search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"

    • இந்தியா முதல் சுற்றில் நான்கு போட்டிகளில் விளையாடுகிறது.
    • மூன்று போட்டிகள் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது.

    20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளில் நடத்தப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா வங்காளதேச அணிக்கெதிராக பயற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

    இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்ததால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் முன்னதாகவே அமெரிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறாத ஐபிஎல் அணிகளில் இடம் பிடித்த வீரர்கள் உள்ளிட்டோர் முதற்கட்டமாக அமெரிக்கா செல்ல பிசிசிஐ ஏற்பாடு செய்தது.

    அதன்படி நேற்று முன்தினம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோர் அமெரிக்கா புறப்பட்டனர். இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை அமெரிக்காவின் நியூயார்க் நகர் சென்றடைந்தனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    பயிற்சியாளர்கள் டிராவிட், விக்ரம் ரதோர், வீரர்கள் அக்சார் பட்டேல், முகமது சிராஜ், ஆர்ஷ்தீப் சிங், ரோகித் சர்மா, பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் நியூயார்க் சென்றடைந்துள்ளனர்.

    இந்திய அணி விளையாடும் முதல் சுற்று போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில்தான் நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் நியூயார்க்கிலும், ஒரு போட்டி லாடர்ஹில்லிலும் நடைபெறுகிறது.

    • தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
    • மே 24 அன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

    விரைவில் துவங்கவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    மே 24 அன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இன்று 2-வது டி20 போட்டி ஜமைக்காவின் சபினா மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சாஸ் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாபிரிக்க அணி தரப்பில் நகாபா பீட்டர், லுங்கி இங்கிடி, பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பின்னர் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததது. அதிகபட்சமாக டீகாக் 41 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியுள்ளது.

    • விராட் கோலி இன்னும் அமெரிக்கா புறப்படவில்லை.
    • கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் அமெரிக்கா செல்லவில்லை.

    டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.

    கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் இந்திய வீரர்களான பண்ட், ஜடேஜா, சிவம் துபே, சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் முதல் கட்டமாக அமெரிக்கா சென்றுள்ளனர்.

    விராட் கோலி இன்னும் அமெரிக்கா புறப்படவில்லை. அடுத்தக்கட்ட வீரர்களுடன் அவர் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. அதனால் கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் இன்று அமெரிக்கா செல்லவில்லை.

    இந்திய அணி ஜூன் 5 ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது மற்றும் ஜூன் 9 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    • முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு183 ரன்களை குவித்தது.
    • அதிகபட்சமாக கேப்டன் ஜாஸ் பட்லர் 84 ரன்களும் வில் ஜேக்ஸ் 37 ரன்களும் எடுத்தனர்.

    விரைவில் துவங்கவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று பர்மிங்காம் நகரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்றது.

    அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு183 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜாஸ் பட்லர் 84 ரன்களும் வில் ஜேக்ஸ் 37 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் சாஹின் அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 0, ஆயுப் 2 ரன்களில் வந்த வேகத்தில் நடையை கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் ஆசாம் - பக்கர் ஜமான் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    நிதானமாக விளையாடுய ஆசாம் 32 ரன்களிலும் மறுபுறம் அதிரடி காட்டிய பக்கார் ஜமான் 45 (21) ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 19.2 ஓவரில் பாகிஸ்தான் அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. அதன் காரணமாக 1 – 0* (4) என்ற கணக்கில் டி20 தொடரில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது.

    • 9-வது டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.
    • இந்தத் தொடருக்கான வர்ணனையாளர்கள் குழுவில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார்.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான வர்ணனையாளர் குழுவை ஐ.சி.சி. நேற்று அறிவித்தது. அதில் ஐ.பி.எல். தொடரில் இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற பெங்களூரு அணி வீரரான தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பல டி20 உலகக் கோப்பை தொடர்களில் வீரராக களமிறங்கிய அவர், தற்போது வர்ணைனையாளர் என்ற புதிய அவதாரத்துடன் நடப்பு தொடரில் பங்கேற்க உள்ளார்.

    தினேஷ் கார்த்திக் டி20 உலகக் கோப்பை தொடரில் வர்ணனை செய்யப்போவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பிராவோ உள்ளார்.
    • டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது.

    20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது.

    இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னணி வீரர்களான முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    எதிர்வரும் டி20 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் பவுலிங் ஆலோசகராக டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணி அமெரிக்காவிற்கு சென்றுள்ள நிலையில், பிராவோ விரைவில் அணியில் இணைவார் என்று தெரிகிறது.

    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பிராவோ உள்ளார். மேலும் 2 முறை டி20 உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராவோ இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா இடம் பிடித்துள்ள குரூப் ஏ பிரிவில் கனடா இடம் பிடித்துள்ளது.
    • முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 20 அணிகள் விளையாடுகின்றன.

    இதனால் குட்டி குட்டி அணிகளுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குட்டி அணிகளில் ஒன்று கனடா. குரூப் "ஏ" பிரிவில் கனடா இடம் பிடித்துள்ளது. முதல் போட்டியில் அமெரிக்காவுடன் மோதுகிறது. மேலும் அயர்லாந்து, பாகிஸ்தான், இந்தியாவுடன் விளையாட இருக்கிறது.

    இந்த நிலையில் கனடா அணி டி20 போட்டிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளனர். கனடா அணியின் தேசியக்கொடியில் சிகப்பு வண்ணம் காணப்படும். அதை வலியுறுத்தும் வகையில் சிகப்பு நிறத்தில் ஜெர்சி அமைந்துள்ளது.

    • ஐபிஎல் போட்டி 26-ந்தேதி முடிவடையும் நிலையில், உலகக்கோப்பை போட்டி தொடங்க ஒரு வாரம் கூட இல்லை.
    • வழக்கமாக ஒவ்வொரு அணிகளும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இருக்கும் 20 நாடுகள் தங்கள் அணியில் இடம்பெறும் வீரர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது. வங்காளதேச அணி அமெரிக்கா புறப்பட்டுள்ளது.

    பொதுவாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு முன்பு ஒவ்வொரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும். அந்த வகையில் இந்தியா இரண்டு பயற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மே 26-ந்தேதி முடிவடைகிறது. ஜூன் 1-ந்தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இரண்டிற்கும் இடையில் ஒரு வார இடைவெளி கூட இல்லை.

    இந்த நிலையில் இந்தியா ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் மட்டும் விளையாடும் எனத் தெரிகிறது. நியூயார்க்கில் நடைபெறும் அந்த பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் (ஜூன் 1-ந்தேதி) அமெரிக்கா கனடாவை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்தியா விளையாடும் லீக் போட்டிகள் நியூயார்க்கில் உள்ள மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பயணத்தை தவிர்க்க பயிற்சி ஆட்டமும் அங்கேயே நடைபெற வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் டல்லாஸ், நியூயார்க் மற்றும் மியாமி அருகில் உள்ள போர்ட் லார்டர்ஹில் ஆகிய மூன்று இடங்களில் மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    34 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கும் ஐசன்ஹோவர் பார்க் மைதானத்தை அதிகவேக ஒட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட் அதிகாரப்பூர்வமாக இன்று திறந்து வைத்தார்.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது.
    • அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2 ஆம் தேதி துவங்குகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் 2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஆயத்தமாகும் வகையில், அணிகள் ஒவ்வொன்றாக அமெரிக்கா புறப்பட்டன. சில தினங்களுக்கு முன்பு இலங்கை அணி அமெரிக்கா புறப்பட்டு சென்றது. அந்த வரிசையில், தற்போது ஆசிய நாடுகளில் ஒன்றான வங்காளதேசம் கிரிக்கெட் அணி அமெரிக்கா புறப்பட்டது.

    அமெரிக்கா புறப்படும் முன் வங்காளதேசம் அணி வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹாசனுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    • அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத், சவுமியா சர்கார், முஸ்தாபிசுர் ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • ரிசர்வ் வீரர்களாக அபிப் ஹொசைன், ஹசன் மஹ்மூத் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.

    அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வங்காளதேச கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

    அதன்படி வங்காளதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத், சவுமியா சர்கார், முஸ்தாபிசுர் ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    வங்காளதேச அணி விவரம்:-

    நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ், சவுமியா சர்கார், தன்சித் ஹசன் தமீம், ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா ரியாத், ஜேக்கர் அலி அனிக், தன்வீர் இஸ்லாம், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப்.

    ரிசர்வ் வீரர்கள்; அபிப் ஹொசைன், ஹசன் மஹ்மூத்

    • இளம் அதிரடி வீரர் மைக்கேல் லெவிட்டிற்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியில் இடம்கிடைத்துள்ளது.
    • இளம் வீரர்களான டிம் பிரிங்கிள், கைல் கெலின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இதன் காரணமாக இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

    இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நெதர்லாந்து கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

    அதன்படி ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியில் அனுபவ வீரர்கள் ரோலோஃப் வான்டெர் மெர்வ் மற்றும் காலின் அக்கர்மேன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் இளம் வீரர்களான டிம் பிரிங்கிள், கைல் கெலின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுடன் இளம் அதிரடி வீரர் மைக்கேல் லெவிட்டிற்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியில் இடம்கிடைத்துள்ளது. அதேசமயம் மேக்ஸ் ஓடவுட், ஆர்யன் தத், லோகன் வான் பீக், பால் வான் மீகெரன், விக்ரம்ஜித் சிங், வெஸ்லி பரேஸி, ஃபிரெட் கிளாசென், பாஸ் டி லீட் போன்ற நட்சத்திர வீரர்கள் தங்கள் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

    நெதர்லாந்து அணி:

    ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), ஆர்யன் தத், பாஸ் டி லீட், டேனியல் டோரம், ஃபிரெட் கிளாசென், கைல் கெலின், லோகன் வான் பீக், மேக்ஸ் ஓ'டவுட், மைக்கேல் லெவிட், பால் வான் மீகெரென், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், தேஜா நிடமானுரு, டிம் பிரிங்கிள், விக்ரம்சித் சிங், விவ் கிங்மா, வெஸ்லி பாரேசி.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது.
    • அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

    டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாத துவக்கத்தில் நடைபெற இருக்கிறது. ஜூன் 2 ஆம் தேதி துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் மோதுகின்றன.

    உலகக் கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணி அமெரிக்காவின் நியூ யார்க் நகருக்கு புறப்பட்டது.

    இலங்கை அணி அமெரிக்கா புறப்பட்டதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. 

    ×