search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவிக்கை"

    • மஸ்தூா் ஐஐ என்ற பதவிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 582 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • நாள் ஒன்றுக்கு ரூ. 380 பெற்று வருவதுடன் பணி நிரந்தரம் செய்யவும் மறுத்து வருகின்றனா்.

    திருப்பூர்: 

    மின்வாரியத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மஸ்தூா் ஐஐ., என்ற பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளா் முன்னேற்ற கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழக மின்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, எரிசக்தி துறை செயலாளா் பீலா ராஜேஷ் ஆகியோருக்கு கூட்டமைப்பின் மாநில இணைப்பொதுச் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    தமிழக மின்வாரியத்தில் இல்லாத மஸ்தூா் ஐஐ., என்ற பணியிடங்களை மின்வாரியம் உருவாக்கி தகுதியற்றவா்களைப் பணியில் அமா்த்தி தாங்கள் விரும்பும் நபரை பணியில் சோ்க்கத் திட்டம் தீட்டி உள்ளதாகத் தெரிகிறது. மஸ்தூா் ஐஐ என்ற பதவிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 582 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் குறைந்த ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ. 380 பெற்று வருவதுடன் பணி நிரந்தரம் செய்யவும் மறுத்து வருகின்றனா். இந்த நிலையில் தற்போது புதிதாக சென்னை மத்திய மின் பகிா்மான வட்டத்தில் 14 க்கும் மேற்பட்ட பிரிவுகளுக்கு தலா 4 மஸ்தூா் ஐஐ பணியிடங்களுக்கான வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளா்களையும் தோ்தல் வாக்குறுதியின்படி பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 55118 ஆகும்.
    • நிர்வாக காரணங்களை காட்டி தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தோடு இணைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    மதுக்கூர்: -

    சிவசேனா மாநில துணைத்தலைவரும் காவி புலிப்படை நிறுவனத்தலைவரும் தமிழக இந்து பரிவார் மாநில அமைப்பாளருமான புலவஞ்சி சி.பி. போஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிரு ப்பதாவது:-

    பட்டுக்கோட்டை கல்வி மாவட்டமானது பட்டுக்கோட்டை நகராட்சி, ஒன்றியம், அதிரை நகராட்சி, மதுக்கூர் பேரூர்-ஒன்றியம் பேராவூரணி பேரூர்-ஒன்றியம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. 56 மேநிலைப்பள்ளிகளும் 52 உயர்நிலைப் பள்ளிக ளில் படிக்கின்ற மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 55118 ஆகும்.பணியாற்றும் ஆசிரியர்களும் ஊழியர்களின் எண்ணிக்கை 2207.

    பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை தஞ்சையோடு இணைக்க கூடாது- சி.பி. போஸ்நிர்வாக காரணங்களை காட்டி தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தோடு இணைப்பதை ஏற்று கொள்ள முடியாது. பாரம்ப ரியமான பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை பட்டுக்கோட்டையிலேயே செயல்பட வேண்டும். தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தோடு இணைக்க கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்கள் இப்பதவிக்கான போட்டித் தேர்வு க்கு விண்ணப்பிக்க தகுதி யற்றவர்களாக ஆகியுள்ளார்கள்.
    • தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு அறிவிப்பாணைகளை வெளியிட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன், எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 29.7.22 அன்று அறிவித்த விளம்பர எண்.622, அறிவிப்பு எண்.18/2022-ன் படி, தமிழ்நாடு அரசுத் துறைகளில் 1089 சர்வேயர் பணியிடங்களுக்கான விளம்பரம் வெளியி டப்பட்டது.அந்த விளம்பரத்தில் கல்வித் தகுதியாக, இந்திய அரசின் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழை பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வா ணையம் அறிவிப்பு வெளியிட்டு ள்ளது.

    அந்த அறிவிப்பால், தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் இப்பதவி க்கான போட்டித் தேர்வு க்கு விண்ணப்பிக்க தகுதி யற்றவர்களாக ஆகியுள்ளா ர்கள்.

    தமிழ் நாட்டிலேயே படித்து, அரசின் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழை பெற்றிருக்கின்ற தமிழக இளைஞர்களை, மேற்கண்ட வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாக ஆக்கியுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த அறிவிக்கை.

    எனவே, சர்வேயர் பணியிட ங்களுக்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பி ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்கும் கால அளவை நீட்டிப்பு செய்தும் தமிழக அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயின்று சான்றிதழ் பெற்ற அனைத்து தமிழக மாணவர்களையும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களாக திருத்தம் செய்தும், புதிய அறிவிப்பினை வெளியிடுவதற்கு தி.மு.க அரசு உரிய ஆலோசனையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு வழங்க வேண்டும்.

    லட்சக்கணக்கான தமிழக மாணவர்கள் வேலைக்காக ஏங்கித் தவிக்கின்ற இன்றைய காலச் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இனிவரும் காலங்களில் நடத்துகின்ற தேர்வுகளை மிகுந்த கவனத்தோடு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு அறிவிப்பாணைகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×