search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ வைரல்"

    • பொதுமக்கள் சிலர் கடை உரிமையாளரையும், அங்கு வேலை பார்ப்பவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
    • கடையில் இருந்த சுமார் ஒரு லிட்டர் சிறுநீரையும் பறிமுதல் செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் காசியாத் இந்திரபுரி பகுதியில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட ஜூஸில் சிறுநீர் கலந்து வழங்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கடந்த வியாழக்கிழமை அன்று வாடிக்கையாளர் ஒருவருக்கு ஜூஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன் சுவை வேறுவிதமாக இருந்ததால் வாடிக்கையாளர் விசாரித்துள்ளார். அப்போதுதான், ஜூஸில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அறிந்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கடை உரிமையாளரையும், அங்கு வேலை பார்ப்பவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் இருவரையும் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த சுமார் ஒரு லிட்டர் சிறுநீரையும் பறிமுதல் செய்தனர்.

    • எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான வீடியோ 30 லட்சம் பேரின் பார்வைகளைப் பெற்றது.
    • கருத்து பகுதியில், பலரும் தங்கள் செல்லப் பிராணியின் அன்பைப் பற்றிய பல நினைவுகளைப் பகிர்ந்தனர்.

    நாய்கள் விசுவாசத்திற்கு பெயர்பெற்றவை. அவற்றின் அன்பு நம்மை பல நேரங்களில் நெகிழ வைக்கும். பாசமான ஒருநாய், தனது எஜமானரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சை துரத்திச் செல்லும் காட்சியால் சமூக வலைத்தளம் நெகிழ்ந்துள்ளது.

    அந்த நாயின் எஜமானர் நோய்வாய்ப்பட்டு ஆம்புலன்சில் ஏற்றப்பட்டபோது, நாய், வெகுதூரம் வரை ஆம்புலன்ஸ் பின்னால் ஓடிச் சென்றது. இதை கவனித்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள், இறுதியில் ஆம்புலன்சை நிறுத்தி, நாயை உள்ளே அனுமதித்த பின்பே அது அமைதியானது.

    எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோ 30 லட்சம் பேரின் பார்வைகளைப் பெற்றது. கருத்து பகுதியில், பலரும் தங்கள் செல்லப் பிராணியின் அன்பைப் பற்றிய பல நினைவுகளைப் பகிர்ந்தனர்.

    • ஆட்டோவில் அமர்ந்திருந்த 20 வயதுடைய நபர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார்.
    • குற்றவாளிக்கு அதிகபட்ச சட்ட தண்டனைகளை வழங்க வேண்டும் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

    பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளமான ரெட்டிட்டில் வெளியிட்டுள்ள வீடியோ பயனர்களின் கடும் கோபத்தையும், சமூக கவலையும் ஏற்படுத்தியுள்ளது.

    கத்ரிகுப்பே சாலையில் காரில் அப்பெண்ணும், தாயாரும் சென்றுக் கொண்டிருந்த போது ஒரு ஆட்டோ திடீரென இடமிருந்து வலமாகச் சென்றதால் மற்ற வாகனங்கள் மீது மோதாமல் தவிர்க்கப்பட்டது. ஆட்டோ குறுக்கே வந்தது குறித்து கேட்ட போது, ஆட்டோ ஓட்டுநர் அமைதியாக இருக்க ஆனால் ஆட்டோவில் அமர்ந்திருந்த 20 வயதுடைய நபர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார்.

    மேலும் கொலை மற்றும் கற்பழிப்பு மிரட்டல் விடுத்து, அருகில் இருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த நபர் பெண்ணின் கார் கண்ணாடியை உடைத்து, கதவை வலுக்கட்டாயமாக திறக்க முயன்றுள்ளார். சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே அப்பெண் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். அதனால் வீடியோ வெளிவந்தால் பெண்ணையும், முழு குடும்பத்தையும் கற்பழித்த பிறகு கொலை செய்து விடுவதாக அந்த வாலிபர் மிரட்டியுள்ளார்.

    அந்த பெண் தனது காருக்குள் இருந்து மோதலை பதிவு செய்து, சம்பவத்தின் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பெங்களூரு போலீசார் ஆட்டோ டிரைவரை கவனக்குறைவாக ஓட்டி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக கைது செய்தனர். ஆனால் மிரட்டல் விடுத்த நபரை இதுவரை கைது செய்யவில்லை.

    இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பயனர்கள் பலரின் சமூக கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிக்கு அதிகபட்ச சட்ட தண்டனைகளை வழங்க வேண்டும் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

    • தினமும் காலை, மாலை இருவேளையிலும் விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்று வழிபாடு செய்கின்றனர்.
    • 8 வினாடிகளே ஓடும் வீடியோவை பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    நாடு முழுவதும் கடந்த 7-ந்தேதி முதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். தினமும் காலை, மாலை இருவேளையிலும் விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்று வழிபாடு செய்கின்றனர்.

    இந்நிலையில், விநாயகர் சிலையை வழிபடும் வி.ஐ.பி.களுக்கு சிறப்பான கவனிப்பும், பொது வரிசையில் நின்று வழிபட்டவர்களை கழுத்தை பிடித்து தள்ளும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பை லால்பாக் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை வழிபடும் விஐபிகளுக்கு சிறப்பான கவனிப்பும், பொது வரிசையில் நின்று வழிபட்டவர்களை கழுத்தை பிடித்து தள்ளுகின்றன.

    8 வினாடிகளே ஓடும் வீடியோவை பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் கடும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    • வெளிநாட்டவர், ஒரு டாலர் தலை மசாஜ் என்று இந்திய தாத்தாவின் வீடியோவை வெளியிட்டார்.
    • தாத்தா எங்கிருக்கிறார் என்பது பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை.

    'ஒரு டாலருக்கு தலை மசாஜ்' என்ற பெயரில், இந்திய தாத்தா ஒருவரின் தலை மசாஜ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நல்ல தலை மசாஜ், தலை வலியை போக்கி, மனநிலையில் புத்துணர்ச்சியான மாற்றத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. பல முடி திருத்தகங்களில் முடி வெட்டிய பின்பு சில வினாடிகள் தலை மசாஜ் செய்து விடுவார்கள். பிரபலமான கடைகளில் தலை மசாஜிற்கு தனி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

    வெளிநாடுகளில் தலை மசாஜ் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறார்கள். இந்தியாவில் வயதான சவர தொழிலாளி ஒருவர் வாடிக்கையாளருக்கு ஸ்டைலாக தலை மசாஜ் செய்யும் வீடியோ, வெளிநாட்டவர் ஒருவரை கவர்ந்துள்ளது. அதற்கு அவர் ரூ.80 கட்டணம் வசூலிப்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்திருக்கிறார். காரணம் அவரது நாட்டில் தலை மசாஜிற்கு 30 டாலர் முதல் 60 டாலர் என்று வசூலிப்பார்கள். இது இந்திய மதிப்பில் 2,500 முதல் 5 ஆயிரம் ரூபாய்க்கு சமம்.

    எனவே அந்த வெளிநாட்டவர், ஒரு டாலர் தலை மசாஜ் என்று இந்திய தாத்தாவின் வீடியோவை வெளியிட்டார். தாத்தா தனது அனுபவ முதிர்வால் படு சுறுசுறுப்பாக தலையை தட்டி மசாஜ் செய்வதும், வாடிக்கையாளர் கண்ணை மூடி ரசிப்பதையும் உலகம் முழுவதும் உள்ள வலைத்தள பார்வையாளர்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

    இறுதியாக அந்த தாத்தா காது, நெற்றி, புருவம் மற்றும் கண்இமை பகுதியிலும் மசாஜ் செய்து புத்துணர்ச்சி அளிக்கிறார். வீடியோவை பாராட்டிய பார்வையாளர்கள், தலைமசாஜ் தனி ஸ்டைலாகவும், தபேலா வாசிப்பது போல இருப்பதாகவும் சிலர் கருத்து பதிவிட்டனர். சுமார் 20 லட்சம் பேர் இதை பார்வையிட்டு உள்ளனர். தாத்தா எங்கிருக்கிறார் என்பது பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை.

    • மீன்களை நெக்லஸ் போலவும் அணிந்துள்ளார்.
    • வலைத்தளப் பக்கத்தில் வீடியோ வெளியாகி 51 லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு உள்ளது.

    முன்பெல்லாம் "பேஷன் ஷோ" விழாக்களில் தான் புதுமையான உடைகளை அறிமுகம் செய்வார்கள். இப்போதெல்லாம், தங்கள் கற்பனைக்கேற்ற உடைகளை, ஆர்வமுள்ள சிலரே தயாரித்து அணிந்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு லைக் அள்ளிவிடுகிறார்கள்.

    அப்படி ஒரு மாடலிங் பெண், மீன்களை உடையாக்கி சமூகவலைத்தளத்தின் பார்வையை தன்பக்கம் திருப்பி உள்ளார். அவர் நூற்றுக்கணக்கான மீன்களை நூலில் கோர்த்து உடையாக அணிந்திருக்கிறார். அதை அணிந்து கொண்டு பேஷன்ஷோ மேடைக்கு பதிலாக ரோட்டில் அன்னநடை போட்டு வீடியோ பதிவு செய்துள்ளார்.

    மீன்களை நெக்லஸ் போலவும் அணிந்துள்ளார். ஒரு பெரிய மீனை, நன்றாக வாயைத் திறக்க வைத்து, கைப்பைபோல மாற்றி தூக்கி வருவது வலைத்தளவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    வலைத்தளப் பக்கத்தில் இந்த வீடியோ வெளியாகி 51 லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு உள்ளது. நெட்டிசன்கள், ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகளை பதிவிட்டனர்.


    • வலைத்தளவாசிகள் இது நடிப்பு என ரசித்துப் பார்த்ததுடன், வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டனர்.
    • வீடியோவை 3 நாட்களில் 4.5 கோடி பேர் பார்வையிட்டு உள்ளனர்.

    ரோபோ நாய் ஒன்று சோதனை முயற்சியின்போது பிரபல யூடியூபரை நெருப்புத் துப்பாக்கியால் சுட்ட காட்சி வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. 'ஸ்பீடு' என்று அறியப்படும் பிரபல அமெரிக்க யூடியூபர் (அவரது உண்மையான பெயர் டாரன் ஜாசன்), சமீபத்தில் 1 லட்சம் டாலருக்கு (ரூ.84 லட்சம்) ஒரு ரோபோ நாய்க்குட்டியை வாங்கினார். அதை நேரடியாக ஆன்லைன் வீடியோவில் பரிசோதித்துப் பார்த்தார்.

    முதலில் ரோபோ நாய்க்கு அவர் கைகொடுக்கிறார், நாயும் முன்னங்காலை தூக்கி கைகொடுத்தது. பின்னர் அவர் பின்னோக்கி பல்டி அடிக்கிறார். நாயும் துள்ளிக்குதித்தது.

    பிறகு ரோபோ நாயில் இணைக்கப்பட்டு உள்ள துப்பாக்கி பொத்தானை ஆன் செய்துவிட்டு, குரைக்கும்படி கட்டளையிட்டார். ஆனால் ரோபோ நாய் எதிர்பாராதவிதமாக, துப்பாக்கியை இயக்கி எஜமானரை எதிரியாக நினைத்து சுடத் தொடங்கியது. துப்பாக்கியில் இருந்து நெருப்பு பிழம்பு வெளியேறி யூடியூபரை தாக்கியது.

    இதை எதிர்பாராத அவர் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் குதித்தார். அப்போதும் ரோபோ நாய் அவரை நோக்கி தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்தது. ஒருவழியாக அதன் பார்வையில் இருந்து தப்பி, பின்புறமாக வந்து அதன் துப்பாக்கி பொத்தானை நிறுத்தியபிறகுதான் ரோபோநாய் சுடுவதை நிறுத்தியது.

    அதிர்ஷ்டவசமாக அவர் காயம் அடையாமல் தப்பினார். நேரலையாக வெளியான இந்த வீடியோ அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. வலைத்தளவாசிகள் இது நடிப்பு என ரசித்துப் பார்த்ததுடன், வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டனர். வீடியோவை 3 நாட்களில் 4.5 கோடி பேர் பார்வையிட்டு உள்ளனர்.


    • மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவின்பேரில் கொட்டாம்பட்டி வட்டார கல்வி அதிகாரி மற்றும் தொடக்கக்கல்வி அதிகாரி உள்ளிட்டோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
    • தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் பட்டூர் என்ற கிராமம் உள்ளது. இந்த நிலையில் பள்ளியின் கழிவறையை அங்கு படிக்கும் மாணவிகள் சுத்தம் செய்வது போன்ற வீடியோ ஒன்று வலைத்தளங்களில் பரவியது.

    அந்த ஊரை சேர்ந்த பெண் ஒருவரின் தூண்டுதலின் பேரில் மாணவிகள் சிலரை நடிக்க வைத்து இந்த வீடியோ எடுத்ததாகவும் பரபரப்பானது. இதுகுறித்து தெரியவந்ததும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா உத்தரவின்பேரில் கொட்டாம்பட்டி வட்டார கல்வி அதிகாரி சாந்தி மற்றும் தொடக்கக்கல்வி அதிகாரி உள்ளிட்டோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா கூறுகையில், "இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தொடக்கக்கல்வி அதிகாரிகளின் அறிக்கையை தொடர்ந்து, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கூறப்படும் பிற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது" என்றார்.

    • இளம்பெண் சூட்கேசின் ஒரு முனைப்பகுதியை பிய்த்து சாப்பிட தொடங்குகிறார்.
    • வீடியோவை இதுவரை 2½ கோடிக்கும் அதிகமான பயனர்கள் பார்த்து இளம்பெண்ணின் குறும்புத்தனத்தை ரசித்து வருகிறார்கள்.

    சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ காட்டுத்தீப்போல பரவி வருகிறது. அதில் ஒரு இளம்பெண் விமான நிலையத்தில் தனது வெள்ளைநிற சூட்கேசுடன் சுற்றித்திரிகிறார்.

    திடீரென விமான நிலையத்தில் உள்ள இருக்கையில் அமரும் அந்த இளம்பெண் சூட்கேசின் ஒரு முனைப்பகுதியை பிய்த்து சாப்பிட தொடங்குகிறார். இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் திளைக்கிறார்கள்.

    பின்னர் அந்த சூட்கேசை கொஞ்சம் கொஞ்சமாக அந்த இளம்பெண் பிய்த்து ருசித்து சாப்பிடுகிறார். அந்த இளம்பெண் சூட்கேஸ் வடிவிலான கேக்கை கடித்து சாப்பிட்டது வீடியோவின் இறுதியில் தெரிய வருகிறது.

    இந்த வீடியோவை இதுவரை 2½ கோடிக்கும் அதிகமான பயனர்கள் பார்த்து இளம்பெண்ணின் குறும்புத்தனத்தை ரசித்து வருகிறார்கள்.

    • சம்பவம் கடந்த 29-ந்தேதி நடந்ததாக கூறப்படுகிறது.
    • இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குஜராத்தில் திருடியதற்காக வாலிபர் ஒருவரை காரின் முன்பக்க பகுதியில் கட்டிவைத்து தாக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கோத்ரா தாலுகா கன்கு தம்பலா பகுதியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் வாலிபர் ஒருவர் பொருட்களை திருட முயன்றுள்ளார். இதுகுறித்து அறிந்த கடை உரிமையாளர் மற்றும் உடன் இருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து அடித்து காரின் பானெட்டில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். இச்சம்பவம் கடந்த 29-ந்தேதி நடந்ததாக கூறப்படுகிறது. போலீசாரின் கவனத்திற்கு சென்ற வீடியோ குறித்து விசாரணை நடத்தி இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குற்றவாளிகளை ஒப்படைக்காமல், சட்டத்தை கையில் எடுத்து கொடூரமான முறையை கையாளும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருவதால் இதுகுறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

    • பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    நேற்றுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மணீஷ் நர்வால் வெள்ளியும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர். தடகளத்தின் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார்.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீரரான சிவராஜன் சோலைமலையின் 'பிளையிங் ரிட்டர்ன்' ஷாட் தற்போது வைரலாகி வருகிறது.

    ஹாங்காங் வீரர் மான் கை சூவுக்கு எதிரான ஆண்கள் ஒற்றையர் SH6 குரூப் பிளே ஸ்டேஜ் ஆட்டத்தில், சிவராஜன் சோலைமலை சில அற்புதமான ஷாட்களை அடித்துள்ளார். இருப்பினும் இந்த ஆட்டத்தில், 13-21, 21-18, 15-21 என்ற கணக்கில் சோலைமலை தோல்வியடைந்தார்.

    • வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சொகுசு கார் மீது ஓலா கேப் மோதியதால் ஆத்திரமடைந்த சொகுசு காரின் உரிமையாளர் கால் டாக்சி டிரைவரை திரைப்பட பாணியில் தூக்கி விசி தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    வைரலாகும் 30 வினாடிகள் கொண்ட வீடியோவில், குடியிருப்பு வளாக பகுதியில் ஆடி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பின்னால் ஓலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இயங்கும் கார் ஒன்று வருகிறது. முன்னால் சென்ற ஆடி காரின் உரிமையாளர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த டாக்சி டிரைவரின் கார் லேசாக பம்பரில் மோதியுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த ஆடி காரில் இருந்தவர்கள், இறங்கி வந்த ஒருவர் ஓலா கார் ஓட்டுநரை அப்படியே தூக்கி வீசி தாக்குகிறார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரவு 11:20 மணியளவில் மும்பையில் உள்ள காட்கோபரில் உள்ள ஒரு மாலுக்கு எதிரே உள்ள கட்டிடத்தின் நுழைவாயிலில் நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். அதில் ஒரு பயனர், "இந்த திமிர்பிடித்த ஆடி பையன் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்" என்றார்.

    மற்றொரு பயனர், "இப்போதெல்லாம் சிலர் சக்தி வாய்ந்தவர்களாக மாற விரும்புகிறார்கள். அவர்கள் பலவீனமான நபர் மீது தங்கள் சக்தியைக் காட்டத் தொடங்குகிறார்கள்" என்றார்.

    ×