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    கொடிவேரி மற்றும் அவினாசி -அத்திக்கடவு திட்டத்தில் கூடிய விரைவில் நேரடியாக ஆய்வு செய்து விடுபட்ட பணிகள் சரி செய்யப்படவுள்ளது. திட்டங்கள் முழுமையாக பயனடையும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஊத்துக்குளி கிளையின் ஏ.டி.எம். எந்திரத்தினை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் 5 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சிறுவணிகக்கடன்களும், 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் முத்ரா கடனும், 3 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மத்திய காலக்கடன்களும் என மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார். மேலும் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    ஆய்வுக்கூட்டத்தில் ஊத்துக்குளி தாசில்தார் சைலஜா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்தி லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிநாத், ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி மற்றும் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ராசுகுட்டி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடப்பட்டிருந்தன.
    • பனை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி இல்லாத போதும் அதனை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்துகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சி பத்மநாபபேரி குளத்தின் கரைகளில் ரூ.6.25 லட்சம் மதிப்பிலான மரக்கன்றுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடப்பட்டிருந்தன.

    இந்நிலையில் ஆவுடையானூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பத்மநாபபேரி குளக்கரையில் சாலை அமைக்க அனுமதி கோரி இருந்த நிலையில் பொதுப்பணித்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் தற்பொழுது அதே பொதுப்பணித்துறை சார்பில் அங்கு சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே குளக்கரையில் நடப்பட்டிருந்த ரூ.6.25 லட்சம் மதிப்பிலான மரக்கன்றுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் துளிர்விட்டு வளர்ந்து வரும் நிலையில் அவை அகற்றப்பட்டு வருகின்றன.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அதற்கான செலவினங்கள் அனைத்தும் பொதுப்பணித் துறையின் இந்த நடவடிக்கையால் விைரயம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது சாலை அமைத்து வரும் குளக்கரையில் அதிகளவில் பனை மரங்கள் இருப்பதால் அவற்றை வெட்டுவதற்கு அனுமதி இல்லாத போதும் அதனை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

    இதனால் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து கவனம் செலுத்தி தன்னிச்சையாக செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×