search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா தொடர்"

    • இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
    • 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    மும்பை:

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 35.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 81 ரன்கள் சேர்த்தார்.

    இந்திய அணி தரப்பில் முகமது சமி, சிராஜ் தலா 3 விக்கெட்டும் ஜடேஜா 2 விக்கெட்டும் குல்தீப், பாண்ட்யா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. டாப் ஆர்டர் வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இஷான் கிஷன் 3 ரன், விராட் கோலி 4 ரன், சுப்மன் கில் 20 ரன்னில் அவுட் ஆகினர். சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். 39 ரன்கள் எடுப்பதற்குள் டாப் ஆர்டரில் 4 வீரர்கள் வெளியேறிய நிலையில், கே.எல்.ராகுல்- கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டது.

     

    ஹர்திக் பாண்ட்யா

    ஹர்திக் பாண்ட்யா

    ஹர்திக் பாண்ட்யா 25 ரன்களில் ஆட்டமிழந்தையடுத்து கே.எல்.ராகுலுடன், ரவீந்திர ஜடேஜா இணைய, அணி வெற்றியை நோக்கி பயணித்தது. அரை சதம் கடந்த கே.எல்.ராகுல் 75 ரன்களும் (நாட் அவுட்), ஜடேஜா 45 ரன்களும் (நாட் அவுட்) விளாச, 39.5 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இப்போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை மறுநாள் விசாகப்பட்டினத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

    • ஆஸ்திரேலிய அணி மிட்செல் மார்ஷ் 81 ரன்கள் குவித்தார்.
    • இந்திய தரப்பில் முகமது சமி, சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் திராவிஷ் ஹேட் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து மிட்சில் மார்ஷ் மற்றும் சுமித் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது. ஸ்மித் 22 ரன்கள் எடுத்திருந்த போது பாண்ட்யா பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் மிட்செல் மார்சும் 81 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.


    லெபுசென் 15, ஜோஷ் இங்கிலிஸ் 26, கீரின் 12 மேக்ஸ்வேல் 8, மார்கஸ் ஸ்டோனிஸ் 5, அபோர்ட் 0, ஜம்பா 0 என வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்திய தரப்பில் முகமது சமி, சிராஜ் தலா 3 விக்கெட்டும் ஜடேஜா 2 விக்கெட்டும் குல்தீப், பாண்ட்யா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • மும்பை கிரிக்கெட் சங்க தலைவருடன் இணைந்து அவர் போட்டியை நேரில் காண்கிறார்.
    • இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

    மும்பை:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடி வருகிறது.

    இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசிக்கிறார்.

    மும்பை கிரிக்கெட் சங்க தலைவருடன் இணைந்து அவர் போட்டியை நேரில் காண்கிறார்.இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

    • ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியை வழிநடத்துகிறார்.
    • அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    அதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, நெருங்கிய உறவினருக்கு திருமணம் காரணமாக தொடக்க ஆட்டத்தில் மட்டும் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார்.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

    இந்தியா:

    சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், முகமது ஷமி. 


    • அடுத்த 3 நாட்களில் ஆந்திர மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
    • மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன் காரணமாக வருகிற 19-ந்தேதி விசாகபட்டினத்தில் நடைபெற உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அடுத்த 3 நாட்களில் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.

    நாளை கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் கனமழை பெய்யும். அடுத்த 3 நாட்களில் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

    மாநில முழுவதும் பரவலாக அல்லது ஓரளவு பரவலாக மழை பெய்யும். ஆந்திராவின் ஊட்டி என்றழைக்கப்படும் அரக்கு பள்ளத்தாக்கில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    • ஷ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய சில வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது.
    • 31-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆடுவது சந்தேகம்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் அய்யர் முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக ஆமதாபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 4-வது நாளில் பேட்டிங் செய்யாமல் போட்டியில் இருந்து விலகினார்.

    அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. டாக்டர்களின் அறிக்கை விவரம் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே முதுகு வலி பிரச்சினையால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை தவற விட்டு இருந்த ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவினரின் ஆலோசனைப்படி காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய சில வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர் விலகி உள்ளார்.

    அத்துடன் வருகிற 31-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆடுவது சந்தேகம் தான். ஷ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

    • இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்டீவன் சுமித் நீடிப்பார்.
    • ஸ்மித் ஏற்கனவே 51 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அகமதாபாத்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், இந்தூரில் நடந்த 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. அகமதாபாத்தில் நடந்த கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    டெல்லியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனது தாயார் மரியாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அறிந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் சிட்னி விரைந்தார். இதனால் அவர் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டார். இதற்கிடையே கம்மின்சின் தாயார் கடந்த வாரம் மரணம் அடைந்தார்.

    அவருக்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார்.

    இதற்கிடையே, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி மும்பையில் வருகிற 17-ம் தேதியும், 2-வது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் 19-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி சென்னையில் 22-ம் தேதியும் நடக்கிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்டீவன் சுமித் நீடிப்பார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஸ்டீவன் சுமித் ஏற்கனவே 51 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:

    டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், சீன் அப்போட், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா

    • உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக வென்ற 16-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக ருசித்த 4-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

    அகமதாபாத்:

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த தொடரில் 25 விக்கெட் மற்றும் 86 ரன் எடுத்த அஸ்வின், 22 விக்கெட் மற்றும் 135 ரன் எடுத்த ஜடேஜா ஆல் ரவுண்டர்களாக முத்திரை பதித்து தொடர் நாயகன் விருதை பகிர்ந்து கொண்டனர்

    இதன்மூலம் டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக வென்ற 16-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். கடைசியாக 2012-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 1-2 என்ற கணக்கில் தோற்று இருந்தது. அதன் பிறகு உள்ளூரில் இந்தியாவின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது.

    அதேபோல, சவால்மிக்க அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக ருசித்த 4-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். 2017, 2018-19, 2020-21 ஆகிய ஆண்டுகளிலும் இந்தியா இதே போன்று 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை போட்டுத் தாக்கியிருந்தது. இதில் 2 முறை ஆஸ்திரேலிய மண்ணில் படைத்த வரலாற்று சாதனையும் அடங்கும்.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 571 ரன்கள் குவித்தது
    • நிதானமாக விளையாடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி 186 ரன்கள் சேர்த்தார்.

    அகமதாபாத்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 571 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. நிதானமாக ஆடிய விராட் கோலி 186 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 128 ரன்னும், அக்ஷர் படேல் 79 ரன்னும், கே.எஸ்.பரத் 44 ரன்னும் எடுத்தனர்.

    91 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 3 ரன்னுடனும் குனேமேன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடியை டிராவிஸ் ஹெட் 90 ரன்கள் விளாசினார். லபுசங்கே 63 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று பிற்பகல் வரை தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியை அத்துடன் முடித்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதனால் போட்டி டிரா ஆனது.

    ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால், 2-1 என தொடரை வென்றது. இதன்மூலம் இந்தியா தொடர்ந்து நான்கு முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 17,000 ரன்கள் கடந்தார்.
    • 17 ஆயிரம் ரன்களைக் கடந்த 6-வது இந்திய வீரர் ஆனார் ரோகித் சர்மா

    அகமதாபாத்:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா 21 ரன்கள் எட்டியபோது சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்து 17,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய 6-வது இந்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

    ரோகித் சர்மா தனது 438-வது சர்வதேச இன்னிங்சில் இதனை செய்திருக்கிறார். ரோகித் சர்மா இதுவரை 48 டெஸ்ட் போட்டிகள், 241 ஒருநாள் போட்டிகள் மற்றும் 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    அதில் 9,782 ரன்களை ஒருநாள் போட்டிகளிலும், 3,853 ரன்களை டி20 போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து 3,350 ரன்கள் டெஸ்ட் போட்டிகளிலும் எடுத்துள்ளார்.

    ஏற்கனவே சச்சின், விராட் கோலி, டிராவிட், சவுரவ் கங்குலி மற்றும் எம்.எஸ்.டோனி ஆகியோர் 17000 ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
    • நாளைய ஆட்டத்தில், அனைவரின் பார்வையும் விராட் கோலி மீது இருக்கும்.

    அகமதாபாத்:

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. மூன்றாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது. விராட் கோலி 59 ரன்களுடனும், ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட இந்தியா 191 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை நான்காம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

    4 போட்டி கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ள இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்ல வேண்டும். எனவே நாளைய ஆட்டம் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

    இப்போட்டியில் இந்தியா தோற்று, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை 2-0 என வெற்றி பெற்றால் இலங்கை அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். ஒருவேளை இந்தியா இப்போட்டியை டிரா செய்து, இலங்கை 2-0 என வெற்றி பெற தவறினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதும்.

    எனவே நாளைய ஆட்டத்தில், அனைவரின் பார்வையும் விராட் கோலி மீது இருக்கும். இன்று 2 மணி நேரத்திற்கும் மேலாக நிதானமாக ஆடிய அவர் அரை சதம் கடந்துள்ளார். நாளை அவரும், ஜடேஜாவும் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    நாளை முழுவதும் பேட்டிங் செய்து, ஆஸ்திரேலியாவை விட 150 ரன்கள் முன்னிலை பெறும் முயற்சியில் இந்திய பேட்ஸ்மேன்கள் இறங்குவார்கள். கடைசி நாளில் சுழற்பந்துக்கு சாதகமாக ஆடுகளம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்த முடியும் என கணித்துள்ளனர்.

    வரும் ஜூன் மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சுப்மன் கில் 235 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 128 ரன்கள் குவித்தார்.
    • ஆஸ்திரேலியாவைவிட இந்தியா 191 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    அகமதாபாத்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 180 ரன்னும், கேமரூன் கிரீன் 114 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 2ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா 17 ரன்னுடனும், சுப்மன்கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3வது நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய ரோகித் சர்மா 35 ரன்னில் அவுட் ஆனார். மறுமுனையில் சுப்மன் கில் அபாரமாக ஆடி சதம் விளாசினார். கிட்டத்தட்ட 6 மணி நேரம் களத்தில் நின்ற அவர் 235 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 128 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். இது டெஸ்ட் போட்டியில் அவருக்கு இரண்டாவது சதம் ஆகும். முன்னதாக புஜாரா 42 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

    இதேபோல் நிதானமாக ஆடிய விராட் கோலி அரை சதம் கடந்தார். இதனால் இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது. கோலி 59 ரன்களுடனும், ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவைவிட இந்தியா தற்போது 191 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை நான்காம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

    ×