search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"

    • பல முறை இறுதிப் போட்டிக்கு வந்தும் ஐ.சி.சி. கோப்பையை வெல்ல முடியாத ஏக்கம் இருந்தது.
    • அந்த கனவு நீண்ட இடைவெளிக்கு பிறகு நனவானது. வீரர்களால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இந்திய அணி வெற்றி பெற்றதும் வீரர்கள் மைதானத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தனர். பல முறை இறுதிப் போட்டிக்கு வந்தும் ஐ.சி.சி. கோப்பையை வெல்ல முடியாத ஏக்கம் இருந்தது. அந்த கனவு நீண்ட இடைவெளிக்கு பிறகு நனவானது. வீரர்களால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. 

    இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, விராட்கோலி உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.

     

    ரோகித்சர்மா மைதானத்தில் குப்புற படுத்து கையால் தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அதோடு தேசிய கொடியை தனது கைகளால் நிலை நிறுத்தினார். கோலியும், பாண்ட்யாவும் தனது குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோகால் மூலம் பேசி சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.

    இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
    • இதன் மூலம் 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில் பிரபலமான கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. ஆனால் அந்த மாதிரி வந்து கோப்பை வாங்குங்கள் என கூறியது சக வீரரான குல்தீப் யாதவ். இந்திய வீரர்கள் அனைவரும் வரிசையாக நின்று பதக்கங்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது ரோகித் சர்மாவிடம் குல்தீப், மெஸ்ஸி ஸ்டைலில் கோப்பையை பெறுங்கள் என கூறியதும் அதற்கு ரோகித் சரி என்பது போல தலையை அசைப்பது அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

    • டிராவிட்டுக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக இந்திய வீரர்கள் செய்த செயல் வைரலாகி வருகிறது.
    • ரோகித் சர்மா விராட் கோலியிடன் ராகுல் டிராவிட்டை இப்படி செய்யலாம் என கூறினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் இந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் முடிவுக்கு வருகிறது.

    அவர் பயிற்சியாளராக தனது கடைசி உலகக் கோப்பை போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் டி20 உலகக் கோப்பையில் கைப்பற்றும் முதல் டிராபி இது தான். வீரராகவோ, கேப்டனாகவோ உலகக் கோப்பையை கையில் ஏந்தி சாதிக்க முடியாத ராகுல் டிராவிட் ஒரு பயிற்சியாளராக தனது உலகக் கோப்பை ஏக்கத்தை தணித்து இருக்கிறார்.

    இந்நிலையில் அவருக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக இந்திய வீரர்கள் செய்த செயல் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ராகுல் டிராவிட்டை இந்திய வீரர்கள் தலைக்கு மேலாக தூக்கி போட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். இதனை ரோகித் சர்மா விராட் கோலியிடம் கூறி இதனை செய்தனர். அவர்களது செயலை ராகுல் டிராவிட்டும் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

    டிராவிட்டின் பயிற்சியில் கீழ் இந்திய அணி 2023-ம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவற்றில் இறுதிப்போட்டியில் தோல்வி கண்டிருந்தது. 

    • இந்திய கிரிக்கெட்டுகாக அவர் ஏராளமானவற்றை செய்துள்ளார்
    • இந்த வெற்றி பயிற்சியாளர் மற்றும் வீரர்கள் இடையிலான உறவை நாங்கள் வலுவாக பின்பற்றியதற்கான முடிவாகும்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

    மேலும் 2007-ஆம் ஆண்டு டோனியின் தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றதுக்கு பின்னர் தற்போது 17 ஆண்டுகள் கழித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது மீண்டும் 2-வது முறையாக டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்த வெற்றியை நாங்கள் ராகுல் டிராவிட்டுக்காக சாதித்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

    கடந்த 20 - 25 வருடங்களாக அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்கு அபாரமானது. இந்த ஒரே ஒரு கோப்பை மட்டுமே அவருடைய அலமாரியில் தவறி இருந்ததாக நான் கருதுகிறேன். எனவே அவர் கோப்பையை வென்றதற்காக எங்கள் அனைவரது சார்பாக மகிழ்ச்சியடைகிறேன். அவருக்காக நாங்கள் இதை செய்துள்ளோம். தற்போது அவர் எந்தளவுக்கு பெருமையாகவும் ஆர்வமாகவும் இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்.

    இந்த வெற்றி பயிற்சியாளர் மற்றும் வீரர்கள் இடையிலான உறவை நாங்கள் வலுவாக பின்பற்றியதற்கான முடிவாகும். இதை நாங்கள் ராகுல் டிராவிட்டுக்காக சாதித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கிரிக்கெட்டுகாக அவர் ஏராளமானவற்றை செய்துள்ளார் என்று கூறினார்.

    முன்னதாக எனக்காக வெல்லாமல் நாட்டுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஃபைனலுக்கு முன்பாக ட்ராவிட் சொன்னது குறிப்பிடத்தக்கது.

    • நான் அதிகம் மிஸ் செய்யும் நபராக ரோகித் இருப்பார் என அவரது ஓய்வு குறித்து டிராவிட் கூறினார்.
    • இந்த போட்டியுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் ஓய்வை அறிவித்துள்ளார்.

    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று பார்படாசில் நடைபெற்றது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது.

    இந்நிலையில் என்னை பொறுத்தவரை நான் அதிகம் மிஸ் செய்யும் நபராக ரோகித் இருப்பார் என ரோகித் ஓய்வு அறிவித்தது குறித்து ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து டிராவிட் கூறியதாவது:-

    ரோகித் சர்மாவை நான் நிச்சயம் மிஸ் செய்வேன். அவர் எனக்கு கொடுத்த மரியாதை, அணியின் மீதான அக்கறை, அர்பணிப்பு, எப்போதும் பின்வாங்காமல் இருப்பது, அவரின் ஆற்றல் ஆகியவைதான் என்னை மிகவும் ஈர்த்தது. என்னை பொறுத்தவரை நான் அதிகம் மிஸ் செய்யும் நபராக ரோகித் இருப்பார்.

    • இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராட்கோலியை பாராட்டினார்.
    • இந்திய அணி உலக கோப்பையை வென்றதுடன் கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களையும் வென்றது.

    உலக கோப்பையை வென்ற இந்திய அணியுடன் பிரதமர் மோடி போனில் பேசி வாழ்த்து, பாராட்டுகளை தெரிவித்தார். ரோகித் சர்மாவின் அற்புதமான கேப்டன் ஷிப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராட்கோலியை பாராட்டினார். தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பங்களிப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவில், "இந்திய அணி உலக கோப்பையை வென்றதுடன் கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களையும் வென்றது. அவர்கள் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாதது சிறிய சாதனை அல்ல" என்றார்.


    • டி20 உலகக் கோப்பையை 100% வெற்றி பெற்ற முதல் கேப்டன்.
    • அதிவேகமாக 3500 ரன்களை கடந்த வீரர் விராட் கோலி.

    டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இதே போன்று இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலியும் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இருவரின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துயுள்ளது. இந்த நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி படைத்த சாதனைகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    • ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளை விளையாடி உள்ளார். 159 டி20 போட்டிகள். இவருக்கு அடுத்த இடத்தில் பால் ஸ்டிர்லிங் 145 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
    • நேற்றைய இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 50 வெற்றிகளை பெற்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
    • டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இவர் டி20 போட்டிகளில் 4231 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 4188 ரன்களுடன் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராக இருக்கிறார்.
    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை கிளென் மேக்ஸ்வெல்-உடன் ரோகித் சர்மா பகிர்ந்து கொண்டுள்ளார்.
    • டி20 உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 205 சிக்சர்களை விளாசிய ரோகித், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


    • டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். நவம்பர் 2022 மாதம் விராட் கோலி இந்த மைல்கல்லை எட்டினார்.
    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை விராட் கோலி பாபர் அசாமுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 39 அரைசதங்களை அடித்துள்ளனர்.
    • டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 15 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.
    • ஆட்ட நாயகன் போன்றே தொடர் நாயகன் விருதுகளை அதிகம் வென்றவர்கள் பட்டியலிலும் விராட் கோலி தான் முதலிடம் பிடித்துள்ளார். இவரை இதுவரை 7 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.
    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3500 ரன்களை கடந்த வீரர் விராட் கோலி. 
    • இறுதிபோட்டியில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி 2-முறையாக கைப்பற்றியது. 2007-ம் ஆண்டு டோனி தலைமையில் முதல் முறை கைப்பற்றியது. அதன் பிறகு 2024-ம் ஆண்டு தான் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.

    இறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி புதிய சாதனை படைத்தது. இந்த தொடரில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை.

    கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி தற்போது டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.

    • ஆழ்கடலில் பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி சாதனை படைத்து வருகிறார்.
    • இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்றது.

    புதுச்சேரி:

    புதுவையில் டெம்பிள் அட்வென்ச்சர் என்ற ஸ்கூபா டைவிங் பயிற்சி நடத்தி வருபவர் அரவிந்த் தருண்ஸ்ரீ.

    ஆழ்கடலில் பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி சாதனை படைத்து வருகிறார். இது மட்டுமில்லாமல் இந்தியா சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு முறையும் வீரர்கள் சாதனை படைக்கும் போது அதனை தனது குழுவுடன் இணைந்து ஆழ்கடலில் வித்தியாசமான முறையில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.


    உலக கோப்பை டி20 தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்றது.

    இதனை கொண்டாடும் வகையிலும் இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஆழ்கடல் நீச்சல் பயிற்சி வீரர் அரவிந்த் தருண்ஸ்ரீ தனது குழுவினருடன் புதுச்சேரி அருகே கடலில் 50 அடி ஆழத்திற்கு சென்று சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடியும், இந்திய தேசிய கொடியை ஆழ்கடலுக்குள் எடுத்து சென்று இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடினர்.

    இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • அதிரடியாக விளையாடிய கிளாசன் மற்றும் மில்லர் விக்கெட்டை பாண்ட்யா வீழ்த்தினார்.
    • இதனால் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணியானது விராட் கோலி மற்றும் அக்ஷர் படேலின் சிறப்பான ஆட்டத்தால் 176 ரன்கள் குவித்தது.

    பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது. 16.1 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டேவிட் மில்லர் மற்றும் கிளாசன் விளையாடினர்.

    இந்நிலையில் 17-வது ஓவரை பாண்ட்யா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த கிளாசன் 52 (27) விக்கெட்டை வீழ்த்தி திருப்பி முனையை ஏற்படுத்தினார். அந்த ஓவரில் 1 விக்கெட்டை வீழ்த்தி 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார்.

    கடைசி 2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். மில்லர் முதல் பந்தை சிக்சர் அடிக்க முயற்சித்தார். ஆனால் லைனில் நின்றிருந்த சூர்யகுமார் அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி 2-வது முறையாக முத்தமிட்டுள்ளது.

    இந்த நிலையில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் இந்தியா வெற்றி பெற்றது உறுதியாகிவிட்டது. இதனால் கடைசி பந்தை போடுவதற்கு முன்பே ஹர்திக் பாண்ட்யா உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். கடைசி பந்தை போட்ட பிறகும் அவர் அழுதார். அவரை சக வீரர்கள் கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

    அதன் பிறகு ஹர்திக் பாண்ட்யா பேட்டியளித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரோகித் அவருக்கு முத்தமிட்டு கட்டியணைத்தார். போட்டி இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது.
    • டோனிக்கு பிறகு ரோகித் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது.

    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று பார்படாசில் நடைபெற்றது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது. 13 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் இறுதிப்போட்டி விளையாடி பார்படாஸ் மைதானத்தில் பிட்சில் உள்ள மண்ணை இந்திய அணியின் கேப்டன் சாப்பிட்டார். பின்னர் பிட்சை தொட்டு வணங்கி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டோனிக்கு பிறகு ரோகித் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி 2-வது முறை டி20 உலக கோப்பை-ஐ முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதை கொண்டாடுவதில் மகிழ்ச்சி!
    • இந்திய நாட்டிற்கே பெருமையை தேடி தந்துள்ள இந்திய அணியினருக்கு ஒட்டுமொத்த நாடும் தலை வணங்குகிறது!

    சென்னை:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது. ஏற்கனவே 2007-ம் ஆண்டில் முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பையை டோனியின் தலைமையில் வென்று இருந்தது. 20 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா வெல்வது இது 2-வது முறையாகும்.

    உலகக்கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்ற நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    எங்கள் இந்திய அணி 2-வது முறை டி20 உலக கோப்பை-ஐ முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதை கொண்டாடுவதில் மகிழ்ச்சி!

    நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி, முறியடிக்க முடியாத சாதனை படைத்துள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்,

    17 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா மற்றும் இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

    டி20 உலகக்கோப்பை 2024 இறுதிப் போட்டியின் கடைசி ஓவர்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. தலைசிறந்த டெத் ஓவர்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சூர்யகுமார் யாதவின் கேட்ச் அற்புதமானது. தொடக்கம் முதலே சிறப்பாக இந்திய அணி செயல்பட்டது. வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்,

    ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அற்புதமான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

    ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் எதிராக முரண்பாடுகள் இருந்தபோது, அணி கைவிடவில்லை, தொடர்ந்து விக்கெட்டுகளை கைப்பற்றியது. இறுதியில் ஒரு மூச்சடைக்க கேட்ச் வெற்றியை உறுதிப்படுத்தியது!

    தொடர் முழுக்க சாம்பியன்களை போன்றே விளையாடினார்கள், இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில், டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையில் அற்புதமாக விளையாடி வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த ஐசிசி கோப்பையை வெல்வதற்கு நம்முடைய சாம்பியன் அணி முழு தகுதி பெற்றிருப்பது என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ளார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில்,

    கடும் நெருக்கடிகளை கடந்து ஆட்டத்தை வென்றெடுத்து இறுதியில் உலக கோப்பையை உறுதி செய்துள்ளது இந்திய அணி!

    மதம்-இனம் கடந்து இந்திய நாட்டிற்காக வியர்வை சிந்தி விளையாடி கனவுக்கோப்பையை கைப்பற்றி களத்தில் கண்ணீர் சிந்தியுள்ளனர் இந்திய வீரர்கள்!

    இந்திய நாட்டிற்கே பெருமையை தேடி தந்துள்ள இந்திய அணியினருக்கு ஒட்டுமொத்த நாடும் தலை வணங்குகிறது! என்று தெரிவித்துள்ளார்.

    ×