என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்"
- ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
- ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணி 7 முறை சாம்பியனானது.
தம்புல்லா:
ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் 4 போட்டி 50 ஓவர் அடிப்படையில் நடத்தப்பட்டது. அவை அனைத்திலும் இந்திய அணி கோப்பையை வென்றது. இதேபோல் 20 ஓவர் அடிப்படையில் நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. ஒரே ஒரு முறை (2018) மட்டும் வங்காளதேசம் கோப்பையை தனதாக்கியது. கடைசியாக 2022-ம் ஆண்டு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை தோற்கடித்து மகுடம் சூடியது.
இந்த நிலையில் 9-வது ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் உள்ள தம்புல்லாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளான இன்று 'ஏ' பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இரவு 7 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் 7 முறை சாம்பியனான இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்திய அணியில் பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், பந்து வீச்சில் பூஜா வஸ்ட்ராகர், ராதா யாதவ், தீப்தி ஷர்மா, ஸ்ரேயாங்கா பட்டீலும் நல்ல நிலையில் உள்ளனர்.
நிதா தர் தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியை மறந்து வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்னதாக சரியான அணியை அடையாளம் காண இந்த போட்டியை பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கும்.
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 20 ஆட்டங்களில் ஆடி 17-ல் வெற்றி பெற்று வலுவாக காணப்படும் இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடருவதுடன், போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிரம் காட்டும். பாகிஸ்தான் முடிந்த வரை கடும் சவால் அளிக்க முயற்சிக்கும். இவ்விரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 11-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
முன்னதாக பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்து பர்மா தலைமையிலான நேபாள அணி, இஷா ஒஜா தலைமையிலான ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது.
இந்த ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக திகழ்கிறது.
- இலங்கை அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் ஹர்ஷிதா சமரவிக்ரமா நிலாக்ஷி டி சில்வா ஆகியோரையே அதிகம் நம்பி இருக்கிறது.
சில்ஹெட்:
8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் (பாகிஸ்தானுக்கு எதிராக) முதலிடம் பிடித்தது. தொடர்ந்து அரையிறுதியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை பந்தாடி 7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.
சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் (இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக) 3-வது இடம் பெற்றது. அந்த அணி அரையிறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பழிதீர்த்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக திகழ்கிறது. பேட்டிங்கில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (215 ரன்கள்), ஷபாலி வர்மா (161 ரன்கள்) நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் தீப்தி ஷர்மா (13 விக்கெட்), ராஜேஸ்வரி கெய்க்வாட் (7 விக்கெட்), சினே ராணா உள்ளிட்டோர் மிரட்டுகிறார்கள்.
இலங்கை அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் ஹர்ஷிதா சமரவிக்ரமா (201 ரன்கள்), நிலாக்ஷி டி சில்வா (124) ஆகியோரையே அதிகம் நம்பி இருக்கிறது. கேப்டன் சமாரி அட்டப்பட்டு எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. பந்து வீச்சில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் இனோகா ரனவீரா (12 விக்கெட்) கலக்கி வருகிறார்.
ஆசிய கோப்பை தொடரில் கடைசியாக 2018-ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் மட்டும் இந்திய அணி, வங்காளதேசத்திடம் தோல்வி கண்டது. மற்றபடி இறுதி சுற்றில் இந்தியா தோல்வியே சந்தித்தது கிடையாது. மேலும், லீக் ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இருப்பதால், இறுதி ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி 7-வது முறையாக கோப்பையை வெல்லும் என்பதே பெரும்பாலானவர்களின் கணிப்பாக உள்ளது.
அதே நேரத்தில், அண்மையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை ஆண்கள் அணி மகுடம் சூடியது போல், இலங்கை பெண்கள் அணியும் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பிற்பகல் 1 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டி.டி.ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
- இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது.
- தாய்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்தது.
சில்ஹெட்:
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரைஇறுதியில் இந்தியா -தாய்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தாய்லாந்து அணி விளையாடியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். நாட்டாய பூச்சாதம் 21, நருமோல் சாய்வாய் 21 ரன்கள் எடுத்தனர். அந்த 2 பேரை தவிய யாருமே 2 இலக்க ரன்களை எடுக்கவில்லை. இதில் 3 பேர் ரன் ஏதும் எடுக்காமல் இருந்தனர்.
இறுதியில் தாய்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பெண்கள் ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதிப்பெற்றுள்ளது.
- இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது.
- அதிகப்பட்சமாக ஷபாலி வர்மா 42 ரன்களும் கவூர் 36 ரன்களும் எடுத்தனர்.
சில்ஹெட்:
8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. 7 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), பாகிஸ்தான் (10 புள்ளி), இலங்கை (8 புள்ளி), தாய்லாந்து (6 பு]ள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீகரம், மலேசியா ஆகிய அணிகள் வெளியேறின. இந்த தொடரில் இன்று அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் காலை முதலாவது அரைஇறுதியில் இந்தியா -தாய்லாந்தை எதிர்கொள்கிறது.
இதில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ஷபாலி வர்மா 42 ரன்களும் கவூர் 36 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தாய்லாந்து அணி விளையாடி வருகிறது.
- ஷபாலி வர்மா 8 ரன்னில் அவுட் ஆனார்.
- வேகப்பந்து வீச்சாளர் பூஜா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தாய்லாந்து அணி 37 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்திய தரப்பில் சினே ராணா 3 விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா ராஜேஸ்வரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- மேக்னா களமிறங்கினர். ஷபாலி வர்மா 8 ரன்னில் அவுட் ஆனார். அதனையடுத்து வேகப்பந்து வீச்சாளர் பூஜா களமிறங்கினார்.
மேக்னா- பூஜா ஜோடி சிறப்பாக விளையாடி 6 ஓவரில் அணியை வெற்றி பெற வைத்தனர். மேக்னா 20 ரன்னிலும் பூஜா 12 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- வங்காளதேசம் தரப்பில் ருமானா அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா அரை சதம் அடித்து அசத்தினார்.
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா - வங்காள தேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.
முதல் விக்கெட்டுக்கு ஷபாலி வர்மா- மந்தனா ஜோடி 96 ரன்கள் எடுத்தனர். 47 ரன்னில் மந்தனா எதிர் பாராத வகையில் ரன் அவுட் ஆனார். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 55 ரன்கள் எடுத்த போது போல்ட் முறையில் வெளியேறினார்.
16 ஓவரில் இந்திய அணி 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தொடர்ந்து 2 விக்கெட்டுகளை இழந்தது. ரிச்சா கோஷ் 4 ரன்னிலும் கிரன் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து தீப்தி சர்மா -ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். கடைசி ஓவரில் தீப்தி சர்மா (10) ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்திருந்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் ருமானா அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- வங்காள தேசத்திற்கு எதிராக இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.
8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 7 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
பாகிஸ்தானுடன் நேற்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் வங்காள தேசத்திற்கு எதிராக இன்று இந்திய அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கவூர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக மந்தனா செயல்படுகிறார்.
வங்காளதேசம் அணி:-
முர்ஷிதா கதுன், ஃபர்கானா ஹோக், நிகர் சுல்தானா, ரிது மோனி, லதா மொண்டல், ஃபஹிமா கதுன், ருமானா அகமது, நஹிதா அக்டர், சல்மா காதுன், ஃபரிஹா ட்ரிஸ்னா, ஷஞ்சிதா அக்டர்.
இந்திய அணி:-
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, சப்பினேனி மேகனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், கிரண் நவ்கிரே, பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா, சினே ராணா, ரேணுகா சிங், ராஜேஸ்வரி கயக்வாட்.
- பாகிஸ்தான் தரப்பில் பேட்டிங்கில் அரை சதம் அடித்த நிதா தார் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- இந்திய அணியை சேர்ந்த ரிச்சா கோஷ் 3 சிக்சர்களை பறக்கவிட்டார்.
சில்கெட்:
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீராங்கனைகள் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அதிகப்பட்சமாக ரிச்சா கோஷ் 26 ரன்கள் எடுத்தார். அதில் 3 சிக்சர்கள் அடங்கும்.
19.4 ஓவர் வரை விளையாடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் பேட்டிங்கில் அரை சதம் அடித்த நிதா தார் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- பாகிஸ்தான் அணியின் நிதா தார் அரை சதம் அடித்தார்.
சில்கெட்:
சில்கெட்டில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் பெண்கள் அணி 33 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் திணறியது.
அதனையடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மரூப் - நிதா தார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அதிகப்பட்சமாக நிதா தார் அரை சதம் அடித்தார். அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி 137 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- சர்வதேச அரங்கில் இவ்விரு அணிகள் 12 முறை மோதியுள்ளன.
சில்கெட்:
வங்கதேசத்தில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 8-வது சீசன் நடந்து வருகிறது. இதில், 6 முறை கோப்பை வென்ற இந்தியா, நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில் இன்று சில்கெட்டில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
சர்வதேச அரங்கில் இவ்விரு அணிகள் 12 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 10 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஆடும் லெவனில் விளையாடும் இந்திய வீராங்கனைகள்:-
ஸ்மிருதி மந்தனா, மேக்னா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர், தயாளன் ஹேமலதா, ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ரேணுகா சிங், ராஜேஸ்வரி கயக்வாட்
ஆடும் லெவனில் விளையாடும் பாகிஸ்தான் வீராங்கனைகள்:-
முனீபா அலி, சித்ரா அமீன், பிஸ்மா மரூஃப், நிதா தார், ஆயிஷா நசீம், அலியா ரியாஸ், ஒமைமா சோஹைல், அய்மான் அன்வர், சாடியா இக்பால், துபா ஹாசன், நஷ்ரா சந்து
- வங்களாதேச அணி தரப்பில் ஃபரிஹா திரிஸ்னா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 18.5 ஓவர்கள் தாக்கு பிடித்த மலேசியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 மட்டுமே எடுத்தது.
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் மலேசியா - வங்காளதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்களாதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை 129 ரன்கள் எடுத்தது.
முர்ஷிதா காதுன், நிகர் சுல்தானா ஆகியோர் அரை சதம் அடித்தனர். மலேசியா அணி தரப்பில் சாஷா ஆஸ்மி, மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில், வினிஃப்ரெட் துரைசிங்கம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மலேசியா அணி களமிறங்கியது. வங்காள தேச அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். 18.5 ஓவர்கள் தாக்கு பிடித்த அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 மட்டுமே எடுத்தது.
இதனால் வங்காள தேச அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்களாதேச அணி தரப்பில் ஃபரிஹா திரிஸ்னா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- இந்திய வீராங்கனை ஜெமிமா 53 பந்தில் 76 ரன்கள் குவித்தார்.
- இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சில்கெட்:
ஆசிய கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி விளையாடிய இந்திய பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 53 பந்தில் 76 ரன்கள் குவித்தார். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 33 ரன் எடுத்தார்.
இதையடுத்து விளையாடிய இலங்கை பெண்கள் அணி 18.2 ஓவர் முடிவில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஹர்ஷித சமரவிக்ரம 26 ரன்னும், ஹாசினி பெரேரா 30 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னுடன் பெவிலியன் திரும்பினர். இந்தியா தரப்பில் தயாளன் ஹேமலதா 3 விக்கெட்டும், பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து இந்திய பெண்கள் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்