என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிலம் அபகரிப்பு"
- எனது குடும்ப கோவில்-நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள் என்று ரஜினி மன்ற பிரமுகர் போலீசில் புகார் செய்தார்.
- இதனை தடுத்து நிறுத்தி உடனடியாக எங்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பை வழங்க வேண்டும்.
மதுரை
மதுரை சின்ன சொக்கி குளம் பகுதியை சேர்ந்தவர் பாலநமச்சிவாயன். ரஜினி மன்ற நிர்வாகியான இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா சத்திரக் குடி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்களது குடும்பத்திற்கு சொந்தமாக பூர்வீகமான குமர கடவுள் சிலை, கிரீடம் மற்றும் எனது தாத்தாவின் சமாதி ஆகியவை முது குளத்தூர் அருகே வளநாடு கிராமத்தில் கருப்ப பிள்ளை மடம் என்ற பெயரில் உள்ளது.
இங்கே பொதுமக்கள் வழிபாடு எதுவும் இல்லை. எங்கள் குடும்ப வழிபாடு மட்டுமே நடந்து வருகிறது. இது தனியார் கோவில். தனியார் சொத்து என்ப தற்கான உரிமை கோரி முதுகுளத்தூர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து நிலுவையில் இருந்து வரும் நிலையில் பரமக்குடி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த கோவில் மற்றும் இடத்தை அப கரிக்கும் நோக்கில் அதன் சாவியை கேட்டு மிரட்டு கிறார்கள். சாவியை தரா விட்டால் பூட்டை உடைத்து உள்ளே செல்வோம் என்றும் வழக்கு நிலுவையில் இருப் பதையும் பொருட்படுத்தா மல் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள்.
யாரோ தூண்டுதலின் பேரில் எங்களது குடும்ப கோவில், நகை மற்றும் இடத்தை அபகரிக்க இந்து சமய அறநிலைத்துறை அதி காரிகள் முயற்சிக்கிறார்கள். எனவே இதனை தடுத்து நிறுத்தி உடனடியாக எங்க ளுக்கு உரிய சட்டப் பாது காப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
- போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிக்கப்பட்டது.
- சிவகாசி டவுன் போலீசார் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
சிவகாசி உசேன் காலனியை சேர்ந்தவர் தெய்வமணி(வயது22), பட்டதாரி ஆசிரியர். இவர் கடந்த 2000 ஆண்டில் மகாராஜா நகரில் நிலம் வாங்கினார். இந்த நிலையில் தற்போது மகளின் படிப்பு செலவிற்காக வங்கியில் நில பத்திரத்தை அடமானம் வைக்க முடிவு செய்தார். இதற்காக வில்லங்க சான்றி தழை சரிபார்த்தபோது, தெய்வமணிக்கு சொந்த மான இடம், கடந்த ஆண்டு தனலட்சுமி என்பவரிடம் இருந்து அவரது கணவர் செந்தில்குமாருக்கு விற்கப்பட்டதாகவும், பின்னர் அதனை அவர் மாரிக்கனி, முத்துலட்சுமி ஆகியோருக்கு விற்றுள்ள தாகவும் குறிப்பிடப்பட்டி ருந்தது. மேலும் அந்த நிலப்பத்திரத்தை வைத்து தனியார் வங்கியில் ரூ.9 லட்சம் கடன் வாங்கி யிருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த தெய்வமணி இதுகுறித்து விசாரித்தபோது, தனலட்சுமி மகள் என போலி ஆவணத்தை தயார் செய்துள்ளார். மேலும் தெய்வமணி இறந்ததாக கூறி போலி சான்றிதழையும் தயார் செய்து அதன் மூலம் நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக பத்திர எழுத்தர் வைரமுத்து, சிவகாசி சார்பதிவாளர் செந்தில் ராஜ்குமார் உள்பட 8 பேர் இருந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- சிந்தாதிரிப்பேட்டை காக்ஸ் தெருவில் தலா 1083 சதுர அடி கொண்ட 2 வீடுகள் உள்ளன.
- கைது செய்யப்பட்டவர்களை மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
சென்னை:
காஞ்சிபுரம் பி.எஸ்.கே. தெருவை சேர்ந்தவர்கள் லட்சுமி பாய், பத்மா பாய். இவர்களுக்கு சென்னை, சிந்தாதிரிப்பேட்டை காக்ஸ் தெருவில் தலா 1083 சதுர அடி கொண்ட 2 வீடுகள் உள்ளன.
இவற்றை போலி ஆவணங்கள் மூலமாக கலைச்செல்வி, அன்பு, சுசீலா ஆகியோர் அபகரிப்பு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மதிப்பு ரூ.3 கோடி ஆகும். இதுபற்றி லட்சுமி பாய், பத்மா பாய் ஆகியோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், கலைச்செல்வி, அன்பு ஆகியோரை கைது செய்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
- மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேரை கைது செய்தனர்.
- புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு பல இடங்களில் சொத்துகள் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை ரெயின்போ நகரில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மோசடி செய்யப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேரை கைது செய்தனர்.
மேலும் அப்போது மாவட்ட பதிவாளராக இருந்த ரமேஷ், நில அளவைத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே வில்லியனூர் பைபாஸ் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அதிகாரிகள் மீட்டனர். இந்த நிலையில் புதுவை மணக்குளவிநாயகர் கோவிலுக்கு சொந்தமான மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக புதுவை திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக்கமிட்டியின் பொதுச்செயலாளர் தட்சணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு பல இடங்களில் சொத்துகள் உள்ளது. அதுபோல் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் வானூரிலும் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பு மிக்க நிலம் உள்ளது.
தற்போது அந்த நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மனைகளாக பிரித்து பலர் வீடு கட்டியுள்ளனர். எனவே காவல் துறை நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்து உடனே அந்த இடத்தை மீட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முகமது இப்ராகிம் இறந்த சில நாட்களில் அவரே தனக்கு சொத்துக்களை உயில் எழுதி வைத்ததாக அப்துல் ஹக் போலி ஆவணம் தயாரித்துள்ளார்.
- முகமது இப்ராகிமின் மனைவி ரஹிமா பீவி மோசடி குறித்து வீரசோழன் போலீசில் புகார் செய்தார்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை அடுத்துள்ள வீரசோழன் மேலவண்டல் தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் அப்துல் ஹக் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக தெரிகிறது.
முகமது இப்ராகிம் இறந்த சில நாட்களில் அவரே தனக்கு சொத்துக்களை உயில் எழுதி வைத்ததாக அப்துல் ஹக் போலி ஆவணம் தயாரித்துள்ளார். இதனை தனது பெயருக்கு மாற்ற பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையறிந்த முகமது இப்ராகிமின் மனைவி ரஹிமா பீவி மோசடி குறித்து வீரசோழன் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து ரஹிமா பீவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட்டு சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வீரசோழன் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இறந்தவர் தனக்கு உயில் எழுதி வைத்தது போல் போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்புள்ள நிலத்தை அப்துல் ஹக் அபகரிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- அகரம் ஊராட்சி ஓலப்பாளையம் கிராமம், அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முத்தான் (வயது 90).
- எங்களது சொத்தை அபகரித்து மோசடி செய்த எனது மருமகள் சாந்தியை அழைத்து விசாரணை செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் அருகில் உள்ள அகரம் ஊராட்சி ஓலப்பாளையம் கிராமம், அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முத்தான் (வயது 90).
இவர் தனது மனைவி பாவாயியுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து, மனு கொடுத்தார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-
திருச்செங்கோடு வட்டம், அகரம் கிராமம், ஓலப்பாளையம் அருந்ததியர் தெருவில் குடியிருந்து வருகிறேன். எனது மகன் நடேசன் கடந்த 23.02.2016-ல் இறந்து விட்டார். இந்த நிலையில், எனது தந்தை கந்தன் எனக்காக கொடுத்த பூர்வீக சொத்தை, மகன் நடேசன் இறந்த பிறகு, என் பேரன் சிதம்பரம், எனது மருமகள் சாந்தி ஆகியோர் என்னை ஏமாற்றி, என்னிடம் கையொப்பம் பெற்று அபகரித்து விட்டனர்.
மேலும் எனது கையிலிருந்த ரொக்கம் இருப்பு ரூ.7 லட்சத்தையும் எனது பேரன் சிதம்பரம், மருமகள் சாந்தி ஆகியோர் வாங்கிக் கொண்டார்கள். இப்போது எனது பேரன் சிதம்பரமும் இறந்து விட்டார். எனது மருமகள் சாந்தி, பூர்வீக சொத்தான 76 சென்ட் நிலத்தை ரூ.1.50 கோடிக்கு விற்று விட்டார்.
எனவே என்னை ஏமாற்றி கையொப்பம் பெற்றுக் கொண்டு, எங்களது சொத்தை அபகரித்து மோசடி செய்த எனது மருமகள் சாந்தியை அழைத்து விசாரணை செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நான் கொடுத்த ரூ.7 லட்சம் பணமும், கண்தெரியாமல், உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் எனக்கும், எனது மனைவிக்கும் உயிர் உள்ள வரை சாப்பாட்டிற்கும், மருத்துவ செலவிற்கும், இறந்துவிட்டால் இறப்பு செலவிற்கும் என ரூ.20 லட்சத்தை எனது மருமகள் சாந்தியிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்
- கருணாகரன் (வயது 54). விவசாயியான இவருக்கு அதேபகுதியில் 1.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
- கடனுக்கு பாதுகாப்பாக சொத்தின் பவரை தனது பெயருக்கு கடன் கொடுத்தவர் எழுதி வாங்கியுள்ளார்.
சேலம்:
சேலம் நிலவாரப்பட்டி செம்மலைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 54). விவசாயியான இவருக்கு அதேபகுதியில் 1.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த நிலத்தின் ஆவணங்களை வைத்து சேலம் சீலநாயக்கன்பட்டியில் வசிக்கும்
கந்துவட்டி தொழில் நடத்தி
வரும் ஒருவரிடம் ரூ.90 ஆயிரம் அவசரத்தே வைக்காக பணம் வாங்கியுள்ளார்.
அப்போது இவரிடம் கடனுக்கு பாதுகாப்பாக சொத்தின் பவரை தனது பெயருக்கு கடன் கொடுத்தவர் எழுதி வாங்கியுள்ளார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த கடனை திருப்பி கொடுத்த பிறகு அசல் பவர் பத்திரத்தை ரத்து செய்யுமாறு கருணாகரன் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் பணம் கொடுத்தவர் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் கடத்தி வந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த கருணாகரன் சொத்தின் மீது வில்லங்கம் உள்ளதா என ஈசி போட்டு பார்த்துள்ளார். அப்போது கருணாகரனின் கையெழுத்தினை போட்டு போலியான ஆவணங்கள் தயாரித்து சொத்தினை பணம் கொடுத்தவரின் தந்தையின் பெயருக்கு கிரயம் செய்துள்ளது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த விவசாயி இது குறித்து சேலம் மாநகர நில அபகரிப்பு போலீசில் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் சேலம் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுமீதும் உரிய நடவடிக்கை எடுக்காததால், கருணாகரன் சென்னை உயர்தீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை அடுத்து விவசாயி கருணாகரன் மனுமீது உரிய விசாரணை நடத்தி 2 வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு சேலம் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
- ரூ.3 லட்சம் கடனாகப் பெற்றார். அந்த கடனுக்காக கோபிநாத் அசலுடன் வட்டியும் சேர்த்து மாதம் மாதம் கொடுத்து வந்துள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் சின்ன முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி . வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் கோழித் தீவன மூலப் பொருள் வியாபாரம் செய்து வரும் கோபிநாத் என்பவர் கடந்த 2011-ம்
வருடம் வியாபார அபிவிருத்திக்காக ரூ.3 லட்சம் கடனாகப் பெற்றார். அந்த கடனுக்காக கோபிநாத் அசலுடன் வட்டியும் சேர்த்து மாதம் மாதம் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் 2 லட்சம் ரூபாய் கடன் பாக்கி இருக்கும்
நிலையில் துரைசாமி, கோபி நாத்திடம், 'உடனடியாக பணத்தை கொடு, அவ்வாறு பணத்தை கட்டவில்லை என்றால், மாதம் 2 லட்சம் டபுளிங் வட்டி" என்று மிரட்டி மாதா மாதம் 2 லடசம் பெற்று வந்துள்ளார். மேலும் 'இதை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன்" என்றும் மிரட்டி வந்துள்ளார்.
இதனால் கோபிநாத் மன நிலை பாதிப்பு அடைந்து விட்டார். கோபிநாத் கடனுக்காக துரைசாமி யிடம் பிணை யமாக கொடுத்த சொத்து பத்தி ரங்க ளையும் துரைசாமி அவரை கடத்திச் சென்று, கொலை மிரட்டல் விடுத்து, வெற்று பத்தி ரங்களிலும், வெற்று பேப்பர்க ளிலும் கையெழு த்துக்களையும் பெற்று இருக்கிறார்.
கோபிநாத் சொத்துக்க ளையும் துரைசாமி, அவரது பெய ருக்கு கடந்த 2017-ம் வருடம் மாற்றிக் கொண்டுள்ளார். கடந்த 2020-ம் வருடம் கோபிநாத், துரைசாமியிடம் 'பணம் முழுவதையும் பெற்று க்கொண்டுவிட்டீரே எனது சொத்து ஆவணங்களை யும், நான் கொடுத்த வங்கி காசோலைகளையும் எனக்கு கொடுங்கள்" என்று கேட்டுள்ளார்.
அப்போது துரைசாமி, கோபிநாத் சொத்துக்களை மோசடி செய்து அவரது பெயருக்கு மாற்றிக்கொண்டுள்ளது தெரியவந்தது . இந்த விவரம் தெரிந்த கோபிநாத் காவல் நிலையத்தில் துரைசாமி மீது மோசடி புகார் கொடுத்தார். இதுபற்றிய விவரம் தெரிந்த துரைசாமி, உடனடியாக கோபிநாத்திடம் ஏமாற்றி மிரட்டி பிணையமாக பெற்ற காசோலைகளில் ஒரு காசோலையை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துவிட்டார். மேலும் பல காசோலைகளை வைத்து கோபிநாத்தின் மீது அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு போடுவதாக கோபிநாத்தை துரைசாமி மிரட்டியுள்ளார். மேலும் அவர் ஏற்கனவே ரேசன் அரிசி கடத்தி குண்டர் சட்டத்தில் கைதாகி, சிறை சென்று ஜாமீனில் வெளியில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கந்து வட்டி கொடுமையின் மூலம் பாதிப்பு அடைந்த கோபிநாத் இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் தனது சொத்துக்களையும், தான் கையெழுத்து போட்டுக் கொடுத்த வெற்று பத்திரங்கள், வெற்று பேப்பர்கள், தனது வங்கி காசோலைகள் போன்ற ஆவணங்களையும் துரைசாமியிடமிருந்து மீட்டுத் தரவேண்டி புகார் மனு அளித்துள்ளார். குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்