search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகார்ஜூன கார்கே"

    • தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் இடையே வருகிற 28-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
    • கூட்டணிக் கட்சி தலைவர்களையும் மல்லிகார்ஜூன கார்கே சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் இடையே வருகிற 28-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அடுத்த மாதம் 13-ந்தேதி தமிழகம் வர உள்ளார்.

    மக்களவை தேர்தல் பணிகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே மல்லிகார்ஜூன கார்கே பேச உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணிக் கட்சி தலைவர்களையும் அவர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ராகுல் காந்தி கடந்த 14-ம் தேதி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மணிப்பூரில் தொடங்கினார்.
    • அசாமில் நடந்த யாத்திரையில் ராகுல் காந்திக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14-ம் தேதி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மணிப்பூரில் தொடங்கினார். தற்போது அவரது யாத்திரை அசாமில் நடந்து வருகிறது. அங்கு யாத்திரையில் ராகுல் காந்திக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று கவுகாத்தி நகர எல்லையில் ராகுல் காந்தியின் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நடத்தி வரும் நிலையில் அசாமின் நாகோன் மாவட்டத்தில் யாத்திரையில் பா.ஜ.க.வினர் இடையூறு ஏற்படுத்தினர். ஆபத்தான முறையில் ராகுல் காந்திக்கு அருகில் வந்து மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கினர்.

    இதில் அசாம் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருந்தனர். சில நேரங்களில் பா.ஜ.க. தொண்டர்கள் யாத்திரைக்குள் செல்ல வசதி செய்து தந்துள்ளனர். இது ராகுல் காந்தியைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வளையத்தை உடைத்து அவரது மற்றும் யாத்திரையில் பங்கேற்பவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது.

    எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அசாம் முதல் மந்திரி மற்றும் அசாம் காவல்துறை இயக்குனர் நடவடிக்கை எடுக்க நீங்கள் தலையிட்டு உத்தரவிட வேண்டும். ராகுல் காந்தி மற்றும் யாத்திரையில் பங்கேற்றுள்ளவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என தெரிவித்தார்.

    • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தற்போது அசாமில் நடந்து வருகிறது.
    • இந்த யாத்திரையால் ஊழல் முதல் மந்திரி ஹிமந்தா பீதி அடைந்துள்ளார் என காங்கிரஸ் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் தொடங்கி உள்ளார். இந்த யாத்திரை தற்போது அசாமில் நடந்து வருகிறது.

    அசாமின் லக்கிம்பூருக்குச் சென்றபோது யாத்திரையில் பங்கேற்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், ராகுல் காந்தியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள், போஸ்டர்களும் கிழிக்கப்பட்டன.

    இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பா.ஜ.க. குண்டர்களால் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பேனர் கிழிப்பு போன்ற வெட்கக்கேடான செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள ஒவ்வொரு உரிமையையும், நீதியையும் காலில் போட்டு மிதிக்க கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. முயற்சிக்கிறது. மக்களின் குரலை நசுக்கி. அதன்மூலம் ஜனநாயகத்தை சிதைக்கிறது. அசாம் பா.ஜ.க. அரசின் இத்தகைய மிரட்டல் மற்றும் தாக்குதல் தந்திரத்துக்கு காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது என பதிவிட்டுள்ளார்.


    • நிதிஷ்குமார் மறுத்ததால் கார்கே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார்.

    புதுடெல்லி:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்பட 27 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதுவரை எந்த ஒரு விஷயத்திலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

    இதற்கிடையே, இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை தேர்வு செய்ய வேண்டும், தொகுதி பங்கீட்டையும் ஜனவரி இறுதிக்குள் பேசி முடிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    தலைநகர் டெல்லியில் இன்று காணொலி காட்சி மூலம் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் உள்பட பலர் இந்தக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்தியா கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின.

    நிதிஷ்குமார் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து கார்கே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • பா.ஜனதாவின் பொய்கள், வஞ்சகம், தவறான செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு மக்கள் முன்னிலையில் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்.
    • காங்கிரசார் தங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி தள்ள வேண்டும்.

    புதுடெல்லி:

    டெல்லியில், நாடு முழுவதும் இருந்து வந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

    பா.ஜனதா தனது அரசின் 10 ஆண்டுகால தோல்விகளை மூடி மறைப்பதற்காக உணர்வுபூர்வமான பிரச்சனைகளை எழுப்பி வருகிறது. ஒவ்வொரு பிரச்சனையிலும் திட்டமிட்டு காங்கிரசை சம்பந்தப்படுத்துகிறது.

    நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பா.ஜனதாவின் பொய்கள், வஞ்சகம், தவறான செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு மக்கள் முன்னிலையில் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்.

    பாரத ஒற்றுமை பயணம் மேற்கொண்ட ராகுல்காந்திக்கு பாராட்டுகள். அவர் புதிதாக மேற்கொள்ளும் 'பாரத நீதி பயணம்' சமூக நீதி பிரச்சனையை தேசிய விவாத பொருளாக மாற்றும்.

    காங்கிரசார் தங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி தள்ள வேண்டும். உள்கட்சி பிரச்சனைகளை வெளியே பேச வேண்டாம். ஊடகங்களில் தெரிவிக்கக்கூடாது.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசின் வெற்றியை உறுதிசெய்ய ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். வெற்றிக்காக ஒரே குழுவாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கிடையே, மல்லிகார்ஜூன கார்கே தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 19 மாதங்களில் 31 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலையை மோடி அரசு குறைக்கவில்லை.

    பெட்ரோல், டீசல் விலை குறைப்பது தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று மோடி அரசின் மந்திரிகள் கூறுகிறார்கள்.

    பெட்ரோல், டீசல் விற்பனையில் மோடி அரசின் கொள்ளைக்கு கட்டுப்பாடே இல்லை. பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.8 முதல் ரூ.10 வரையும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.4 வரையும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒய்.எஸ்.ஷர்மிளா தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
    • ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஆந்திரபிரதேச அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார். இதையடுத்து, கடந்த நவம்பர் 3-ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "தெலுங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு எனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளேன். கேசிஆர் மற்றும் அவரது கூட்டாளிகளின் பெரும் ஊழலால், ஒரு பணக்கார மாநிலம் இப்போது பெரும் கடனில் சுமையில் சிக்கியுள்ளது" என கூறியிருந்தார்.

    அதனை தொடர்ந்து, ஐதராபாத்தில் ஜனவரி 2-ம் தேதி நடைபெற்ற கட்சிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஒய்எஸ் ஷர்மிளா, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை நேரில் சந்தித்து முக்கியமான அறிவிப்பை வெளியிடுவோம் என்று தெரிவித்திருந்தார்

    இந்நிலையில், டெல்லி சென்ற ஒய்எஸ் ஷர்மிளா, ஜனவரி 4-ம் தேதி அகில இந்தியா காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

    இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன், ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஆந்திரபிரதேச அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு மற்றும் 24 மணி நேரமும் மின்சாரம், பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக மாறும் என்று சொன்னீர்கள்.
    • மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் ஏற்பட்ட அதிகப்படியான தாமதம் பல கேள்விகளை எழுப்புகிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று காலை தனது எக்ஸ் பதிவில் கூறி இருப்பதாவது:-

    நரேந்திர மோடி அவர் களே இன்று 2023-ம் ஆண்டின் கடைசி நாளாகும். 2022 வரை ஒவ்வொரு விவசாயிகளின் வருமானமும் இரட்டிப்பாகும் என்று நீங்கள் சொன்னீர்கள். ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு மற்றும் 24 மணி நேரமும் மின்சாரம், பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக மாறும் என்று சொன்னீர்கள்.

    இதெல்லாம் நடக்கவில்லை. ஆனால் இது ஒவ்வொரு இந்தியருக்கும் தெரியும். பா.ஜனதாவின் பொய்கள் மிகவும் வலிமையானது.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

    இதேபோல காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாது குறித்த மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    2021-ம் ஆண்டுக்கான 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் ஏற்பட்ட அதிகப்படியான தாமதம் பல கேள்விகளை எழுப்புகிறது. இது கொரோனா தொற்று நோயுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. சந்தேகத்திற்கு இடமின்றி ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

    • மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் வேட்பாளர் ஆவதற்கு மறுப்பு தெரிவித்தார்.
    • ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க இந்தியா கூட்டணியில் உள்ள பல தலைவர்கள் விரும்பவில்லை.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜனதா கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன.

    இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் 4-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்ட 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே பெயரை அறிவிக்கலாம் என்று விருப்பம் தெரிவித்தார். இதற்கு அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆதரவு தெரிவித்தார். மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட 12 தலைவர்கள் உடனடியாக இதற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.

    ஆனால் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் வேட்பாளர் ஆவதற்கு மறுப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், 'நான் அடித்தட்டு மக்களுக்காக பணியாற்றவே விரும்புகிறேன். இந்தியா கூட்டணி முதலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும். பெரும்பான்மை எம்.பி.க்களை பெறுவதற்கு முன்பு பிரதமர் வேட்பாளர் குறித்து ஆலோசிப்பதில் பயன் இல்லை. வெற்றி பெற்ற பிறகு பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யலாம்' என்றார்.

    இந்தியா கூட்டணியில் உள்ள பெரிய கட்சி காங்கிரஸ் என்பதால் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த கட்சி காய் நகர்த்தி வருகிறது. இந்த நேரத்தில் இதை ஏற்றுக்கொண்டால் அது சோனியா மற்றும் ராகுலுக்கு தர்மசங்கடமாக போய்விடும் என்பதற்காக கார்கே இதை உடனடியாக மறுத்தார்.

    அதே நேரத்தில் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க இந்தியா கூட்டணியில் உள்ள பல தலைவர்கள் விரும்பவில்லை என்பதை நேற்றைய கூட்டம் வெளிப்படுத்தியது. பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி பெயரை அறிவிக்காததற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அடுத்தடுத்த நிபந்தனைகளையும் விதித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியில் உள்ளது.

    ராகுல்காந்தி இருக்கும்போது, மல்லிகார்ஜூன கார்கே தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை விரும்ப மாட்டார் என்பது மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு தெரியும்.

    ஆனாலும் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து ராகுல்காந்தியை வெளியேற்றவே அவர்கள் இருவரும் இந்த வியூகத்தை வகுத்ததாக பா.ஜனதா மூத்த தலைவர் கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

    • நிதி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையான செயல்படுகிறது.
    • பாராளுமன்றத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்படுகிறோம்.

    புதுடெல்லி:

    ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக "இந்தியா கூட்டணி" உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற கூட்டணி கட்சி உறுப்பினர்கள், சஸ்பெண்டு ஆன எம்.பி.க்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து திருச்சி எம்.பி. சிவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. நிதி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையான செயல்படுகிறது.

    * பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது.

    * வரலாற்றில் இல்லாத அளவுக்கு 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    * பாராளுமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டியது அரசின் கடமை.

    * பாராளுமன்றத்தில் எங்களை பேச அனுமதிப்பதில்லை.

    * நியாயமான கோரிக்கைகளை எழுப்பியும், எங்களின் குரலுக்கு செவிசாய்க்கவில்லை.

    * பாராளுமன்றத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்படுகிறோம்.

    * எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்குவது போல் சித்தரிக்கின்றனர்.

    * ஜனநாயகத்தை காக்கவே நாங்கள் போராடி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன் கார்கேவை மம்தா பானர்ஜி முன்மொழிந்தார்.
    • ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. இந்த கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே 3 முறை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    இந்த கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஆர்ஜேடி தலைவர் லாலு, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 28 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன் கார்கேவை மம்தா பானர்ஜி முன்மொழிந்தார். மம்தாவின் கருத்திற்கு வைகோ, உபி. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ஆதரவளித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்து மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், "எங்களின் இலக்கு வெற்றி தான். வெற்றிக்கு பிறகு தான் பிரதமர் யார் என முடிவு செய்யப்படும். பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்ற பின் எங்களிடம் போதுமான எம்.பிகள் இருப்பார்கள். அதன் பிறகு ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்" என்றார்.

    • கவர்னரை சந்தித்து ரேவந்த் ரெட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
    • ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நேற்று முன்தினம் டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநில மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் தெலுங்கானா முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டியை ஒருமனதாக தேர்வு செய்தனர்.

    இதற்கான அதிகார அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து கவர்னரை சந்தித்து ரேவந்த் ரெட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    இதனை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது. இதில் ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். 

    அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    முதல் மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு மல்லிகார்ஜூன கார்கே சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 28 கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
    • கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

    புதுடெல்லி:

    4 மாநில தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ராஜஸ்தானில் அந்த கட்சி ஆட்சியை இழந்தது. மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

    சத்தீஸ்கரில் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்து வந்த காங்கிரஸ் நேரம் செல்ல செல்ல பின்தங்கியது. இதனால் அந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது.தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் இமாலய வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்த நிலையில் 4 மாநில தேர்தல் முடிவு தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. 28 கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

    இந்த கூட்டம் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அவரது வீட்டில் மாலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் 4 மாநில தேர்தல் முடிவு தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. சட்டசபை தேர்தலில் கட்சிகள் தனியாக போட்டியிட்டதால் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.

    மேலும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை எப்படி எதிர்கொள்வது? பிரதமர் வேட்பாளர், தொகுதி பங்கீடு உள்பட முக்கிய முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    ×