search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய கோப்பை 2023"

    • கில் 19 ரன்னிலும் விராட் கோலி 3 ரன்னிலும் ரோகித் சர்மா 53 ரன்னிலும் வெல்லாலகே ஓவரில் ஆட்டமிழந்தனர்.
    • கேஎல் ராகுல் வெல்லாலகே ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் - சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். வேகப்பந்து வீச்சாளர்களை சுலபமாக எதிர் கொண்ட இருவரும் சுழற்பந்து வீச்சில் திணற ஆரம்பித்தனர்.

    சுப்மன் கில் 19 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த விராட் கோலி 3 ரன்னிலும் அரை சதம் விளாசிய ரோகித் சர்மா 53 ரன்னிலும் வெல்லாலகே ஓவரில் ஆட்டமிழந்தனர். 80 ரன்களில் விக்கெட் இழப்பின்றி விளையாடிய இந்திய அணி 91 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனையடுத்து இஷான் கிஷன் - கேஎல் ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 44 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த கேஎல் ராகுல் வெல்லாலகே ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வெல்லாலகே அவர் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை கைப்பற்றினார்.

    இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் 5 விக்கெட்டுகளை வெல்லாலகே கைப்பற்றியுள்ளார். வெல்லாலகே ஒரு 20 வயது வாலிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.
    • மைதானத்திற்கு எந்த உபகரணத்தையும் நான் கொண்டு வரவில்லை.

    இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியா 356 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் 128 ரன்னில் சுருண்டது. இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் சதம் அடித்து அசத்தினர்.

    கேஎல் ராகுல் காயம் காரணமாக ஓய்வு பெற்று வந்த முதல் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரின் பார்வையும் தன் பக்கம் திருப்பினார்.

    இந்நிலையில் வீரர்களுக்கு தண்ணீர் கேன் கொடுக்கும் வேலையைதான் செய்வேன் என நினைத்தேன் என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    போட்டிக்கான டாஸ் போடுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு நீ இந்த போட்டியில் விளையாடுகிறாய் என ராகுல் டிராவிட் கூறினார். மைதானத்திற்கு எந்த உபகரணத்தையும் நான் கொண்டு வரவில்லை. வீரர்களுக்கு தண்ணீர் கேன் கொடுக்கும் வேலையைதான் செய்வேன் என நினைத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
    • கங்குலி, எம்எஸ் டோனி, விராட் கோலி உட்பட வேறு எந்த இந்திய கேப்டனும் இந்த சாதனையை படைத்ததில்லை.

    ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்த மிகப்பெரிய வெற்றியால் கூடுதல் ரன் ரேட்டை பெற்றுள்ள இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உறுதியாகியுள்ளது.

    முன்னதாக 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது.

    அந்த நிலையில் இந்த போட்டியில் 228 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் (228) வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற தனித்துவமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

    இதற்கு முன் கங்குலி, எம்எஸ் டோனி, விராட் கோலி உட்பட வேறு எந்த இந்திய கேப்டனும் 2 வெவ்வேறு ஒருநாள் போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்ததில்லை. சமீப காலங்களாகவே கேப்டன்ஷிப் பற்றி விமர்சனங்களை சந்தித்து வரும் ரோகித் சர்மா இந்த சாதனைகளுடன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    • ரோகித் முதல் ஓவரில் 1 பவுண்டரி உள்பட 5 ரன்கள் எடுத்தார்.
    • ரோகித் 23 ரன்கள் எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஷர்துல் தாகூருக்கு பதில் அக்ஷர் படேல் இடம் பெற்றார்.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - சுப்மன் கில் களமிறங்கினர். ரோகித் முதல் ஓவரில் 1 பவுண்டரி உள்பட 5 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய ரோகித் 22 ரன்கள் எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    மேலும் குறைந்த போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் குவித்த சச்சின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். ரோகித் 241 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். சச்சின் 259 போட்டிகளில் இதனை கடந்தார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார். இவர் 205 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார்.

    இந்திய வீரர்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது வீரராக ரோகித் உள்ளார். முதல் 5 இடங்களில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கங்குலி, டிராவிட், டோனி ஆகியோர் உள்ளனர்.

    • பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
    • வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிகராக போட்டியின் எந்த சூழ்நிலையிலும் விக்கெட் எடுக்கும் திறமை அவரிடமும் இருக்கிறது.

    ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் மழைக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த முக்கியமான சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

    இந்த போட்டியில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலியை விட குல்தீப் யாதவ் தான் ஆட்டநாயகன் என்று கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    என்னை பொறுத்த வரை குல்தீப் யாதவ் ஆட்டநாயகன். மேலும் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் சதமும் ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் நல்ல ரன்களும் அடித்தார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் ஸ்விங் மற்றும் வேகத்துக்கு சாதகமான இது போன்ற மைதானங்களில் 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் எடுப்பது கடினமாகும். அதிலும் குறிப்பாக சுழலை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் வீசிய பவுலிங் தான் வெற்றியை மாற்றியது.

    அது தான் அவர் எந்தளவுக்கு தரமான பவுலர் என்பதையும் காட்டுகிறது. குறிப்பாக அவர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு காற்றில் சுழல வைத்து பெரிய சவாலை கொடுத்தார். அது உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நல்ல அம்சமாகும். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிகராக போட்டியின் எந்த சூழ்நிலையிலும் விக்கெட் எடுக்கும் திறமை அவரிடமும் இருக்கிறது.

    என்று கம்பீர் கூறினார். 

    • இன்றைய ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • இன்றைய ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.

    இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷர்துல் தாகூருக்கு பதிலாக அக்ஷர் படேல் அணி இடம் பிடித்துள்ளார்.

    அங்கு இன்றைய ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • போட்டிக்கு மைதானத்தை தயார்படுத்துவது என்பது சாதாரண விசயம் கிடையாது.
    • எங்களுடைய அணி சார்பாக நாங்கள் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி 10-ம் தேதி கொழும்பு நகரில் துவங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

    அதன்பின்னர் மீண்டும் மழை நிற்காததால் அன்றைய நாளில் போட்டி கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று மீண்டும் விட்ட இடத்தில் இருந்து துவங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது.

    357 ரன்கள் அடித்தால் வெற்றி இன்று இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் நன்றி தெரிவித்துள்ளது ரசிகர்ளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாம் இந்த மைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். ஏனெனில் மைதானம் முழுவதும் இருக்கும் கவரை அகற்றி போட்டிக்கு மைதானத்தை தயார்படுத்துவது என்பது சாதாரண விசயம் கிடையாது. எங்களுடைய அணி சார்பாக நாங்கள் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்த போட்டியில் மீண்டும் நாங்கள் பேட்டிங் செய்ய ஆரம்பிக்கும் போதும் மழையின் தாக்கம் இருந்ததால், மைதானத்தின் தன்மையை கணித்து விளையாடுவது சற்று சவாலாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனாலும் கே.எல் ராகுல், விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதனை சமாளித்து மிகச் சிறப்பாக விளையாடினார்கள்.

    அதே போன்று பும்ரா கடந்த 8 முதல் 10 மாதங்களாக சரியான முறையில் பயிற்சி மற்றும் சிகிச்சையை மேற்கொண்டு அணிக்கு திரும்பி உள்ளார். அவரது பந்துவீச்சும் அசத்தலாக இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என அனைத்துமே பாசிட்டிவாக இருந்தது.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    • பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
    • இந்த ஆட்டத்தில் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    கொழும்பு:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன், ராகுல் 111 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்னில் அடங்கியது. ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.

    இந்த ஆட்டத்தில் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லாவின் சாதனை ஒன்றை கோலி சமன் செய்துள்ளார். அதாவது கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் கோலி தொடர்ச்சியாக 4-வது சதம் விளாசியுள்ளார். ஏற்கனவே இங்கு கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் சதம் ( 128 ரன், 131 ரன் மற்றும் 110 ரன்) அடித்திருந்தார்.

    இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் இதே மைதானத்தில் தொடர்ச்சியாக அதிக சதம் அடித்து இருந்த தென்ஆப்பிரிக்க வீரர் ஹாசிம் அம்லாவின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.

    • இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.
    • இன்றைய ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் மோதுகின்றன.

    மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முந்தைய நாள் இரவு 11 மணி வரை விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் ஓய்வின்றி உடனடியாக களம் இறங்க வேண்டி உள்ளது. சோர்வின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.

    இதே போல் சூப்பர்4 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்த தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிக்கும் இந்த ஆட்டம் முக்கியமானதாகும். தொடர்ச்சியாக 13 ஒரு நாள் போட்டிகளில் வெற்றிகளை குவித்து வீறுநடை போடும் இலங்கை அதே உத்வேகத்துடன் அடியெடுத்து வைக்கிறது.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அங்கு இன்றைய ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • இந்திய அணியின் விராட் கோலி, கே.எல். ராகுல் சதம் அடித்து அசத்தல்.
    • பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அஃப்ரிடி மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.

    இந்த ஜோடி முறையே 56 மற்றும் 58 ரன்களை குவித்து அசத்தினர். அடுத்த வந்த விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இடையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, பிறகு இன்று மதியம் துவங்கியது. இன்றைய ஆட்டத்திலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி சதம் அடித்து அசத்தியது.

    இதன் காரணமாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்களை குவித்தது. இந்திய சார்பில் விராட் கோலி 122 ரன்களையும், கே.எல். ராகுல் 111 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அஃப்ரிடி மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • இந்தியா 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது.
    • கோலி 8 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணிந்தார்.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தது. 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், லோகேஷ் ராகுலும் கைகோர்த்து விளையாடிய போது மழை குறுக்கிட்டது. அப்போது இந்தியா 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 8 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த ஆட்டத்திற்கு மாற்று நாள் (ரிசர்வ்) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பதால், இதன்படி பாதியில் நின்று போன இந்த ஆட்டம் மாற்று நாளான இன்று தொடர்ந்து நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இன்று தொடங்க கூடிய ஆட்டம் மழை காரணமாக தாமதாகி உள்ளது. அவுட் பீல்ட் ஈரப்பதமாக இருப்பதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

    • 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
    • மழை விடாமல் பெய்து வந்ததால், இன்றைய போட்டி தடை செய்யப்பட்டு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    ஆசியக்கோப்பை 2023 தொடரின், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை தொடங்கின.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதைதொடர்ந்து, இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்காக களமிறங்கியது.

    இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் அரை சதம் எடுத்து தலா 56 ரன்கள் மற்றும் 58 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

    இதைதொடர்ந்து, விராட் கோலியும் கே.எல்.ராகுலும் விளையாடி வருகின்றனர். இதில், விராட் கோலி 16 பந்துகளில் 8 ரன்களும், கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து விளையாடி வந்தனர்.

    ஆனால், 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

    போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்தது. ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சூப்பர்4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ரத்தானால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மழை விடாமல் பெய்து வந்ததால், இன்றைய போட்டி தடை செய்யப்பட்டு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கனமழையால் மைதானத்தில் ஈரப்பதம் அதிகளவில் இருந்ததால் ரிசர்வ் டேவுக்கு போட்டி மாற்றம் செய்யப்பட்டது.

    நாளையும் மழை பெய்து போட்டி தடைபட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×