என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிலாளி உயிரிழப்பு"
- நந்தி வட்டே மன்னேவை சேர்ந்தவர் திருப்பதையா கூலித் தொழிலாளி.
- 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள் திருப்பதையா பரிதாபமாக இறந்தார்.
தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், நந்தி வட்டே மன்னேவை சேர்ந்தவர் திருப்பதையா (வயது 55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் திருப்பதையா தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் அப்பைய பள்ளியில் உள்ள உறவினரை சந்திப்பதற்காக பைக்கில் சென்று கொண்டு இருந்தார். பாதி வழியில் சென்றபோது திருப்பதையாவுக்கு பசி எடுத்ததால் பைக்கை நிறுத்தினார். பைக்கில் கொண்டு சென்ற வேக வைத்த முட்டைகளை சாப்பிட்டார்.
அப்போது ஒரு முட்டை அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் திணறினார்.
அவ்வழியாக சென்றவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள் திருப்பதையா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருப்பதையாவின் பிணத்தை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஆலையில் நாட்டு வெடி உள்ளிட்ட அனைத்து விதமான மத்தாப்பூ மற்றும் வெடிகளும் தயாரிக்கப்படுகிறது.
- ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிவகாசி பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (50). இவர் வெள்ளியம்பட்டி காட்டுவளவு பகுதியில் அரசு அனுமதி பெற்று பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதே பகுதியில் தனித்தனியாக 5 இடங்களில் பட்டாசு ஆலை சிறிய அளவில் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த ஆலையில் நாட்டு வெடி உள்ளிட்ட அனைத்து விதமான மத்தாப்பூ மற்றும் வெடிகளும் தயாரிக்கப்படுகிறது. வழக்கம் போல இன்று பட்டாசு ஆலையில் சிலர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரசலில் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த சத்தம் அருகில் இருந்தவர்களுக்கு கேட்டது.
இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது அங்கு தீக்காயத்தில் இருந்தவர்களை மீட்க முயற்சி செய்தனர். மேலும் இதுகுறித்து வீராணம் போலீசாருக்கும், வாழப்பாடி தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் படுகாயம் அடைந்த சிவகாசி பகுதியை சேர்ந்த ஜெயராமன் (55), சின்னனூர் பகுதியை சேர்ந்த கார்த்தி (30), முத்துராஜ் (29), சுரேஷ் ஆகிய 4 பேரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பட்டாசு வெடித்த ஆலை முழுவதும் தண்ணீரை ஊற்றி பீச்சு அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிவகாசி பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார்.
போலீசாரின் விசாரணையில் ஜெயராமன் பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்க முற்படும்போது ஏற்பட்ட உரசலில் மருந்து வெடித்து சிதறியது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அண்ணாதுரை தனது வீட்டு மாட்டு கொட்டகையில் வந்து உட்கார்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை அன்னை நகரை சேர்ந்தவர் ஜெயா (60). இவரது கணவர் அண்ணாதுரை (70). இவர் பாத்திரம் அடைக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயா தங்கை மகள் பூங்கொடி தங்கள் தெருவில் உள்ள பைப்பிற்கு தண்ணீர் பிடிக்க சென்ற போது, அருகில் இருந்த புளிய மரத்தின் அடியில் டப்பாவுடன் கூடிய பிராந்தி பாட்டில் ஒன்று கிடந்துள்ளது.
அதனை பூங்கொடி எடுத்து வந்து பெரியப்பா அண்ணாதுரையிடம் கொடுத்ததாகவும் அதை வாங்கி கொண்டு அண்ணாதுரை சென்று விட்டதாகவும் சிறிது நேரம் கழித்து அண்ணாதுரை தனது வீட்டு மாட்டு கொட்டகையில் வந்து உட்கார்ந்தவர் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
உடனே அண்ணாதுரை குடும்பத்தினர் என்னவென்று சென்று பார்த்த போது அண்ணாதுரை இடுப்பில் மது பாட்டில் பாதி குடித்துவிட்டு வைத்திருந்து உள்ளார். அதை எடுத்து பார்த்த போது அது ஊதா நிறத்தில் இருந்து உள்ளது.
உடனே அண்ணாதுரை மகன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அண்ணாதுரையை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக அறிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஜெயா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கீழே கிடந்த மது பாட்டிலில் விஷம் கலந்து இருந்ததா? அல்லது அவரின் சாவுக்கு வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரியாரம் அருகே உள்ள பெரிங்கோம் பகுதியில் கல் கிரஷர் தொழிற்சாலை உள்ளது.
- தீயணைப்பு படையினர் விரைந்து வந்து எந்திரத்தில் சிக்கி பலியானவரை மீட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரியாரம் அருகே உள்ள பெரிங்கோம் பகுதியில் கல் கிரஷர் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த பலரும் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று பணி நடைபெற்றபோது, தொழிலாளி ஒருவர் கிரஷர் எந்திரத்தில் சிக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் எந்திரத்தை நிறுத்தினர்.
பின்னர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து எந்திரத்தில் சிக்கி நசுங்கி பலியானவரை மீட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவரது பெயர் ஜூகல்டெஹரி (வயது 57), ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.
- மல்லிகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
- மல்லிகிருஷ்ணன் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு ஈஸ்வரியை அழைத்துள்ளார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோம்பைத்தொழுவை சேர்ந்தவர் மல்லிகிருஷ்ணன் (வயது32). இவருக்கும் உத்தமபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சின்னமனூர் காந்திநகர் காலனி பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். மல்லிகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஈஸ்வரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் அங்கு சென்று மல்லிகிருஷ்ணன் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு ஈஸ்வரியை அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்து தனக்குத்தானே மார்பில் குத்திக்கொண்டு மயக்கம் அடைந்தார். அவரது உறவினர்கள் எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. இதனால் அச்சமடைந்த அவர்கள் மல்லி கிருஷ்ணனை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சேகர் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது.
- சேகரின் மனைவி நித்யா, தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் வெள்ளரி வெள்ளி ஊராட்சி கல்லப்பாளையம் காலனியை சேர்ந்தவர் சேகர் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி நித்யா, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
சேகர் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக சேகர் சரியாக வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் எடப்பாடி அடுத்த கள்ளுக்கடை அருகே அரசு மதுபான கடையும், அதன் அருகில் மதுபான பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த மதுபான பாரில் சேகர் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் சேகர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சேகரின் உறவினர்கள் அங்கு திரண்டனர். உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார்.
இந்த நிலையில் சேகர் இறந்து கிடந்த இடத்திற்கு சற்று தொலைவில் மேலும் ஒரு நபர் நீண்ட நேரமாக மதுபோதையில் சுயநினைவு இன்றி கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நபருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர் கூறுகையில், நானும், சேகரும் பாரில் ஒன்றாக அமர்ந்து மது குடிக்கவில்லை. அவர் யார்? என எனக்கு தெரியாது. வழக்கம்போல் நான் இங்கு மது குடிக்க வருவேன். அதுபோல் நேற்று இங்கு வந்து மது குடித்தேன். போதை தலைக்கேறியதால் நடக்க முடியாமல் பார் அருகில் படுத்துவிட்டேன், என்றார்.
பின்னர் அந்த நபர் அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பூலாம்பட்டி போலீசார், சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து, சேகரின் மனைவி நித்யா, தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேகர், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் மது குடிக்கக்கூடாது என டாக்டர்கள் அவரிடம் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் சேகர் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவு அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார் என முழு விபரங்களும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
சேகர் சொந்த ஊரான கல்லப்பாளையம் காலனி பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து அங்கு பதற்றமும், பரபரப்பும் நிலவி வருவதால் சேகரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக போலீசார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனிடையே அவரது உறவினர்கள், சேகரின் சாவில் சந்தேகம் இருப்பதால், மது வாங்கி குடித்த அரசு டாஸ்மாக் கடையில் உள்ள மது வகைகளை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், பாரில் உள்ள உணவு பொருட்களையும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கூலி தொழிலாளியான சிங்கராவணன் மஞ்சுவிரட்டை பார்த்துக்கொண்டிருந்தார்.
- அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி என்ற கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. ஏகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இங்கு ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் இந்தாண்டு இன்று காலை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறிப்பாக திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் மஞ்சுவிரட்டு போட்டியில் உற்சாகமாக பங்கேற்றிருந்தன.
வழக்கம் போல் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்ததை ஆரவாரம் செய்து ஏராளமானோர் ரசித்துக்கொண்டிருந்தனர்.
இதனிடையே இதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சிங்கராவணன் (வயது42) என்பவர் மஞ்சுவிரட்டை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஓடி வந்த காளை அவரை முட்டி தள்ளியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சுவிரட்டு போட்டி என்பது ஜல்லிக்கட்டு போன்று இல்லாமல் ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விடுவது போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- முருகையன் அதியமான் கோட்டை அருகே உள்ள தடங்கம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
- முருகையன் நேற்றிரவு இரவு அளவுக்கு அதிகமாக மதுபோதையில் பலாப்பழத்தை சேர்த்து சாப்பிட்டார்.
தருமபுரி:
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் முருகையன். இவர் தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகே உள்ள தடங்கம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
நேற்றிரவு இரவு அளவுக்கு அதிகமாக மதுபோதையில் பலாப்பழத்தையும் சேர்த்து சாப்பிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்க ல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தொழிலாளி பாரதி மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
- ஆமூரில் தண்ணீர் டேங்க் அருகில் பாரதி இறந்து கிடந்தார்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த ஆமூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (வயது54). தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் ஆமூரில் தண்ணீர் டேங்க் அருகில் பாரதி இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- வெடி விபத்தில் அறையில் இருந்த ரவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- வெடி விபத்தில் சிக்கிய சாமுவேல் ஜெயராஜை மீட்ட வீரர்கள் அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
வட மாநிலங்களில் பண்டிகைகள் வருவதை முன்னிட்டு தற்போது இங்கு பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. திருத்தங்கல் மேல மாட வீதியைச் சேர்ந்த ரவி (வயது 58), சாமுவேல் ஜெயராஜ் ஆகிய 2 பேர் இங்கு வேலை பார்த்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த இவர்கள் ஆலையில் உள்ள தனியறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்துகளை தயார் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது மருந்துகளுக்குள் உராய்வு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் தீ பரவி அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவியது. சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் அவை வெடிக்க தொடங்கியது. இந்த வெடி விபத்தில் அந்த அறையில் இருந்த ரவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெடி விபத்தில் சிக்கிய சாமுவேல் ஜெயராஜை மீட்ட வீரர்கள் அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து நடந்த கட்டிடம் 80 சதவீதம் இடிந்து தரை மட்டமாகி உள்ளது. விபத்தில் வேறு யாரேனும் தொழிலாளர்கள் சிக்கி உள்ளார்களா? என தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றின் அருகே நாய் குட்டி ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.
- கிணற்றில் எதிர்பாராத விதமாக நாய்குட்டி தவறி விழுந்து விட்டது.
வேலூர்:
காட்பாடி ஜாப்ராபேட்டை ஜி.என்.நகர் மணவாளமோடு பகுதியை சேர்ந்தவர். குமரேசன் என்கிற வல்லரசு (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு ரேவதி என்ற மனைவி 3 மகன்கள் உள்ளனர். இவருடைய வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றின் அருகே நாய் குட்டி ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது கிணற்றில் எதிர்பாராத விதமாக நாய்குட்டி தவறி விழுந்து விட்டது.
அதனை பார்த்த குமரேசன் கயிறு மூலம் வாளியை கட்டி நாய் குட்டியை காப்பாற்ற முயற்சி செய்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கிணற்றில் விழுந்து விட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தார்.
இதுகுறித்து விருதம்பட்டு போலீசாருக்கும், காட்பாடி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்து பலியான குமரேசன் உடலை மீட்கும் பணியில் நேற்று முன்தினம் முழுவதும் ஈடுபட்டனர். இருப்பினும் உடலை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில் நேற்று பாதாளசங்கலியை கொண்டு வந்து குமரேசன் உடலை தேடினர். இருந்தும் கிடைக்காததால் கிணற்று நீரை மோட்டார் மூலம் வெளியேற்றி பிணத்தை மீட்டனர். பிணத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிலாளி சித்து விறகு எடுக்க காடகநள்ளி என்ற அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றார்.
- மாலை நீண்ட நேரமாகியும் சித்து வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடி வனப்பகுதிக்குள் சென்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கடம்பூர் வனப்பகுதியையொட்டி உள்ள எக்கத்தூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சித்து (55). தொழிலாளி.
இவர் நேற்று மதியம் விறகு எடுக்க காடகநள்ளி என்ற அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஒற்றை யானை சித்துவை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
தொடர்ந்து இறந்துவிட்ட சித்துவின் உடல் அருகே அந்த யானை நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மாலை நீண்ட நேரமாகியும் சித்து வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடி வனப்பகுதிக்குள் சென்றனர்.
அப்போது அவர் யானை தாக்கி இறந்து கிடப்பதையும் அவரது அருகில் ஒற்றை யானை நிற்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் தீ மூட்டி யானையை விரட்டினர். தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடம்பூர் வனச்சரகர் இந்துமதி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து யானை தாக்கி பலியான சித்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்