search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 283565"

    • ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டல், ரிசார்ட்டிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    புதுச்சேரி:

    இந்தியா ஜி20 நாடுகளுக்கு தலைமை பொறுப்பேற்றுள்ளது. இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால் நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடந்து வருகிறது.

    இதையொட்டி புதுவை மாநிலத்தில் எஸ்20 எனப்படும் அறிவியல்-20 தொடக்கநிலை கூட்டம் இன்று நடந்தது. புதுவை மரப்பாலம் 100 அடி சாலையில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பிலான இக்கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் அசுதோஷ் சர்மா தலைமை வகித்தார். ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், கொரியா, ரஷியா, அமெரிக்கா, டர்கி, இங்கிலாந்து, இந்தோனேஷியா ஆகிய 11 நாடுகளில் இருந்து 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    மேலும் இந்தியாவில் உள்ள பல ஆராய்ச்சி, கல்வி நிறுவனங்களை சேர்ந்த 50 வல்லுநர்களும் பங்கேற்றனர். மாற்று எரிசக்தி, உலகளாவிய சுகாதார வசதிகள், அறிவியலுடன் சமுதாயம், கலாச்சாரத்தை இணைப்பதற்கான திட்டங்கள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

    அறிவியலில் ஒருங்கிணைந்த நிரந்தர வளர்ச்சிக்கு வழி நெறிமுறை, திட்டங்களை வகுப்பது குறித்தும் ஆராயப்பட்டது. மாலை 3.30 மணியுடன் மாநாடு நிறைவு பெறுகிறது. தொடர்ந்து மாநாட்டு விவாதங்கள், தீர்மானங்கள் குறித்து நிருபர்களிடம் விளக்குகின்றனர்.

    கூட்டம் நடைபெறும் மரப்பாலம் சுகன்யா கன்வென்சன் சென்டரை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், சுகன்யா கன்வென்சன் சென்டரை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டல், ரிசார்ட்டிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நகர் பகுதி முழுவதும் போலீசார் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாநிலத்தின் எல்லை பகுதியிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். புதுவைக்கு வந்துள்ள ஜி20 பிரதிநிதிகள் நாளை ஆரோவில் செல்கின்றனர். ஆரோவில்லை பார்வையிட்டு, அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

    • நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடக்கிறது.
    • விமான நிலையம், அக்கார்டு, ரெசிடன்சி, ரேடிசன் ஓட்டல்கள், சுகன்யா கன்வென்சன் சென்டர் ஆகிய 5 இடத்திலும் கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஜி20 மாநாடு வருகிற 30-ந் தேதி நடக்கிறது.

    இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் வல்லவன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதன்பின் கலெக்டர் வல்லவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடக்கிறது.

    புதுவையில் வருகிற 30, 31-ந் தேதிகளில் ஜி20 கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க பல நாட்டு பிரநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டை சிறப்பாக நடத்த புதுவை அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 30-ந் தேதி புதுவை மரப்பாலத்தில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கருத்தரங்கு நடக்கிறது.

    மாநாட்டையொட்டி ஜி 20 சின்னத்தை மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற ஜி20 மைய கருத்தை முன்வைத்து பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. பல கலைநிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    புதுவை நகர பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். புதுவை பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வகையிலும், சுற்றுலா தலமாக வெளிப்படுத்தும் வகையிலும் நகரம் பொலிவுபடுத்தப்படும். மாநாடு வெற்றிகரமாக நடைபெற புதுவையின் அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    சுற்றுலா பயணிகளுக்கு தடை என தவறான வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30-ந் தேதி இந்தோனேஷியா, இந்தியா, பிரேசில் விஞ்ஞானிகள் இணைந்து புதுவையில் நடைபெறும் கூட்டத்தை வழிநடத்துகின்றனர். 31-ந் தேதி ஆரோவில் சென்று பல இடங்களை பார்வையிடுகின்றனர்.

    புதுவை மாநாட்டில் 75 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும். டி.ஐ.ஜி. தலைமையில் 37 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம், அக்கார்டு, ரெசிடன்சி, ரேடிசன் ஓட்டல்கள், சுகன்யா கன்வென்சன் சென்டர் ஆகிய 5 இடத்திலும் கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.

    இந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 1-ந் தேதி வரை அமலில் இருக்கும். பிரதிநிதிகள் பயணிக்கும் சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். வழக்கம்போல மதுக்கடை உட்பட அனைத்து கடைகளும் திறக்கலாம். மாநாட்டில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட உள்ளனர்.
    • தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிப்பது மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மாமல்லபுரம்:

    ஜி20 கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்தியா தலைமை வகித்து உள்ளது. இதைத் தொடர்ந்து ஜி 20 மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டின் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதன்படி வருகிற 31-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் (பிப்ரவரி 1-ந் தேதி), 2-ந் தேதி ஆகிய 3 நாட்கள் சென்னையில் உள்ள தாஜ்கோரமண்டல் மற்றும் கன்னிமாரா நட்சத்திர விடுதிகள், கிண்டி ஐ.டி.சி. சோழா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட உள்ளனர்.

    அவர்களுக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிப்பது மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பா டுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் செய்யப்பட்டு உள்ள வரவேற்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். அப்போது வெளி நாட்டினரை வரவேற்க எந்தந்த இடத்தில் கலைநிகழ்ச்சி குழுவினர் இருக்க வேண்டும். பாதுகாப்பு குறித்து ஆேலாசனை வழங்கினார். அப்போது சென்னை வட்ட தொல்லி யல்துறை கண் காணிப்பாளர் காளிமுத்து, கோட்டாட்சியர் சஜ்ஜீவனா, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • ஜி20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
    • தமிழகத்தில் எந்தெந்த நகரங்களை தேர்வு செய்வது என அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    சென்னை:

    ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    மத்திய அரசு 32 பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் சென்னையில் ஜி-20 கூட்டம் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி முதல் நபராக அறிவித்தார்.

    இந்நிலையில், ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு இரவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்.

    • இந்தோனேசியா நாட்டின் பாலியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற நாளை தொடங்குகிறது.
    • மாநாடு நாளை தொடங்கவுள்ள நிலையில் அமெரிக்க, சீன அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா நாட்டின் பாலியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், இந்தோனேசியாவின் பாலியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்துப் பேசி வருகிறார். மாநாடு நாளை தொடங்கவுள்ள நிலையில் இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின் முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×