search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகநூல்"

    • முகநூலில் சமீபத்தில் வெளிவந்த இது போன்ற கருத்து பதிவு குறித்து பா.ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர், பாலோடு போலீசில் புகார் தெரிவித்தார்.
    • இந்த பதிவுகள் அரசியல் கட்சி ஆர்வலர்களிடையே பதட்டத்தை தூண்டுவதாக உள்ளது

    திருவனந்தபுரம்:

    பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்படுவதாக கேரள போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் முகநூலில் சமீபத்தில் வெளிவந்த இது போன்ற கருத்து பதிவு குறித்து பா.ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர், பாலோடு போலீசில் புகார் தெரிவித்தார்.

    அதில், கேரளாவை சேர்ந்த நபீல் நாசர் என்பவர் தான் இது போன்ற கருத்துக்களை பதிவிடுவதாகவும், கடந்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி முதல் ஆட்சேபணைக்கு ரிய பதிவுகளை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டு வருகிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடியின் புகழை கெடுக்கும் நோக்கத்துடன் அவருக்கு எதிராக போலியான அறிக்கைகளை பதிவு செய்துள்ளதாகவும், இந்த பதிவுகள் அரசியல் கட்சி ஆர்வலர்களிடையே பதட்டத்தை தூண்டுவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஐ.பி.சி.153, 171ஜி மற்றம் கேரள போலீஸ் சட்டத்தின் 120 (ஒ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்:

    சிதம்பரம் மக்களவை தொகுதி தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தி.மு.க. வக்கீல் அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி, ஓலைப்பாடி கிராமத்தை சார்ந்த பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனை போல, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக தி.மு.க. வக்கீல் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கொலையனூர் கிராமத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் திருமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்ததாக பெரிய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், பள்ள கிருஷ்ணாபுரத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
    • பத்மநாபபுரம் கோர்ட்டில் விஜில் ஜோண்சை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியை சேர்ந்தவர் விஜில்ஜோண்ஸ் (வயது 40). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பெங்களூருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் விஜில் ஜோண்ஸ் முகநூலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ் ஆகியோரை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி அமைப்பாளர் ஜோசப்ராஜ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். ஆனால் புகார் கூறப்பட்ட விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரம் தொடாபாக மதுரை ஐகோர்ட் கிளையிலும் ஜோசப் ராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். அங்கு அவரை கைது செய்தனர்.

    பெங்களூருவில் கைது செய்யப்பட்ட விஜில் ஜோண்ஸ் இன்று தக்கலைக்கு அழைத்து வரப்பட்டார்.

    முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி முகநூலில் அவதூறு கருத்துகள் வெளியிட்டது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் பத்மநாபபுரம் கோர்ட்டில் விஜில் ஜோண்சை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • பேச மறுத்ததால் ஆத்திரம்
    • முகநூல் மூலம் பழக்கம்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரவின் ரஞ்சித் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவருக்கும் ஆலங்கோடு பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்ட தாரியான 27-வயது பெண்ணுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    அந்தப் பெண் நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வருகிறார். பழக்கத்தின் அடிப்படையில் அவர் அடிக்கடி ரஞ்சித்தை சந்தித்தார். நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறியது.

    இந்த நிலையில் பிரவின் ரஞ்சித்துக்கு குடிபழக்கம் இருப்பது, இளம்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் இளம்பெண் அவருடனான தொடர்பை குறைத்துள்ளார். மேலும் முகநூல் பக்கத்தையும் பிளாக் செய்து தொடர்பை முற்றிலும் தவிர்த்துள்ளார்.

    இது பிரவின் ரஞ்சித்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர், இளம்பெண்ணை சந்தித்து காதலை தொடரும் படி வற்புறுத்தி உள்ளார். ஆனால் இளம்பெண் அதற்கு சம்மதிக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பிரவின் ரஞ்சித், நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்ணை மீண்டும் சந்தித்து தன்னுடன் பேச வலியுறுத்தினார். ஆனால் அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதில் இளம்பெண்ணுக்கு வயிற்றில் பலகத்த காயம் ஏற்பட்டது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் திரண்டதால், பிரவின் ரஞ்சித் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கத்தி குத்தில் படுகாயமடைந்த இளம்பெண் மீட்கப்பட்டு சிகிட்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிட்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் தலைமறைவாக இருந்த பிரவின் ரஞ்சித்தை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர்ந்து மிரட்டிய புகாரில் போலீசார் கைது செய்தனர்
    • மனமுடைந்த மூதாட்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    நாகர்கோவில் :

    முகநூலில் பெண்கள் படத்தை பதிவிட்டால், சிலர் தவறாக சித்தரிக்கின்றனர். எனவே படத்தை பதிவிடாதீர்கள் என பலமுறை போலீசார் எச்சரித்தாலும் அதனை கேட்காத சிலர் முகநூலில் படத்தை வெளியிட்டு வம்பில் சிக்குவது தொடர் கதையாகவே உள்ளது.

    மேலும் அவர்கள் பணத்தையும் இழந்து வருவது தான் வேதனையான விஷயம். இளம்பெண்கள் மட்டுமல்லாமல் 60 வயதான மூதாட்டி ஒருவரும் இந்தப் பிரச்சினையில் சிக்கி பணத்தை இழந்துள்ளார். அவரிடம் குமரி மாவட்ட வாலிபர் பணத்தை பறித்த நிலையில், தற்போது போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பட்டரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள் (வயது 30), மெக்கானிக்கல் என்ஜினீயர். இவருக்கு முகநூல் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூரூ அருகே உள்ள கொடிப்பாடி புத்தூரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் பழக்கமானார். நாளடைவில் அருள் பேச்சை நம்பி, தனது போட்டோக்களை அந்த மூதாட்டி பகிர்ந்துள்ளார்.

    இந்த நிலையில் மூதாட்டியிடம் போனில் பேசிய அருள், உங்கள் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடப் போகி றேன் என்று கூறி உள்ளார். இதனை கேட்டு மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார். அப்படி செய்ய வேண்டாம் என்று அருளிடம் கூறி உள்ளார்,

    இதனை அருள், தனக்கு சாதகமாக பயன்படுத்தி மூதாட்டியிடம் இருந்து பணம் பறித்துள்ளார். கூகுள் பே மூலம் ரூ.12 ஆயிரம் பெற்ற அவர், கூடுதலாக ரூ.50 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளார். பணம் தராவிட்டால், மார்பிங் படத்தை உங்கள் கணவருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி உள்ளார்.

    இதனால் மனமுடைந்த மூதாட்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூரூ புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பெண்மைக்கு களங்கம் விளைவித்தது, பெண்ணை மிரட்டி பணம் பறித்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தொடர்ந்து கர்நாடக போலீசார் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர். அவர்கள், இரணியல் போலீசார் உதவியுடன் நெய்யூர் சென்று என்ஜினீயர் அருளை கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக பெங்களூரூ அழைத்துச் சென்றனர்.

    • பணம் பறிக்க முயற்சி
    • சைபர் கிரைம் போலீசில் புகார்

    குடியாத்தம்,

    குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டு ள்ளது.

    அதன் மூலம் நட்பு வட்டாரத்தில் உள்ள நபர்களுக்கு நகரமன்ற தலைவர் சவுந்தர்ராஜன் கேட்பது போல் பணம் தேவை என தகவல் அனுப்பி உள்ளனர்.

    உடனடியாக இந்த மோசடி சம்பவம் குறித்து சவுந்தர்ராஜன் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தியிடம் புகார் அளித்தார். வேலூரில் உள்ள சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்க உள்ளார்.

    மோசடி நபர்கள் குடியாத்தம் பகுதியில் தொடர்ந்து முக்கிய நபர்களின் பெயர்களில் முகநூல் பக்கங்களை தொடங்கி பணம் கேட்டு மோசடிகளையும் அரங்கேற்றி வருவது தெரியவந்தது.

    இந்த போலியான பேஸ்புக் மோசடிகள் குறித்து போலீசார் கூறியதாவது

    குடியாத்தம் பகுதி பொதுமக்கள் இதுபோல் மோசடியான பேஸ்புக்கில் வரும் பணம் சம்பந்தமான பதிவுகளுக்கு சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு உறுதி செய்த பின்னர் பணத்தை அனுப்புமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். அவசர உதவி எண் 1930 என் உள்ளது இந்த எண்ணை தொடர்பு கொண்டு இணையவழி குற்றத்தடுப்பு குறித்து ஆலோசனை கேட்டுப் பெறலாம் மேலும் இதுபோல் ஏமாற்றப்பட்டவர்கள் உடனடியாக இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுத்து மீட்டுத்தர உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளன

    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை
    • ரூ.70 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே வாணியக்குடி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 52). மாற்றுத்திறனாளி. இவரது உறவினர் ஜூலியஸ் டெல்லியில் ஒரு ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவர் அடிக்கடி ஜேம்ஸிடம் செல்போனில் பேசுவாராம்.

    இந்த நிலையில் பாதிரியார் ஜூலியஸின் முகநூல் மூலம் ஜேம்சுக்கு ஒரு தகவல் வந்துள்ளது. ஒரு குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளது. குழந்தையின் மருத்துவ செலவுக்கு ரூ.40 ஆயிரம் தேவைப்படுகிறது. உங்களால் உதவ முடியுமா? என கேட்டுள்ளார்.

    இதனை உண்மை என்று நம்பிய ஜேம்ஸ், மர்ம நபர் அனுப்பிய வேறு ஒரு நபரின் 'கூகுள் பே' செல்போன் எண்ணிற்கு ரூ.40 ஆயிரம் அனுப்பி வைத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட மர்ம நபர் மீண்டும் வேறு உதவிக்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இதுவும் உண்மை என்று நம்பிய ஜேம்ஸ் மீண்டும் 3 தவணையாக ரூ.30 ஆயிரம் அனுப்பி வைத்தார்.

    மொத்தம் ரூ.70 ஆயிரம் அனுப்பி வைத்த பின்பு பாதிரியார் உண்மையான முகநூல் தளத்திலிருந்து ஜேம்ஸிற்கு 'எனது முக நூல்'தளத்தை யாரோ? பயன்படுத்தி பணம் பறிக்கின்றனர். அதனால் பணம் அனுப்ப வேண்டாம் என வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது. இதனால் ஜேம்ஸ் தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இது குறித்து குளச்சல் போலீசில் ஜேம்ஸ் புகார் செய்தார். இந்த புகார் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் மாற்றுத்திறனாளியிடம் ரூ.70 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர். மாற்றுத்திறனாளியிடம் போலி முகநூல் தளம் மூலம் பணம் பறித்த சம்பவம் வாணியக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளம்பெண், வாலிபரின் எண்ணை பிளாக் செய்து விட்டு நட்பையும் முறித்துக் கொண்டார்
    • 3 பெண்களையும் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் கப்பி யரை வேளாண் கோடு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் சமூகவலைதளங்களில் ஒன்றான முகநூலில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்.

    அப்போது அவருக்கு முகநூல் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊதல்கரை ரெட்டியார்தோட்டம் பகுதி யைச் சேர்ந்த நிஷோர் சிவசங்கர் (வயது 24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    முதலில் நட்பாக பழகிய நிஷோர் சிவசங்கர், ஒரு கட்டத்தில் திரு மணம் செய்ய வற்புறுத்தி இளம் பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண், வாலிபரின் எண்ணை பிளாக் செய்து விட்டு நட்பையும் முறித்துக் கொண்டார்.

    அதன்பிறகு இரணியல் அருகே உள்ள பேயன்குழியில் உறவினர் வீட்டில் இளம்பெண் தங்கி உள்ளார். இதனை அறிந்த நிஷோர் சிவசங்கர் நேற்று அங்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கும் இளம் பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதை பார்த்த பெண்ணின் தாயார், உறவு பெண் ஆகியோர் நிஷோர் சிவசங்கரை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் 3 பெண்களையும் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த பெண்ணின் தாயார், உறவுப் பெண் இருவரும் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் நிஷோர் சிவசங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • ராணுவ அதிகாரி என்கிற பெயரில் “பழைய பர்னிச்சர்” பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை என்று அறிவிப்பு வந்தது.
    • திலீப்குமார் அளித்த புகாரின் பேரில் மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வடபழனி, அழகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார். சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது முகநூல் பக்கத்தில் ராணுவ அதிகாரி என்கிற பெயரில் "பழைய பர்னிச்சர்" பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை என்று அறிவிப்பு வந்தது. அதில் இருந்த செல்போன் எண்ணை திலீப்குமார் தொடர்பு கொண்டு பொருட்களை வாங்கி கொள்வதாக கூறினார்.

    அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர் ரூ.30ஆயிரம் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு அனுப்பினால் உடனடியாக அனைத்து பர்னிச்சர் பொருட்களையும் வீட்டிற்கு டெலிவரி செய்வதாக தெரிவித்தார். இதை உண்மை என்று நம்பிய திலீப்குமார் உடனடியாக ரூ.30ஆயிரத்தை அனுப்பினார். பின்னர் அந்த நபர் திலீப்குமாரின் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. அவர் மோசடியில் ஈடுபட்டு இருப்பதை அறிந்து திலீப்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வடபழனி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×