search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்"

    • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மொத்தமாக 12 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
    • விவசாயிகள் சுத்திகரிக்கப்பட்டு வரும் நன்னீரை விவசாய நிலத்திற்கு வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சாலைக்கார தெருவில் உள்ள மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று மேயர் சண்.ராமநாதன், ஆணையர் மகேஸ்வரி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் மேயர் சண் ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மொத்தமாக 12 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    இதில் தற்சமயம் ஒரு எந்திரம் பழுதாகி உள்ளதால் 11 எந்திரங்கள் மூலம் இன்று சுத்திகரிப்பு நடந்து கொண்டு உள்ளது.

    இன்னும் இரண்டு நாட்களில் பழுதான எந்திரமும் சரி செய்யப்பட்டு சுத்திகரிப்பு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இந்த சுத்திகரிப்பு நிலையம் 28 எம்.எல்.டி கொள்ளளவு கொண்டதாகும்.

    அதில் 13 எம் .எல். டி கழிவு நீரை நாள்தோறும் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

    இதிலிருந்து சுத்திகரிக்கப்படும் தண்ணீர் அனைத்தும் தற்சமயம் வடவாற்றில் விடப்படுகிறது.

    தண்ணீரை சுற்றுப்பகுதியில் உள்ள சுமார் 300 ஏக்கர் நிலம் பயிரிடப்படுகிறது.

    அந்த விவசாயிகள் சுத்திகரிக்கப்பட்டு வரும் நன்னீரை விவசாய நிலத்திற்கு வழங்குமாறு ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர்.

    அந்த கோரிக்கை குறித்து விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    அது சம்பந்தமாக அனுமதி கிடைத்த பின்னர் விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

    தற்சமயம் செய்யப்படும் ஆய்வு எதற்காக என்றால் மாநகராட்சி கூட்டங்களில் அடிக்கடி இந்த சுத்திகரிப்பு நிலையம் சரிவர வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாநகர நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, நகர அமைப்பு அலுவலர் ராஜசேகரன், தமிழ்நாடு நீர் முதலீட்டு கழகக்குழு தலைவர் எழிலன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • ரூ.22 லட்சத்தில் கோபாலச முத்திரம் கிழக்குக்கரை பகுதியில் இயற்கை முறை யில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • இந்த பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை மேயர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தேங்கும் கழிவு நீரை சுத்தப்படுத்த கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி மாநகராட்சி 12-வது வார்டில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்தில் கோபாலச முத்திரம் கிழக்குக்கரை பகுதியில் இயற்கை முறை யில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கல்லறை தோட்டம், கோபால் நகர், ரோமன்மிஸன் தெரு, ஒய்.எம்.ஆர். பட்டி, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர், வாய்க்கால் வழியாக கோபாலசமுத்திரம் மழைநீர் சேகரிப்பு மையத்திற்கு வந்து சேர்கிறது. இந்த கழிவுநீர் 6 தடுப்பணைகள் அமைத்து சுத்திகரிப்பட உள்ளது. இதற்கு கல் வாழை, யானைக்கால், மஞ்சு, வெட்டி வேர் மற்றும் வடிகட்டி அமைப்பு கட்டப்படுகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து கோபாலசமுத்திரம் மழைநீர் சேகரிப்பு மையத்தில் சேகரிக்கும் வகையில் அமைகிறது.

    இந்த பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை மேயர் இளமதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அமையவுள்ள சுத்தி கரிப்பு முறை மற்றும் செயல்படும் முறைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார். மேலும் விரைவில் பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்ததாரர் ஸ்ரீதரனுக்கு அறிவுறுத்தி னார்.

    இந்நிகழ்ச்சியில் மாநக ராட்சி பொறியாளர் சுப்பிர மணி, உதவி பொறியாளர் சாமிநாதன், கவுன்சிலர் ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு

    ஆம்பூர்:

    ஆம்பூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அம்ருத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த ரூ.165 கோடியே 55 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆம்பூர் நகராட்சி ஏகஸ்பா பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் ரூ.32 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பணி தற்போது 40 சதவிகிதம் முடிக்கப்பட்டுள் ளது.

    இந்த பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் பார் வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது 31.3.2023-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ராம்சேகர், உதவி நிர்வாக பொறியாளர் சண்முகம், நகராட்சி ஆணையர் ஷகிலா, நக ராட்சி பொறியாளர் ராஜேந்திரன், ஆம்பூர் நகராட்சி கவுன் சிலர் வசந்த்ராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    ×