என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 263987"
- காமராஜரின் மக்கள் சேவையும், எளிமையும் ராணியை வெகுவாக கவர்ந்ததால் மரபை மீறி விருந்து கொடுத்து உபசரித்தார்.
- முதல்முறையாக ராணி எலிசபெத் 1961-ம் ஆண்டு இந்தியா வந்தார். அப்போது பிரதமர் நேருவை சந்தித்தார்.
மறைந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத் என்றதும் அந்த மகராசியின் மறையாத நினைவுகளை உலகமே அசைபோடுகிறது.
உலக தலைவர்கள் முதல் நம்மூர் கமல்ஹாசன் வரை பலரது உள்ளங்களில் ராணியாக இருப்பவர்.
இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம் நாட்டின் முதல் பிரதமராக நேரு இருந்த போதுதான் அதாவது 1953-ம் ஆண்டு எலிசபெத் ராணியாக முடி சூடினார்.
அந்த விழாவுக்காக நேருவும் சென்றுள்ளார். அந்த விழாவில் தான் நேரு முதல் முறையாக டி.வி.க்கு பேட்டி கொடுக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. பி.பி.சி. தொலைக்காட்சி அவரை பேட்டி எடுத்து ஒளிபரப்பி இருக்கிறது. அந்த பேட்டியில் நேரு கூறியதாவது:-
தொலைக்காட்சியை பற்றி நான் கேள்விப்பட்டதை தவிர அதுகுறித்து கொஞ்சம் தான் தெரியும். மகாராணியின் முடிசூட்டு விழாவுக்கு நான் வந்த போதே விமர்சனம் இருந்தது. திரும்பி செல்லும் போதும் இருக்கும். அதில் சந்தேகம் இல்லை.
ஆனால் அதிக அளவு விமர்சனம் இருக்கும் என்று தோன்றவில்லை. இதுதான் அவரது முதல் தொலைக்காட்சி பேட்டி.
முதல்முறையாக ராணி எலிசபெத் 1961-ம் ஆண்டு இந்தியா வந்தார். அப்போது பிரதமர் நேருவை சந்தித்தார். மேலும் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களுக்கும் வந்தார். ஆக்ராவில் தாஜ்மஹால் அழகை ரசித்தார். ராஜ்கோட்டில் காந்தி நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அழைப்பின் பேரில் குடியரசு தின விழா வில் கலந்துகொண்ட ராணி எலிசபெத் தம்பதிகள் கவுரவிக்கப்பட்டார்கள். அப்போது சென்னையில் தமிழகத்தின் முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜரையும் சந்தித்தார். அவரது எளிமையும், மக்கள் சேவையும் ராணியை மிகவும் கவர்ந்தது.
சென்னையில் காமராஜர் முன்னிலையிலேயே தனது மகன் ஆண்ட்ரூவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். காமராஜர் இங்கிலாந்து சென்றபோது ராணியின் அரண்மனையில் விருந்து கொடுக்கப்பட்டது. அந்த விருந்து நிகழ்ச்சியில் மரபை மீறி ராணி எலிசபெத்தே காமராஜருக்கு உணவு பரிமாறி இருக்கிறார்.
வழக்கமாக எந்த தலைவருக்கும் ராணி நேரடியாக உணவு பரிமாறுவது கிடையாது. இதுதான் மரபு. ஆனால் காமராஜரின் மக்கள் சேவையும், எளிமையும் ராணியை வெகுவாக கவர்ந்ததால் மரபை மீறி விருந்து கொடுத்து உபசரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2-வது முறையாக இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது 1983-ம் ஆண்டு இந்தியா வந்தார். அப்போது அன்னை தெரசாவை சந்தித்தார். 3-வதாக ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்தபோது 1997-ம் ஆண்டு இந்தியா வந்தார்.
அப்போது சென்னை வந்த ராணி தரமணியில் எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் கமல்ஹாசனின் மருதநாயகம் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சுமார் 20 நிமிடங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1979-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந்தேதி ராணியின் மகன் சார்லசுக்கும், டயானாவுக்கும் இடையே திருமணம் நடந்தது.
- திருமணத்தை உலக அளவில் 700 மில்லியன் பொதுமக்கள் டி.வி. மூலம் பார்த்து ரசித்தனர்.
இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ராணி எலிசபெத் கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்:-
* 1926-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி லண்டனில் உள்ள மேபேரில் ஆறாம் ஜார்ஜ்-எலிசபெத் தம்பதிக்கு ராணி எலிசபெத் பிறந்தார். இவரது முழு பெயர் எலிசபெத் அலெக்சான்ட்ரா மேரி ஆகும்.
* 1936-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்தில் நெருக்கடி நிலை ஏற்பட்ட போது ராணி எலிசபெத் தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னரானார்.
* 1947-ம் ஆண்டு இந்தியாவில் இங்கிலாந்து ஆட்சி முடிவுக்கு வந்ததும் நவம்பர் மாதம் 20-ந்தேதி ராணி எலிசபெத் பிலிப் மவுண்ட் பேட்டனை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சார்லஸ், ஆண்ட்ரூ, எட்வர்டு ஆகிய மகன்களும் ஆன் என்ற மகளும் உள்ளனர்.
* 1952-ம் ஆண்டு தந்தை ஜார்ஜ் மரணம் அடைந்தார், இதையடுத்து பிப்ரவரி 6-ந்தேதி ராணி எலிசபெத் இங்கிலாந்து ராணியாக முடிசூட்டப்பட்டார். அப்போது அவருக்கு 25 வயதுதான் ஆனது. இந்த விழா உலக அளவில் டி.வி.யில், ஒளிபரப்பப்பட்ட முதல் பிரமாண்ட நிகழ்ச்சி என்ற பெருமையை பெற்றது.
* 1977-ம் ஆண்டு ராணி எலிசபெத் பதவி ஏற்று 25 ஆண்டுகள் ஆனதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.
* 1979-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந்தேதி ராணியின் மகன் சார்லசுக்கும், டயானாவுக்கும் இடையே திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை உலக அளவில் 700 மில்லியன் பொதுமக்கள் டி.வி. மூலம் பார்த்து ரசித்தனர்.
* 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராணியின் மகன் சார்லஸ் 2-வதாக கமீலா பர்கரை திருமணம் செய்து கொண்டார்.
* 2011-ம் ஆண்டு பேரன் இளவரசர் வில்லியம், கேத்ரின் மிடிலேட்டனை திருமணம் செய்து கொண்டார்.
* 2012-ம் ஆண்டு ராணி தான் பதவி ஏற்ற 50-வது வைர விழாவை கொண்டாடினார்.
* 2015-ம் ஆண்டு ராணி எலிசபெத் இங்கிலாந்தில் அதிக வருடம் மகாராணியாக இருந்த பெருமையை பெற்று சாதனை படைத்தார்.
* 2018-ம் ஆண்டு பேரன் ஹாரி மேகன் மார்கலேவை திருமணம் செய்து கொண்டார்.
* கடந்த ஆண்டு ( 2021) ஏப்ரல் 9-ந்தேதி ராணியின் கணவர் பிலிப் தனது 99 வயதில் மரணம் அடைந்தார். இவர் 73 ஆண்டுகள் ராணியுடன் திருமண வாழ்க்கை வாழ்ந்தார்.
* இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 6-ந்தேதி ராணி அரியணைக்கு வந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்தையொட்டி ஜூன் மாதம் முழுவதும் பல்வேறு பவள விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
* 2022-ம் ஆண்டு (நேற்று) செப்டம்பர் மாதம் 8-ந்தேதி ராணி எலிசபெத் மரணம் அடைந்தார்.
- ராணி எலிசபெத் மரணம் தொடர்பான நிகழ்ச்சிகள் சுமார் ஒரு மாதம் வரை நடக்கும் என்று கூறப்படுகிறது.
- 10 நாட்கள் ராணி எலிசபெத் உடலுக்கு உலக தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
லண்டன்:
இங்கிலாந்தில் நீண்ட காலம் அரசியாக இருந்தவர் என்ற சாதனையை படைத்தவர் ராணி எலிசபெத்.
இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகாலம் இவர் ஆட்சி செய்துள்ளார். தனது தந்தை 6-ம் ஜார்ஜ் மன்னரின் மறைவைத் தொடர்ந்து 1952-ம் ஆண்டு இவர் அரியணை ஏறினார்.
96 வயதான அவர் முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் இருந்து அவர் வெற்றிகரமாக மீட்டு இருந்தார்.
இதையடுத்து ஓய்வு எடுப்பதற்காக அவர் லண்டனில் உள்ள தனது அரண்மனையான பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து ஸ்காட்லாந்தில் உள்ள பால்மரால் அரண்மனைக்கு சென்று இருந்தார். அங்கு அவர் ஓய்வு எடுத்து வந்தார். அவருடன் அவரது மகள் இளவரசி ஆனும் உடன் இருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ்டிரசை நேரில் அழைத்து பேசினார். இதுதான் அவர் மேற்கொண்ட கடைசி அரசு நிகழ்ச்சியாகும். மறுநாள் புதன்கிழமை முதல் அவரது உடல்நலத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 24 மணி நேரமும் அவரை டாக்டர்கள் குழு கண்காணித்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும் அவர் மரணமடைந்தார்.
ராணி எலிசபெத்துக்கு உடல்நலக்குறைவு தீவிரமானதால் நேற்று முன்தினத்தில் இருந்தே அவரது குடும்பத்து உறுப்பினர்கள் பால்மரால் அரண்மனைக்கு சென்றனர். இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் பால்மரால் அரண்மனைக்கு விரைந்தார். அவர் சென்ற சிறிது நேரத்தில் ராணி மரண செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து நாட்டின் அரச குடும்ப வழக்கப்படி, அரசி அல்லது மன்னர் மரணமடைந்தால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் வாரிசு பதவி ஏற்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மரணமடைந்த ராணி எலிசபெத் உடல் இன்று அல்லது நாளை லண்டன் எடுத்துவரப்பட இருக்கிறது. லண்டனில் அவருக்கு அரச குல வழக்கப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை இங்கிலாந்து அரச குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.
இது தொடர்பாக இங்கிலாந்து புதிய மன்னர் சார்லஸ் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது ராணி எலிசபெத் இறுதி சடங்குகள் பற்றி முழு விவரங்கள் தெரியவரும்.
முதல் கட்டமாக இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்றாலும், ராணி எலிசபெத் மரணம் தொடர்பான நிகழ்ச்சிகள் சுமார் ஒரு மாதம் வரை நடக்கும் என்று கூறப்படுகிறது. என்றாலும், 10 நாட்கள் ராணி எலிசபெத் உடலுக்கு உலக தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குகள் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ராணியின் உடல் 3 நாட்களுக்கு வைக்கப்பட்டு இருக்கும். அந்த 3 நாட்களும் பொதுமக்கள் தினமும் 23 மணி நேரம் அஞ்சலிசெலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு ராணியின் உடல் வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10-வது நாள் இறுதி சடங்குகள் நிகழ்ச்சி நடைபெறும்.
அரசு முறைப்படியான இறுதிச் சடங்குகள் வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் நடக்கும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு ராணியின் உடல் வின்ட்சர் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு ராணி குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்வார்கள்.
10-வது நாள் அரண்மனையில் இருந்து ராணியின் உடல் பிரமாண்டமான ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். லண்டனில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் ஆராதனைகள் செய்யப்பட்ட பிறகு அடக்கம் செய்வதற்காக உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.
லண்டனில் இங்கிலாந்து அரச குடும்பத்து உறுப்பினர்கள் மரணமடைந்தால் அவர்களது உடலை நல்லடக்கம் செய்ய பிரத்யேக கல்லறை தோட்டம் உள்ளது. அங்கு ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்த இங்கிலாந்து மக்கள் லண்டனுக்கு திரண்டு வந்தபடி உள்ளனர். அவர்கள் அரண்மனை வாசலில் பூங்கொத்துகளை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி சென்றபடி உள்ளனர்.
ராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாட்டு தலைவர்கள் இரங்கல் வெளியிட்டு உள்ளனர்.
- இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- மகாராணி எலிசபெத் மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மகாராணி எலிசபெத் மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்துக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் ஒரு நீண்ட மற்றும் புகழ்பெற்ற ஆட்சியைக் கொண்டிருந்தார். நாட்டிற்கு மிகுந்த அர்ப்பணிப்புடனும் கண்ணியத்துடனும் சேவை செய்தவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதுமை தொடர்பான உடல்நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த ராணி இரண்டாம் எலிசபெத், ஊன்றுகோல் உதவியுடனே நடமாடினார்.
- ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை தொடர்ந்து, அவரது மகனான 73 வயது இளவரசர் சார்லஸ், மன்னராக பதவியேற்க உள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து அரச வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக பதவி வகித்தவர் ராணி இரண்டாம் எலிசபெத்.
இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாம் எலிசபெத். முதுமை தொடர்பான உடல்நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த அவர், ஊன்றுகோல் உதவியுடனே நடமாடினார். இதனால் தனது பயணங்களையும் ரத்து செய்திருந்தார்.
கோடை காலத்தை கழிப்பதற்காக ஸ்காட்லாந்தின் பால்மோரல் பண்ணை வீட்டில் தங்கியிருந்த அவர், அங்கிருந்தவாறே சமீபத்தில் இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரசையும் நியமனம் செய்தார்.
இந்த நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதுமை தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டுவந்த அவரை பால்மோரல் பண்ணை வீட்டிலேயே டாக்டர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதற்கிடையே ராணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது மகன்களான இளவரசர்கள் சார்லஸ், ஆண்ட்ரூ, எட்வர்ட், மகளும் இளவரசியுமான ஆன் ஆகியோர் பால்மோரல் விரைந்தனர். சார்லசின் மனைவி கமிலாவும் உடன் சென்றார்.
அதைப்போல சார்லசின் மகன் வில்லியமும் தனது பாட்டியை பார்ப்பதற்காக பால்மோரல் சென்றார். அதேநேரம் அவரது மனைவி கேத், தனது 3 குழந்தைகளை பார்ப்பதற்காக கென்சிங்டன் அரண்மனையிலேயே தங்கினார்.
ராணியின் உடல்நலக்குறைவுக்கு கவலை வெளியிட்ட இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ், தனது எண்ணங்கள் அனைத்தும் ராணி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றியே இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உயிர் அமைதியாக பிரிந்தது. அந்த தகவலை லண்டன் பக்கிங்காம் அரண்மனை உறுதி செய்தது.
தகவல் அறிந்ததும் இங்கிலாந்து மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். கொட்டும் மழையிலும் ஏராளமானோர் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டனர். ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டுவரப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் கடந்த 6-ந்தேதி பால்மோரல் அரண்மனையில் ராணி எலிசபெத்தை சந்தித்து தான் பிரதமராக தேர்வு பெற்றதை தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவரை இங்கிலாந்து பிரதமராக ராணி எலிசபெத் முறைப்படி அறிவித்தார்.
வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தபோது இங்கிலாந்து ராணியாக பதவி ஏற்ற ராணி எலிசபெத், தனது பதவி காலத்தில் 17 பிரதமர்களை சந்தித்தவர் என்ற பெருமை பெற்றவர்.
இங்கிலாந்து ராணி மறைவுக்கு அந்நாட்டு பிரதமர் லிஸ் டிரஸ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை தொடர்ந்து, அவரது மகனான 73 வயது இளவரசர் சார்லஸ், மன்னராக பதவியேற்க உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார்.
- ராணி எலிசபெத் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
லண்டன்:
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி அந்நாட்டுடன் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இரு நாடுகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் மரணம் அடைந்ததையடுத்து இன்று நடைபெறவிருந்த இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆட்டம் மீண்டும் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- ஐக்கிய ராஜ்ஜியத்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணியின் மறைவு வேதனை அளிக்கிறது என்றார்.
சென்னை:
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் தன்னுடைய 96-வது வயதில் உயிரிழந்தார்.
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மகாராணி எலிசபெத் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், ஐக்கிய ராஜ்ஜியத்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. ஏழு தசாப்தங்கள் நீடித்த ஆட்சி, 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குப் பிறகு, இரண்டாவது எலிசபெத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.
மகாராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய கண்ணியம், பொது வாழ்க்கையில் நேர்மை மற்றும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக நீண்ட காலமாக நினைவுகூரப்படுவார். எல்லா காலத்திலும் மிகச்சிறந்த அரசர்களில் ஒருவரின் மறைவுக்கு துக்கத்தில் இருக்கும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் ராயல் குடும்பத்தினருக்கும் இங்கிலாந்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- இங்கிலாந்து மகாராணி எலிசெபத் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
- அவரது மறைவுக்கு பிரதம்ர் மோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
இங்கிலாந்து மகாராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார்.
ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பால்மோரல் அரண்மனையில் மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி ராணி எலிசபெத் காலமானார்.
இங்கிலாந்து மகாராணியின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து மகாராணியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இங்கிலாந்து மகாராணி நம் காலத்தின் தலைசிறந்த வீராங்கனையாக நினைவு கூரப்படுவார். அவர் தனது தேசத்திற்கும் மக்களுக்கும் ஊக்கமளிக்கும் தலைமையை வழங்கினார். பொது வாழ்வில் கண்ணியத்தை வெளிப்படுத்தினார் என பதிவிட்டுள்ளார்.
- இங்கிலாந்து மகாராணி எலிசெபத் (96) இன்று காலமானார்.
- அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லண்டன்:
இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார்.
இந்நிலையில், ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக் குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராணி எலிசபெத் காலமானார்.
இங்கிலாந்து மகாராணி எலிசெபத் காலமானது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- தற்போது இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரசை ராணி இரண்டாம் எலிசபெத் நியமித்துள்ளார்.
- ராணி இரண்டாம் எலிசபெத் பதவிக்காலத்தில் இங்கிலாந்து 3 பெண் பிரதமர்களைக் கண்டிருக்கிறது.
லண்டன்
இங்கிலாந்து நாட்டில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது, அந்த நாட்டின் ராணியாக ஆனவர், அவரது மகள் எலிசபெத். இரண்டாம் எலிசபெத் என அழைக்கப்படுகிற அவருக்கு அப்போது வயது 25. அப்போது இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில், அதன் பின்னர் சர் ஆண்டனி ஈடன் தொடங்கி போரிஸ் ஜான்சன் வரை 13 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி உள்ளார்.
தற்போது இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரசை ராணி இரண்டாம் எலிசபெத் நியமித்துள்ளார்.
அந்த வகையில் ராணி இரண்டாம் எலிசபெத் கண்ட இங்கிலாந்தின் 15-வது பிரதமர் என்ற சிறப்பை லிஸ் டிரஸ் பெறுகிறார்.
ராணி இரண்டாம் எலிசபெத் பதவிக்காலத்தில் இங்கிலாந்து 3 பெண் பிரதமர்களைக் கண்டிருக்கிறது. அவர்கள், மார்கரெட் தாட்சர், தெரசா மே, லிஸ் டிரஸ் ஆவார்கள்.
11 பிரதமர்கள் கன்சர்வேடிவ் கட்சியினர். 4 பேர் மட்டுமே தொழிற்கட்சியை சேர்ந்தவர்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்