என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டெங்கு பாதிப்பு"
- புதுச்சேரியில் வசிக்கும் தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் 14 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது குறைவாகத்தான் உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மக்களுக்கு அதிக அளவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது.
அதில் பெரும் பாலானவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தவிர சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சலாலும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாள்தோறும் 20-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் புதுச்சேரியில் 23 பேருக்கும், காரைக்காலில் 14 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்கள் தவிர, புதுச்சேரியில் வசிக்கும் தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் 14 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, டெங்கு குறித்து மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளரும் சுகாதாரத்துறை இயக்குனருமான (பொறுப்பு) டாக்டர் செவ்வேள் கூறியதாவது:-
புதுச்சேரியில் டெங்கு, சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தற்போது கண்டறியப்படுகிறது. 100 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டால் அவர்களில் 30 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது குறைவாகத்தான் உள்ளது. அடுத்துவரும் நாட்களில் மழை அதிகமாக இருக்குகும் என்பதால் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை சற்று உயரும். டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசுமருந்து தெளிப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் சுகாதாரத்துறையின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- தடுப்பு நடவடிக்கை தீவிரம்
- காய்ச்சலால் அவதி-எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் தற்போது பருவ மழை காரணமாக சளி, இருமல், காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக குழந்தை களுக்கு அதிகளவில் சளி ,காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி குடியாத்தம், பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரி களில் காய்ச்சல் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளன.
இன்று ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் 227 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 92 பேர், குடியாத்தத்தில் 10 பேர் பேரணாம்பட்டில் 2 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது தவிர தனியார் ஆஸ்பத்திரிகளில் 123 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
இன்று ஒரே நாளில் 8 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பை தடுக்க பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இது குறித்து வேலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பானுமதி கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் டெங்கு பரவலை தடுக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெங்கு மற்றும் காய்ச்சல் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் ஆர் ஆர் டி குழுவினர் ஆய்வு செய்து சுகாதார பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இது தவிர சனிக்கிழமை தோறும் வேலூர் மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- காய்ச்சல் வார்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேர் பாதிக் கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிக ரித்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் தீவிர தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளன.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகள் டெங்கு பாதிப்புக்குள்ளான வர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் காய்ச்சல் வார்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளன.
இந்த நிலை யில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் கொசப்பேட்டை யில் நேற்று ஒருவர் உட்பட 4 பேர் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே போல் குடியாத்தத்தில், 22 வயது மற்றும் 25 வயது கொண்ட ஆண்கள் 2 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி
- 33 இடங்களில் சிறப்பு முகாம்கள்
வேலூர்:
வேலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு டெங்கு கொசுவை ஒழிக்கும் பணியில் சுகாதாரப்பணி யாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவம னைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து நேற்று பரிசோதனை செய்யப்பட்டன.
அதில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொணவட்டத்தில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன், காங்கேய நல்லூரில் 40 வயது மதிக்கத்தக்க பெண், அரியூர் மற்றும் அணைக்கட்டு தாலுகா குப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ஆண்கள் 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு புதியதாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்ப ட்டுள்ளது.
இதையடுத்து அவர்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் உள்ள டெங்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் சுகாதாரப்பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறனர்.
வேலூர் மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 23 பேருக்கு டெங்கு பாதிக்கப்ப ட்டுள்ளது. இன்றும் வேலூர் மாவட்டத்தில் 33 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
33 இடங்களில் சிறப்பு முகாம்கள்
வேலூர்:
வேலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு டெங்கு கொசுவை ஒழிக்கும் பணியில் சுகாதாரப்பணி யாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவம னைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து நேற்று பரிசோதனை செய்யப்பட்டன.
அதில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொணவட்டத்தில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன், காங்கேய நல்லூரில் 40 வயது மதிக்கத்தக்க பெண், அரியூர் மற்றும் அணைக்கட்டு தாலுகா குப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ஆண்கள் 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு புதியதாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்ப ட்டுள்ளது.
இதையடுத்து அவர்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் உள்ள டெங்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் சுகாதாரப்பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறனர்.
வேலூர் மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 23 பேருக்கு டெங்கு பாதிக்கப்ப ட்டுள்ளது. இன்றும் வேலூர் மாவட்டத்தில் 33 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
- புதுவை அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
- அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் போதிய மருந்துகளை கையிருப்பு வைக்கவும் உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.
டெங்கு பாதிப்பினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இது புதுவை மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கலெக்டர் வல்லவன், சுகாதாரத்துறை செயலாளர் முத்தம்மா, இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது புதுவையில் டெங்கு பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள். புதுவை அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளிடம், டெங்கு பரவலை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கையை துரிதப்படுத்தவும், வீடுவீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.
மேலும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக டாக்டர்களை அணுக அறிவுறுத்தவும், கொசுவை ஒழிக்க மருந்து தெளிக்கவும், அனைத்து ஆஸ்பத் திரிகளிலும் போதிய மருந்துகளை கையிருப்பு வைக்கவும் உத்தரவிட்டார்.
அதோடு டெங்கு காய்ச்சல் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை சுகாதாரத்துறைக்கு உடனடியாக தெரிவிக்க சுற்றறிக்கை அனுப்புமாறும் அறிவுறுத்தினார்.
இதற்கிடையே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினார்.
டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டார்.
- மாணவி நிஷாந்தினி மீன்வள பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
- பெற்றோரும், உடன் படித்த தோழிகளும் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கொக்கிலமேடு மீனவர் பகுதியில் மளிகை கடை நடத்துபவர் ரவீந்திரன். இவரது மகள் நிஷாந்தினி (வயது 18). இவர் பொன்னேரியில் உள்ள ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
இவர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் உடலைப் பார்த்து பெற்றோரும், உடன் படித்த தோழிகளும் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. இளம் வயதில் டெங்குவிற்கு கல்லூரி மாணவி பலியானதால் கொக்கிலமேடு கிராமமே சோகமயமாக காணப்பட்டது.
- காரைக்காலில் டெங்கு பரவும் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில், டெங்கு நோய் பரவும் பகுதிகளில், மாவட்ட நலவழித்துறை அதிகாரிகள் ஆய்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கியதிலிருந்து, ஒரு சில நகர் பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை காரைக்கால் மாவட்டத்தில் 4 பேருக்கு டெங்கு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காரைக்கால் ராம்நகர், நேரு நகர் விரிவாக்கத்தில் இருவருக்கு நேற்று டெங்கு நோய் கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து, மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் தலைமையில், நோய்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர், சுகாதர ஆய்வாளர் சிவவடிவேல், சுகாதார உதவியாளர் மரிய ஜோசப் மற்றும் கிராமப்புற செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தி, டெங்கு சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மேலும், அப்பகுதி மக்களுக்கு, கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்கள் குறித்து, அதனை தடுக்கும் முறைகள், சிகிச்சை முறை, டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக, அப்பகுதி முழுவதும், கொசுக்களை அழிக்கும் புகை மருந்து அடிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, நோய்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர் பொதுமக்களிடம் பேசியதாவது:-மழை காலங்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்க கூடும். அவற்றில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் முட்டையிட்டு கொசு உற்பத்தியை பெருக்கும். இதனால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகையால் பொதுமக்கள் இந்த மழைக்கால, பேரிடர் காலங்களில் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி இருந்தால், மருந்துகளை உட்கொள்ளா மல், அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்