என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திறன் மேம்பாட்டு பயிற்சி"
- பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு வழங்கப்படும்
- விதை உற்பத்தி குறித்த நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம், திட்ட இயக்குநர் (அட்மா) வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி (விதை உற்பத்தி) என்ற தலைப்பில் வருகிற 11.12.2023 முதல் 16.12.2023 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறவுள்ளது.
வேளாண் அறிவியல் நிலைய பேராசியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்று பயிற்சியை நடத்தவுள்ளனர்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் 18 முதல் 40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் தாங்களே போக்குவரத்து செலவினம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இப்பயிற்சியில் 2 நாட்கள் கண்டுணர்வு சுற்றுலா, மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு அழைத்துச் சென்று விதை உற்பத்தி குறித்த நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் முதல் நாள் பங்கு பெறும் விவசாயிகள் மட்டுமே தொடர்ந்து 6 நாட்கள் பங்கேற்க வேண்டும்.
தொடர்ந்து விடுப்பின்றி கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு மட்டும் பயிற்சியின் இறுதிநாள் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில்
நடைபெறுகிறது.
விதை உற்பத்தியில் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்கள், விவசாயிகள் தங்களது பெயரை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு 30.11.2023க்குள் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்தகவலை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
- திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
வேளாண் துறையின் கீழ் விவசாயத்தில் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு அவர்களது திறனை மேம்படுத்தி உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 28 ஊரக இளைஞர்களுக்கு காளான் வளர்ப்பு என்ற தலைப்பில் தொழில்நுட்ப பயிற்சி 28.8.23 முதல் 2.9.23 வரை 6 நாட்கள் அருப்புக்கோட்டையில் உள்ள கோவிலாங்குளம் நிலையத்தில் வேளாண் அறிவியல் பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள தகுதியான விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சிக்கு 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் கல்வி தகுதி குறைந்தது 5ம் வகுப்பு மேல் படித்தவராகவும், கற்றுக்கொண்ட தொழில் நுட்பங்களை செயல்படுத்துவதில் ஆர்வமுடையவராகவும் இருக்க வேண்டும்.
இப்பயிற்சியானது வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் காளான் தொழில் முனைவோர் ஆகியோர் மூலம் வழங்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் உழவர் பயிற்சி நிலையம், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் அவர்களை தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொண்டு புதிய தொழில் முனைவோராக மாறிட, வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- தாயை நேசிப்பதை போல தாய் நாட்டையும் நேசிக்க வேண்டும்.
- தயக்கத்தை விட்டு தன்னம்பிக்கையை கடைபிடிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர்க–ளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கினார்.
கல்லூரியின் தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் முன்னிலை வகித்தனர்.
கலை கல்லூரி முதல்வரும், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரு–மான ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று, பயிற்சி முகாமின் நோக்கம் குறித்து பேசினார்.
கிருஷ்ணகிரி ஆரோக்கிய பாரதி தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கி–ணைப்பாளர் கவுதம், அமைப்பின் தேசிய திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அவர்கள் மாணவர்க–ளிடையே பேசும் போது தன்னலமற்ற சேவையே இன்றைய முதன்மை தேவை. தாயை நேசிப்பதை போல தாய் நாட்டையும் நேசிக்க வேண்டும். தயக்கத்தை விட்டு தன்னம்பிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.
இதில் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன், துறை தலைவர்கள், மாணவர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குறும்படம் மூலம் பன்நோக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
- நம் நலனை பேணி காப்பது போன்றவை மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு,
நெல்லிக்கனி நண்பர்கள் அறக்கட்டளை , சிதம்பரம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியோர் இணைந்து பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கான
குறும்படம் மூலம் பன்நோக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
இதில் பொது தேர்வை எதிர்கொள்வது குறித்தும் மாணவிகள் குழுவாக சேர்ந்து படிப்பது, தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது, தேர்வு பயத்தை கலைவது, தேர்வு நாட்களுக்கு முன் தன்னை எப்படி தயாரித்துக் கொள்வது, சுத்தம் ,பராமரிப்பு எப்படி நம் நலனை பேணி காப்பது போன்றவை மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேராசி ரியர்கள் கிருஷ்ணமூர்த்தி ,பாலசுப்பிரமணியம், உத்திரா தேவி, விஜய ராஜேந்திரன் மற்றும் மலைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் கலைச்செல்வி நன்றி தெரிவித்தார்.
- சிவந்தி அகாடமியில் ‘கேம்பிரிட்ஜ் ஆப் ஸ்கில்’ என்னும் பயிற்சி தொடங்கப்பட்டு உள்ளது.
- பேராசிரியர் பென்னட் முகாமின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும், எளிதல் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளவும் உதவும் சிறப்பு திறன்களை மேம்படுத்தும் வகையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சார்பில் 'கேம்பிரிட்ஜ் ஆப் ஸ்கில்' என்னும் பயிற்சி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இணையவழி பயிற்சி முகாமின் தொடக்க விழா ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்காக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தென் இந்தியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆங்கில அறிவுத்திறன் பயிற்சியின் வணிக மேம்பாட்டின் மேலாளர் சாமுவேல் ஆனந்தராஜ் கலந்து கொண்டு பேசினார். சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜூலா வரவேற்று பேசினார். ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர் பென்னட் பயிற்சி முகாமின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறினார்.
இதில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.முடிவில், சிவந்தி அகாடமி, கேம்பிரிட்ஜ் ஆங்கில அறிவுத்திறன் பயிற்சிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் சிம்ஸ்டன் தங்கராஜ் நன்றி கூறினார்.
- பயிற்சி முகாமிற்கு கல்லூரியின் இயக்குனர் இளங்குமரன் தலைமை தாங்கினார். முதல்வர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.
- பயிற்சி முடிவில் கல்லூரி துணை முதல்வர் நவீனா ஜாஸ்மின் நன்றி கூறினார்.
பல்லடம் ,நவ.14-
பல்லடம் அருகே உள்ள பொங்கலூரை அடுத்த கோவில் பாளையத்தில் டெர்ப்ஸ் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு கல்லூரியின் இயக்குனர் இளங்குமரன் தலைமை தாங்கினார். முதல்வர் கிருஷ்ணவேணி வரவேற்றார். பயிற்சியில் கோவை பி.எஸ்.ஜி. மேலாண்மை நிறுவனத்தின் இணை பேராசிரியர் ராம்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஆராய்ச்சி நெறிமுறைகள், கற்றல் திறன் மேம்படுத்துதல், பேராசிரியர்கள் தங்கள் தனித்திறன்களை வளர்த்துக் கொள்தல் குறித்து விளக்கிப் பேசினார். பயிற்சி முடிவில் கல்லூரி துணை முதல்வர் நவீனா ஜாஸ்மின் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்